பக்கங்கள்

வெள்ளி 11 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -91.....



#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம். கல்யாண மண்டபத்திற்கு வரி கட்டுவதையும் மாத்துவோம். ரஜினியின் புகழ் பிரம்மாண்டமான யானையல்ல அது யானைக்கால் வியாதி. அண்ணாமலையில் ஒரு பாடல் காட்சியிலேயே பணக்காரனானதுபோல், ஜனவரி கட்சி ஆரம்பிச்சி ஜுன் முதல்வர் ஆகிடலாம் என கனவு கணக்கு.









ரஜினி போன்ற கருப்புப்பண முதலைகளுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

2014ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, 6 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை!!

வழக்கு எண் TCA 256/2014 


2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது

2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக்குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண்டாம் என்று அறிவிக்கிறது

அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந்தது இதற்காகத்தான்.

வழக்கு ஏன் தொடுக்கப்பட்டது என்று பார்ப்போம்.

2005ஆம் ஆண்டு ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் நடந்த சோதனையில், ரஜினி கொடுத்த வாக்குமூலத்தின் படி, அவருக்கு 2001, 2002, 2003 ஆண்டுகளில் தொழில் தொடர்பாக ஆன செலவு முறையே 40 இலட்சம், 39 இலட்சம், 36 இலட்சம்.

ஆனால் அந்த செலவுகள் அனைத்தும் அவரது வீட்டுக்கு ஆன செலவுகள்!

வீட்டின் மின்சார கட்டணம், பழுது பார்த்த செலவுகள், தொலைபேசி கட்டணம், செக்யூரிட்டி சம்பளம் என்று சொந்த செலவுகள் அனைத்தையும் professional expenses என்று கணக்கு காட்டியிருக்கிறார்.

இவை அனைத்தும் அரசு ஆவணத்தில் இருப்பவை. 
சொந்த காரணங்களுக்காக தான் செய்த பிரயாண செலவுகள், ஓட்டல் செலவுகள் என்று அனைத்தையும் அந்த professional expenses கணக்கில் எழுதி வைத்திருக்கிறார். 

இதன் மூலம் 60 இலட்ச ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார். 

அவரது கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர், ரஜினி வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்து, "உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், 50-50 போட்டுக்குவோம்" என்று கூறி, மொத்த செலவில் பாதியை மட்டும் தொழில் முறை செலவுகளாக கருதி, அதற்கு ஏற்றாற்போல் வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். 
ஒப்புக்கொண்டது போலவே வரியையும் செலுத்தினார்.

ஆனாலும், கையும் களவுமாக மாட்டிய பிறகுதான் வரி செலுத்தினார் என்பதால், வரி ஏய்ப்பு செய்த அதே அளவு தொகையை (60 இலட்சம்) அபராதமாக விதித்தது வருமான வரித்துறை.

இந்த வழக்குதான் பாஜக அரசால் இப்போது திரும்ப பெறப்பட்டது

திங்கள் 07 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -90.....

 




ஏரோட்டும் உழவர்

போராட்டம் வெல்க !

><><><><><><><><><><><><><><

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக முகங்கள் தெரிகிறதா ?


□ பி. அய்யாக்கண்ணு (தமிழக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்)

□ கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு)

□ பி.ஆர்.பாண்டியன் (விவசாய சங்கத் தலைவர்)

□ என்.எஸ். பழனிச்சாமி 

(கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர்)

□ இராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்கம்)

□ கே.பி.இராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)


□ ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)

□ அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)

□ இளங்கீரன் 

(காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)

□ கிருஷ்ணன் 

(ஏரிநீர்ப்பாசனச் சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

□ பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)


□ கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).

□ சரவணன்

(இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)

□ வெங்கடபதி (தனியார் சக்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)

□ விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)

□ நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)


□ இராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)

□ ஜெனார்த்தனன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

□ சுதர்சனம் 

(படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

□ சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசனச் சங்கம், இராமநாதபுரம்)

□ செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)


□ அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ இராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை)

□ இரகுபதி 

(ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்,

திருப்புலிவனம்) 


□ திருவேங்கடம் (அனைத்துப் பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).

□ சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சக்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).

□ ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)

□ மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)

□ ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்)


தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் முகம் தெரிகிறதா ?  தேடிப்பாருங்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...