பக்கங்கள்

சனி 18 2012

மடியாத,மறையாத கட்டுக்கதைகள்.........(2)

ஒருவர் தனக்கு கல்யாணமாகி இரண்டு
வருடமாகிறது. தனக்கு குழந்தை பாக்கியம்
எப்போது கிட்டும். அதற்கு நான் என்னென்ன
பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை
கூறுங்கள் என்று ஒரு வேத விற்பன்னரிடம்
கேட்டாராம்.

நல்ல வேளையாக, டெக்ஸ்பேபி,விந்து
தான கருத்தரிப்பு, வாடகைத்தாய் போன்ற
விபரங்கள் தெரிந்த வேத விற்பனரான அந்த
ஆன்மிக டாக்டரோ, அவரின் மனைவியை
பார்த்துதான் பரிகாரங்களை கூறுவேன் என்று
கூறாமல் குழந்தை பிறப்பதற்கான பரிகாரவழி
வகைகளை கூறினார்.

செத்துப்போனவர்களின் நேர்த்திக் கடனை காலம்
தாழ்த்தி செய்வதில்தான் குழந்தை பிறப்பு நிறுத்தி
விடுவதற்கு காரணமென்று கண்டுபிடித்து,அதை
சாஸ்திரம் சொல்வதாக சொன்னார்.அந்த வேத
விற்பன்னர்.

அதனால்.உங்கள் வீட்டில் முன்னோர்களின்
நேர்த்திக்கடனை அமாவாசை தர்ப்பணம் முதல்
வருடாவருடம் கொடுக்கப்படும் திதிவரை உங்கள்
மனைவியை செய்யச் சொல்லுங்கள். அதையும்
சிரத்தையோடு செய்யவேண்டும் என்றார்.
அப்படியும் பிறக்கவில்லையென்றால் சிரத்தை
யோடு செய்யவில்லை என்று தப்பித்து கொள்வா?
என்று வாசகர்கள் நிணைக்கக்கூடாது.


அவரின் மனைவியின் சாதகப்படி புத கிரக
பரிகாரத்தை செய்யவேண்டும். இதோடு

ஈயப்பாத்திரத்தில்சுத்தமான நெய்யும்
பித்தளை பாத்திரத்தில் சுத்தமான பசும்பாலை
யும்விட்டு புதன்கிழமையன்று அந்தனருக்கு
தானம் செய்யவேண்டும். ராமாயணத்திலுள்ள
சுந்தர காண்டத்தை பாராயணமாக படிக்கச் சொல்லி
கேட்கவேண்டும் என்றார். அந்த வேதவிற்பன்னர்.

இந்த பரிகாரங்கள் குழந்தையில்லாத குடும்பத்தின்
 ஆம்படையானுக்கு இல்லை,பிறந்த வீட்டிலிருந்து
வரதட்சனையும் கொடுத்து,அவன் கூப்பிடுகிற
நேரத்துக்கெல்லாம் அவனுடன் படுத்து இருந்து
அவன் துணிமணிகளை துவைத்து,வக்கனையாக
சமைத்து போட்டு அவனுடைய சொத்துக்கும்
வாரிசாக,அவனுடைய ஆன்மைக்கு சான்றாக
ஒரு பிள்ளையையும் கொடுக்கனுமாம்.

பிள்ளை பெத்து கொடுக்காவிட்டால் மொத்த
பழியும் சுமந்து பிள்ளை பிறப்பதற்கான பரி
காரங்களையும் அந்தப்பென்தான் செய்யனுமாம்

போதும்டாசாமி? உலகமே சுறுங்கினாலும்
இப்படிபட்ட பித்தலாட்மும் அயோக்கிய தனங்களும்
பரந்து விரியும்மாப்பா சாமி!!!

செல்போன் மாதிரி,பிள்ளை பெக்கும் இயந்திரம்
ஒன்றை கண்டுபிடித்தால்................பிள்ளை
பெக்கும் இயந்திரம் ஒன்றை கண்டபிடிக்க
அதற்கும் ஏதாவது ஒரு பரிகாரம். இல்லாமலா?
இருக்கும்!

தமிழகத்தில் பத்து மணிநேரம் மின்வெட்டை
போக்க அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா
வேத விற்பனையாளர்களே!!!! கூடங்குளத்த
காட்டதீங்கப்பா!அதுக்கு பரிகாரம் சொல்ல!
நால்வர் மற்றும் அய்வர் குழு
ஒன்னு வந்துகிட்டு இருக்குப்பா!!!!

தமிழ்நாட்டை ஆளும் ஆத்தா, பரிகாரம் செய்த
தினால்தான் மூன்றாவது தடவையாக ஆட்சி
நாற்காலியில் உட்கார்ந்து இருக்காங்கலாம்....!!!!!!
இந்த மாதிரி தஞ்சாவுரு தலையாட்டி மாதிரி
ஒரு பரிகாரம் சொல்லுங்கப்பா வேத விற்பனை
ஆளர்களே!!

செவ்வாய் 14 2012

நண்டு கதை கேளுங்கோ......கொக்கு கதை கேளுங்கோ.....

மகா.மகா, மக்கு சனங்களே!!

