பக்கங்கள்

சனி 14 2013

அதிகாரி வீட்டு கோழி முட்டை,ஏழை வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்!!!

ta.wikipedia.org -

tamilvelibkp.blogspot.com
சென்னை திருவானமியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குநர்(ஏ.டி.ஜி.பி) வெங்கடேசன் என்பவர்.இவரது மனைவி ராணி முன்னால் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். இவர்களின் மகள் பியூலா உயர் போலீசு அதிகாரி, மருமகன் சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர். ராஜேஸ்தாஸ்.- இவர்கள பங்களா வீட்டு முன் இருந்த முருங்கை  மரம் ஒன்று மழையால் ஒடிந்து கீழே விழுந்துள்ளது.

 அதே திருவானமியூலுள்ள சேரிப்பகுதியைச் சேர்ந்த செல்வம் அவரது மனைவி சக்தி. இவர்கள் இருவரும், அந்த முறுங்கை மரத்தில் இருந்த முருங்கை காயையும் கீரையையும் கொஞ்சம் பறித்தற்க்காக.........

மேற்படியான  முன்னாள் போலீசு குடும்பம் கொடுத்த புகரால்..“ பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி தாக்கி காயப்படுத்தும் பிரிவான 385-ல் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயர் போலீசினால் அழுத்தம் தரப்பட்டதால், இன்ஸ்பெக்டர்,2 எஸ்ஐ,10 போலீசு கொண்ட படையே  இருவர் மீது நடவடிக்கையில் இறங்கியது.

ஓட்டு கேட்டு வாங்கி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணி வெங்கடேசனோ, “நூறு கோடி திருடினாலும்,முருங்கைக்காய் திருடினாலும் திருட்டு திருட்டுதான் என்று முழங்குகிறார்..........


அதே சென்னையில்.அடகுக்கடைக்காரான நிக்ஷாசந்த் என்பவரிடமிருந்து ,திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி 203 கிராம் தங்கத்தை பறித்து சென்றார்  போலீசு தலைமைக்காவலர் சம்பத் என்பவர்.

 தங்கத்தை பறித்து சென்ற மயிலாப்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சம்பத் மீது அடகுகடைக்காரர் புகார் செய்தார். பாசக்கார போலீசோ சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனால் அடகுக்கடைக்காரர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். உயர் நீதி மன்றமோ வழக்கு பதியச்சொல்லி உத்தரவிட்டது.. அந்த உத்தரவை மதிக்கவில்லை அதனால் அடகு கடைக்காரர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுத்தார்.

 வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றமோ, தலைமைக்காவலர் ஓய்வு பெறும் வயதை காரணம்காட்டி  அவரை மன்னித்துள்ளது.


சில முருங்கைகாயையும் முருங்கை கிரையையும் பறித்ததற்க்காக இருவருக்கு  இரண்டு வருட வழக்குப்பிரிவில்  சிறை,  203 கிராம் தங்கத்தை பறித்தவரான போலீசுக்கு மன்னிப்பு

இதுதான் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லுகின்ற ஜனநாயகத்தின் மகிமை..

இதுமாதிரியான ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அதிகாரி வீட்டு கோழி முட்டை ஏழை வீட்டு அம்மிக்கல்லை இப்படித்தான் உடைக்கின்றது.


நன்றி! புதியஜனநாயகம் டிச.2013 இதழ்





வெள்ளி 13 2013

இவரு வேற மாதிரி.....................




நிழலில் நல்லவராக,
கெட்டவர்களை அழிக்கும
வல்லவராக,அநியாயத்தை
தட்டிக் கேட்கும் உத்த
மனாக நடித்தவரு................

நிஜத்தில். ........
குடி குடியை மட்டுமா
கெடுக்கும். குடிப்பவரும்
அல்லவா குடிக்காத
மக்களையும்  குடிக்க
சொல்லி குடியை
கெடுக்கிறார்....

தெருவுக்கு தெரு
கடையை திறந்து
இருக்கும்போது
குடிப்பதில் என்ன
தப்புன்னு குடிப்பதை
நியாயப் படுத்தும்
முற்போக்கு கட்சி
அதுக்கு ஒரு தலைவர்............

