பக்கங்கள்

சனி 03 2011

வள்ளலுக்கு பிச்சையிட்ட மடா அதிபதிகள்!!!

மதுரையில் தமிழ் சங்கம் நிறுவி
தன் வாழ்நாளை தமிழ் வளர்ச்சிக்கு
அர்ப்பனித்த வள்ளலை-மறக்கா
திருக்க நினைவு மணி மண்டபமும்
அவரின் பெருமைக்கு தபால் தலையும்
நுாறு வயதுக்கு அரங்கமும் வேண்டி
ஆத்தாவிடம் வரம் கேட்டு நிற்க............

வள்ளலுக்கே இந்தக் கதியென்றால்
மதுரையும் திருவாடுதுறையும்
தனித்தனியாக ஒரு லட்சமும்
திருவாடுதுறை அட்வான்சாக
பத்து ஆயிரமும் வழங்கி......“தமிழ்
வளர்ந்தால் தமிழன் வளருவான்”
எனமடஅதிபதிகள் செப்புரைத்த
செப்புக்கு என்ன கதியோ?????

தமிழ் வளர்ந்தால் எந்தத் தமிழன்
வளருவான் என்றன் வினாவில்
வினவியபோது உரைத்தார் ஒருவர்

கஞ்சிக்கில்லா தமிழனை வளர்த்து
செய்த பாவ கருமங்கள் தொலைய
தான தருமங்கள் பல செய்து அதனால்
வள்ளலு பெயர் சூட்டப்பட்டதென்றார்.

காலை மாலை இரவு மூன்று வேளை
ஓதி இடைவெளியில்லாமல் உண்டு
கொழுத்த உடலை குறைக்க யோக
ஆசனம் செய்து ஞானம்பெற்று அதனால்
விழாவில் கலந்து செப்புகிறார்கள்
மடஅதிபதிகள்............................................

ஏழைத்தமிழனை சாதி வெறியில்
தள்ளிகூறுபோட்டு ஆதிக்கத்தை
 நிலை நாட்டும் சாதி வெறித்தமிழன்.

சாதிவெறி குலதெய்வத்தை தேசிய
குலதெய்வாக உயர்த்த அரும்பாடு
படும் அருந்தமிழன்............................

இச்சகம்பேசி அகம்வளர்க்கும் தமிழன்
தானுண்டு தன் குடும்பமுண்டு உயர்ந்து
வாழும் அண்டாத தமிழன்..........................

தமிழ் வளர்ந்தால்.இந்தமிழன்தான்
வளர்வான்....என்றாரே அவர்!!!!...................

வெள்ளி 02 2011

பெட்ரோல் விலை குறைப்பு!! அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

பெட்ரொல் விலை குறைப்பு
 அய்யயோ! எனக்கு பயமாக
இருக்கிறதே !!

எண்ணெய் நிறுவணங்களும் சரி
பாழாய் போன அரசாங்கமும் சரி
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

இந்த அரசும் எண்ணெய் நிறுவணங்களும்
கந்து வட்டிக்காரர்களின் பங்காளியாச்சே!

குறைத்ததை வட்டி முதலுமாய் எப்போ?
ஏத்துவாங்கன்னு தெரியலையே ?
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

விலை ஏத்தினதை குறைக்க மாட்டோ
முனு சொன்னவங்களாச்சே!

பால் விலை ஏறிப்போச்சு!
பஸ் டிக்கெட்டும் ஏறிப்போச்சு!
அடுத்து கரண்ட்டும் ஏறப்போகுது
வீட்டுவரியும் ஏறப்போகுது.

எனக்கு வரு மானமும் குறையுது
பிரச்சினையும் பெருகுது. அய்யயோ!
எனக்கு உதறல் தானா எடுக்குதே!

குறைத்த பெட்ரோல் விலையை
ஏத்த மாட்டோம்முனு சொல்லலையே!
சில்லரை வணிகமும் அன்னியனுக்கு
போகுதே! இனி நான் எப்படித்தான் வாழ்வது?

முல்லை பெரியாறு உடையப்போகுதுன்னு
கேரளாக்காரனும் புளுகுறானே!!

