பக்கங்கள்

சனி 12 2015

டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் சிறையிலிருந்து வெளியே வருகிறார்கள்..!!

Prpc Milton Jimraj 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.






இதோ டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் சிறையிலிருந்து வெளியே கம்பீரமாய் முழக்கமிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்!

38 நாட்கள் சிறையில் உறுதியாக இருந்து நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!
காட்சி 1
ஆக. 3ந்தேதி ஆயிரக்கணக்கான பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கினார்கள். சிதறி ஓடாமல், அரசை அம்பலப்படுத்தி முழக்கமிட்ட RSYF மாணவ தோழர்களை போலீசு தாக்கியது. ஊடகங்கள் வழியாக உலகமே பார்த்து போலீசை காறித்துப்பியது. வெறியுடன் காவல் நிலையத்திலும் தாக்கினார்கள். காயத்துடன் நின்ற மாணவர்களை பார்த்து ரிமாண்ட்டில் கையெழுத்திட்ட நீதிபதிக்கு எந்த பதைபதைப்பும் வரவில்லை. போலீசை கண்டிக்கவுமில்லை. போலீசை போலவே, மாணவர்களை “வா! போ” என ஒருமையில் அழைத்தார் நீதிபதி! நாம் கண்டித்தோம்.
காட்சி 2
சிறையில் நுழைந்ததும் நிராயுதபாணியான மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாளும் தாக்கப்பட்டார்கள். நாம் பதறிப் போய், மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவா! என “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்தோம். அம்பலப்பட்டுவிடுவோம் என பயந்து, மாவட்ட நீதிபதி விசாரணை என நாடகமாடியது. எவ்வளவோ தகிடுத்தத்தங்கள் செய்தாலும் நீதிபதியும் வேறு வழியேயில்லாமல் அடித்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தார். இப்பொழுது விசாரணைக்கு எடுத்தால், அசிங்கப்பட்டுபோவோம் என நீதிமன்றம் ஜவ்வாய் இழுத்தடிக்கிறது!
காட்சி 3
பெண் மாணவிகளை சிறையில் உளவியல் ரீதியாக மிரட்டியது உளவுத்துறை ஆண் போலீசு. இதற்காகவும் “ஆட்கொணர்வு மனு” தாக்கல் செய்தோம். உளவுத்துறை ஆண் போலீசு சிறைக்கு போனது உண்மை. மாணவிகளை சந்திக்கவில்லை என கதைவிட்டது. பெண்கள் சிறையில் ஆணுக்கு என்ன வேலை? என்ற கேள்வியை நீதிமன்றம் கவனமாக தவிர்த்தது. “வீடியோ காட்சிகளை ஒப்படை” என்ற உத்தரவிற்கு, “கேமராவே அங்கு கிடையாது” என பசப்புகிறது!
காட்சி 4
பச்சைப்பா கல்லூரி மாணவர்கள் 15 நாட்கள் சிறை முடிந்து, போலீசு கேட்காமலேயே எழும்பூர் பெண் நீதிபதி இன்னொரு பதினைந்து நாள் நீடித்தார். நமது வழக்குரைஞர் காரணம் கேட்டால் பதிலே இல்லை. பாதிக்கப்பட்ட மாணவ தோழர்களே கேள்வி கேட்டார்கள். பேசக்கூடாது என்றார். உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலிக்க கேட்டால், “நீடித்தது சரி தான்” என பதில் சொன்னது.
காட்சி 5
35 நாட்களுக்கு பிறகு பிணை கேட்டால், டெபாசிட் பணம், தொடர்ந்து கையெழுத்திடுவது, இரண்டு பேர் ஜாமீன் என பட்டியலிட்டது நீதிமன்றம். மாணவர்கள் பொதுநோக்கத்திற்காக போராடினார்கள். காவல் நிலையத்தில் வைத்து அடித்ததை, நீதிபதி பதிவு செய்திருக்கிறார். சிறையில் அடித்ததை மாவட்ட நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆகையால், இப்பொழுது போலீசும், சிறை போலீசும் தான் குற்றவாளிகள். அதற்காக நாங்கள் நீதியும், இழப்பீடும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எந்த நிபந்தனையும் விதிக்ககூடாது என்றோம். ஒரு முதல் தகவலறிக்கைக்கு ரூ 50 கட்டலாமே! என கேட்டது. நாம் அதற்கும் மறுத்தபிறகு, மாணவர்களுக்கு நிபந்தனையின்றிம், நிர்வாகிகள் 4 பேருக்கு இரு வாரங்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என‌ பிணை தர பணிந்தது!
கவனியுங்கள். அரசின் அத்தனை ஒடுக்குமுறையையும் நீதிமன்றம் பச்சையாய் ஆதரித்து நிற்கிறது. இறுதியில் எந்தவித நிபந்தனையுமின்றி நீதிமன்றம் பணிந்து, பிணை தந்ததற்கு காரணங்கள்
தொடர்ச்சியான டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள்!
மாணவர்களை நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும் 
என தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்கள்!

சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும் என தீர்மானம் இயற்றியது!
சென்னை வழக்குரைஞர்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்கள், பல வழக்குரைஞர்கள் உயர்நீதி மன்றத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!
அரசின் ஒடுக்குமுறையையும், நீதிபதிகளின் யோக்கியதையும் நாம் விமர்சனம் செய்து வெளியிட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகம் செய்தது!
இப்படி தொடர் போராட்டங்கள் செய்ததின் மூலம் தான் மாணவர்கள் இப்பொழுது பிணையில் வெளியேவந்திருக்கிறார்கள்!
உறுதியோடு போராடிய RSYF பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு, நீதிமன்றம் எல்லாம் பெயரளவிலான ஜனநாயகத்தை கூட அனுமதிப்பதில்லை. பச்சையாய் அம்பலப்பட்டு நிற்கிறது.
போராட்டமின்றி வாழ்க்கையில்லை! போராடும் மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாய் நிற்போம்!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

(கோப்பு படம்)

மேலும் படங்கள்..

வியாழன் 10 2015

தெரிந்தும்...புரிந்தும்.......

படம்-www.eegarai.net




சுவர் இருந்தால்தானே
சித்திரம் வரைய முடியும்
 உடல் நலமாக
இருந்தால்தானே உழைக்க
முடியும்   நன்றாக
தெரிந்தும் புரிந்தும்

அன்பு மிக்கவர்களின்
ஆதங்கத்தை இந்த
மண்டையும் உணர்ந்த
போதும்  ..நிலவிய
சமூக வாழ்க்கை
நிலை அப்படி
இருக்க விட்டதில்லை.

இளமையில் உணவும்
உழைப்பும் காதலும்
தேவையாய் இருந்த
நேரத்தில் எதுவும்
கிடைத்து விடவில்லை.

மண்  புழுவாய்
வாழ்க்கையை ஓட்டி

முதுமையின் வாயிலில்
நிற்கும் நேரத்தில்
உணவும் உழைப்பும்
கிடைத்தும்  நேரத்துக்கு
உண்ண முடிவதில்லை
உழைக்காமல் இருக்கவும்
முடிவதில்லை .வேறு
என்ன செய்வது
காட்டின் அழைப்பை
எதிர் பார்த்து
காத்து இருப்பதை
தவிர...............

புதன் 09 2015

அந்த உத்தமர்களால் உயரத்தான் முடியவில்லை...


உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!

உழைப்பால் உயர்ந்த
உத்தமர்கள் என்று
கொள்ளையர்களை பாராட்டுகிறார்கள்
ஊமத்தர்கள்.................


உத்தமர்களும் உழைக்கிறார்கள்
உழைத்து  உழைத்து
ஓடாய் தேய்ந்து
போகும் நாள்
வரை உழைக்கும்
அந்த உத்தமர்களால்
உயரத்தான் முடியவில்லை

திங்கள் 07 2015

சரவணன்...என்பவன்....வித்யாவானாள்....

நான்,வித்யா.jpg

                                                          இது சரவணன் அல்ல வித்யா
ஆணாக பிறந்த அவன்
தன்னை ஆணாக உணரவில்ல

மனதளவில் அவன் தன்னை
பெண்ணாகவே கருதி கொண்டான்

ஆணுக்கு உரிய அடையாளம்
அவன் உடலில் தெரிந்தாலும்

அதை மறைக்க வருந்தாமல்
பால்  மாற்று  அறுவை
சிகிச்சை மேற் கொண்டான்.

அந்த சிகிச்சைன் போது
வலியை  கடக்க  வழி
தெரியாமல் அரற்றி கொண்டான்

வயிற்றுக்கு உள்ளே கம்பியை
விட்டு  குடலை  உறுவும்
அப்படியான வலியை உணர்ந்தா(ன்)ள்

சரவணன் என்ற ஆணாக இருந்து
வித்யா என்ற  பெண்ணாக
மாறிய அந்த வித்யாவுக்கு
சமூகம் வழங்கிய பெயர்
9...........9.............9.......................


