பக்கங்கள்

சனி 04 2012

காட்டிக் கொடுத்த போராளி இளைஞன்..........



இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயேரின் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் ஒரு அளவு இல்லாமல் இருந்த காலத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தலைமறைவாக இருந்தனர்.

அந்த நேரத்தில் போராளி இளைஞன் ஒருவனுக்கு கொடிய உயிர் கொல்லி நோயான அம்மை நோய் கண்டு இருந்தது. அந்தக் காலத்தில் அது பயங்கரமான தொற்று நோயாக கருதப்பட்டது.  தலைமறைவாக இருந்த அந்த நேரத்திலும் மனிதாபிமான மாவீரர்  தோழர்பகத்சிங் எதற்கும் அஞ்சாமல் அம்மை கண்ட இளைஞனின் அருகிலே இருந்து இரவும் பகலுமாய் அந்த இளைஞனுக்கு தொண்டுழியம் செய்து வந்தார்.


பின்னாளில் அம்மை நோயிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த அந்த போராளி இளைஞன் போலீசாரிடம் பிடிபட்டபோது போலீஸ் சாட்சியாக மாறி எல்லோரையும் காட்டிக் கொடுத்தான். 

வியாழன் 02 2012

ரெடி ...ஸ்டார்ட்..... ஆக்ஸன்.....நாம்.....இ.........................






ஈக்கு வாழ் நாளே பத்து நாள்தானே! அதுக்குள்ள அது வந்து மனித பிறவிய பழி வாங்குதா?? என்றெல்லாம் கேட்கக் கூடாது. உங்க காதுல, சின்னதாகவோ இல்ல ஒரு முழமாகவேர் பூ வச்சாலும் கண்டுக்கககூடாது.. மணி  செந்திலுக்கு சொன்ன மாதிரி, கோழி குருடா இருந்தாலென்ன நொண்டியா இருந்தாலென்ன கொழம்பு ருசியா இருக்குதான்னுதான் பாக்கனும் அது மாதிரி

கதைக்கு வாலுமில்லை.காலுமில்லை என்பார்கள்.ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கே இடமில்லை.இப்படித்தான் ஒவ்வொரு சினிமா படமும், யாருமே
சொல்லாத ஒரு மெஜேஸ் இருக்குன்னு ஓப்பிப்பாங்க.... அத அப்பவே மறந்திடனும்.....நிணச்சுகிட்டு இருந்தீங்கன்னா ரசிகனாக இருக்க உங்களுக்கு
தகுதியே  இல்லேன்னு அர்த்தம.

சமீபத்தில் வந்து பறக்கிற நான்..ஈபடத்துக்கு சினிமா ரசிகஅறிஞர்களும்,
விமர்சன விஞ்ஞானிகளும், ஆகா,ஓகோ ன்னு கொய்ய்யன்னு புகழ்ந்து தள்ளுகிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு இணையாக  என்று புகழ் மாலை
வேறு.சூட்டுகிறார்கள்

ஊர கொள்ளையடிச்சு உலையில போட்ட மாதிரி. மற்ற நாடுகளில் கொள்ளை
யிட்ட நாட்டில்.பஞ்சம்,பசி.வறுமை, வேலையின்மை என்பது ஒப்பிட்டளவில்
குறைவு. அதனால் அங்குள்ள சினிமாக் கதைகள் விண்வெளியைப்பற்றியும்
அதிசியமிருகங்கள் பிராணிகள்பற்றியும், நம்பமுடியாத பல சாகசங்கள்
நிறைந்த படங்களை எடுத்து குவித்துவிட்டார்கள். வேறு சிந்திக்க வழியில்லாமல் “பழையபடி கதவைத்திற” கதையாக அரைத்த மாவையே
புதிய தொழில் நுட்பத்தில், தந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய போன்ற நாடுகளில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்
அதெல்லாம்வசூலுக்கும்,பேருக்கும் ஆகாது என்பதால் மேலை
நாடுகளில் கழித்து கட்டியஇந்திய நாடுகளில் புளுத்து ஊசிப்போன
 ஊறுகா மட்டய கதைகளைக் கொண்டு நான்..ஈ   நான்..கொசு ன்னு விளித்துக்கொண்டு புதிய மொந்தையில் காட்டுகிறார்கள். இவர்கள
மொழியில் வெற்றி என்றால் போட்ட முதலுக்கு மேல் கல்லா நிரம்பி இருந்தால் வெற்றி!!

