பக்கங்கள்

வெள்ளி 03 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-59







இன்றைய செய்திகள்
நாளைய வரலாறு
அனைத்து பத்திரிகை
மற்றும் ஊடக
முதலாளிகள், நிருபர்களுக்கு
டெல்லியில்  ஏழைத்
தாயின் மகன்
 விருந்து வைத்தார்.



கருத்துப்படம்----- நன்றி! thameem.ansari.

படம்


மேலும்.........பார்க்க.
கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?



வியாழன் 02 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-58


கஞ்சா சாமியார்
வழைப்பழ சாமியார்
சாக்கடை சாமியார்
சரக்கு சாமியார்
இப்படி வகை
வகையான சாமியார்க்கு
மத்தியில் முலைப்பால்
குடித்து ஆசி
வழங்கும் சாமியார்

இப்படியான சாமியார்கள்
உற்பத்திக்கு காரணம்
யார்.......முட்டாள்
பக்தர்களா??? அல்லது
டிஜிட்டல்  இந்தீய..
சமூகமா...???










செவ்வாய் 31 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-57


Related image


“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..”?

“ எப்பவும் சூடாகவே..இருக்கா...”??

ம்.ம்..ம்.. எப்பவுமே..இல்ல சார், பேஸ்புக், வாட்ச்அப்க்கு போயி நோண்டும்போது  சூடாகிறது சார்,.... அந்த சூட்டை தணிக்கனும் சார்..???

ஓ.....அந்தச்  சூடா....!!! உங்க வீட்டில பிரிட்ஷ்சு இருக்கா...????

“ ஒ........இருக்கே..சார்...... எதுக்கு  சார்....”?????

“ அதாவது பிரிட்ச்ல வச்ச வாட்டரில .... சூடா..இருக்கிற செல்போன ஒரு முக்கு முக்கி எடுத்தா... ஆட்டமேனிக்கு சூடு குறைஞ்ட்டு போகுது......ஃஃஃ

“ என்னங்க சார்...சொல்றிங்க... செல்போனு சூடாக இருக்கும்போது ..,பிரிட்ஷ் வாட்டர்ல முக்கி எடுக்கனுமா”.?????? நிஜமா சொல்றீங்களா...!! விளையாட்டுக்கு சொல்றீங்களா..??????? சார்......

“ ஒரு எசாம்பில் சொல்றேன் கேளு”...????????உங்க வீட்ல தீ பிடிச்சா என்ன செய்வாங்க.....??????????

“எங்க வீடு வேணா சார்.... உங்க வீட்ல தீ பிடிச்சா என்ன செய்வாங்க அத சொல்லுங்க  சார்...”??????????????

“சரி, உங்க வீடும் வேணாம், எங்க வீடும் வேணாம்..எங்கயோ...யாரு வீட்டிலயோ.... தீ பிடிச்சா என்ன செய்வாங்க......??????????????????


“என்ன செய்வாங்க....ஃபயர் சர்வீசுக்கு போன் பன்னுவாங்க......”

“ அதுக்கு முன்னாடி என்ன செய்வாங்க.”..??????????????

“அதுக்கு முன்னாடி................. முன்னாடி......”

“ சரி, அத விட்டூடு....ஃபயர் சர்வீஸ் காரங்க வந்து என்ன செய்வாங்க”...???????????

“ தீ பிடிச்சு எரிஞ்கிசுட்டு இருக்கிற  வீட்ட... தண்ணிய பீச்சி அடிச்சு தீய அமத்துவாங்க.....சார்...”

கரெட்டா சொன்ன...  அது மாதிரிதான்... தீ பிடிக்காம சூடா  இருக்கிற உன் செல்போன... பிரிட்ஷ் வாட்டர்ல முக்கி எடுத்தா.. என்னாகும்......ம்ம்ம்

“ சாரி...சார்.......சாரி ...சார்....இப்ப புரிஞ்சருச்சு சார்........... நீங் சொல்ற மாதிரியே ஒரு தடவ என்ன.... ரெண்டு தடவ  முக்கி எடுத்துடுறேன் சார். பிறகு எப்படி சூடாகுமுன்னு பார்க்கிறேன் சார்.”...

