பக்கங்கள்

வெள்ளி 13 2015

அனுபவம் பேத்துனது......

பிப்ரவரி14 க்கான பட முடிவு
படம்-

காதலர்தினம்  என அறிவிப்பதற்கு முன்னால் காதலித்து, காதலில் வெற்றியை பறிகொடுத்த ஒரு வரின்  அனுபவம் பேத்துனது.

“இந்திய ஆடவர்களில் 99%  பேர் தங்கள் வாழ்க்கையில் கறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.”

“அவர்களில. 76 % பேர் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கரைகளுக்கு மகளிரே காரணம் என்கின்றனர்.”

வியாழன் 12 2015

ஒரு விசாலிப்பூ.....??????

படம்-tamil.filmibeat.com



ஏலேய்......வெண்ணே.....  ஒங்க..ஏரியாவுல..என்னடா...? ரேடியா  பாடுது....

ரேடியாவாாா........!!! ஓ...... அதுவா......ண்ணே......

ஆமாலே.......

அது ஒன்னுமில்லே...ண்ணே... விசயந்து கட்சிகாரங்க  ரேடியா போடுராங்க..ண்ணே...”

அதுதாண்டா....வெண்ணே........ எதுக்குடா.....ரேடியா ...போடுறாங்கே.....


அதுணே..... விசயந்து கட்சி தொடங்கி  பதிணைந்து வருசமாச்சாம்...ணே.... அத  நிணவு படுத்தி ...ரேடியா  ....போடுறாங்கண்ணே.......


பாருடா....... டில்லியில...... ஊழல..ஒழிப்பேன்னு சொல்லி... கேசரிவாலு வந்தது மாதிரி  இங்கேயும்....  இவுனுக.... வந்திருவாங்கே...யடா.....

அட.. போண்ணே...இவிங்களாவது வர்தாவது...... ஆத்தா  நம்ம கஷ்ட நஷ்டத்த
புரிஞ்சு தெருவுக்கு நாலு கடய தெறந்து வச்சு குடிச்சு சந்தோசமா...இருங்கடான்னு வச்சுருக்கு. இந்தாளு என்னத்த திறந்து வச்சாரு....ம்ம்ம்....

 டேய்.......அதுக்குத்தாண்டா...... இப்போ ரேடியா போட்டு...குடி மக்களுக்கு நிணவு படுத்துறாங்கே.....அடுத்து எங்கள ஆட்சீயில ஏத்துங்க....டான்னு....

ஆத்தாளா..விட... இவரு நல்லா..செய்வாரா...ண்ணே......

ஏய் ... ஒனக்கு தெரியுமாடா..?..  அந்த வெள்ள எம்ஜியாரு குடிச்சு பழகாத  மகன்டா....இந்த  கருப்பு எம்ஜியாரு ..குடிச்சு பழகின குடி மகன்டா ஆத்தா..என்ன குடிச்சா இருக்கு....அதே தெருவுக்கு நாலு தொறந்து வச்சயிரக்கேயில.... இவரு வந்தா.. நாட்டு குடி உயர.. குடி மகனுக்கு நல்லது செய்யாமலா  இருந்திடுவாரு..........????

 ஆமாண்ணே.... நீங்க...சொல்றதிலேயும்.... ஒரு ஞாயம் இருக்குண்ணே...... அவரு..நம்ம  குடி மகண்னுல்ல.......ஆத்தா..குடிச்சதா  தெரியலைண்ணே...



புதன் 11 2015

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.....


டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்: தோல்வியை சந்தித்தது மோடி-அமித் ஷா கூட்டணி



Feroz Babu-படம்





Mustak Fari-படம்


டில்லியில் கடல்
இல்லாததால் மோடி
அலையும் அமித் ஷா
அலையும் அடிக்க
வில்லையாம்......

செவ்வாய் 10 2015

தேநீரால் பதவி அடைந்தவர்கள்...??????????

படம்-tamil.thehindu.com




முன்னோரு நாளில்
தேநீர் கடையில்
டீ வித்தவர்
பிரதமர் பதவி
அடைந்தார்........

நேற்றைய நாளில்
தேநீர்  கடையில்
டீ ஆத்தி கொடுத்தவர்
சிவ லோக பதவி
அடைந்தார்.......




திங்கள் 09 2015

பாவம் போக..கோயில் கோபுரம் கட்டு,அன்னதானம் போடு..

20150209_114651.jpg ஐக் காண்பிக்கிறது
படம்-  பாவம் போக கோயில் கோபுரம் கட்டு.
தாழ்ந்த ,ஒதுக்கப்பட்ட
சாதியில் பிறந்தவன்
அண்ணல் அம்பேத்கர்
தந்தை பெரியார்களின்
உதவியால் மாநகராட்சி
கடைநிலை ஊழியராக
பணி சேர்ந்து படிப்படியாக
வருவாய் அதிகாரியாக
உயர்ந்து இன்னுமொரு
ஆதிக்கச்சாதியக்காரனாய்
வளர்ந்தான்..............

டோல்கேட் வசூல்  வருவாய்
பொறுப்பு அதிகாரியா பணி
ஆற்றியதில் ரிங்ரோட்டுக்
கடன் முடிந்தும் வசூல்
செய்த பணத்தில்  மேல் நிலை
அதிகாரிக்கும் கீழ்நிலை அதிகாரிக்கும்
 பங்கு பணம் போக ஊழல் பணம்
அவனிடம் அடுக்அடுக்காக சேர்ந்தது.

அந்தப் பணத்தைக் கொண்டு
தந்தையின் பூர்வீக இடத்தோடு
புறம்போக்கு இடத்தையும் வளைத்து
போட்டு எண்ணி முப்பதே நாளில்
வீட்டைக்கட்டினான்...........

கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு
 சேர்த்து வைத்த பணத்திற்கு வருமான
கணக்கு காட்டியபோதும் டோல்கேட்டில்
வசூலித்த ஊழல் பணம் மூட்டையாக
சேர்ந்து போனது..........

தணிக்கை ரிஷிகள் வழி காட்டினார்கள்
ஊழல் பணத்தால் வந்த பாவம்
தீர.பேருக்கு கணக்கு காட்ட
புதிதாய் கட்டிய வீட்டின் முன்
உள்ள கோயிலுக்கு கோபுரம்
கட்ட நண்கொடை தாருங்கள்
என்று ஃப்ளக்ஸ் போர்டை வை

கோபுரம் கட்டி முடித்து கும்பாபிஷேகம்
நடத்து. அன்னதானம் போடு
ஊழல் பணத்துக்கு கணக்கும்
வந்துவிடும்.  பாவமும் போய்விடும்

பாவம் போவதோடு பேரும் புகழும்
வந்து சேரும். கடவுளே வந்து கேள்வி
கேட்க முடியாது.  வஞ்சகக் கடவுள்
கேள்வி கேட்டாலும். காட்டப்படும்
கணக்கு வழக்குகளால் அந்தக் கடவுளும்
வாய் மூடி மௌனியாகிவிடும்.

இதுதான் கடவுளை தோற்றுவித்த
மனிதனின் ஊழல் பாவம் போக்க
 தொன்று தொட்டு கைக்கொண்ட
வரலாற்று சான்று......

பாவம் போக..கோயிலுக்கு கோபுரம்
கட்டு, அன்னதானம் போடு....



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...