சனி 23 2015
வெள்ளி 22 2015
வாங்க....வாங்க... விவசாயி அய்யா.....
| விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு ! |
வாங்க..வாங்க....
விவசாயி அய்யா..
நம்ம நிலத்தையெல்லாம்
மக்களின் நண்பனான
போலீசின் அடி
உதைக்கு பயந்து
மோடியின் கார்பரேட்
கம்பெனிகளுக்கு பறி
கொடுத்து விட்டு....
இருக்கப்பட்ட சீமான்கள்
கட்டியுள்ள பெரிய
பங்களாக்கலில் மொட்டை
மாடியிலும் பால்கனியிலும்
அமைத்திருக்கும் தோட்டத்தில்
வேலை கேட்டு அலைவோம்
வாங்க....வாங்க..
விவசாயி அய்யா...
புதன் 20 2015
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய சிலை..
"ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன். பல இலட்சம் மக்களை படுகொலை செய்தவன். பஞ்சம் உண்டாக்கி வருத்தியவன். சிறுபான்மை இனங்களை ஒடுக்கியவன்..." என்றெல்லாம் சொல்கிறார்கள். காசகஸ்தானில் துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் கிராமம் ஒன்றில், உலகில் மிக அரிதாகக் காணக் கூடிய ஸ்டாலினின் சிலை ஒன்றுள்ளது. கடந்த வருடம், சூறாவளிக் காற்றால் விழுத்தப் பட்ட ஸ்டாலின் சிலையை, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் எழுப்பி இருக்கிறார்கள்.
முதலில் காசகஸ்தான் பற்றி ஒரு சிறு விளக்கம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு" என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஒடுக்கப் பட்டனர், பஞ்சம் காரணமாக பல இலட்சம் பேர் பலியானதாக கணக்குக் காட்டுகின்றனர்.
"ஸ்டாலினிச கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட" காசகஸ்தானில் தான், ஸ்டாலின் சிலைகள் மிக அரிதாகக் காணக் கிடைக்கின்றன. அதற்குக் காரணம், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவின் சதிப்புரட்சி நடந்தது. குருஷேவின் உத்தரவின் பேரில், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த அனைத்து ஸ்டாலின் சிலைகளும் அகற்றப் பட்டன.
மேலே படத்தில் உள்ள ஸ்டாலின் சிலை, தெற்கு காசகஸ்தானில் உள்ள Eski Ikan கிராமத்தில் உள்ளது. 1956 ம் ஆண்டு, அந்த சிலையை இடிப்பதற்கு குருஷேவ் அனுப்பிய அதிகாரிகள் வந்திருந்தார்கள். அப்போது அங்கு ஒன்று திரண்ட கிராமவாசிகள், சிலையை உடைக்க விடவில்லை. "உடைப்பதாயின் எமது பிணத்தை தாண்டிச் செல்லுங்கள்" என்று பிடிவாதமாக தடுத்து நின்றனர். அதனால், அநதச் சிலை அப்படியே இருக்க விடப் பட்டது.
இப்போது காசகஸ்தான் ஒரு தனியான சுதந்திர நாடு. 2014 ம் ஆண்டு, பெரியதொரு புயல் காற்று சிலையை விழுத்தியது. அதனை திருத்தித் தருமாறு, ஊர் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறைப் படவில்லை. பொறுத்துப் பார்த்த ஊர் மக்கள், தாமாகவே ஒன்று கூடி, எல்லோரிடமும் பணம் சேர்த்து, ஸ்டாலின் சிலையை மீண்டும் எழுப்பி உள்ளனர்.
காசகஸ்தானில், துருக்கி பேசும் முஸ்லிம் கிராம மக்கள், ஸ்டாலின் மீது அந்தளவு பற்று வைத்திருக்கக் காரணம் என்ன? பாஸிசத்திற்கு எதிரான, 2 ம் உலகப்போரில், அந்த கிராமத்தில் இருந்து நூற்றுக் கணக்கான ஆண்கள், செம்படையில் சேர்ந்து போர்க்களத்திற்கு சென்றிருந்தார்கள்.
