பக்கங்கள்

வெள்ளி 07 2014

இருட்டுல எதுக்கு நிக்கிறாங்க...............................

ஒரு கனவனும் மனைவியும் செல்லூர் கிராமத்திலிருந்து ஆ....ஆராப்பாளையம் கிராமத்திற்கு வைகை ஆத்து ஓரமாக நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

ஆரப்பாளையம் கிராமத்திற்கு அருகில் உள்ள தண்ணி தொட்டிக்கு பின்புறமாக வந்து கொண்டு இருக்கும் பொழுது. தண்ணிதொட்டி சுற்று சுவர் ஓ ரமாக ஒரு போலீஸ்காரர் நிறுத்தி இருந்த பைக் அருகே  இருட்டில் நின்று கொண்டு இருந்தார்.

கனவனுடன் நடந்து வந்த மனைவியானவர், இருட்டில் நின்று கொண்டு இருந்த போலீசை பார்த்து பயந்து போய் கனவனின் கைகளை பற்றிக் கேட்டார் கனவனிடம்.

அந்த போலீசு ஏன்? இருட்டுல நிக்கிறாரு ,......... என்று

அந்தக் கனவர்,தன் வாயில் விரலை வைத்தவாறு உஸ்ஸ்ஸ் என்றவிட்டு சற்று தொலைவு வந்த பிறகு.....

அதுக்கு அந்தக்கனவர் சொன்னாரு....“ திருடன புடிக்க நிக்கிறாருன்னு.........

திரும்பவும் அந்த மனைவி கனவனிடம் கேட்டார்......

“அப்போ...............சற்று தள்ளி ஒரு ஆளு நின்னாரே, அந்த  ஆளு........

ஓ................... அவரா.................அவருதான்............திருடன்.......என்றார்.

அவரு ஓடிப் போகம  எதுக்கு நிக்கிறாரு...............

போலீஸ்ச புடிக்க நிக்கிறாரு...............என்றார் கனவர்..

இருட்டுல ..........நிக்கிறதுனால  ரெண்டு பேருக்குமே தெரியலையா.........என்று கேட்டார்  வெள்ளந்தி தனமான....மனைவியானவர்.............

ஆமாம்மா.............என்றார் கனவரும்

( இத படிக்கிறவுகளே.........ஒங்களுக்கு எப்படி தோனுது...............???)



திருட்டு காதல் படுத்தியபாட்டால் கைதான திருட்டுக் காதலர்கள்.....................

திண்டுக்கல் அருகே வேடபட்டியை சேர்ந்தவர் பாண்டி முனியப்பன்.39. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் மகள் வேணிக்கும்32 கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2பெண்,2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வெள்ளையம்மாள் அடிக்கடி மகள் வேணி வீட்டுக்கு வந்து போகும் போது,அதே ஊரைச்சேர்ந்த பெரிய...சாமி40 என்பவருடன் திருட்டு காதல் ஏற்ப்பட்டு ,பெரிய சாமியுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இதே மாதிரி, வெள்ளையம்மாளின் மருமகன் பாண்டி முனியப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருட்டு காதல் ஏற்பட்டு ,இருவரும் தொடர்பில் இருந்துவந்தனர்.

இந்த நிலையில். பாண்டி முனியப்பன். தனது மனைவிக்கும் தன் நண்பன் துரைப்பாண்டிக்கும் திருட்டு காதல் தொடர்பு இருப்பதை அறிந்த கொண்டதும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால்.பாண்டி முனியப்பனின் இம்சை தாளாமல் தவித்து வந்த வேணி தனது திருட்டு காதலர் துரைப்பாண்டியுடன் தனது தாயின் திருட்டுக் காதலர் பெரிய சாமியையும் சேர்த்துக் கொண்டு கொடுமை செய்துவந்த பாண்டி முனிய அப்பனை சரமரியாக குத்தி கொலை செய்தார்.

இது குறித்து பாண்டி முனியப்பனின் தாய் வள்ளியம்மாளின் புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுக்காதல் படுத்திய பாட்டால் கொலை செய்த  வழக்கில துரைப்பாண்டி,பெரியசாமி,வேணி ஆகிய திருட்டு காதலர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்தக் திருட்டு காதலிலும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் திருட்டுக் காதல் செய்யனும்முனு சாதி வெறி சமுதாய தலைவர்கள் போர்  பிரகடனம் தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

வியாழன் 06 2014

இவர்கள்......இப்படியும்..............தப்பிக்கலாம்.......

திண்டுக்கல் மாவட்டம். வீரம் படத்தில் டைட்லில் காட்டப்படும் ஒட்டன் சத்திரம் அருகே ஆனைமலையான் பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்் இவரது மனைவி சின்னகருப்பத்தாள்.

இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிருக்கு முன் சற்றுத்தள்ளி அமர்ந்த பேசிக் கொண்டு இருந்தனர்.இருவரும் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்ட மர்ம நபர் ஒருவர். இவர்கள் வீட்டிற்க்குள் நுழைந்தார்.

மர்மநபர் ஒருவர், நைசாக தங்கள் வீட்டிற்க்குள் நுழைந்ததை சின்னகருப்பத்தாள் பார்த்துவிட்டார்.

கனவனும் மனைவியுமான இருவரும்.அய்யோ! குய்யோ! என்று சத்தம் போடாமல் வீட்டீற்கு அருகில் வந்து மர்ம நபரை கவனித்து உள்ளனர்.

வீட்டீற்குள் நுழைந்த மர்மநபரோ , நேராக சென்று பீரோவை திறந்தார். இதைக் கவனித்த தம்பதினர் இருவரும். கமுக்கமாக  மர்ம நபர் தப்பிக்க முடியாதவாறு ,வீட்டின் கதவை  வெளிப்புறமாக அடைத்து பூட்டி விட்டு, பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தனர்.

தங்கேவேல் வீட்டிற்குள்  புகுந்த திருடன்   மாட்டிக்கிட்டான் என்ற விசயத்தை கேள்விப்பட்டதும் வீட்டின் முன் கூட்டம் கூடியது.

தான் வந்த வேலையின்போது தான் மாட்டிக்கிட்டதை உணர்ந்த மர்ம நபர், வீட்டின் முன் கூடியுள்ள கூட்டத்திடம் மாட்டிக்கிடாமல்  தன் உயிரை சுமந்த உடலை போட்டு விட்டு  தப்பித்துவிட்டார்.

வீட்டீற்கு வெளியே நின்றவர்கள் மெதுவாக கதவை திறந்து.மர்ம நபரை பாத்தபோது, வீட்டிலிருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து  இறந்திருப்பதைக்  கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரனை செய்ததில்.அந்த நபர் அம்பிளிக்கை அருகே உள்ள ஒத்தையூரைச சேர்ந்த பெரிய்ய..சாமி என்றும் இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்ததாம்.

ஆக........பல திருட்டு வழக்குகளில் அனுபவம் பெற்ற மர்மநபர்  தப்பிக்க வழியின்றி தானே தூக்கு மாட்டிக் கொண்டு தப்பித்தார் என்றும் சொல்லலாம்

இல்ல.......வீட்டீற்கு வெளியே நின்ற கூட்டம் போட்ட போடில் செத்துப்போன மர்மநபரால் வழக்கு, கோர்ட்டு என்ற பிரச்சினையில  இருந்து தப்பிக்க , திருடனே தூக்கு மாட்டிக் கொண்டு செத்தான் என்று சொல்லி தப்பிக்கலாம்.

எப்படி இருந்தாலும் போடு பணம் ,மொய்ப் பணம் கிடைத்துவிட்டதால், வேலையெத்த வேலையை முடிக்க எண்ணி, தப்பிக்க வழியின்றி திருடன்   தற்கொலை செய்து கொண்டான் என்று வழக்கை முடித்தும் தப்பிக்கலாம்

முடிவாக மேற்சொன்ன முடிவுகளின்படி திருடனோ,கூட்டமோ,போலீசோ  இப்படியும் தப்பிக்கலாம்.

வெள்ளை கொக்கு என் கைளிலே..................சிறுகதை

நகராட்சி ஆரம்ப பள்ளியில் இருக்கும்  அய்ந்தாவது வரை படித்துவிட்டு அடுத்தாக ராஜம் வித்தியாலய நடுநிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பில் புதிதாய் வந்த சேர்ந்த மாணவன் பெயர் கணேசன்.

 புதிய இடத்தால்.புதிய முகத்தால் ஏற்ப்பட்ட மிரட்சியால் சில நாட்கள் யாருடனும் ஒட்டாமல் இருந்தான. அந்த மிரட்சியுடனும் பயத்துடனும் ஒட்டாமல் இருந்த நாட்களில் இவனுடன் நட்பு  பாராட்டினான் உடன் படித்த முருகேசன் என்பவன்.

நாட்கள் சென்று வாரங்கள் கடந்து மாதங்கள் வந்தன. கணேசனுக்கு மிரட்சியுமில்லை.படிக்காததினால் டீச்சர் அடிக்கும்  பிரம்பு அடிக்கும் பயமில்லாமல் மரத்துப் போயின அவனுக்கு..