நன்றி! “நான்வித்யா”என்ற நூலை எழுதிய  சரவணனாக இருந்து மாறிய  ,லிவிங். ஸ்மைல் வித்யாவுக்கு....

ஞாயிறு 06 2015

ஆசிரியர் தினம் என்ற பெயரில் அண்ணல் வ.உ.சி.யை மறைத்த கொடூரம்...



Mathimaran V Mathi (வே. மதிமாறன்)


                                         இவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
தத்துவத்திற்கான அடிப்படை தகுதிகூட இல்லாத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக உலகெங்கும் பிரச்சாரம் செய்த சர்வபள்ளி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் தினமாக அறிவித்தது முதல் தவறு. அந்த தவறின் சரியான தொடர்ச்சிதான் இந்துத்வ குறியீடான ‘குரு உத்சவ்’ என்கிற சொல்.

நிறைய படித்த இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். ‘இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே இந்துத்வவாதிகளால் அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்படுகிறவர். அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்ததால் அவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். 

அவர் பெரிய தத்துவமேதை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சொந்தமாக என்ன தத்துவம் சொன்னார் என்பதை மட்டும் இன்று வரை யாரும் சொல்லவில்லை.

ஆனால், ஒரு முறை அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது’ என்ற தத்துவத்தை உதிர்த்தார். 
அதற்கு தந்தை பெரியார் இப்படிக் கேட்டார்,

‘பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதனாலேயே ஒரு விசயம் உயர்வாகி விடுமா? கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா?’ என்று

 பெரியார் கேட்ட கேள்விக்கு தத்துவமேதை (!) ராதாகிருஷ்ணனிடம் பதில் இல்லை. இன்றுவரை பெரியாரின் அந்தக் கேள்வி, அப்படியேதான் இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அது அப்படியேதான் இருக்கும்.


டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்த பொதுவான பார்வை ஊடகங்கள் மூலம் எழுதபட்டவை ...அவரது ஆசிரியர் பணியில் எந்த குறையும் இல்லை ..ஆனால் வாழ்நாள் முழுவதும், இந்துத்துவ கருத்துகளை திணித்தவர் அவர்.. ஒரு இந்துத்துவவாதியின் பிறந்த தினமே, இந்நாட்டின் ஆசிரியர் தினமாக கொண்டாடபடவேண்டும் என்னும் நோக்கத்தில் திணிக்கபட்டதுதான் இந்த தினம் எந்த கொள்கையையும் மாணவர்கள் மீது திணிக்காத உண்மையான ஆசிரியர்கள் பலர் இந்த நாட்டில் உண்டு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை எதிர்த்து அர்ப்பணிப்போடு போராடிய வ.உ.சி யின் 144ஆவது பிறந்த நாள் இன்று. ஆசிரியர் தினம் என்ற பெயரில் வ.உ.சி. யின் பெயர் மறக்கடிக்கப்பட்டதான் சோகம்.






ரு

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அண்ணல் சிதம்பரனாருக்கு
 தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் கடுங்காவல், தேச துரோக தண்டனை பரிசளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், எந்த ஒருவருக்கும் அண்ணல் சிதம்பரனார் அவர்களுக்கு கொடுத்தைதைப் போல இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட வரலாறு இல்லை.

மழைக்கும் கூட ஒதுங்காத வடுக அரசியல் வல்லாண்மை குடிகொண்ட போது கலங்காமல் வாழ் நாள் சிறையினை நெஞ்சினில் தாங்கி துரோகத்தை உயிரினில் தாங்கிய அண்ணலின் வாழ்வு ஈகத்தின் மெய் நிலை விளக்கம்.

செக்கிழுத்தற்கும், கப்பலோட்டியதற்கும், அவர் தம் வாழ்வின் பணிகள் மகத்தானது.

உலகில் இவரைப் போன்று வேறு ஒரு பன்முகப் பண்பு கொண்ட, ஆளுமை கொண்ட ஒரு அரசியல் தலைவரை இதுவரை பெற்றதில்லை.

நமக்கு பலன் அடைந்து அவரையும் பெருமைப்படுத்த முடியாத அளவிற்கு Tamil Nadu Politics சாக்கடை, மலமும் நம்மை அழுத்தியுள்ளது.






நன்றி!
ALAGAPPAN ARUMUGAM 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...