பக்கங்கள்

சனி 24 2012

நானென்ன செய்வது...நானொரு ஏவல் நாய்.....




நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

எஜமானர்களுக்காக
அதிகாரிகளால் ஏவப்
படும் ஏவல் நாய்

நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

ஏவி விட்டால் கடித்து
குதற வேண்டும்

அவர்கள்...............
தாயாக....தந்தையாக.....
சகோதர......சகோதரியாக...
அன்புத் தோழனாக.......
அப்பாவி மக்களாக....
இருந்தாலென்ன........

நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

மக்கள்......................
நீரின்றி தவித்தாலென்ன
கரண்ட் இன்றி புழுங்கிலாலென்ன
பட்டினியால் மாண்டாலென்ன
அனுஉலை வெடித்து செத்தாலென்ன
கதிர் வீச்சால் வெந்து துடித்தாலென்ன


நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

மக்களை காப்பது என் வேலையல்ல
எஜமானர்களை காப்பதே என்வேலை
மக்களை விரைந்து சென்று மீட்பது
என் வேலை இல்லை.போராடும்
மக்களை விரைவாகஅடித்து
விரட்டுவதே என்வேலை
துணையாய் இருப்பது என்வேலையல்ல
எஜமானர்களுக்கும் அவர்தம்
பரிவாரங்களுக்கு துணையாய்
இருப்பதே என்வேலை......














 நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

நாங்கள் கும்பலாய் வந்தால்
உரிமைகள் மறுக்கப்படும்
கூட்டமாய் வந்தால்.....
உண்மைகள் மறைக்கப்படும்
படையாய் வந்தால் உங்கள்
உயிர் பறிக்கப்படும்.

நானென்ன செய்வது
நானொரு ஏவல் நாய்

எஜமானர்கள் மனம் குளிர்ந்தால்
சலுகைகளும் பதக்கங்களும் கிடைக்கும்
அதிகாரிகள் மகிழ்ந்தால்
ஏவல் கூடும் எங்களுக்கு
அதிகாரம் குவியும்...............

இனி............
நானென்ன சொல்ல
நானொரு அதிகாரம் படைத்த
 எஜமானர்களின் ஏவல் நாய்....



வெள்ளி 23 2012

அந்தத் துரோகம் இன்னும் மறையவில்லை......!






தோழர்களே! வீரத்தியாகிகளே!

உங்கள் மூவரையும்.................
துாக்கிலட வைத்து
நாட்டையும் காட்டிக்
கொடுத்த துரோகிகளுக்கும்
அவர்களின் வழியில்
சுதந்திரமாக நாட்டை
மீண்டும் அடிமையாக்கும்
கைக்கூலி கயவர்களுக்கும்
போராடும் மக்கள் மீது
அடக்குமுறை ஏவும்
கொடுங்கோலர்களுக்கும்
அவர்களின் ஏவல் நாய்களுக்கும்
அவர்களின் வாரிசுகளுக்கும்

தங்களின் வீரத்தியாகங்களை
அதிகாரமில்லா ஓட்டுக்காக
பயன்படுத்தும் போலிகளுக்கும்

தங்களின் வீரத்தியாக நாளை
நிணைவு கூற கிஞ்சித்தும்
உரிமையுமில்லை!
அருகதையுமில்லை!

தங்களின் போராட்டத்தையும்
புரட்சிகர அரசியலையும்
மறுதலித்து புறந்தள்ளி
பத்தோடு பதிணொன்றாக
 இந்திய தேசிய துரோகத்
சின்னகங்களுடன் செய்தி
ஊடகங்களில் வெளியிட்டு
 நல்லவர்களைப்போல் காட்டிக்
கொள்கிறார்கள் கொள்ளையர்கள்

துரோகம் இழைத்த கொடுமைகளை
மறவாமல்....வெஞ்சினத்துடன்
உங்கள்வழியில் வீரத் தியாகத்துடன்
உழைக்கும் மக்களின் அரசமைக்க
போராடும் தோழர்களுக்கும்
போராடும் மக்களுக்கும் அவர்களின்
வாரிசுகளுக்குமே உரிமையும்
கடமையும் உண்டு...!!!

 அந்த உரிமையுள்ள உணர்வுடன்
தோள்மீது சுமத்தப்பட்ட கடமையுடன்
தங்களின்வீரத்தியாக போராட்ட
லடசியங்களுடன் உங்கள் வழியில்
போராடுவேன். போராடுவோம்

செவ்வாய் 20 2012

அடீ! பாதகத்தீ.........



நீ முன்ன மாதிரி யில்லை
ரெம்பவும் திருந்தி விட்டாய்
உன் தோழி மன்னார்குடியை
விரட்டி விட்டாய்...........

