பக்கங்கள்

வெள்ளி 27 2012

நான் நிணைத்தேன்.நீ தும்மிவிட்டாய்.........


பகல் வெயிலின் கொடுமையைப் போக்க நண்பர் மூவர்
மாலை வேளையில் பை-பாஸ் ரோட்டிலுள்ள பாலத்தின்
திண்டின் மேல் அமர்ந்து. தங்கள் ரசித்த.மனதை பாதித்த
உலக விஷயங்களை அசைபோட்டும் அரட்டை அடித்து
சிரித்தும் தங்களை மறந்து பேசிக் கொண்டு இருந்தனர்

அந்த மாலை வேளையில் நாயைப்பிடித்துக்.கொண்டு
வாக்கிங் போவோர்மற்றும்பஸ்களிலும்.டூவீலர்,போர்
வீலர்களில் செல்வோர் பற்றி கண்டுக்கொள்ளாமல்
மூன்று நண்பர்களும் பேசி மகிழ்திருந்த வேளையில்

மாலை மயங்கி இருள் பரவத் தொடங்கியது.ரோட்டிலுள்ள
மின்கம்பங்களிலுள்ள மின்விளக்குகளும் இங்கொன்றும்
இங்கோன்றுமாக எரியத்தொடங்கியது.

சிரித்து மகிழ்திருந்த மூன்று நண்பர்களும் திடீரென்று பதறி
அடித்து எழுந்து நின்றனர்.

நாங்க ஸ்டுடன்ஸ் சார்,வீடு பக்கதில்தான் சார்,2வது தெருசார்
என்பேரு சேகர்,இவன் பேரு மணி,அவன்பேரு வெங்கட்சார்
ரிலாகஸ்க்காக பேசிக்கிட்டு இருந்தோம் சார்.சரிசார்.இனிமேல்
இங்கே உட்காரமாட்டோம்சார்.

மூன்று நண்பர்களும் அமைதியாக தங்கள் வீடுகளை நோக்கி
நடையை கட்டினார்கள். சிறிது தூரம் வந்தபிறகு வெங்கிடு
சொன்னான். போலீஸ்காரனிடம் ஒரு முஸ்லிம் பேர சொல்லி
இருந்தேன்னு வைய்யி.மாப்பிள்ள நம்மல கம்பி என்ன
வச்சுருப்பான்டி என்றான்.

ஏண்டா என்றான்.சேகர்

பாரதீயஜா காரங்க சங்குமம் மாநாடு நடத்துறாங்கடா,அதுக்கு
சதி செய்ததாக வழக்கு போடுவாங்கடா....என்றுவிட்டு தும்மினான்

மணி சொன்னான். நான் நிணைத்தேன். நீ தும்மிவிட்டாய் என்றான்.
மூவரும் சிரித்தபோது.“டேய், பேசாம போங்கடா”ன்னு பைக்கில்
வந்த போலீஸ் கத்தினான்.

மூவரும், திரும்பி பார்க்காமல். பேசாமல்,“நீ நிணைத்தாய்.அவன்
தும்மிவிட்டான்”.மனதிற்க்குள் சிரித்தவாறு எட்டு வைத்தார்கள்


திங்கள் 23 2012

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!


அய்.....யா.......அய்..............யா.....
இந்தியா வல்லரசாயிரச்சு.....
அய........யா..அய்..............யா.....
அக்னி-5பரிட்சை வெற்றி!!!
இந்தியா ...வல்லரசு நாற்காலியில்
இடம் ....புடிச்சிருச்சு..............
அய்...யா...............அய்...............யா..
இந்தியா வல்லரசாயிருச்சு!!!

5000கி்மீ சும்மா பறந்து தாக்கும்
1.100கிலோ எடை சுமந்து செல்லும்
சுட்டவனை குறிதவறாமல் தாக்கும்
அய்................யா.................அய்.............யா....
இந்தியா வல்லரசாயிருச்சு...........

பேரிக்கா,குஷ்யா,பரான்ஸ்,சீ்...னா
நாடுகளின் வரிசையில் இந்தியாவும்
இடம் பிடிச்சிருச்சு.......
இய்....யா........இய்.......யா

டேய்,பாம்பு.பல்லிகளை தின்னுறவனுகளே!
ஒத்தைக்கு ஒத்தியா.....................அல்ல
ரெட்டைக்கு ரெட்டையா,,,,,,,,,.........இனி
ஒனக்கு பதிலடிதான்.............

இனி.நீ நாலு அடி அடித்தால்
ஒரு அடி நிச்சயம்..................
அய்......யா.........அய்.........யா
இந்தியா வல்லரசாயிருச்சு!!

