பக்கங்கள்

சனி 30 2016

“பர்சானியா” பார்க்க வேண்டிய திரைப்படம்

காந்தி பிறந்த குஜராத்தில் முசுலிம் இனப் படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாக கொண்ட கதை

இந்தப் படம் குஜராத்தில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இந்தப் படத்தின் காட்சிகள் அணைத்தும் உண்மை காட்சிகள் அதில் சிறு பகுதி மட்டுமே உள்ளது. உண்மை காட்சிகள்  இதை விட கொடூரமாக இருந்தது.


                                                           “பர்சானியா” முழுப்படம்



வெள்ளி 29 2016

பச்சோந்தியும்...உடும்பும்...

Image result for கருப்பையா




அண்ணே.... பேப்பர் பாத்தீங்களா ண்ணே.......

ஓ..... பாத்தேனே.... அவனவன் தேர்தல் வர்ர நேரத்தில...ரெம்ப யோக்கியாவன் மாதிரி பேசுறத படித்தேனே.......

“ ஏண்ணே... இப்படி இருக்காங்கே.....

ரெடி ஸ்டார்ட் ஆக்சன்

யானை ரோட்டுல வருது என்பதற்கு பயந்து எறும்பு ஊராமா இருக்குமா.....
அடுத்தவீட்டுல கலியாணம் என்பதற்க்காக.. இழவு விழுந்த வீட்டுக்காரங்க அழாம... இருக்க முடியுமா...??

 நான் கட்சிய விட்டு விலகல.. அவுகதான் என்னை நீக்கிட்டாங்க.. என்னாலே.. சம்பாரிக்க முடியல அதனால.இதுக்கு மேல என்னாலே. ஒன்னும் சொல்ல முடியல..மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..



ஹா.....ஹா.....ஹா...அண்ண வெளுத்துட்டீங்கண்ணே..ஹா....ஹா.ஹா.....

அவன் ஏன்டா அழுவுறான்...

பச்சொந்தியும் உடும்பும் எப்படி இருக்குன்னு ரியலாக நடிச்சீங்களா... அதான் அவன் கண்ணு பொத்துகிடுச்சுண்ணே......

ரெடி...ஸ்டார்ட்... ஆக்சன்....

 அய்யோ  அண்ணே..... போதும்ண.ணே.........

வியாழன் 28 2016

இந்தீய தேசீய கீதம் பிறந்த கதை,

Image result for தேசிய கீதம்
படம்-blogpaandi.blogspot.com



1911 ம்ஆண்டில் இந்தீயாவை ஆண்ட  ஆங்கீலேயே மன்னன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் இந்தீயாவுக்கு வந்த போது...

இன்றை இந்தீயாவின் “தேசீய கவிஞன்”என்றுவர்ணிக்கப்படுகிற வங்கத்து ரவிந்திர தாகூர் என்பவர் “ மாட்சிமை  பொருந்திய” மன்னனை வரவேற்று பாடிய பாடல்தான் “ஜனகனமன” பாடல்..

ஒரு கொள்ளைக்காரன் போயி ..பல கொள்ளைக்காரன் வந்தபிறகு.. ஜனகனமன பாடல் இந்தீயாவின் தேசீய கீதமாக மாற்றப்பட்டது 

புதன் 27 2016

நண்பர்க்கு தெரிந்த யோசனை அவர்களுக்கு தெரியவி்ல்லை

படம்-சிறைக்குள் கஞ்சா, பீர்பாட்டில்வீச்சு

நண்பரை பர்க்க வந்த
நண்பர் ஒருவர் நண்பரின்
உடல் நலன் விசரித்த
பின் இருவரும் தேநீர்
கடைக்கு சென்றனர்...........

