பக்கங்கள்

வெள்ளி 07 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-81.

சங்கிலிப் பறிப்பை தடுக்க ஒரு வழி..........?...??......???





ஒரு  ஆ..ஆ..ராய்ச்சியாளரின் புது கண்டுபிடிப்பு





Image result for சங்கிலிப் பறிப்பை தடுக்க






திருடர்  திரு டர்கள்
அல்லாதவர்களிமிருந்து பெண்களின்
சங்கிலிப் பறிப்பை
தடுப்பதற்கு சிறந்த
பாதுகாப்பான நேர்மையான
ஒருவழி இருக்கு
இந்த வழியை
பெண்கள் ஏத்துக்க
மாட்டாங்க இருந்தாலும்
ஒரு நல்ல
வழியை  சொல்வது
நல்லவர்களின்  தலையாய
கடமை அல்லவா...
பின்னாடி நீங்க
வர்த்தப்படக் கூடுாதல்லவா......


நல்லா கேட்டுக்குங்க
செயல் படுவதும்
செயல் படாததும்
அவுஅவுக விருப்பம்
இது  சத்தியமா
புதுவிதமான ஏமாற்று
வித்தை இல்லை
என்பது  மட்டும்
நிச்சயமான உண்மை


உங்களிடம் உள்ள
ஒரு சங்கிலியோ
பல சங்கிலியோ
அவற்றை வங்கியின்
பாதுகாப்பு பெட்டகத்தில்
வச்சா அதுக்கு
நீங்க பணம்
கட்டனும் அங்கே
களவு போச்சுன்னா
அதுக்கு வங்கி
பொருப்பு ஏத்துக்காது
திருடன்கிட்ட இருந்து
தப்பிச்சு கொள்ளக்காரனுகிட்ட
மாட்டுன கதையா
ஆகிடும் அதனால
சங்கிலிகளை என்கிட்ட
கொடுத்தா நான்
கடன் வாங்கின
வங்கியில குறைந்த
தொகைக்கு அடகு
வச்சு அந்தப்
பணத்தை தொழிலில்
முதலீடாக போடுவேன்
அந்த வங்கிலேயும்
சங்கிலி பறிப்பு
நடந்துச்சுனா  அந்த
வங்கியில வாங்கின
கடன கட்டாமாட்டேன்
என்பதால் ஒவ்வொருத்தருடைய
சங்கிலியும் பாதுகாப்பா
இருக்கும் நீங்க
எப்ப வந்து
கேட்டாலும் திருப்பி
தந்துவிடுவேன் சரியா..!!

 உண்மையை சொன்னா
பலருக்கு கசப்பாக
தான் இருக்கும்
சங்கிலி அத்தான்களிடம்
இருந்து தப்பிக்க
நம்புங்க இது
மாயா பஜார் இல்லே...




புதன் 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-80.



Image result for மணல் கொள்ளை





மாப்ள....ஒரு நிமிசம் என்று ஒரு விரலை காட்டி அழைத்தார் அவர். அருகில் சென்று சென்று என்ன..மாமா என்றார்.

“இந்தா... இவிங்க ஆராய்ச்சிய..கொஞ்சம் தீர்த்துவிடேன்..”


“தீர்த்துவிட்டா போச்சு...!  என்ன ஆராய்ச்சி..சொல்லுங்க....!!

“ ஏய்..அங்கப்பா.... சொல்லுடா....உங்க ஆராய்ச்சிய.. மாப்ள  தீர்த்து விடுவாறு...??


“அது வந்து மாப்ள.....”

“டேய் லூசு...ஓன் கண்ணுக்கு அண்ணன் முறையெல்லாம் மாப்ளயா...தெரியவதிலிருந்தே... தெரியுதுடா...ஓம் சாராய புத்தி....” நான் சொல்றேன் கேளு மாமா...,


“சரி யாராவது  சொல்லுங்க.....”

ஏ......ரெண்டு பேரும் இருங்க....நான் சொல்றேன்... அதாவது மாப்ள...திருச்சியில முக்கொம்பு அண இடிந்ததுக்கு காரணம். கண் திஷ்டியிலா..? மணல் கொள்ளையிலா? எதனால இடிந்தது... அதான் இவிங்க ஆராய்ச்சி.......”

“ ரெண்டு பேரும் எந்தக் கட்சிய சார்ந்தவுக......மாமா”

“ ஒனக்கு தெரியாத மாப்ள...இவே...ஆத்தா கட்சிக்காரன், அவே அய்யாக் கட்சிக்காரன்..” அவுக அவுக காட்சிக்காரங்க சொல்றத ஆராய்ச்சி பன்றாங்கே மாப்ள...

“நா ..உள்ளத சொல்லுட்டுமா....மாமா...”

“ அதுக்குதானே மாப்ள.... உன்னட்ட கேட்கிறது..” சும்மா சொல்லு மாப்ள...”



“ மாமா..ஆத்தாக் கட்சிக்காரனவிட..அய்யாக் கட்சிக்காரனுக்கு கொஞ்சுன்னு பகுத்தறிவு இறுக்கிறதால.... அய்யாக் கட்சிக் காரரசொல்வதில்தான்...உண்மை இருக்கிறது.  மாமா...”

“ இத நான் ஒத்துக்க மாட்டேன்... உங்க மாப்ள... ஒங்களுக்கு ஜாயிண்டா சொல்றாரு... இத..ஒத்துக்க மாட்டேன்... உங்க மாப்ளக்கு கண் திஷ்டியப்பத்தி அவ்வளவா அனுபவமில்லேன்னு தெரியுது...”

“ஙே.... அண்ணே..... புது சட்ட.பேண்ட் போட்டு..ஒங்க ஏரியாவுல அஞ்சாறு தடவ சுத்து ரெண்டே நாள்ல..நீய்யி காய்ச்சல்ல விழுந்துடுவே....நா.. கண்ணேர்பட்டு உடம்புக்கு முடியாம விழுந்திருக்கேன் தெரியுமா?  அது எனக்குத்தான்
தெரியும் அதனால... முக்கொம்பு அண உடஞ்சது  கண்ணேர் பட்டுதான்..”

அட....பாத்தீயா...... ஆரம்பிச்சு்“டாண்டா...

“ மாப்ள..நீ  கிளம்பு .... ஆத்தா கட்சிக்காரனுங்கள பத்தி.... நீ... சொன்னதுதான் கரைட்டு.....” மண்ணு முட்டி பயல்க.....!!

செவ்வாய் 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-79.

நடப்பு  வாழ்க்கை குறிப்புகள்,...





விசுவாசமானவன்- எதிர்க்கிறான்
துரோகி-காட்டிக் கொடுக்கிறான்.
வீரன்- போராடுகிறான்.
கோழை- சரணடைகிறான்






பலமும் பலவீனமும்
துணிச்சலும் பீதியும்
உறுதியும் ஊசலாட்டமும்
சுத்தமும் அசுத்தமும்
உண்டு அல்லது இல்லை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...