பக்கங்கள்

செவ்வாய் 23 2021

விளம்பரத்தில் வெற்றி நடை போடும் தமிழகம்......!!!!!!!!!!!

 







ஒரு செய்தித்தாளுக்கு முழுப்பக்க விளம்பரம் சராசரியாக 5 லட்சம் வரும், என்றால். தொடர்ந்து 2 மாதம் இப்படி போடுகிறார்கள்.

 8 செய்தித்தாள்களுக்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் வெறும் விளம்பரத்துக்கு மட்டும். இரண்டு மாதங்களுக்கு 24 கோடி ரூபாய்கள் ஆகலாம்.

15 க்கு மேற்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரு நாளுக்கு ஒரு தொலைக்காட்சிக்கு 100 முறைக்கு மேலே...

ஒரு முறைக்கு 2 லட்சம் என்றாலும் 100 முறைக்கு 200 லட்சம் வரும்.

10 டிவி சானல்கள் என்றாலே ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் . இரண்டு மாதங்களுக்கு 1200 கோடிகள்

அனைத்து எப் எம் ரேடியோக்களிலும் ஒரு நாளைக்கு 200 முறைக்கும் மேல்.ஒரு முறைக்கு 5000 ரூபாய் என்றாலும் சானலுக்கு 10 லட்சம். சென்னை கோவை மதுரை நெல்லை திருச்சி என 20 க்கு மேற்பட்ட எப் எம்களுக்கு ஒரு நாளைக்கு 2 கோடி  2 மாதங்களுக்கு 120 கோடிகள்

இது போக யூடியூப், கூகுள் ஆட்ஸ் என குறைந்தது 100 கோடி ரூபாயகளுக்கு மேல் ஆகும். இப்படியாக 2 மாதங்கள் வெட்டி நடை விளம்பரத்துக்கு  மட்டும் கிட்டத்தட்ட 1500 கோடிகளுக்கு மேல். இது அல்லாமல் இவர்கள் அரசு இயந்திரங்கள் அனைத்தையும் இவர்களுக்காக செய்யும் செலவு கணக்கே இல்லை..

இவை அனைத்தும் உத்தேசம் தான்.. உண்மையில் இதை விட அதிகம் இருக்கலாம்.நம் வரிப்பணத்தில் நம்மையே இவர்களுக்கான விளம்பரம் செய்ய வைக்கும் செய்தி அளவே இல்லாதது..

இதெல்லாம் யார் வரிப்பணம்?   

மெத்த படித்தவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகிறார்கள்???

பதில் தாருங்கள்!! நடுநிலையாளர்களே!!!.....பதில் தாருங்கள்   !!!!

திங்கள் 22 2021

தெலுங்கானா மாநிலத்தில். ஒரு சாத்தான் குளம்

 

பலியான வழக்கறிஞர் தம்பதிகள்




 போலீசின் அநியாயத்தை எதிர்த்து கேட்டால் என்ன நடக்கும் என்பதை சாத்தன் குளம் படுகொலை உங்கள் கண்ணில் பயத்தையும் நெஞ்சில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியதைப் போல...தெலுங்கானா மாநிலம் பெட்டப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட மந்தனி என்ற காவல்நிலையத்திலும் நடந்திருக்கிறது.

மந்தனி காவல் நிலையத்திற்கு சீலம் ரங்கையா என்பவரை அழைத்து சென்றவர்கள் . அந்த காவல் நிலையத்தில் வைத்து நான்கு நாட்களாக அடித்து துன்புறுத்தி படு கொலை செய்திருக்கின்றனர். இந்த படுகொலைக்கு சாதகமாக உடற்கூறாய்வு அறிக்கையும்  தயாரித்தனர்.

இந்த படுகொலை குறித்து மனித நேயமிக்க வழக்கறிஞர் பி.வி. நாகமணி என்பவர் காவல் நிலைய மரணம் குறித்து மருத்துவர் குழு மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும் என்றும் காவல் நிலைய மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று  தெலுங்கானா உயர் நிதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் காவல்நிலைய மரணம் கு றித்து தெலுங்கானா காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார்  என்பவரை சீலம் ரங்கையா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி  காவல் ஆணையர் அளித்த அறிக்கையை ரகசியமாக வைத்திருந்த அறிக்கையை பார்த்து அதிலிருந்து தேவையான தகவல்களை எடுத்துக் கொள்ள வழக்கறிஞர் பி.வி.நாகமணிக்கு அனுமதி அளித்தது நீதிமனறம்..


