பக்கங்கள்

சனி 28 2015

அழகான சாவுக்கு அடைக்கலம் தந்த தெரசா...

தெரசா - ஜெயலலிதா
படம்-வினவு.

மேட்டுக்குடிப் பெண்களுக்கு ‘சமூக சேவை’ என்பதும் ஒரு பொழுது போக்கு. சினிமா நடிகைகள் கூடச் சேரிகளுக்கும், அனாதை இல்லங்குளுக்கும் சென்று சேவை செய்வதும், இதனால்தான்.

“தொண்டு செய்து பழுத்தபழமான தெரசாவுக்குக் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு அவர் ஒர் ஐந்து நட்சத்திர மருத்துவமனையை ஏழைகளுக்காக கட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவர் ஒரு போதும் முயற்சித்ததில்லை .’பாவப்பட்ட’ நோயாளிகள் ஆண்டவனுக்குப் பதிலாக விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் காரணம். அதனால்தான், இன்னும் மருந்து கண்டறியப்படாத எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கூடுதலாக அடைக்கலம் அளித்தார்.

“நீங்கள் ஏன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு அடைக்கலம் தருகிறீர்கள்?” என்று இங்கிலாந்து வந்த தெரசாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது. “எயிட்ஸ்-க்கு மருந்தில்லை. இருப்பினும் எயிட்ஸ் நோயாளிகளை எங்களுடன் வைத்துக் கொள்கிறோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைச் செலுத்துகிறோம். அவர்கள் மிக அழகாக மரணமடைவார்கள்” என்று பதிலுரைத்தார் தெரசா .
‘அழகான’ சாவுக்கு அடைக்கலம் தருவதும். நோயாளிகளைப் பரமண்டலத்துக்கு விரைவாக அனுப்பி வைப்பதும்தான் அவரது சமூக சேவையின் நோக்கம் என்பதை இது மெய்ப்பித்துக் காட்டுகிறது. 
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.

வெள்ளி 27 2015

இறப்புக்குப்பின் சொர்க்கம்+நரகம்-எவ்வித ஆதாரமும் ஆவணமும் இல்லை..

படம்-poocharam.net

நான்கு தனிமங்கள்
தற்செயலால் இணைகின்றன.
இணைவதின் பயனால்
உருவமுள்ள தோற்றம்
ஒன்று உருவாகிறது.

இந்த தனிமங்களின்
சேர்மானத்திற்கு வெளித்
தூண்டல்கள் எதுவும்
அதுகளுக்கு தேவைப்படவில்லை...

போதை இல்லாத சில
தனிமங்கள் ஒன்றினைந்து
போதை தரும் பானங்களை
உருவாவது போன்றே...
உணர்வற்ற தனிமங்கள்
இணைவதால் உணர்வுள்ள
பொருள் ஒன்று உருவாகிறது.

இப்படிபட்ட நான்கு வகை
தனிமங்களால் உருவாகியவன்
தான் மனிதன். அந்த மனிதன்
இறந்த பின் அவனது சடலம்
பாடையில் எடுத்துச் செல்லப் படுகிறது.

இறந்த மனிதனுக்கு இரங்கற்பா
பாடப்படுகிறது.. அந்த உடலை
எரித்தால் உடலில் உள்ள
எலும்புகள் சிறிது சிறிதாக
வெந்து சாம்பலாக ஆகிறது.

புதைத்தால் உடலிருக்கும்
மண் நிலத்தோடு கலக்கிறது
திரவம் நீருடன் கரைகிறது
வெப்பம் நெருப்புடன் இணைகிறது
மூச்சு காற்றுடன் சேர்கிறது.

இதில் ஏழை,பணக்காரன்
அறிஞன்,மூடன் என
பாகுபாடு இல்லாமல்
அனைவரது சடலமும்
அழிந்து பட வேண்டியதே.

இறப்புக்கு பின்
சொர்க்கம் நரகம்
இருந்ததாக, இருப்பதாக
எவ்வித ஆதாரமும்
இல்லை.. எந்தவித
ஆவணமும் இல்லை.

உடலின் முடிவே....
ஆன்மாவின் முடிவு..!!!