அங்கு நண்பரை பார்க்க
வந்த நண்பர் சொன்னார்.
சிறைச் சாலை வழியாக
வந்த போது சிறை
முன் . இருபது அடிக்கு
ஒருவர் வீதம் மொத்தம்
நான்கு போலீசாரை கையில்
 துப்பாக்கி  உடன் நிற்க
வைத்து இருக்கிறார்களே சிறையில
 கைதிகள் சுவர் ஏறி
தப்பித்து விட்டனரோ என்று
விவரம் தெரியாமல் கேட்டார்

நண்பர் சொல்வதற்கு முன்
தேநீர் கடைக்காரர் சொன்னார்

அப்படி யாரும் தப்பிங்கலைங்க
ரோட்டில் இருந்து உள்ளே
இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா
போதைகளை சிறை வளாகத்திற்குள்
வீசுகிறார்கள் அதனால்.. உள்ளே
அவர்கள் வியாபாரம் பாதிக்கப்
படுகிறதாம் அதனால் வீசுபவர்களை
தடுக்கவும் பிடிக்கவும் தான்
இந்த  ஏற்பாடு...என்றார்.

அப்படியா என்ற நண்பர்
 வெளியில் தான் போலீஸ்
காவலோடு சாராய போதை
விற்கப்படுகிற மாதிரி உள்ளேயும்
அரசு பார் வசதியுடன்
சாராயக் கடையை திறந்து
விட்டால் வெளியில் இருந்து
உள் ளே எறியும்  அவசியம்
இருக்காதே என்றார் நண்பர்.

அது கேட்ட நண்பர்
நண்பரிடம் சொன்னார் நண்பா
தங்களுக்கு தெரிந்த யோசனை
சிறை அதிகாரிகளுக்கும் குடி
அரசை ஆளுவோருக்கு தெரியவில்லையே
என்ன செய்வது என்றார்...............

Madurai news

செவ்வாய் 26 2016

தாத்தாவின் பெயரை நிலை நிறுத்திய கொள்ளுப் பேத்தி

Image result for காந்தியின் கொள்ளு பேத்தி
Gandhigrandaughter.jpg


தோழர்என்று என்னை கூப்பிட்டதும் அவரிடம் சென்றேன். 

என்ன வேலையா...? என்றார்

ஆமாம் .. என்ன விசயம் சொல்லுங்கள் என்றேன்.

கொஞ்ச நேரம் பேசலாமா...?? என்றார்.

ஓ..அதுக்கென்ன பேசலாமே...என்றபோது வேலை என்று இழுத்தார்

உங்களிடம் பேசிவிட்டு.. செல்கிறேன் என்ற போது.. என்கையை குலுக்கிவிட்டு என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்

தாத்தாவின் பேரை நிலை நிறுத்திய கொள்ளுப்பேத்தியைப் பற்றி படித்தீர்களா??? என்றார்.

எனக்கு , ஏதாவது உள் குத்து எதுவும் இருக்கும் என்ற நிணைப்பில்... யோசிக்கவே தெரியாத நான் யோசனை பண்ணவது மாதிரி இருந்துவிட்டு. தெரியலையே நண்பரே..என்றேன்

என்ன ..தோழர்..நீங்க...” என்று சலித்துக் கொண்டார்.

மறந்துவிட்டேன் நண்பரே..... அந்த கொள்ளுப் பேத்தியைப் பற்றிச் சொல்லுங்கள்  நான் நிணைவு படுத்திக் கொள்கிறேன் என்றேன்...

அது வந்து தோழர் என்று சொல்லத் தொடங்கினார்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருபவர் ஆசிஷ்லதாராம்கோபிந்த் வயது 45.

இவர் இந்தியாவில் இருந்து மெத்தைகளை இறக்குமதி செய்து தென் ஆப்பிரிக்காவில் தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்வதற்க்கான டெண்டர் எடுத்த இருப்பதாக தொழில் அதிபர்கள் சிலரிடம் கூறியுள்ளார். 3 கண்டெய்னர்களில் இதற்க்கான பொருட்கள் வந்துள்ளதாக அதற்க்கான ஆவணங்களை காட்டியுள்ளார்.