கணேசனுடைய டீச்சர் ஊதிவிட்டால்,தூசியைவிட முன்னே பறந்து செல்லும் ஒல்லிக் குச்சி டீச்சர். மற்ற டீச்சரெல்லாம் குட்டி யானை மாதிரி இருந்தாலும் இவன் டீச்சர் ஒல்லியாகவே இருந்தார் . அதோடு எப்பப் பார்த்தாலும் கைக்குட்டையால் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கும். அந்த டீச்சர்

வீட்டுப்பாடம் எழுதி வராததினால்.டீச்சரைவிட கொஞ்சம் தடியாக இருக்கும் குச்சியால் கணேசனை அடிக்கும்போது, கணேசனுக்கு டீச்சர்மேல் கோபம் வருவதற்குப் பதிலா.பரிதாபம்தான் வரும்  .

தன்னை அடித்தாவது டீச்சருக்கு பலம் வரட்டும் என்பான். வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டு  வராததற்கு அதுவும் ஒரு காரணமாக்கி விட்டான்

சில வேளைகளில், குச்சியை தூக்கி அடிக்க முடியாமல். வகுப்புக்கு வெளியில் முட்டி போட வைத்து விடுவார்.

கணேசனுக்கும் முருகேசனுக்கும் அடி வாங்குவதைவிட முட்டி போடுவது மிகவும் சிரமாயிருந்தது. சிரமாயிருந்தது என்பதைவிட பயமாக இருந்தது.
அதற்குக் காரணம் பள்ளி பிரின்சிபால் அய்யாவின் கொட்டுதான்.

முட்டி போட்டு இருப்பதை அய்யா பார்த்துவிட்டால்.அவ்வளவுதான் அய்யாவிடம் கொட்டுவாங்காமல் தப்பிக்க முடியாது. அப்படி கொட்டு வாங்கி விட்டால் ஒரு வாரத்துக்காகவது மண்டை வீங்கி வலி எடுக்கும்.

இந்த வலிக்கு பயந்தேதான். ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு வகுப்பு மாணவ-மாணவியரும்  பள்ளி யை சுத்தம் செய்ய அதிகாலை ஆறு மணிக்கு  தவறாமல் சென்றுவிடுவார்கள். பள்ளியின் சுத்தம் செய்யும் வேலைக்கு செல்லாதவர்கள் அன்று முழுவதும் முட்டி போடுவதோடு அந்த அய்யாவின் கொட்டு வேறு வாங்கி தொலைக்கனும்.

இந்தக் கொட்டுக்கு பயந்தே,முட்டி போடச் சொல்லும் நாட்களில் மாணவர்கள் அழுது புரண்டு அழுது விடுவார்கள்.  ஒரு வகுப்புக்கு முப்பது மாணவ மாணவியர்கள் உள்ளதில் கணேசனையும் முருகேசனையும் சேர்த்து ஆறு பேர்கள்தான் வீட்டுப்பாடம் எழுதி வராதவர்கள்.

 கொ்ட்டுக்கு பயந்த முருகேசன்  வீட்டுப்பாடத்தை தனக்கு எழுதிக் கொண்டு, சீக்கிரமாகவே வகுப்புக்கு  வந்து நண்பனுக்கு எழுதிக் கொடுப்பான். கணேசன் வீடு பள்ளிக்கு சற்று தொலைவில், முருகேசன் வீடோ,ரெம்ப தூரத்தில்.

இப்படியாக நண்பர்கள் இருவரும் அய்யாவின் கொட்டுலிருந்து தப்பித்து வந்தனர். ஒரு நாள் ஒல்லி டீச்சரின் அடி குச்சி காணாமல் போய்விட்டது. ஒல்லி டீச்சருக்கோ நண்பர்கள் இருவருர் மீது சந்தேகம். நண்பர்கள் இருவருக்கும்  டீச்சரிடம் போட்டு கொடுக்கும்  சக மாணவனான சேது ராமன் மீது சந்தேகம்

டீச்சர் நண்பர்கள் இருவரையும் மிரட்டி உருட்டி பார்த்தும் சத்தியம்மேல் சத்தியம் செய்து தங்களுக்கு தெரியாது என்று சாதித்தனர். நண்பர்கள் இருவரும் கொதித்து போயி. அன்று மதியம்  அன்றைய தமிழ்நடிகர். ஜேம்ஸ்பான்டான ஜெய்சங்கர் பாணியில் சேதுராமனை டூசு்ம் டசும் கொடுத்து விட்டனர்.