வியாழன் 26 2015

நல்லாயிருந்த நடிகர்களை நாசமாக்கிய பிரமாண்ட இயக்குநர்


மேலும்-பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு

காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின் “ஐ”படத்தை சமீபத்தில் அந்தப் படத்தை நண்பரின் உதவிக்காக ஒப்புக்கு பார்க்க நேரிட்டது. அந்தப் படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே..“ நல்லாயிருந்த நடிகர்களை நாசமாக்கிய பிரமாண்ட இயக்குநர்” என்ற கருத்துதான் எனக்கு  ஏற்ப்பட்டது. அந்த பிரமாண்ட இயக்குநாரின் வசனத்தை பேசும் சந்தானத்திடமிருந்தே அந்தத் தலைப்பு தோன்றியதற்கு இதுதான் காரிய  காரணம்.

பிரமாண்ட இயக்குநர், பிரமாண்டமாக இயக்கிய “ஐ” படத்திற்கு முன் பிரமாண்டமாக இயக்கிய படம் “எந்திரன்” அந்தப் படத்தின் மூலம் எல்லோரும் நல்ல லாபம் பெற்றனர். பேரும் புகழும் பெற்றனர். ஆனால் அதில் நடித்த நடிகர் , நோயாளி ஆகி..  அந்த நடிகரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று. அந்த மருத்துவமனையில் சம்பாரித்த பணத்தையெல்லாம் கொட்டியதால்தான்  சிகிச்சையில் தேறி ஒரு வழியாக மீண்டு வந்தார்.

இதற்கு அடுத்து அந்த பிரமாண்டம் இயக்கிய பிரமாண்ட படமான்“ஐ”-யில் வழக்கம் போலவே எல்லோரும் நல்ல வருமானமும் பேரும் புகழும் பெற்றனர். ஆனால் வழக்கம் போலவே..அந்தப் படத்தில் நடித்த நடிகர். “ஐ” படத்திற்க்காக பல்வேறு கெட்டப்புகளில் தன் தோற்றத்தை குறைத்து கூட்டி நடித்ததால்..அந்த நடிகரும் நோயாளி ஆகி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

சர்வதேச தரத்தினாலான கார்ப்பரேட் மருத்துவ மனைக்குச் சென்று “,தான் சம்பாரித்த பணத்தையெல்லாம் கொட்டி தீர்த்தால்தான் சிகிச்சையில் தேறி மீண்டு வர முடியும்.”

ஆக. அடுத்து பிரமாண்டம் இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் நோயில்லா நடிகர்கள்,  பேரும் புகழும் பணமும் பெற்றாலும் நோயாளியாகி நாசமாகுவது தவிர வேறு வழியே  இல்லை

புதன் 25 2015

அந்த மார்ச் 23ம் நாள்.... மறைக்கப்பட்ட வரலாறு..

FB_IMG_1427033084672.jpg ஐக் காண்பிக்கிறது
படம் உதவி. மூன்று மாவீரர்கள்.

மணி இரவு  7.30

லாகூர் சிறைச்சாலை அறை ஒன்றில் மாவீரர்களான பகத்சிங் ,ராஜகுரு சுகதேவ் மூவரும் கைளிலும், கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டு  அடைக்கப்பட்டு இருந்தார்கள். பகத்சிங் “லெனின்” எழுதிய “ அரசும் புரட்சியும் ” என்ற நூலை படித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது சிறை வார்டர்கள் அறைக்கதவை திறந்தார்கள். வந்தவர்களை பகத்சிங் ஆச்சரியத்தடன் பார்த்தார்.

“சர்தார்ஜீ! உங்களை தூக்கிலிடுவதற்க்கான ஆணை வந்திருக்கிறது. இதோ! “தயவு செய்து தயாராகுங்கள் ” என்றார் சிறை அதிகாரி.

“ நாளை 24ந்தேதி அல்லவா...எங்களை தூக்கிலிட வேண்டும் என்று உத்திரவு...?” என்று பகத்சிங் கேட்டார்.

“ஆமாம், அது முந்திய உத்திரவு. இப்போதே தூக்கிலிடும்படி இந்த உத்திரவு”.. என்று சிறை அதிகாரி பதில் சொன்னார்.

மாவீரர் -பகத்சிங் மெல்ல நகைத்துவிட்டுச் சொன்னார்.
“ பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எங்கள் மீது கருணை பிறந்திருக்கிறது! அதனால்தான் இந்த அடிமை இந்தியாவில், இன்னும் 12 மணி நேரம் கூட நாங்கள் அடிமை பூச்சிகளாக இருக்கக்கூடாது என்று கருணை காட்டி, இன்றைக்கே கொன்றுவிடத் தீர்மானித்து விட்டது . ஆகட்டும் நாங்கள் தயார்” என்றார்.

அப்போது அதிகாரிகள் “பகத்சிங்”கைப் பார்த்து அதிசியப்பட்டார்கள்.

