கரோனாவின் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் 80 பேர் சார்மிக் சிறப்பு ரயிலில் இறந்த செய்தி வெளியாகி அந்த 80 பேர் இறப்பா அல்லது படுகொலையா? என்று விவாதம் நடந்து கொண்டு இருந்த நிலையில் உறக்கம் கலைந்த உச்ச நீதிமன்றம் .
மே 28ம் தேதி ரயிலில் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தண்ணீரும் உணவும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று கடுமையான உத்தரவு போட்டது.
இதற்கு எதிராக மோடியின் உள்துறை அமைச்சகம் ஒரு படி மேலே சென்று உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பினிகள், பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ,65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்கலாம் என்று மொத்த மூச்சையே நிறுத்த அறிக்கை வெளியிட்டது....
இது இப்படி இருக்க... உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட உத்தரவில் மறைந்துள்ள கதை என்ன என்றால்.அந்தக் கதை இதுதான்..
1991ம் ஆண்டுக்கு முன்..அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தனியார் மயம் தாரளாமயம். உலகமயம் அமுலில் வருவதற்கு முன் ...இந்திய ரயில்வே துறையில் வாட்டர் கேரியர் என்ற பணி இருந்தது.. அந்த வாட்டர் கேரியரில் உள்ள பணியாளர்கள். ஒவ்வொரு ஸ்டேசன் பிளாட்பாரம் முன்பாக கேன்களில் தண்ணீரை நிரப்பி ட்ராலிகளில் வைத்துக் கொண்டு தயாராக இருப்பார்கள். ரயில் அந்த ஸ்டேசன் பிளாட்பாரத்துக்கு வந்ததும் வாட்டர் கேரியர் பணியாளர்கள் ரயிலுக்கு அருகில் சென்று பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குவார்கள். அந்த ரயில் சென்றவுடன் அடுத்த ரயிலுக்காக தண்ணீரை நிரப்பிக் கொண்டு காத்திருப்பார்கள்...
இந்த வாட்டர் கேரியர் பணியாளர்களின் உயிர் காக்கும் பணியானது ரயில் பயணிகளுக்கு வழங்குவது இலவச சேவைதான். இந்த இலவச சேவையை மனதிற்கொண்டெ உச்ச நீதிமன்றம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தண்ணீரும் உணவும் இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு போட்டது
ரயில்வேயில் இந்த இலவச சேவையானது. தனியார் மயத்தால் தண்ணீர் விற்பனை பொருளாக என்றைக்கு மாற்றப்பட்டதோ.. அன்றைக்கே ரயிலில் உயிர் காக்கும் இந்த இலவச சேவையும் வாட்டர் கேரியர் பணியும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
தரம் ,முன்னேற்றம் என்ற பல கவர்ச்சிகரமான ஏமாற்று வார்த்தைளுக்கு மக்கள் எப்போது மயங்கினார்களோ! அன்றைக்கே இந்த நாடு நாசமா போச்சு!!
மக்கள் உயிர் காக்கும் சேவைகளான தண்ணிர், மருத்துவம், போன்றவை சத்தமில்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது.
பணம் இருந்தால்தான் பெற முடியும் என்ற அபாயநிலைக்கு தனியார்மயம் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. உலகம் முழுவதும் கரோனா தொற்று நோய் வந்ததற்கு முழுமுதற்க்காரணம் இந்த தனியார் மயம் தாராளமயம். உலகமயம்தான் காரணம். அமெரிக்காவில் கரேனாவில் மக்கள் செத்த மடிவதும் மருத்துவம் தனியார்மயத்தால்தான்.
ஆக..இந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சியே அல்ல.. இந்தியா என்பதும் ஒரு நாடு அல்ல..பெரிய பெரிய கம்பெனி முதலாளிகள்தான். இந்தியாவின் உரிமையாளர்கள்..ஆளும் ஆட்சியாளர்கள் இந்திய நாட்டின் விற்பனை பிரதிநிதிகள் பணக்காரா்களும் நடுத்தர மக்களும்தான் அதன் வாடிக்கையாளர்கள்.
இங்கு எல்லோரையும் இணைப்பது பணம் மட்டுமே...என்பது அனுபவ உண்மை..
தகவல்--
வா. பொற்கொடி,
வழக்குறைஞர் உயர்நீதிமன்றம், சென்னைஃ..
..