வருபவனுக்கெல்லாம்
ஓட்டு போடு வதையே
உரிமையாக கொண்டாடும்
பரதேசிகளுக்கு எப்போது
தான் புரியும்.. ............................

இவரு வேற மாதிரி என்பது.

புதன் 11 2013

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் இடையில் குல்லாக்கண்டனும்

படம் இந்நேரம்காம்.











முன்னோரு காலத்திலே்
நடாறுமாசம்...........
காடாறு மாசம்முன்னு
நாட்டை ஆண்ட.
பட்டி விக்கிரமாதித்த
ராஜா கதையைப்போல.

இருபத்தியோராம்
நூற்றாண்டில்-கார்பரேட்
இந்திய நாட்டை விடாக்
கண்டன் காங்கிரசு
அஞ்சு வருசமும்
கொடாக்கண்டன்
பிஜேபி அஞ்சு வருசமும்
மாறிமாறி ஏலம் போட்டு
ஆண்டு வந்த காலத்திலே.....

விடாக்கண்டன் ஆண்ட
போதும்சரி........கொடாக்
கண்டன் ஆளும்போதும்
சரி,நாட்டில் பாலாறும்
தேனாறும் ஓடவில்லை.

இவ்விரு கண்டன்களுக்கு
மத்தியில் நாட்கள் ஓடிக்
கொண்டு இருக்கையில்
இடையில் ஒரு குல்லாக்
கண்டன் வந்தாலும்..........

தண்ணிரின்றி வற்றிப்
போன நாட்டில் தேனாறும்
பாலாறும் சர்ரென்று
பாய்ந்துதான் வந்திடுமா..........????.....

திங்கள் 09 2013

வர்னாசிரமத்தை எதிர்த்த பெரியாரும், பாதுகாத்த அரைஆடை பக்கிரியும்,

படம். மதிமாறன்.



















நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியில் “பரத்வாஜர் ஆசிரமம்” என்ற பெயரில் ஒரு குரு குலத்தை நடத்தி வந்தார் வா.வே.சு.அய்யர் என்பவர்.

காங்கிரஸ் கட்சி கொடுக்கும் நிதியில் நடத்தப்பட்ட ஆசிரமத்தில் பிராமனாள் சாதியை சேர்ந்த மாணவர்களுக்கு தனியாகவும், மற்ற சாதியை சேர்ந்தவர்களுக்கு தனியாகவும் வர்னாசிரமத்தின் அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டு வந்தது.

இதைக் கேள்விப்பட்ட ,அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார். இந்த அநீதிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தினார்.

பெரியார் நடத்திய போராட்டம் விஸ்வருபம் எடுத்ததை சரி கட்டுவதற்க்காக அரைஆடை பக்கிரியானவர். ஒரு சமரசத் தீர்வை முன் வைத்தார்.

“ஏற்கனவே,அதாவது முன்பே  குரு குலத்தில் சேர்ந்திருந்த மாணவர்களுக்கு தனித்தனியாகவும்,இனிமேல் சேருகின்ற மாணவர்களுக்கு ஒன்றாகவும் உணவு பறிமாறலாம் என்பதே அந்தத் தீர்வு”

அரை ஆடை பக்கிரியின் இந்தத் தீர்வானது. வர்னாசிரமத்தை பாதுகாக்கவே பயன்படும். வர்னாசிரமத்தை ஒழிக்காது  சம தர்மத்தை படைக்காது என்று பெரியார் ஏற்றுக் கொள்ள மறுத்து , அரை ஆடை பக்கிரியின் தீர்வைஎதிர்த்தார்.

இந்தியாவில் வர்னாசிரமத்தை பாதுகாத்தவர்தான் இந்தியாவின் மகா ஆத்மாவாம்.

உள்ளங் கையிலே சீனி என்று எழுதி  வைத்து,அதை நக்கி பார்க்கும்போது இனித்தால் மகாஆத்மா என்று நம்பலாம்.




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...