மூன்று வீரர்களும். சிறை அறைக்குள்ளிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள்.

“சர்தார் ஜீ! சிறைச்சாலை விதிப்படி மரண தண்டனை நிறைவேறுவதற்கு முன்னால், உங்கள் ஆத்மா சாந்தி அடைய உங்களுக்கு மதச் சடங்குகள் முடிக்க வேண்டும். குருக்களும் வந்திருக்கிறார்கள், செய்யலாமா?“ என்று கேட்டார் சிறை அதிகாரி.

மாவீரர்- பகத்சிங், அதை மறுத்தார், “நாங்கள் நாத்திகர்கள், எங்களுக்கு ஆத்மா, சடங்கு, சம்பிரதாயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லை, வேண்டாம் என்று மறுத்தார். அதிகாரிகள் ஒப்புக் கொண்டார்கள்.

உடனே, அவர்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டினார்கள், கை விலங்குகளை அகற்றிவிட்டு, கைகளை பின் பக்கமாக துணியால் கட்டினார்கள். பின்பு தூக்கு மேடை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

அப்போது, பெரிய அதிகாரிகளோடு, ஜெயிலர், துணை ஜெயிலர், மற்றும் பல வார்டர்களும் துப்பாக்கி ஏந்தியபடி அவர்கள் பின்னால் வந்தார்கள்.

பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஏகாதிபத்திய அராஜக ஆட்சிக்கு எதிராக , இந்திய மக்களின் உரிமைக்கும், சம வாழ்விற்கும், தன் மானத்திற்கும் வெஞ்சமர் புரிந்த மாவீரர்கள் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார்கள்.

மாஜிஸ்திரேட் அவர்களிடம் கேட்டார்.

“ குற்றவாளிகளே !!! உங்கள் கடைசி என்ன ? இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

அதற்கு “மாவீரர்- பகத்சிங் சொன்னார்.,“ எங்களுக்கு  ஒரே ஆசைதான்!! நீதிமன்றத் தீர்ப்புப் படி நாங்கள் பிரிட்டிஷ் மன்னரை எதிர்த்து யுத்தம் புரிந்தவர்கள்!!! எனவே, எங்களை யுத்தக் கைதிகளாக நடத்த வேண்டும். சாதாரண சமூக விரோதிகளைப் தண்டிப்பது போல் தூக்கிலே போடக்கூடாது. ராணுவ வீரர்களை வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்.” “இதுதான் எங்கள் கடைசி ஆசை” என்றார்.

அதை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்துவிட்டார்., “உங்களை தூக்கில் போட வேண்டும்” என்றுதான் உத்தரவு, அதை நாங்கள் மாற்ற முடியாது.... வேறு என்ன ஆசை..??? என்று கேட்டார் மாஜிஸ்திரேட்.

“.....எங்கள் கண்களை மூடியுள்ள கறுப்பு துணியை எடுக்க வேண்டும், நாங்கள் பிறந்த இந்த  மண்ணைப் பார்த்தபடியே சாக விறும்புகிறோம் ”. என்றார் மாவீரர் பகத்சிங்.

மூன்று பேருடைய கண்களிலும் கட்டப்பட்ட கறுப்புத் துணியை அகற்ற ஆணையிட்டார் மாஜிஸ்திரேட்!!!

 மாவீரர்களில் முதலாதவதாக பகத்சிங்-ன் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான் கொலையாளி ஒருவன்.

 மாவீர்ர்-பகத்சிங்  உரத்த குரலில் தனது தோழர்களிடம் கூறினார்.

” தோழர் ராஜகுரு வருகிறேன்! தோழர் சுகதேவ் வருகிறேன் ! என்று பிரியா விடை பெற்றார்.

விசை அழுத்தப்பட்டது. தொங்கிய மாவீரரின் உயிர் பிரிந்தது.

உணர்ச்சிப் பிழம்புகளான மாவீரர்கள் ராஜ குருவும், சுகதேவும்... ஒரே குரலில்

 “ புரட்சி ஓங்குக.!”
“பகத்சிங் வாழ்க ! ”
“ ஏகாதிபத்தியம் ஒழிக !”
“யூனியன் ஜாக்கொடி வீழ்க! ”

என்று விண்ணதிர முழங்கினார்கள்,


பகத்சிங்கை அடுத்து ராஜகுரு, அடுத்து சுகதேவ், என்று  அடுத்தடுத்து மூன்று பேரும்  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் விசுவாசிகளுக்கு ஆதரவாகவும்  காவு கொடுக்கப்பட்டார்கள்.