தமிழகத்துக்கு மூன்றாவது முறையாக இருண்ட
காலத்தை ஆடசிக் கட்டிலில் அமர்த்திவிட்டு
குத்துதே, குடையுதே! என்றும் புலம்பும்
 மற்றும் புலம்பாத அடுத்ததேர்தல்வரை
காத்து இருக்கும் வேலை வெட்டி இல்லா
சனங்களே!



உங்களுக்காக, ஆத்தா,கதை சொல்லியிருக்காங்கோ,
 நண்டு கதை கேளுங்கோ..கொக்கு கதை கேளுங்கோ............



இதுல, நண்டு யாரு, கொக்கு யாருன்னு கண்டு
பிடியுங்கோ, கண்டுபுடுச்சு சொல்லலைன்னா,
உங்க தல வெடிக்காதுங்கோ........பயப்படாதிங்கோ....

இப்போ,நண்டு கதை கேளுங்கோ..........
கொக்கு கதை கேளுங்கோ..................

தமிழ் நாட்டிலுள்ள குளத்தில் மீன்களை பிடித்து
தின்ற கொக்கு ஒன்று ஒரு நாள் சோகத்தில்
இருந்துச்சாம், அப்போது அங்கு வந்த நண்டு
ஏன்? சோகமாய் இருக்கிறாய் என்று கேட்டுச்சாம்.

அதற்கு, கொக்கு..குள்த்தை குத்தகைக்கு
எடுத்தவர் தண்ணீரை இறைத்து விட்டு
மீன்களை பிடித்து சென்று விடுவாரே,
 அதனால் மீன்களில் கதி என்னவாகுமோ?
என்ற கவலையால் தான் சோகமாக
இருப்பதாக சொல்லுச்சாம்.

அடகொக்கா...மக்கா.கொக்குவின்
சோகத்த கேட்டீங்களா?..............

கொக்குவின் சோகத்தைக்கேட்ட நண்டு
ஒரே ஓட்டமாகச் சென்று மீன்களிடம்
சென்று கொக்குவின் சோகத்தை சொல்லுச்சாம்.

அதைக்கேட்ட மீன்கள் .கொக்குவிடமே.
தங்களை காப்பற்றுமாறு யோசனை
கேட்டச்சாம். எப்படியிருக்கு?

அதற்கு. அந்த கொக்குஉங்களுக்காக சிரமம்
பார்க்காமல்.கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு,
அருகில் உள்ள வேறு ஒரு குளத்தில் விட்டு
 விடுவதாக சொல்லுச்சாம்.

மதிகெட்ட மீன்களும் தங்களை வாழ்விக்க
வந்த கொக்கேன்னு, பிளக்ஸ் போர்டு வச்சு
புகழ்ந்து தள்ளியிருக்குமுல்ல,?????

மீன்களை காப்பாற்றுவதற்கே அவதாரம்
எடுத்து வந்த கொக்கும். மீன்களை துாக்கிச்
செல்வதுபோல் பாவ்லா காட்டி,  அண்ணன்
 கேப்டன் நாட்டு மக்களை தீவிரவாதிகளிட
மிருந்து காப்பது மாதிரின்னு வச்சுகுங்க..............

அந்தக் கொக்கு மீன்களை துாக்கிச் சென்று
 பாறையில் வைத்து மீன்களை அவசரப்படாமல்
அவதிப்படாமல் நிதனாமாக தின்று கொழுத்து
 வந்ததாம்.

நண்டுவும் மீன்களை மாதிரி தன்னையும்
அடுத்த குளத்தில் விட்டுவீடுமாறு
கூறி கொக்குவின் கழுத்தை பிடித்துக்கொண்டதாம்.
 கொக்கு பறந்த நிலையில்பாறைகளில் மீன்களின்
 முட்கள் கிடப்பதைக் பார்த்த நண்டு. தாம் ஏமாற்றப்
பட்டு கொல்லப்படுவோம் என்பதை தெரிந்து
கொண்டதாம்..அதனால் கோபம்கொண்ட நண்டு.
 கொக்குவின் கழுத்தை நெரித்து கொன்றதாம்.

கொலைக்கு கொலை, பழிக்கு பழின்னு
நெனெச்சிடகூடாது....மக்கா......

இறந்த கொக்குவின் தலையுடன் வந்த
 நண்டு, மீன்களிடம் நடந்த கதையை
கொக்குவின் நயவஞ்சகத்தை கூறியதாம்.
கொக்குவிடமிருந்து தப்பித்த மீன்கள்
மகிழ்ச்சி அடைந்தனவாம்.
அப்புறம் சந்தோசமா சாகுறதுக்குன்னு
நிணைக்கக்கூடாது.

நண்டு கதைய கேட்டீங்களா??....
 கொக்கு கதைய கேட்டீங்களா???....

இந்தக் கதையில கொக்கு யாரு?
நண்டு யாரு? அட மீன்கள் யாரு?

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
குத்தமில்லீங்கோ!!!! உங்களுக்கு
அவ்வளவுதான் சரக்குன்னு
நெனச்சிருவேனுங்கோ!!!!!!!

இன்னும்.. என்ன நோண்டிகிட்டு
இருக்கீங்க...... கதை அம்புட்டு தாங்கோ!!!!



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...