பக்கங்கள்

சனி 18 2014

மார்க்சிஸ்டு கட்சி என்பதே தொழிலாளி வர்க்க அமைப்பு அல்ல”

ww.vinavu.com 







ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை,
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளி வர்க்கத்திற்கு தேவை என்றார்.
இந்திய வாலிபர்  சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.

மதவெறியை மாய்ப்போம்.
மனித நேயம் காப்போம்என
தட்டிக்கு தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்கு செட்டு போட்டு
இந்து வெறிக்கு சிவப்புக்கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா என்றார்
தோ........ழ.......ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம இல்ல
 என்றார் அழுத்தமாக.

அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதி கல்லூரி எதிர்ப்பு பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றார்

மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எஃப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.

மீன் குழம்புக்கும் விலை மாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர் வெறி பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றார்.
த.மு.எ.ச. வர்க்க ஸ்தாபனம் இல்ல
 என்றார் தயக்கமின்றி.

தீபாவளி,திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றார்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா,
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
 தனித்த சிரிப்புடன்

 “நானொரு பாப்பாத்தி”என்று
கோட்டையிலே சொன்ன
ஜெயலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு
மதச்சார்பற்ற....ஜனநாயக......முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றார்.
தோழர் உங்களுக்குச சொன்ன புரியாது
 என்பது போல
கன்னபின்னாவென முகத்தை சுழித்தார்

இந்த முறை அந்தத் மாக்சிஸ்டு ஊழியர்க்கு  சென்னார்

                                                “மார்க்சிஸ்டு கட்சி என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு(ஸ்தாபனம் )அல்ல” என்று

நன்றி!..-- துரை சண்முகம்( புதியகலாச்சாரம் செப்-2003).


வெள்ளி 17 2014

என்னிடம் இருப்பது ஏராளம்.........(சிறைக்கவிதை)

மழையில் சொட்டச் சொட்ட நனைந்த
ஒரு நாளின் மாலைப்பொழுது
ஒளியில் இட்டு நெய்தெடுத்த
ஒரு வாழ்ககை

ஒருமித்த கூட்டுணர்வால்
உருவான நாங்கள்
அங்கே விளைந்து
பயிரான நான்

என்னிடமிருந்து உன்னால்
எதை எடுக்க முடியும்
இந்த மாலைப்பொழுதை
எந்த இருட்டுச் சிறையில் பூட்ட முடியும்?

ஒரு உயிரைப் பிறிதோர் உயிரால்
மோதித் தேய்த்து
அழித்துவிட முடியுமோ உன்னால்?
எம்மிலிருந்து என்னைத்
தனனியே பிரித்துவிட முடியுமோ
உன்னால்?

என்னிடம் ஏதுமில்லை
என்றாய் அல்லவா,
உன்னை வெல்லும் சக்தியே
அங்குதான் உள்ளது.
என்னிடம் இருப்பது ஏராளம்
ஏதுமில்லை என்பதிலும் ஒன்றிருப்பது
உனக்கு தெரியாது

--------பாஷ் (சிறைக்கவிதை)











நன்றி! புதிய கலாச்சாரம் மே. 2004.

வியாழன் 16 2014

சீடனை முந்திய குரு...........!!!!!!!!!!



ஒரு குருவும் சீடனும்  ஒரு ஊரின் கடை வீதியின்  வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது கடை வீதியின் ஒரு சுவற்றில் “இந்துக்களே!1 இந்துக்கடையிலே பொருட்கள் வாங்குங்கள் இப்படிக்கு  இந்து முன்னணி விளம்பரத்தை பார்த்தனர்.

குருவானவர் படித்து விட்டு  சீடனை பார்த்தார். குரு பார்வையின் எண்ணத்தை புரிந்து கொண்ட சீடன்.

குருவே, தாங்களும் தங்கள் அடியொற்றி தானும் இடுப்பில் கட்டியுள்ள உடையை பல தடவை துவைத்துதால் பழங்கதையாகிவிட்டது. நாமும் சிவனையும் பெருமாளையுமே பூஜித்து வருவதால்.அந்த வாசகத்தினபடி நாம் இந்துக்கள்தான். ஆகையால்  விலையில்லாமல் தருவதை  இந்துக்கடையிலே  வாங்குவோம். என்றான்.

சீடன் சொல்வதை ஆமோதித்த குருவானவர். மெல்ல திருவாய் மலர்ந்தார்..

“நாம் வாங்குவது இந்துக்கடைதான் என்று எப்படி தெரிந்து கொள்வது”.