வழக்கத்துக்கு  விரோதமாக மாவீரர்கள் மூவரும்  இரவிலே தூக்கு போட்டதை அறிந்த மொத்த கைதிகளும்...

“ பகத்சிங் வாழ்க !”
“ ஏகாதிபத்திய்ம் ஒழிக ! ”
என்று முழக்கமிட்டார்கள்.


இந்த முழக்கம், சிறைச்சாலை முழுவதும் எதிரொழித்தது. அப்போதுான் மற்ற கைதிகளுக்கும் விசயம் தெரிந்தது.

சிறைச்சாலை டாக்டர் , அந்த மூன்று மாவீரர்களின் உடல்களை தொட்டுப் பார்த்தார். உயிர் பிரிந்து விட்டது என்று சான்றிதழ் கொடுத்தார்.

 அந்த மூன்று மாவீரர்களின்  கண்கள் “ நெருப்பு மலர்களாக-  அக்கனி புஷ்பங்களாக” இருந்ததாக அந்த  டாக்டர் சொன்னார்.





செவ்வாய் 24 2015

இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா ????


படம்-mahalakshmivijayan.wordpress.com



இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா...அண்ணே......

உண்டக் கட்டி கூட உருவாகாதுடா  தம்பி...........

இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடைக்காதா அண்ணா

நன்றாக பல்லு வௌக்கி சம்மனமிட்டு யாசித்தாலும் ஒன்னும் கிடைக்காதுடா

ஏதாவது ஒன்று கிடைக்க... என்ன செய்ய  வேண்டும்ண் ணே....????

அட.வெண்ண..... வெண்ண வேண்டுமென்றால் பால் வேண்டும். பால் இல்லாமல் வெண்ணெய் கொண்டுவர முடியாதுடா.... அதுக்காக தண்ணியிலிருந்து வெண்ணெ தயாரிக்க முடியுமான்னு கேட்காதடா தம்பி


அந்தக் கடவுளால் கூட  தண்ணியில வெண்ணெய்  உருவாக்க முடியாதா அண்ணா....

இல்லாததை உள்ளதாக காட்ட முடியாதுப்பா.... உள்ளதை முற்றிலும் இல்லாதாக்க முடியாதுப்பா ..அதாவது எதையும் உற்பத்தி செய்யமுடியுமே தவிர... உருவாக்க முடியாதுபா.............


மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது... மரம் வளர்த்து மாங்காய் வர வழைக்க முடியுமுன்னு... சொல்றிங்க  அப்படிதானே தலைவரே.....

.......மாங்கா மடையன்னோ , அம்மா பக்தன் என்றோ இனி  ஒன்ன சொல்ல மாட்டேன்டா  தம்பி


திங்கள் 23 2015

புத்தியுள்ளதும் புத்தியில்லாததும்.....!!!


இந்த திரைக்காட்சியை  பார்த்தபோது
எனக்கு இப்படித்தான்  தோன்றியது.
புத்தியுள்ளதுகள் வெற்றி பெறுவதில்லை.
வெற்றி பெற்றதுகள்
புத்திசாலிகள் இல்லை...என்று...



ஞாயிறு 22 2015

அய்ந்தாம் ஆண்டில் வலிப்போக்கன்....


     வலிப்போக்கன்
அய்ந்தாம் ஆண்டில்.


2001ம் ஆண்டில் அச்சுத் தொழிலுக்காக கணணி வாங்கியிருந்தும் தொலைபேசி இணைப்பு பெற்று இருந்தும்  இணைய இணைப்பு பற்றியும் வலைத்தளம், வலைப்பூ, பதிவு, கருத்துரை,மறுமொழிகள், மற்றும் இன்னபிறவைகள் என்னவென்று  தெரிந்திராத,அறிந்திராத ஒரு காலத்தோடு ஓடிக் கொண்டு இருந்த நேரத்தில்...