சிலர் போராடுகிறார்கள்
பலர் என்கென்னனு இருக்கிறார்களே!

நான்வாழ என்னதான் செய்வது????



வியாழன் 01 2011

யார்ரா.........இவன்....சுத்த..........???

எங்கம்மா காய்கறி வித்து
இம்புட்டு படிப்பு படிக்க
வச்சு உலகத்துக்கே
பெரிய வங்கியான
அய்.எம்..எப்ல வேல
பாக்க வச்சாங்க.அதுல
வேல பாத்ததுனால
இந்தியாவுக்கு பிரதமரா
ஆக்குனாங்க...நான்
நன்றி மறந்தவனாக
இருக்கலாமா???

அதலாதான் எங்கம்மா
மாதிரி யாரும் காய்கறி
வித்து யாரையும் படிக்க
வச்சிறக்கூடாதன்னு நல்ல
எண்ணத்தில்தான் சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீடு
ஈட்டை அனுமதித்து உத்திரவு
இட்டேன்.......................................

இம்புட்டு பதவி வகித்தவன்
நான் சட்டுபுட்டுன்னு எந்த
முடிவும் எடுக்க முடியுமா?
கோர்ட்ல தீர்ப்பு சொல்வதற்கே!
அம்புட்டு காலம் ஆகும்போது
அதனால நிதானமா எடுத்த
முடிவு தான் இது......................

எனக்கு அன்னிய நிறுவனங்களாக
தெரியல. எனக்கு வாழ்வு கொடுத்த
 தெய்வங்களா தெரியுது..
தெய்வங்களை ஏமாத்தலாமா???


வீனாகும் சேமிப்பையே தர மறுத்தவன்
அதனால்தான. சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீடு....................இதனால்
விளை பொருள் வீனாகாது.
விலையும் கூடுதலாக கிடைக்கும்
யாருக்குன்னு கேட்கக்கூடாது.
சரக்கு,சேமிப்பு,போக்குவரத்துகளில்
வேலை வாய்ப்பு கிடைக்கும்..



இம்புட்டுவிவரத்தை கிளிபிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்றேன்............
ஊல்..ஊலுன்னு கேட்காம........?
யார்ர...........இவன்..............சுத்த.............
கேனையனா.............,இருக்கான்...

திங்கள் 28 2011

உண்மையில்லை! வதந்தியை நம்பாதீர்கள்!!!

ஓட்டு போட்டு ஓய்ந்து போனவர்களுக்கும்
ஓட்டு போட ஓயாமல் இருப்பவர்களுக்கும்
ஒட்டு போட காத்து இருப்பவர்களுக்கும்
ஓர் அறிவிப்பு!!!.............................................

இந்திய நாட்டிற்கு பொதுவுடமை
அப்பத்தை குறைந்த விலையில்
பாதிப்பு இல்லாமல் வாங்கித்
தருவதாக வேஷம் போட்டு
இதுநாள் வாங்கித் தராமல்
காலம் கடத்தி வந்த சாயம்
வெளுத்த இடது.வலது
பட்டாதாரர்களில் ஒருவரான
பீமன் போஸ்-என்பார்

மக்கு அவையில் இடது பட்டா
தாரர்கள் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால் “சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்”
துணிச்சலான முடிவை மத்திய அரசு
மேற்க் கொண்டதாகவும்.......

குறைவான பட்டாதாரர்களைக் கொண்டு
மத்திய அரசின் துணிச்சலை கட்டுப்
படுத்த முடியவில்லையெனவும்
இருந்தாலும் “உள்ளேயும்-வெளியேயும்”
எதிர்ப்போம் என்றும்....................................

இடது,வலது பட்டாதாரர்களின்
ஆதரவு இல்லாமல் மத்திய அரசு
ஆளுவதால்.......... இந்நிலையாம்

இந்த அண்டப்புளுகு மற்றும் ஆகாயப்
புளுகை நம்பி ஏமாற வேண்டாம்
இது உண்மையில்லை!!! வதந்தியை
நம்பாதீர்கள்!!! நம்பி ஏமாறதீர்கள்!!1

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...