“குருவே, அது ரெமப சிம்பிள் குருவே”, இந்துக்கள் அல்லாதவர்கள் தலையிலே குல்லா போட்டு இருப்பார்கள் தாடி வளர்த்திருப்பார்கள் குருவே என்றான் சீடன்.

“குருவானவர். சீடனை முறைத்தபடி தன் தாடியை தடவி காட்டினார்.

சுதாரித்த சீடன். தங்களைப்போல் நீண்ட தாடியும் குடுமியும் வைத்திருக்க மாட்டார்கள் குருவே என்றுவிட்டு, அவர்கள் நம்மைப்போல் நெற்றியில்
படடையோ,நாமமோ, பொட்டோ பூசியிருக்க மாட்டார்கள. மேலும் இடுப்பில கருப்பு கயிறு கட்டியிருப்பது மாதிரி  வலது கைகளிலே கலரில் சாமி கயிறு கட்டியிருப்பார்கள் குருவே. இதை வைத்து நாம் இந்து கடையை கண்டுபிடித்து விடலாம் குருவே என்றான் சீடன.

 இதை கேட்ட குருவானவர் சீடனின் புத்திசாலி தனத்தை மெச்சி சீடனை தட்டிக் கொடுத்தார்.

சீடன் சொன்ன அடையாளத்தின்படி நெற்றியில் பட்டை.பட்டைக்கு நடுவில் குங்குமப்பொட்டு, வலது கையிலே கயிறு கட்டி, கடையிலே அமர்ந்திருந்த இந்துக் கடைக்குள் சென்றனர்.

குருவையும் சீடனையும் கண்ட இந்துக்கடை முதலாளியானவர். என்ன வேனும் என்று கேட்டுவிட்டு கடையின் பிரிதொரு இடத்தை காண்பித்து அங்கு செல்ல பணித்தார்.

வேண்டிய துணிகளை தேடிபிடித்து பெற்றுக் கொண்ட குருவும் சீடனும் முகம்மலர வெளியே வந்தனர்.

 அவர்கள் சென்ற பிறகு,கடையின் வாசலில் இருந்த கேசியர். குருவும் சீடனும் துணிகளுக்கு பணம் கொடுக்காமல் செல்வதைக்  முதலாளிடம் சொன்னான் . முதலாளியின் கோபத்தில் கெட்ட வார்த்தைகளால்  சத்தம் போட்டார்.

முதலாளி  சத்தம் போடுவதைக் கண்ட ஊழியர்கள் கூச்சலிட்டவாறு  குருவையும் சீடனையும் நோக்கி ஓடி வந்தனர்.

ஆக்ரோஷமாய் கத்திக்கொண்டு வந்த கூட்டத்தைப் பார்த்ததும்  சீடன் பயந்து போய் ஓட ஆரம்பித்தான். சீடன் தன்னை விட்டு தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்த குரு. திரும்பி பார்த்தார். கூட்டம் வெறி கொண்டு கத்தி ஓடி வருவதைக் கண்டதும்

அரண்டு போய்  அடித்து பிடித்து சீடனை முந்திக்கொண்டு ஓடினார்.


இந்துக்களே! இந்துக்கடையிலே காசு கொடுத்து பொருட்களை  வாங்குகள் என்று சிந்தித்து வாசகத்தில் சொல்லியிருந்தால் இந்துக்களான குரு  ,சீடனை முந்திக் கொண்டு  தலை தெறிக்க ஓட வேண்டிய  நிலை வந்திருக்காது.

புதன் 15 2014

ஓட்டு மட்டுமே போடும் ஜனநாயக உரிமையால் என்ன பயன்.......???

படம் இன்று காம்











முதலாளிகளின் சுரண்டலை ஒத்துக்கொள் என்ற நிபந்தனையின் அடிப்படையில்  ஒட்டு போடும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்தான் முதலாளித்துவ ஜனநாயகத்தின்  உரிமைகள்.

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின்  உரிமைகளான..................

மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு ,எழுத்தறிவே இல்லாதபோது  எழுத்துரிமையால் என்ன பயன் ?

அந்த பாதி மக்கள் தொகையில் ஒரு சிலர் கல்வியறிவு பெற்று இருந்தாலும் இலட்சகணக்கில் முதலீடு செய்ய பணமின்றி பத்திரிக்கையோ, தொலைகாட்சியோ  நடத்த முடியாதபோது கருத்துரிமையால் என்ன பயன் ?