லாபத்தில் பங்கு தருவதாக கூறியதை நம்பிய இரு தொழில் அதிபர்கள் ஆசிஷ்லதாவிடம் ரூ5.38 கோடியை அவரிடம் கொடுத்தனர்.


ஆனால், ஆசிஷ்்லதா சென்னதுபோல் பணத்தை தராததால் இரு தொழில் அதிபர்களும் போலீஸில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் ஆசிஷ்லதா காட்டியது போலியான ஆவணங்கள் என்று தெரிய வந்ததை அடுத்து அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஆசிஷ் லதா டர்பன் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.


இந்த விபரங்களை சொல்லி முடித்தப்பின் இந்த ஆசிஷ்லதா யாரு என்று தெரியுமா..? என்று கேட்டார்.

தெரியவில்லையே.... என்றேன் மீண்டும்....

மீண்டும் அவரே என்னை நக்கல் பார்வையுடன் பார்த்துச் சொன்னார். இங்கிலாந்து பிரதமர் சர்ச்சினால் ஆரை ஆடை பக்கிரி என்று பெயர் சூட்டப்பட்டவரும், இந்தீயாவுக்கு இவர்தான் சூ தந்திரம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படுபவரின் கொள்ளு பேத்தி தோழரே என்றார்
.
எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது. அரை ஆடை பக்கிரியும் வ.உசிதம்பரனார்க்கு கொடுக்கச் சொல்லிய பணத்தை அவருக்கு கொடுக்காமல் மொங்கா போட்டவர். அவரை  அதாவது தாத்தாவின் பெயரை நிலை நிறுத்திய  கொள்ளுப் பேத்தி சரிதான்..  பேர் சொல்ல ஒரு வம்ச பரம்பரை என்றேன்.

சரியாக... புரிந்து கொண்டிறீர்கள் என்றார் நண்பர்.



திங்கள் 25 2016

ஒரு காதல் ஞானி சொன்னது








ஐந்து லட்சத்தை தொட உதவிய வலையுலக உறவுகளுக்கு நன்றி !



படம்-valainutpam.com


இந்தக் காலத்தில்....

ஒருவனுக்கு வருமாணம் வரக்கூடிய அளவுக்கு சொத்து இருக்கனும், இல்ல அவன் அரசு வேல பார்க்கனும் அதுவுமில்லையா.... அவனோ அப்பன் ஆத்தா எம்எல்ஏவாகவோ... அமைச்சராகவே இருக்கனும்...  இதுலே ஒன்னுகூட இல்லேன்னா......


காதலித்த பொன்னு என்ன....???? சொந்த மாமா பொன்னு, அத்தை பொன்னு கூடகட்டிக்கிட  மாட்டாளுகளாம்......


அந்தகாதல் (தோல்வி) ஞானி சொன்னாது உண்மையா...???? எனக்கு அந்த கொடுப்பினை  எல்லாம் கிடையாது.. கொடுப்பினை  உள்ளவுக  சொன்னிங்கன்னா.... தெரிஞ்சுக்கலாம்  ...ம்.........

ஞாயிறு 24 2016

வீட்டிற்குள் வந்த வண்ணத்து பூச்சி







தமக்கையின் மகள்
வயிற்று பேத்தி
வீட்டுக்குள் பறந்து
வந்த வண்ணத்து
பூச்சியை பிடிக்க
ஓடினாள்.........

அந்த வண்ணத்து
பூச்சியை காப்பாற்ற
எண்ணிய நான்
பேத்தியிடம் அது
உன் பாட்டியாக
இருக்கலாம் உன்னை
பார்ப்பதற்க்காக வந்து
 இருக்கலாம் அதை
ஒன்றும் செய்யாதே.
 என்றவுடன் பேத்தி

அதை பிடிப்பதை
நிறுத்தினாள். அதனால்
வண்ணத்து பூச்சி
வீட்டினுள் பயமின்றி
சுதந்திரமாக  நிதனமாக
பறந்து சென்றது.....

...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...