அடி வாங்கிய சேதுராமனோ.ஒன்னுக்கு ரெண்டா.டீச்சரை ஒல்லீக்குச்சி தேவாங்கு என்று கேலி செய்வதாக  மூட்டி கொடுத்துவிட்டதோடு, அடி குச்சியை  இவர்கள் ஒடித்துவிட்டதாகவும் பொய் சொல்லி ஒடித்த குச்சியை டீச்சரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

ஏற்கனவே,நண்பர்கள் இருவரையும் சந்தேகம் கொண்ட டீச்சர் கோபம் கொண்டு கொதித்து போயி,நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அவுங்க அவுங்க அப்பா.அம்மாவை கூட்டிட்டு வரனும்.கூட்டிட்டு வரலேன்னா அய்யா விடம் சொல்லிடுவேன் என்று டீச்சர் கண்டிப்பாக சொல்லி விட்டார்.

 நண்பர்கள் இருவரையும் மாட்டி விட்ட சந்தோசத்தில் சேதுராமனும் அவனின் சேத்தாளிகளும் காலரை தூக்கவிட்டுக் கொண்டு டீச்சரிடம் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டனர்.

மறுநாள் நண்பர்கள் இருவரும் வகுப்புக்கு வந்தவுடன் டீச்சரிடம் தங்கள் அம்மாக்கள் நாளைக்கு வருவதாக சொல்லியதை சொன்னார்கள். டீச்சர் சந்தேகம் கொண்டு பார்க்க..., சத்தியம் செய்தார்கள்.

இவர்களின் சத்தியத்தை நம்பாத டீச்சர் இவர்கள் இருவரையும் தனியாக உட்கார வைத்தார். அடுத்த ஆறாம் வகுப்பு  “பி” பிரிவு டீச்சர் லீவு போட்டுள்ளதால் அந்த வகுப்பை கவனிப்பதற்க்காக, வகுப்பு தலைவி கிருஷ்ன வேணியை கவனிக்க சொல்லிவிட்டு, சத்தம் போடக்கூடாது, அமைதியா.க பாடம் படிக்கனும் என்று மிரட்டல் விட்டுட்டு அடுத்த வகுப்புக்கு சென்று விட்டார் டீச்சர்.

தனியாக அமர்ந்திருந்த கணேசனும் முருகேசனும் கசு குசுன்னு மெதுவாக பேசினார். இதைக கவனித்த கிருஷ்னவேணி “ டேய் கணேசா...........பேசாதடா..
பேர எழுதி வச்சுருவேன் ஆமா...... என்றாள்.

முருகேசன், ஒரு விரலைக்காட்டி“பிளீஸ்” ஒரு வாட்டி.இனிமே பேசமாட்டான் என்று வேண்டினான். சிறிது நேரம் வகுப்பு அமைதியாக இருந்தது.

ஒவ்வொரு மாணவ மாணவியரும் அமைதியாக தங்களின் விரல்களை பார்த்த வண்ணம் ஊமைச் சாடையாக  கிசு கிசுத்தனர்.

நண்பர்கள் இருவரும் என்னவென்று கவனித்தனர். கைகளிலுள்ள விரல் நகங்களில் வெள்ளை கொக்கு இருக்கிறதா என்று பார்த்தனர். சிலருக்கு வெள்ளை சிறு புள்ளியாகவும் சிலருக்கு விரல் நகங்கள் மஞ்சளாகவும் பலருக்கு எதுமே இல்லாமல் இருந்தன.

சேதுராமன்  பத்து விரல் கை  நகங்களில் ஒரு நகத்தில் மட்டும் வெள்ளை கொக்கு இருப்பதை அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தான்.

கணெசனும் தன்விரல் நகங்களை பார்த்தான் அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பத்துவிரல் நகத்திலும் வெள்ளை கொக்கு பறந்தபடி இருந்தது.
தன் நண்பன் முருகேசனிடம் காட்டினான்.

”டேய, ஆமடா”  என்று வாய் பொளந்தான். சேது ராமனை தோற்கடித்த சந்தோசத்தில்“ வெள்ளை கொக்கு என் கைகளிலே” என்று கத்தியபடி மற்ற மாணவர்களிடம் தன் கை விரல் நகங்களிலுள்ள வெள்ளை கொக்குவை காட்டி வெற்றி முழக்கமிட்டான்.

அந்த வெற்றி முழக்கத்துக்கு அறிகுறியாக வகுப்பு கரும்பலகையில் கிருஷ்னவேணியால் கணேசன் பெயரும் முருகேசன் பெயரும், பொறிக்கப்பட்டன. மூன்றாதவதாக சேது ராமன் பெயரும் மற்ற சிலரது பெயரும் எழுதப்பட்டன.