வேலை வாய்ப்பே இல்லாதபோது.இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன் ?

அன்றும் இன்றும் இருக்கும் தொழில்களே! நசிந்து, காணாமல் போய் கொண்டு இருக்கும் பொழுது எங்கு வேண்டுமானாலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன் ?

விலையில்லா அரிசி கிடைத்தும் உண்ண முடியாமல். பட்டினியால் சுருண்டு கிடப்பவருக்கு வாழ்வுரிமையால் என்ன பயன் ?

உணவு.தண்ணீர், மின்சாரம், சாலை,கல்வி, மருத்துவம்,வேலை போன்றவற்றை வழங்க முடியாத வாக்குரிமையால் என்ன பயன் ?

இந்த ஜனநாயகத்தில்....................

சொத்து சேர்ப்பவன்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன். சொத்து உள்ள தனி நபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த இலட்சியம். திறமையற்றவர்கள்தான் ஏழைகள். சொத்து உள்ளவன்தான் இந்த உலகத்தை ஆள்கிறான்.

இந்த  முதலாளித்துவ சொத்துடமையின் பரிணாம வளர்ச்சிதான். மறுகாலனியாக்கமான தனியார்மயம்,தாராளமயம், உலகமயம்.

இந்த முதலாளிகளின் ஜனநாயகத்தின் ஒரு வழிமுறைதான்  தேர்தல்.ஒரு பயனுமில்லாத இந்தத் தேர்தலில் காசு வாங்கியோ.வாங்காமலோ, தெரிந்தோ,தெரியாமலோ, எந்தக் கட்சிக்கும்  ஓட்டு போட்டாலும்

அது எல்லா அடக்கு முறையின் முழு வடிவமான பாசிசத்திற்கு ஓட்டு போட்டதாகவே பொருள்..................
                                                               
 நன்றி!  புதிய கலாச்சாரம்.

செவ்வாய் 14 2014

குழந்தையை கொன்றது ..வீட்டுக்காரியான பேய்தான்!????????????

அனுஜா~2.jpg ஐக் காட்டுகிறது

நடக்கும் வயதுள்ள பெண் குழந்தை ஒன்று.ஆங்கில புத்தாண்டு அன்று தீடிரென்று இறந்துவிட்டது.

குழந்தையின் தாய் இரவில் சீட்டு விளையாடிய களைப்பால் பகலில் தூங்கிவிட்டதால்,வீட்டிற்குள் விளையாடிய குழந்தை தவழந்து வந்து அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வட்டையில்  தலை கீழாய் விழுந்து மூச்சு திணறி இறந்து விட்டது.

அருகிலுள்ள சிலர் பெரிய (அரசு) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லி 108க்கு போன் செய்ய சொன்னபோது சின்ன குழந்தையை அறுத்து சின்னா படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தை சொல்லி தவிர்க்கப்பட்டது.

இறந்த குழந்தையை புதைப்பதற்க்காக மாநகராட்சி மாயனத்தை அனுகியவர்கள், மருத்துவ சான்று இல்லாமல் புதைக்க முடியாது என்று மயான ஊழியர்கள் மறுத்து விட்டனர்.( அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியததால்)

அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் குழந்தை இறந்த காரணத்தை சொல்லி, இறந்தற்க்கான சான்று கேட்டபோது.அந்த மருத்துவரும் இறந்த சான்று தர மறுத்துவிட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

சிறு குழந்தை என்ற காரணத்தால் பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்ப்பதாக மீண்டும்  சொல்லப்பட்டது.

ஒருவழியாக அருகில் வசித்த  குழந்தையின் தாய்மாமன் முயற்சியில்.ரெண்டு ஆட்டோ பிடித்து தொலைவிலுள்ள மயானத்தில் குழந்தையை அடக்கம் செய்துவிட்டார்கள்.

இரண்டு நாள் கழித்து, குழந்தையின் தாயானவள் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம். கதை சொன்னாள்.

அவள் குடியிருக்கும் வீட்டின் ஓனர் பொம்பளை.ஒரு வருடத்துக்கு முன் மண்ணணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். அவள்தான் பேயாக வந்து தன் குழந்தையை கொன்றதாக சொன்னாள்.

 அந்த வீட்டுக்காரியும் இவளும் இணைபிரியாதவர்க்ள் ஆச்சே, எனப்து பற்றி தெரிந்தவர்கள்  “நீயும் அவளும் இணைபிரியாத தோழிகளே” அவள் எப்படி உன் குழந்தையை கொள்வாள் என்று கேட்டபோது.............