நீ வேஷம் கட்டி ஆடீன
ஆட்டத்தை கூடங்குள
மக்களுக்கு காட்டி விட்டாய்

உன் வில்லாளன் வகுத்த
வழியிலே வீரமாய்
மொத்த தமிழகத்துக்கு
வாக்கரிசி போட்டு விட்டாய்


பேரரசர்கள் படைசூழ
கொள்ளி வைக்க வழியும்
செய்து விட்டாய்

அடீ! பாதகத்தீ...............!!!!!!!!!

ஞாயிறு 18 2012

ரிட்டனஸ்...ரிட்டன்ஸ்.. புதிய மொந்தையில் பழைய கள்ளு.....

20 வது நுாற்றாண்டின் கடைசி காலத்தில் பழைய வசந்த மாளிகையை
 ஓலக நாயகன் நடிக்க வாழ்வே மாயமாக காட்டினார்கள்.உத்தமன்
என்ற படத்தை சூப்பரான காரிய கிறுக்கன் நடிக்க “ நான் அடிமை இல்லை”
என்று காட்டினார்கள்.இது மாதிரி இந்தியிலிருந்து. தெலுங்கிலிருந்து
கன்னடத்திலிருந்து தமிழுலிருந்து இப்படி ஏகப்பட்ட படங்களை
 காட்டியதை சொல்லிக் கொண்டே போகலாம்.






21ம்நுாற்றாண்டு தொடக்கத்தில் கேமருனின் அவதார் படம் வெளி
வந்ததோ எல்லா பய அதிபர்களும் அவதாரின் படத்தின் 3டி யான
நவீன தொழில் நுட்பத்ததைப் பயன்படுத்தி. பழைய கதையில் புதிய
ஆட்களை வைத்து படமெடுப்பதை கைவிட்டு காணமல் போன
படங்களை கண்டுபிடித்து துாசி தட் டிஅவதாரின் நவீன தொழில்
நுட்பத்தில் புதிய மொந்தையில் பழைய கள்ளுவை நிரப்பி ஒரு
ரவுண்டுகட்டி கல்லாவை நிரப்ப புறப்பட்டுவிட்டார்கள்.



இதே மாதிரிதான். தமிழ் படமான சிவாஜி நடித்து பி.ஆர் பந்துலு
இயக்கி தயாரித்த கர்ணன் படத்தையும் டிஜிட்டல் பெயர்சூட்டி
வெளியிடுகிறார்கள்




உலகம் முழுவதும் கல்லா கட்டும் ஆங்கில படத்தை எடுத்துக்
கொண்டால் ஸ்பீல்பெர்க் இயக்கி “இண்டியான ஜோன்ஸை”
தயாரித்த ஜார்ஜ் லுகாசும் தன் பங்கிற்கு தான் தயாரித்து இயக்கிய
 வேற்று கிரகவாசிப் படமான“ ஸ்டார்வார்ஸ்”யை அலுங்காமல்
குலுங்காமல் அவதார் 3டி தொழில் நுட்பத்ததை பயன்படுத்தியே
வெளியிடுகிறார்.



மறதி டண்ணாங்கட்டியும்.டாஸ்மாக் உருப்பினருமான ரசிகர்கள்
வாய பிளக்கத்தான் போகிறார்கள். பழைய கள்ளை குடித்து
ஆட்டம் போட்டு,போதை தெளிந்தபின்தான் பழைய கள்ளுடாஃ
புலம்புவார்கள

 இந்த புதிய மொந்தையில் பழைய கள்ளுவை தரும் புதிய
தொழில் நுட்பத்தால் குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டி வரும்
டிவிக்களும்,கிசுகுசு சினிமா பத்திரிக்கை ஊடகங்களும் தங்கள்
 பங்குக்கும் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும்.

சினிமாக்காரர்கள் நடந்தவைகளும்,நடக்காதவை
களும்,இனிமேல் நடக்கப்போவதையும் படம் பிடித்து குவித்து
விட்டார்கள். இனிமேல் குவிப்பதற்கு எதுவுமில்லை. அதனால்தான்
அரைத்த மாவையே நவீன தொழில் நுட்பத்தில அரைக்கிறார்கள்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.பொய்யாக வேஷம்
கட்டி ஆடிய நடிக நடிகைகள் ஆட்சிக்கட்டிலில் அமர முடிகிறது
என்றால்.... அதற்கு காரணம் போதை தெளியாத ரசிகர்களால்தான்.

அடுத்து ஆட்சிக் கடடிலில் அமர்வதற்கு கேப்டனாக நடித்த
நடிகர் தயாராகி வருகிறார்.

என்னதான் நிஜம் நெருப்பாய் சுட்டாலும்.நிழலில் மயங்கித்தான்
போய்விடுகிறார்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...