பக்கங்கள்

சனி 16 2015

முட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..

நேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப்  பாடல்

பராசக்தி க்கான பட முடிவு
                                    பாடல் கேட்க....

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய்
காசு முன் செல்லாதடி

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய்
காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி

பை பையாய்ப் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய்
மெய் மெய்யாய்ப் போகுமடி



நல்லவரானாலும் ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே

காசுக்கு உதட்டில் உறவாடடா
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே -
பிணத்தைக் கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..

கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா
தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே


நன்றி! திரு.

 அவர்களுக்கு

வியாழன் 14 2015

ராமன் செத்தா..எரிப்பாங்களா? புதைப்பாங்களா???

படம்-www.vinavu.com

ஏண்டா....ராமா...!!!
நீ ........செத்தா......
ஒன்ன எரிப்பாங்களா..?
புதைப்பாங்களா...டா..??

ஏன்?? கேட்கிறேன்னா..
நீ தர்மத்தை அழித்து
அதர்மத்தை நிலை
நாட்டி இருக்கிறயாம்டா..!!

நாங்க செத்தா
எங்கள எரிக்கிறாங்களா?
இல்ல புதைக்கிறாங்களா..??
அதுவுமில்லாம  அனாதை
பொணமுன்னு தூக்கி
வீசுறாங்களான்னு தெரியலடப்பா..!!


நிதி வென்றது
நீதி  தோற்றதுன்னு
எல்லா தின
பத்திரிக்கையிலும் கலர்
கலராக படம்
 போட்டு  ஒன்ன
ரெம்பவும் பாராட்டுறாங்கயடா...!!!

அதனால்தான்டா..ராமா....
ஒன்ன கேட்கிறேன்டா
நீ........ செத்தா........
ஒன்ன புதைப்பாங்களா...?
 இல்ல எரிப்பாங்களா ????

புதன் 13 2015

அண்ணே..நீங்க ..தீர்க்கதரிசிண்ணே.....!!!!

படம்-theergadharisi.blogspot.com


டேய் அண்ணனுக்கு
லட்டு ஜிலேபியோட
அல்வாவும் கொடுங்கடா......

அண்ணே..வாங்கிங்கண்ணே...
சும்மா வாங்கிங்கண்ணே...
அந்த அல்வா வான்னு
நிணச்சு பயப்படாதிங்கண்ணே..
பயப்படாம சாப்பிடுங்கண்ணே.....

டேய்...அண்ணனுக்கு
அல்வா கொண்டாங்கடா....
அண்ணனே அல்வா
வேணாமுன்னு அப்படிதாண்டா
சொல்லுவாரு...  டேய்.
அண்ணனக்கு அல்வா
கொடுங்கடா.........

அண்ணே..நீங்க சொன்னது
தப்பாம அப்படியே நடந்திருச்சுண்ணே.
எப்படிண்ணே அவ்வளவு கரிகிட்ட
திர்க்கதரிசனமா சொன்னிங்கண்ணே..

ஊருக்கு ரெண்டு நல்லவங்க
மட்டுமே இருக்கும்
நம்ம  நாட்டோட
வகிசிய அப்படியே பிட்டு
பிட்டு வச்சிட்டீங்கண்ணே....

அப்போதிலிருந்து இப்போ
வரைக்கும் நீங்க சொன்னது
தாணே நடந்திட்டு இருக்கு
அண்ணே நீங்க உண்மையிலே
பக்கா தீர்க்கதரிசி..தாண்ணே...

அண்ணே..அப்படியே உங்க
தீர்க்க தரிசனத்துல நான்
எப்ப... மந்திரி... பதவி
ஏற்கப் போறேன்னு சொன்னீங்கன்னா..
உங்களையும் கோயில் கட்டி
கும்பிடுவதோட..உங்களுக்கான
காணிக்கையையும் தவறாமல்
செலுத்தி விடுவேண்ணே....

செவ்வாய் 12 2015

தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக வரலாறு இல்லை.


jaya-acquited-cartoon
படம்- வினவு

படிக்க---கொள்ளைக்காரி ஜெயா விடுதலை .ஏன்?


அடிமைகள் தெய்வத்திடம்
வேண்டினார்கள் எங்கள்
தெய்வம் விடுதலையாக
வேண்டும் எங்களை
ஆள வேண்டும்
என்று. பரிகாரமாக
 மொட்டைகள் விரதங்கள்
யாகங்கள், காவடிகள்
காணிக்கைகள்  மேலும்
பல கட்ட போராட்டங்கள்

சாதரண பக்தனுக்கு
கண்மூடி தவமிருக்கும்
தெய்வம் அடிமை
பக்தர்களின் பக்தியில்
உச்சி மகிழ்ந்து
உள்ளம் பூரித்து
திருவாய் பொழிந்தது.

தெய்வத்தை தெய்வம்
தண்டித்ததாக வரலாறு
இல்லை. அந்த
வரலாற்றை முன்
மாதிரியாகக் கொண்டு
தெய்வத்தையே  தெய்வம்
தண்டிக்காது. தண்டிக்கவும்
செய்யாது....பக்தா.....

பல தெய்வங்களில்
பல அவதாரங்கள்
போல இதுவும்
தெய்வத்தின் ஒரு
அவதாரம் என்றது


ஞாயிறு 10 2015

அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்...???..

படம்-ttnnews.com

தொழிலாளி என்றால் போனசுக்கு போராடுவார்.
அரசு ஊழியர் என்றால் பஞ்சபடிக்கு போராடுவார்
நடுத்தர விவசாயி என்றால்.உரம்,பூச்சி மருந்து
விலை குறைக்க போராடுவார்
கூலி விவசாயி என்றால் கூலி உயர்வுக்கு போராடுவார்.

இப்படி ஒவ்வொருத்தரும் தங்கள் --பிறர் நலன் சார்ந்து போராடும்போது
தமிழ்நாட்டு  அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்????



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...