அதற்கும் ஒரு கதை சொன்னாள். அந்த பாசத்தால்தான் என்னை தூக்கதில் எழுந்திருக்கவிடாமல் அமுக்கவிட்டு என் குழந்தையை தண்ணிரீல் முக்கி கொண்று விட்டாள் என்றாள்.

இதற்கு ஆதரவாக.. செத்துப்போன வீட்டுக்காரியின் இன்னொரு வீட்டில் குடியிருந்து வந்த பெண்ணுக்கு குறை மாசத்திலேயே குழந்தை இறந்து பிறந்ததாக கூறினாள்.

துக்கம் விசாரிக்க வந்தவளில் ஒருத்தி கேட்டாள்,வீட்டுக்காரியின் மகளும்தான் குழந்தை பெத்து இருக்காளே! அவ குழந்ததை சாகலையே என்றாள்.

அதான் எனக்கும் தெரியல............ என்று மழுப்பினாள்.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்காரியின் மகளின் மூலம் கெட்டிக்காரியின் புளுகு வெளி வந்தது.

வீட்டுக்காரியின் மகள், குழந்தையின் தாய்.மற்றும் வீட்டுக்காரியின் மகளின்  சித்தி .இன்னொருவர் ஆக இவர்கள். இரவு முழுவதும் காசுக்கு சீட்டு விளையாடும் விளையாட்டு அதிகாலையில்தான முடிந்ததாம்.

அவளின் கனவனோ இரண்டு நாட்களுக்கு முன்னமே வெளியூரிருக்கு வேலை சென்று விட்டதால............  காலையில் வீட்டு வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு படுத்து விட்டாள். தூங்கிக் கொண்டு  இருக்கும் பொழுது குழந்தை அழுததால்.............. குழந்தைக்கு சரமரியாக அடி கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டாள்.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால், வீட்டுக்காரியின் மகளானவள். அவள் வீட்டிற்க்குள் எட்டி பார்த்து இருக்கிறாள்.

அப்போது,குழந்தையின் அழுகையால் கோபமுற்ற தாயானவள். குழந்தையை தூக்கி தண்ணீர் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் வாழியில் தலைகீழாக முக்கு முக்கி தரையில் பொத்தென்று போட்டுவிட்டாள்.பிறகு  இதை கவனித்தக் கொண்டு இருந்த வீட்டுக்காரியின் மகளை வெளியே  அனுப்பிவிட்டு


பொத்தென்று போடப்பட்ட குழந்தையை பார்த்தாள். குழந்தை இறந்து விட்டது. தூக்கம் களைந்தவளாக, குழந்தை விளையாடும்போது  தண்ணீரில் முழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்துவிட்டாள்.

குழந்தை இறந்த செய்தி கேட்டு. நாலு வீடு தள்ளி குடியிருக்கும் தாயானவளின்  தம்பி, வந்து.“ இரவெல்லாம் சீட்டு விளையாடிததால் குழந்தையை கவனிக்காமல் கொன்றுவிட்டாய் என்று நாலு போடு போட்டான். அவனைத் தொடர்ந்து தாயானவளின் தாயும் அவளின் அக்காமார்களும் அடித்து துவைத்து திட்டினார்கள்.

உண்மை  இப்படி இருந்த போதிலும், தன் குற்றத்தை மறைக்க,........ தீ கொளுத்தியின் மகளானான தீயிட்டு செத்த வீட்டுக்காரிதான் பேயாக வந்து என் குழந்தையை கொன்றாள் என்று தான் சொல்லிக் கொண்டு திரிகிறாள்..

தெரியாதவர்களும் “நம்பிக்கை தானே வாழ்க்கை” என்ற ரீதியாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

செத்தவர்களெல்லாம் பேயாக வந்து கொன்றால்......... எத்தனை பேர் உயிர் மிஞ்சுவார்கள். அப்படி செத்தவர்கள் பற்றி தெரிந்தவர்கள். ஒரு புள்ளி விபரம் சொல்லுங்களேன்.


திங்கள் 13 2014

சூது யாரைக் கவ்வும்????.........