டாஸ்மாக்கு பழக்கமான குடிமகன் குடிக்காமல இருக்க முடியாத காரணத்தினால் கலப்பட ,போலியான டாஸ்மாக்கை பருகி அன்றைய பொழுதை கழிப்பது மாதிரிதான் சினிமா போதை பிடித்தவர்களுக்கும்.

அநியாய போலீசை,அதிகாரியை,அமைச்சர்களை, மக்களுக்கு எதிரான
ஆட்சியாளர்களை,தனக்கு கொடுமை செய்பவர்களை தட்டி கேட்க முடியாத
பச்சோந்தி தனமிக்க பொழுப்பு கூட்டம் புதிய தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி ரசிகர்களை வேறு பக்கம் திரளவிடாமல் கட்டி காக்கும் கைங்கரியங்கத்தை செவ்வன செய்து வருகிறது.

பாமரனுக்கு  கஞ்சியே இல்லாதபோது, தொட்டுக்க ஊறுகாய்போன்றதுதான் இம்மாதிரியான படங்கள்.

 அடுத்தாக  நீ... கொசுன்னு  படம் வந்தாலும் வரலாம். அறிஞர்களும் விஞ்
ஞானிகளும் தயாராக இருங்கப்பா........




நீ......கொசு...............




செவ்வாய் 31 2012

சாதி பெருமை பேசிய நடிகன்...........


விழுப்புரம் சின்னையாவின் மகன் கணேசன் என்ற நடிகர். வீரபாண்டிய கட்டபொம்மனாக,கப்லோட்டிய தமிழனாக, வீரவாஞ்சிநாதனாக, ராஜராஜசோழனாக, கர்ணனாக,திருவிளையாடல் சிவனாக, கடவுளின் பக்தனாக,மனோகரனாக,நிதிபதியாக, போலீசாக, திருடனாக, வக்கீலாக
டாக்டராக,  காதலனாக,  பணக்காரனாக, ஏழையாக,.இப்படியாக,பல்வேறு
வேடங்களில் 300 படத்தில் நடித்து முடித்தவர்


பிழைப்பு வாதத்தின் பிதாமகன் எழுதிய நாடகத்தின் 80 பக்க வசனத்தை
சில மணி நேரத்தில் மணப்பாடம் செய்து நடித்து காட்டி பெரியாரிடம்
“சிவாஜி” என்ற பட்டத்தை பெற்றவர்.


எம்பியாக, நயகராக மாநகரின் ஒரு நாள்மேயராக,செவாலியே,பத்மபூசன் பத்மஸ்ரீ தாதாசகோப் பால்கே  போன்ற விருதுகளை குவித்தவர். நடிக்காத வேடமே இல்லையென்று  இவரின் ரசிகர்களாலும்,ஊடகங்களாலும்புகழ்
மாலை சூட்டப்பட்டவர்

சாதிவெறி கொடுமையை எதிர்த்த இளைஞனாக, சாதிமறுப்பு திருமணத்தை
ஆதாரிக்கும் பெரியவராக, மனிதனை மனிதனாக மதிக்கும் அறிஞனாக
எந்தப் ஒரு படத்திலும் நடிக்காதவர்.

ஒரு பிரிவு மக்களை ஆயிரம் காலம் அடிமையாக்கியதோடு இல்லாமல் அவர்களுக்குஅரிஜனன்னு பேரு வச்சது ஒரு மோசடிதந்தை! அந்த மோசடிதந்தை வணங்கும் சாமியே! பீ திண்ணும் பன்னிஅவதாரம் கூட எடுத்திருக்கு. பீயைவிட கேவலாமா தாழ்த்ப்பட்டவர்களை மதித்த காரணத்தால்தால்தான் அந்த சாமியே! அரிஜன அவதாரம் எடுக்காமல் இருந்தது  அந்த மாதிரிதான்.

 நடிகர் திலகம் தான் நடித்த படங்களில் நான் தேவன்டா, நான் அவன்டா, இவன்டா என்று  உயர்சாதிப்பெருமை பேசியே நடித்திருக்கிறார்.  ஒருஅரிஜன்
பாத்திரமேற்று நடிக்கவில்லை. இதை வசதியாக மறைத்துவிட்டு அண்ணன்
நடிக்காத வேடமே இல்லையென்று. இந்தியா சுதந்திரம் பெற்றதுக்கு மிட்டாய்
கொடுத்து கொண்டாடுற பித்தலாட்ட மாதிரிதான்  இதுவும்

விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனாக வி்.சி.கணேசன் மன்றாயராகவே
வாழ்ந்தார் மறைந்தார். ஊடகங்கள் புளுகுவது மாதிரி வெற்றி வரலாறு அல்ல.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...