 பின் குறிப்பு்----

 கைவிரல் நகங்களில் வெள்ளை கொக்கு பறந்து இருந்தது இரத்த சோகையின் அறிகுறி என்று பத்தாவது படித்து பெயில்  ஆகி  ஊரு சுற்றிக் கொண்டு இருந்த பின்னாளில்தான்  தெரிந்தது கணேசனுக்கு......

புதன் 05 2014

அறிவிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !!!..........

கீழ் உள்ள விளம்பரத்தில் ஆ..........ஆசாமிகள் கூறியிருப்பதை நீங்களே படித்துப் பாருங்கள்




















பின் குறிப்பு...

கொடுமைக்கார பொண்டாட்டிடமிருந்து புருசனுக்கும்
குடிகார கணவரிடமிருந்து மனைவியுக்கும் விடுதலை
கிடைப்பது . அது வேறு  இடங்கள். குழப்பிக் கொல்லக்கூடாது











செவ்வாய் 04 2014

மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள்.

 இருக்கிற எல்லா பத்தரிக்கைகளும் சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்,சாதிவெறி கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களின் மூளையின் சிந்தனையை மழுங்கடித்துவிட்டார்கள். அப்படி மழுங்கடித்துவிட்ட  மூளையை  தேர்தல் வந்தவுடன் ஆளாளுக்கு சிந்திக்க சொல்கிறார்கள் இவர்கள்.

..மழுங்கடிக்கப்பட்டவர்கள் சிந்திக்கதான் முடியுமா??????????????........................

தமிழ்நாட்டில் அதிமுக நடத்துவது ஆட்சி அல்ல. காட்சி, அதற்கு விரைவில் வரப்போகிறது வீழ்ச்சி-அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்---- ------------திமுக பொருளாளர்


ஏழ்மை,வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக.தற்போதைய அட்சியாளர்கள் மதுவை கொடுத்து ஏழைகளின் வாழ்வை சீரழித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மதுவை ஒழிக்க முடியாது.. பணமா? மானமா?பெண்களே முடிவு செய்ய வேண்டும்----------அனைத்து சாதிவெறி சமுதாய தலைவர்-பாமக..


மதுரை மாவட்த்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்களின் பங்களிப்பு இருந்தால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எனவே,பெண்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற,நல்லவர்களை தேர்வு செய்ய சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.------மதுரை மாவட்ட ஆட்சியர்


ஜனநாயக உரிமையை செயல்படத்தாமல் யாரையும் கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. நண்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்----------------------மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்

தேர்தலில் வாக்களிப்பது அனைவரது அடிப்படை கடமை. வாக்காளர்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்காமல் நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்-------------------- குடி அரசு தலைவர்.

திங்கள் 03 2014

பக்தர்களுக்கு ,டிமிக்கி கொடுத்த மனிதக்கடவுள்..................




பெங்களுர்க்கு பொங்க வைக்க வந்த மனிதக்கடவுளைக் காண அங்கு இருக்கும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கூடிவிட்டனர்.

மனிதக் கடவுள்  பெங்களுரில் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கடத்திக் கொண்டு இருப்பதை அறிந்த பக்தர்கள்

மனிதக கடவுளின் தரிசனத்துக்காக பெங்களுர் மையப்பகுதியில் உள்ள கோல்பி அபார்மெண்ட்டில் பக்தர்கள் குழுமிவிட்டனர். இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடு பட்டனர்.

மனிதக்கடவுள் தன் பாதுகாபபு கருதி,  குழுமியிருந்த பக்த கேடிகளுக்கு தரிசனம் தராமல் டிமிக்கி கொடுத்துவிட்டு அபார்மெண்ட்டின் பின்புற வாசல்வழியாக    அதாவது கொல்லை புற வழியாக சென்று காரில்  ஏறி சிட்டாக பறந்து மறைந்து விட்டார் மனிதக் கடவுள்

இதுதானப்பா...........மனிதக் கடவுள் பக்தர்களுக்கு டிமிக்கி கொடுத்த கதை.........

ஞாயிறு 02 2014

சஞ்சீவி மலைக்கு சென்று அங்கிருந்து மேலோகம் சென்ற மெக்கானிக்.........


விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்த தொட்டியம் பட்டியை சேர்ந்தவர் ஜெகதாம்பிகைராஜன் வயயது 46. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கடந்த எட்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லாததால். மனைவி இறந்தபின் ஜெகதாம்பிகைராஜன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த மாதம் தாயும் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெகதாம்பிகை ராஜன், ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கு  பகுதிக்குச சென்றார். அங்கிருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

துக்கம் இப்படியும் உயிரை பறிக்கும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...