படம் தமிழ்முரசு











பத்து வருடத்துக்கு முந்தி ஈழத்தமிழரை கொன்று ஒழித்த ராஜபக்சேவை எதிர்த்து ம.க.இ.க,புமாஇமு,விவிமு சார்பாக ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்ததில் மதுரை மாவட்ட நீதி மன்றதுக்கு  வழக்கு எதுவுமே இல்லாத மாதிரி, கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட அணைத்து தோழர்க்கும்  சம்மன் அனுப்பியதிலும்,  எந்த குட்டியையும் ஈனாத ஈழத்தாய் வழக்கை வாபஸ் வாங்கி ரத்து செய்யாததாலும் வெற்றிகரமாக மூன்றாவது வருடம் முடிந்து  நாண்காம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் வாய்தாவுக்கு “ உள்ளேன் அய்யா” என்று சொல்லி ஆஜர் ஆவதற்க்காக பஸ்ஸில் சென்று கொண்டு இருந்த பொழுது............

நீண்ட காலத்திற்குப்பின் “தவமாய் காத்திருந்து”  புதிதாய் வாங்கிய சாம்சாங் செல்போனில் வந்த அழைப்பை பேசிவிட்டு. மறதியாக மேல் சட்டையின் உள் பையில் வைப்பதற்கு பதிலாக வெளிப்பையில் வைத்துவிட்டேன்.

“தவமாய் காத்திருந்து” வாங்கிய புதிய செல்போன், பஸ்ஸில் எனக்கு அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவருக்கு பிடித்து போய்விட்டது.

நீங்கள் வைத்திருக்கும் செல்போன் எனக்கு பிடித்துவிட்டது. அதை என்னிடம் சும்மா கொடுத்துவிட்டு போங்கள் என்றால்“லூசுப்பயல்கூட தர மாட்டான் என்று அவருக்கு முன்பே அனுபவத்தில் தெரிந்திருப்பார் போலும்.

அதனால் என்னிடம் கேட்பதை தவிர்த்துவிட்டு.“என்னை நோட்டம் விட்டார்” என்னை நோட்டம் விட்டதில் அந்த வல்லுநரின் மூளை என்னை கேனப்பயல் என்று அறிவுறுத்திருக்கிறது.

அதனால் சந்தோசப்பட்ட அந்த  வல்லுநர். தன்னுடைய தொழில் திறமையை என்னிடம் மெது மெதுவாக காட்டினார்.

பஸ் சிம்மக்கல் நிறுத்தத்தில் நிற்கும்போது ஏறிய கூட்டமும் அவருக்கு மேலும் சாதகமாக இருந்தது. பஸ் பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் பொழுது

தொழில் வல்லுநர். என்தோள்பட்டையின் மீது பட்டும்படாமல் தன் கையை வைத்தார். என்னிடமிருந்து எந்தவித  எதிர்ப்பும் இல்லாததை  தெரிந்து கொண்ட அவர்,  சட்டென்று என் சட்டைப்பையில் இருந்த செல்போனை கைகளால கவ்வினார்.

கண்ணும் காதும் கோளாறாக இருந்தாலும். “தொடு உணர்ச்சி” கோளாறு அடையாததால்.  தொழில் வல்லுநர் என் செல்போனை தொட்டவுடன். என் இடது கை அணிச்சை செயலாக மேல் சட்டைப்பையை கவ்வி பிடிக்க.....

தொழில் நுட்பக் கோளறால் தொழில் வல்லுநர் தன் கையை என் பையிலிருந்து எடுக்க .. கைகளுக்குள் எந்தவித மோதலும் இல்லாமல் நடந்து  முடிந்து
விட்டது.

கவணித்துவிட்ட நான். அந்தத் திருடனாரை பார்த்து.“ அய்யா, தங்களுடைய தொழில் திறமையை இப்படிபட்ட இடத்தில்........என்னை மாதிரியான ஆட்களிடாமா காட்டவேண்டும். வேண்டாமய்யா...... நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ள முடியாவிட்டால் உங்கள் திறமைக்கு சவால் விடும் இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசிக் கொண்டே செல்போனை எடுத்து உள் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன்.

நீதி மன்றத்தில் இறங்கு வதற்கு முன் பஸ் அம்பேத்கர் சாலையில் வந்து கொண்டு இருக்கும்பொழுது தொழில்நுட்ப திருடானரை தேடியபோது  அவரை காணவில்லை.

தன்னுடைய தொழில் நுட்பக்கேளாறை  நொந்து கொண்டு, தல்லாகுளம் பஸ் நிறுத்தில் இறங்கியிருப்பார் என்று நிணைத்துக் கொண்டு நடையை கட்டினேன்.

அந்தக் கூட்டத்திலும் நான் அப்பாவியாக. திருடானரிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்ட ஒருவர். பஸ்ஸை விட்டு இறங்கியபின் “அவனை  அடிக்காமல் சும்மா விட்டுடீங்களே!!” என்று ஆதங்கப்பட்டார்.