“ பிறகு எப்பவுமே சூடாகாது...”

“ நல்ல ஐடியா..கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி! சார்.....”

“ இதுக்கெல்லாம் நன்றி! எதுக்கு!!! எனக்கு ஒருத்தரு..... சொன்னாரு... அத ஒனக்கு சொல்றேன்...நாளைக்கு ....நீ  வேறு ஒருத்தருக்கு சொல்லப் போற ....சரி. மறந்திறதா...!!!! கூலிங் வாட்டர்ல முக்கி எடு....!!!! வரட்டா...???????????????

“ சந்திப்போம்  சார்.....”

“சந்திக்கவா...?????????? சரி  ...சந்திப்போம்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











திங்கள் 30 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-56


Image result for செய்யாத்துரை


 போடுவார்க்கு போடு
பணம் போட்டு
கேட்டவர்களுக்கு மொய்
செய்து அவர்
கஷ்டப்பட்டு சம்பாரித்த
ஊழல் பணத்தை
போயும் போயும்
சுவிஸ் வங்கியில்
போடுவதற்கு அவர்
என்ன இந்திய
கிறுக்கனா நினச்சிங்க

நன்றி மறவாத
சிங்கமன்னா இவர்தான்
தான் தொழில்
செய்த இடமான
பாலத்திலயே சேமித்து
வைத்தவர் அவர்..

சென்னை அண்ணா
மேம்பாலத்திலும் பாலத்தின்
 அடியிலும் தி.நகர்
தேனாம்பேட்டை இனையும்
பாலத்திலும் கோடி
கோடியாய் சேமித்தவர்.

இந்தியாவுக்கே இல்லையில்லை
உலகத்துக்கே தான்
கட்டின பாலத்திலே
சேமிப்பு வங்கியை
உருவாக்கி காட்டிய
 தமிழகத்தின் ஒப்பற்ற
முன்னோடி செய்யாத்துறை..
 தான் என்பது
உங்களுக்கு தெரியுமா...??............

ஞாயிறு 29 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-55





Image result for விடுதி காப்பாளர் புனிதா






 தொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்!!...

ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை  நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்லூரி பேராசிரியரான நிர்மலாதேவி உழைத்தது போல

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை , விடுதி உரிமையாளரின் பிறந்த நாளுக்கு அழைத்து சென்று  அவரின் பாலியல் தேவைக்கான பிறந்த  பரிசாக படைக்க முற்பட்டார் விடுதி காப்பாளர் புனிதா என்ற  நம்பர் டூ நிர்மலாதேவி..

நம்பர் ஒன் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க.... விடுதி காப்பாளர் புனிதாவின் சூத்தரதாரியான, விடுதி உரிமையாளரும் போலீசின் கையில் சிக்காமல்  தலைமறைவாகிவிட்டனர்....

நம்பர் ஒன் நிர்மலாதேவியின் சூத்தரதாரியை தமிழக இண்டர் போல் போலீசு வலை வீசி தேடிக் கொண்டு இருக்க.... நம்பர் டூ புனிதாவையும் விடுதி உரிமையாளரையும் வலை வீசி தேடி வந்த நிலையில்....

விடுதி தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டு...இண்டர் போலிசிடம் சிக்காமல் கம்பி நீட்டிவிட்டார்... அடுத்து புனிதாவை தேடி வருகிறார்கள்.இதை
ஊடகங்களும், பத்திரிக்கை தர்மர்களும்  கிடைத்த அவுலை வெவ்வேறு வகையில் மென்று கொண்டு இருக்கின்றன.......


இனி ..அவர்கள். பெரிய மனிதர்களின் பாலியல்  வேட்கைகள் ஒழியும்வரை... மூன்றாவது நிர்மலாதேவியின் வரவை நோக்கி இருப்பார்கள்..

அதை நோக்கித்தானே சங்கிகள் மற்றும் அடிமைகள் ஆளும் நாடு அதி வேகமாக போய்கிட்டு இருப்பதை  அவர்களுக்கே தெரியாமல்  வியாபாரமாய் தெரிவிப்பார்கள்.............


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...