ஏலே,மேற்கே பார்த்து சாமி
கும்புடுறவர்னே, இனி... நீ....
வாலு ஆட்டீன.டிடடரெனட்தான்
அய்....யா.................அய்.........யா...........
இந்தியா வல்லரசாயிருச்சு.


அஞ்ஞானி அப்துாளின் கணவு
பலித்துவிட்டது.இனி என்ன ...
அடுத்த.கணவு காணவு காண
வேண்டியததான்....................

இனி.இந்தியாவில் வெயில்
கொடுமையே இருக்காது
எதற்கும் பசியோ.பட்னியோ
 பஞ்சமே இருக்காது.............
இந்தியா வல்லரசாயிரச்சு
கவலையே இல்லையே..

ஏ...ஏ.....இந்தியாவிற்குள்
குவிந்துள்ள பண்ணாட்டு
முதலைகளே!! பயந்துவிடாதீர்கள்
.இந்தியாவைமுன்னேற்ற
வந்தவர்கள் நீங்கள். எங்களுக்கு
எதிரி.சீனாவும் பாகிஸ்தானும்தான்

வாருங்கள்.வாருங்கள்,வாருங்கள்
இருக்கிறதை மிச்சமீதியில்லாமல்
அள்ளிச்செல்லுங்கள்.....................

இங்குள்ள பராரிகளுக்கு.....................
டீ்வி இருக்கு,மிக்ஸி இருக்கு
கிரைண்டர் இருக்கு..போதா
குறைக்கு மேய்க்க ஆடும்
மாடும் இருக்கு.......அதுவும்
பத்தலையென்றால்..ஊருக்கு
நாலு கோயிலு இருக்கு......

அதையும்மீறி உங்களுக்கு
தொந்திரவு என்றால்.................
போலீசு இருக்கு,அலைய வைக்க
கோர்ட்டு இருக்கு,கதை முடிக்க
இராணுவம் இருக்கு.இதுக்கு
பக்கபலமாக அக்ணி-5ம் இருக்கு

வாங்கப்பா........வாங்கப்பா..........
இந்தியா வல்லரசாயிருச்சு
வாங்கப்பா......வாங்கப்பா.......
பாரின் சரக்கடித்து இந்திய
வல்லரசு ஆன பெருமையை
கொண்டாடுவோம்.........

அய்.................யா............அய்...........யா...
இந்தியா வல்லரசாயிருச்சு..............




ஞாயிறு 22 2012

ஏப்ரல்-22.இந்த மண்னில் சொர்க்கத்தைப் படைத்த மாபெரும் புரட்சி தலைவரின் பிறந்தநாள்.


உலகத்திலுள்ள தொழிலாளர்கள்.விவசாயிகளின் உள்ளங்களில்
விடுதலையைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தவரும் பரந்துபட்ட
மக்களின் நேசதக்குரியவரும் உலக பாட்டாளிவர்க்கத்தின்
ஆசானும் மாபெரும் புரட்சித்தலைவருமான தோழர் லெனின்
பிறந்தநாள்விழா.இந்நாளை சுரண்டப்பட்ட.அடக்கி ஒடுக்கப்பட்ட
மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று கொண்டாட வேண்டிய
நாள்.

தோழர் லெனினை நேசிப்போம்.அவரை கற்றறிவோம். தோழர்
லெனின் எப்படி போதித்தாரோ!..அப்படியே! பன்னாட்டு கொள்ளை
யர்களை,உள்நாட்டு கொடுங்கோலர்களை,திரித்து புரட்டும்
எத்தர்களை எதிர்த்து போராடி தோற்க்கடிப்போம்.

தோழர் லெனின் நமக்கு எப்படி வழிகாட்டினாரோ!அந்த வழியில்
இந்தியமண்ணில் புதியஜனநாயத்தை,புதிய கலாசாரத்தை
படைப்போம்.

“ சிறிய காரியங்களை செய்ய ஒரு போதும் மறக்காமல் இருப்போம்
சிறிய காரியங்களிலிருந்தே.பெரிய காரியங்கள கட்டியமைக்கப்
படுகின்றன”-என்ற லெனின் ஆனையை. லெனின் பிறந்தநாள்
வாழ்த்தாக கொண்டு செயலாற்றுவோம்.

வாழ்க!தோழர் லெனின்! ஓங்குக! தோழர் லெனின் புகழ்!
இந்தமண்ணில் சொர்க்கத்தை படைத்தவர்கள்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...