திருடானாரை அடித்துவிட்டால், திருடனார் தப்பு செய்தற்கு தண்டனை வாங்கியாச்சுன்னு மனம் கோனாமல்  பெருந்தன்மையாக போய்விடுவாரா.........என்ன......???

படித்த நீங்கள் சொல்லுங்கள்.“ சூது யாரைக் கவ்வும்”???


ஞாயிறு 12 2014

ஜனதா.... .. தர்.........பாரில் பஞ்ச் டயலாக்..............

தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
படம் தினமணி












ஒவ்வொரு மாநில அரசு தலமை செயலகத்திலும்,  ஒவ்வொரு அரசாங்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் அலுவலகம், மாநகராட்சி போன்ற ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் வாரமோ.மாதமோ.வருடமோ..... தவறாமல் நடப்பதுதான்  தர்பார் கூட்டம்.

ஒவ்வொரு தர்பாரிலும் கொடுக்கப்படும் மனுக்களில் இந்த அலுவலகம், இத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்த விபரம் தெரிவிக்கப்படும் என்று சொல்லித்தான் தர்பார் மனுவக்கு ரசீது கொடுக்கப்படும்.

அப்படிப்பட்ட மனுக்களுக்கும் பதில் சொல்ல மாட்டுறாங்கே.......... என்றுதான்  தகவல்  அறியும் உரிமைச்சட்டம்  கொண்டு வந்தாக............( அதுக்கும் பதில் சொல்ல மாட்டுறாங்கே.......ப்பா.)

இது பற்றி தெரியாத ஒலக மேதாவிகள் எழுத்துலக அறிஞர்கள். இப்படிபட்ட அரசாங்க இடங்களில் மனு போட்டு அந்த அனுபவங்களை தெரிந்து கொள்க.....

போராடும் உரிமையை  இல்லாமல் செய்வதற்கும் . ஆசை காட்டி திசை திருப்பவதற்கும் நீர்த்து போக வைப்பதற்குமே....... மனுநீதி நாளு.குறை தீர்க்கும் நாளுன்னு  மாய் மாலம் காட்டிகிட்டு இருக்காங்க.......

இந்த லட்சணத்துல ஊழலுக்கு எதிரான ஆத்மி கட்சி தலைவரும். பழைய தர்பாரில் பெயிண்டிங் செய்து ஜனதா..தர்ர்ர்................பார்ர்ர்ர் ரன்னு நடத்தினால் கூட்டம் வரும்  மனுக்கள் பெருகும் என்ற எனக்கு இருக்கிற ஒரு சாதாரண யோசனை கூட இல்லாமல்  மன்னிப்பு கேட்டு பஞ்ச் டயாக் பேசியிருக்காரு........

தவறான நிர்வாகிப்பு காரணமாக முதலாவது தர்பார்ரு நடகலப்பா..... அடுத்த தர்ருபார்ரு ந்டக்கும்வரை மனுவுடன் பொறுத்து இருக்குமாறு கேட்டுக் கொள்கிறராம்.

பொருத்தார் பூமி ஆள்வார் மாதிரி.......... குண்டாச் சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியுமான்னு  கேட்டவுகளே................. உங்களுக்கு ஒரு அத்தாட்சி  டில்லி முதலமச்சரு குண்டாச் சட்டிக்குள் குதிரை ஓட்டப் போவதையும் ஒட்டுவதையும் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.

புதுசா வாக்கப்பட்டு வந்த புதுப்பொன்னு ஒரு மாதத்துக்கு மினிக்கிகிட்டு இருப்பது போல.................

புதுசா வந்த அதிகாரி  டாட்.......பூட்டுன்னு விரட்டுறமாதிரி.........

புதுசா வந்த முதலமைச்சரு........ஆய்ய.........ஊய்ய்னு வேஷம் போட்டு பந்தா காட்டுறாருப்பா.................

முன்னாலே ஆண்டவக ..............அல்வா............. கொடுத்தாக..............புதுசா ஆளவந்தவுக............ கேசரி கொடுக்கப்பேறாங்கன்னு.............உடனடியா எங்கே தெரியப்போகுது.....

பட்டும் தெரியப்போறதில்ல........படாமலும் புரிந்து கொள்ள போவதில்ல.. மனு கொடுத்தே............ஓய்ந்துதூ போன மக்களுக்கு!!!!!!!!!!!!!!!


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...