அச்சுத் தொழிலுக்கு வந்த வாடிக்கையாளர்கள் நண்பர்கள் மூலம், வலைப்பதிவு,வலைத்தளம் இணைய இணைப்பு பற்றிய விபரங்களை தெிந்திருந்தும். இணைய இணைப்பு பயன்பாட்டு கட்டணத்தொகைப் பற்றியும், ஆண் பெண் சேர்ககையின் பச்சையான படங்கள் இணையத்தில் பரவி இருந்ததையும் பற்றி இருந்த பயத்தினால் பயந்து கொண்டு இருந்தபோது, நணபர்களின் பேச்சினால் பயத்தை  ஓரங்கட்டிவிட்டு ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

2011ம் ஆண்டில் மார்ச் மாத துவக்கத்தில் இணைய இணைப்பு பெற்று அதற்க்கான பயன்பாட்டுக் கருவியைப் பெற்று..எல்லாம் தெரிந்த ஏகம்பரமாக கூகுள், தமிழ்மணம், வினவுத்தளம் போன்ற பிரபலமான தளங்களை பார்வையிட்டு சிலவற்றை படித்துவிட்டு கருத்துரை வழங்கத் தெரியாமல் முட்டிமோதி தோல்வியடைந்த நேரத்தில் தமிழ்மணத்தில்  திரு. சசி எழுதிய தமிழில் எழுதலாம் வாங்க - வலைப்பதிவுகள் ஓர் அறிமகம் என்பதை பத்துக்கு பல தடவை படித்தும் பதினோறு தடவை தோல்வியற்று தவித்த வேலையில் பனிரெண்டாவது தடவையாக “ மாவீரர்  பகத்சிங் துாக்கில் ஏற்றப்பட்டநாளான மார்ச்23-ல் வலிப்போக்கன் என்ற எனது வலையை நிறுவி வெற்றி கொண்ட நாள்.23.3.2011.

“வலிப்போக்கன்” வலையை நிறுவிய வெற்றி பெருமிதத்தில்,என்ன எழுதுவதென்று தெரியாமல். சிலது களை எழுதிபார்த்து “ஈ“ ஓட்டிக் கொண்டு இருந்த நேரத்தில்  “உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க” என்ற பதிவை, வழக்கம்போலவே பல தடவைப் படித்து தோற்றுப்போயி விடாமல் முயன்றதன் காரணமாக 29.3.2011-ல் தமிழ்மணத்தில் இணைத்த நாள்

அதிலிருந்து படிப்படியாக தமிழ்வெளி, இண்டலி, பேஸ்புக், இப்படியாக பலவற்றில் இணைத்துக் கொண்டேன்.

பண்ணையடிமைகளாகவே பிறந்து வாழ்ந்து பழக்கப்பட்ட எனது குடும்ப தலை முறை வாழ்நிலையைத் தாண்டி ... பல தடவை பள்ளிக்குச் செல்லாமல் பெயிலாகி ஒரு வழியாக +2 வரை படித்துவிட்டதால். அதற்கு மேல் படிக்க முடியவில்லை.

அந்தப் படிப்பின் மூலமாக கிடைத்த கொஞ்சோன்னு அறிவைக் கொண்டு பல குப்பைகளுடன் சில நல்லவற்றையும், எனது அனுபவத்தையும், படித்தவற்றையும் கேட்டவற்றையும் சேர்த்து  இந்த நான்கு வருடத்தில் மறு பதிவுகளை தவிர்த்து 964 பதிவுகள் வரை பதிவிட்டதில்,  பார்வையாளராக 3,56,252  பார்வையிட்டுள்ளனர். பதிவர்கள் மற்றும் வருகையாளர்களின் கருத்துரைகளாகவும் மறுமொழிகளாகவும் சேரத்து  3535 கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவைகள் எனது தகுதிக்கு மீறியதாக இருக்கிறது என்றாலும் .என்னால் வடிவமைக்கப்பட்ட தளம் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக நான்கு வருடமாக பலரும் புகார் கூறியதால்... சமீபத்தில் படிப்பதற்கேற்ற வகையில் வடிவமைப்பை மாற்றித் தந்த பெருமை திரு. திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்களையே சேரும். அவருக்கு இந்த அய்ந்தாவது ஆண்டில் நன்றியினை தெரிவித்துக் கொண்டு

வாழ்த்துவோர்கள் வாழ்த்துங்கள்!! தூற்றுவோர் தூற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு, எந்வித சந்தோசம் இல்லாத இந்த உலகத்தில், இருக்கும் கொஞ்ச காலத்திலும் எனது மனதுக்கு பிடித்த கருத்துக்களை, என் அனுபவங்களை, எனக்கு தெரிந்த சமூக அவலங்களை ,எனக்கு தெரிந்த மொழி வழி நடைகளில் இந்த அய்ந்தாம் வருடத்திலும் தொடருகிறேன்.

எனது வலைக்கு வருகை தந்து, கருத்துரை  வழங்கிய-.வழங்கி வரும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும், மற்றும். அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

வலிப்போக்கன்-


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...