இதையறிந்த  மந்தனி காவல் துறையினர் எங்கே உண்மை வெளி வந்துவிடுமோ என்று நிலையில்    வழக்கறிஞர் பி.வி. நாகமணி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் காட்டுவாமன்ராவ் அவர்களையும் மிரட்டத் தொடங்கினர்.

வழக்கை வபாஸ் வாங்கு.. வாங்காவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இந்த மிரட்டல் குறித்து வழக்கறிஞர் நாகமணி அவர்கள் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் தனக்கும் தனது குழந்தைகள். மற்றும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி முறையிட்டார். ஆனால் நீதிமன்றமோ.. காவல்துறையினர் இவர்களை எந்த வழக்கிற்கும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க கூடாது என்ற அளவில் உத்தரவிட்டதோடுநிறுத்திக் கொண்டதோடு, அவர்களின் பாதுகாப்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில் வழக்கறிஞர் பி.வி நாகமணியும் அவரது கணவர் வழக்கறிஞர் காட்டுவாமன்ராவும் வழக்கிற்க்காக  மந்தனி நீதிமன்றத்திற்கு  சென்றுவிட்டு ஐதராபாத்திற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மாலை 3 மணி அளவில் ராமகுண்டம் அருகே காரை வழிமறித்த கூலிப்படை கும்பல் வழக்கறிஞர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் நாகமணி நாகமணி காருக்குள்ளே துடிதடித்து இறந்தார். அவரது கணவர் காட்டுவாமன்ராவை  நடுரோட்டில் இழுத்து போட்டு அனைவரின் கண்முன்பாக  கூலிப்படையினர் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து  சென்றனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் காட்டுவாமனராவ் தனது படுகொலைக்கு  காரணம் குண்டா ஸ்ரீனுதான் என்று கூறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவரும் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தெலங்கானா மட்டுமின்றி  நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



ஞாயிறு 21 2021

கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள் பழித்தீர்ப்பார்கள் | caa | mathimara...



வழக்கு வாபஸ். யார் வழக்குப் போட்டது. அவர்களேதான். நாதஸ் திருந்திட்டான். யார் சொன்னது? நாதசே சொன்னான். மீனவர்களின் அதிமுக அரசுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம். நான் திமுககாரன் கிடையாது. ஆனால், திமுகவை திமுக காரரை விடவும் தீவிரமா ஆதரிக்கிறேன். ஏன்? அதிமுக திரும்ப வரக்கூடாது என்தபதற்காக மட்டுமல்ல; ஒரு இடம் கூட ஜெயிக்கக்கூடாது என்பற்காகவும்.

தமிழர்கள் ஜல்லிக்கட்டு, சிஏஏ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு என தொடர்ந்து போராடியது அதிமுக அரசுக்கு எதிராக அல்ல. பாஜக அரசுக்கு எதிராகதான். ஆனால், அதிமுக அரசு பாஜக அரசாகவே செயல்பட்டு தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை செய்து வழக்குப் போட்டது. அதைதான் இப்போது திரும்ப பெறுவதாக நடிக்கிறது. பாஜகவைவிட பயங்கரமானது அதிமுக அரசுதான்.

போராடிய மக்களை, சிறுமியை மூளை சிதற சுட்டுக் கொன்ற அதிமுக அரசுக்கும் அதன் முதல்வருக்கும் சூழலியல் தவிர்த்த இடஒதுக்கீடுக்காகவும் சூழலியல் போராளிகள் வலிந்து போய் நன்றி தெரிவிக்கிறார்கள். கனிவோடு நடந்துகொண்டார் என புகழ்கிறார்கள். எப்படி முடிகிறது அவர்களால்? அதிமுக அரசை விட இவர்களை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது. நாளை திமுக அரசு அமைந்தாலும் அங்கும் தனக்கு வேண்டிய ஆட்களைப் பிடித்து இந்த பிழைப்புவாத வண்டியை ஓட்டதான் செய்வார்கள்

தமிழர்கள் பகுதியில் நலத்திட்டங்கள் அறிவிக்கிற ராஜபக்சேவிற்கு நன்றி தெரவிப்பதுபோல், உள்ஒதுக்கீடு, வழக்கு வாபஸ் என அறிவித்த எடப்பாடி திரு பழனிசாமி அவர்களுக்கு போராளிகள் நன்றி தெரவிக்கிறார்கள்.
கருணையுல்ல எடப்பாடி மிஸ்டர் பழனிசாமி.
TO SUBSCRIBE https://www.youtube.com/c/VeMathimara... view_as=subscriber





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...