சோவியத் யூனியனின் ஐரோப்பிய பகுதி தான் போரினால் கடுமையாக பாதிக்கப் பட்டது. ஆசியப் பகுதியான காசகஸ்தானில், போரின் தாக்கம் சிறிதும் இருக்கவில்லை. இருப்பினும், அந்த மக்கள் "சோவியத் தாய்நாட்டிற்காக, ஸ்டாலினுக்காக" போருக்கு சென்றனர். "ஸ்டாலின் இப்போது இல்லை. ஸ்டாலினிச காலகட்டமும் இல்லை. ஆனால், எமது முன்னோர் கட்டிய நினைவுச் சின்னம் நிலைத்து நிற்கும்." என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.
http://otyrar.kz/2015/05/v-starom-ikane-vosstanovili-pamyatnik-stalinu/
செவ்வாய் 19 2015
“ஞானப்பழம் யாருக்கு கிடைக்கும்”.
| படம்-www.dinakaran.com |
டேய்..லூசு.. சரஸ்வதி படத்துல...மூன்று பெண் தெய்வத்தப்பத்தி உல்டா பண்ணி பதிவு போட்டு இருக்கிற..... தப்புடா லூசு..... திருவிளையாடல் படம் பாத்தியா....??? ஞானப் பழம்காட்சி வரும் தெரியுமா...???? அதைப் பத்தி போடுடா லூசு........
இப்படி ஒரு பக்தரு கருத்துரை வழங்கி இருந்தாரு... அவர் எழுதிய எழுத்திலிருந்து அவர் எந்தப் பக்தர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.....அவரின் வசவுக்கு பயந்து “பக்தியில்முக்தியவர்கள்” பதிவில் பெண் தெய்வம் பேசியது இந்தப் பதிவியில் .. எனது புரிதலில் ..அந்த பக்தர்க்காக அந்தக் கதையை இப்படி எழுதுகிறேன்.
இரண்டு டாஸ்மாக் பக்தர்கள் பக்தி முத்திபோயி நிற்கமுடியாத அளவுக்கு தள்ளாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பக்தர்.
“டேய்...பிரதர்... அம்மா தேர்தல்ல குதிக்க போறங்க தெரியுமா? பிர்தர்.”
“ஓ...தெரியும் பிரதர்”..... “நான்தான் அந்த வெற்றிவேல..அம்மாவுக்காக ராசீனமா பன்னச் சொன்னேன் பிரதர்.“...
பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர்....ஹா.....ஹா....ஹா......சிரித்தபடி.. போடா ஃபுல்..... நீ சொல்லியா....!! வெற்றிவேலு விட்டுக் கொடுத்தாரு..... கூட்டுறவின் அயராத பக்தியின் உழைப்பில்தாண்டா விட்டுக் கொடுத்தாரு..... தெரிஞ்சு பேசனும்..தெரியலைன்னா ஊத்திகிட்டு வாய் மூடிகிட்டு இருக்கனும் ..என்னா பிரதர் நான் சொல்றது...
இரு பக்தர்களில் ஒரு பக்தர் “கரெட்டு பிரதர்.” நா ..அப்பவே..சொன்னேன்.. பிரதர் காதில விழல.... ஆமாம் பிரதர்.
உலகத்த சுத்தி வந்தது மாதிரி..“பல்வேறு காவடி தூக்கி தமிழ்நாட்டை சுத்தி வந்த ஒங்க கூட்டுறவுக்கு“ ஞானப்பழம்” கிடைக்குமா...? அல்லது.... “அம்மாவே உலகம்” அம்மாவுக்காக எம்எல்ஏ பதவிய ராசீனாமா செய்த வெற்றி வேலுக்கு “ ஞானப்பழம்” கிடைக்குமா ? பிரதர்..... என்னங்க பிரதர் முறைக்கிரீங்க.. சொல்லுங்க பிரதர்....
தன் கூட இருந்தவரை கூப்பிட்டு “டேய்..பிர்தர்... இந்த பிரதரு”..இப்ப சொல்லுவாரு பாருஃ..“ஞானப்பழம் யாருக்கு கிடைக்குமுன்னு...
சிறிது நேரத்தில்
சிறிது நேரத்தில்
மூனு பக்தர்களால் டாஸ்மாக் பார் அல்லோகலப்பட்டது... போலீசு உடனே வந்தது.. மூனு பக்தர்களும் அந்த ஏரியாவின் முதல் கடவுள்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால்அவர்களுக்குள் நடந்த சண்டையை விளக்கி போலீசு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது...
நடந்த சண்டையில் யாருக்கு அந்த “ ஞானப்பழம்” கிடைக்கும் என்பது தெரியவில்லை... பதிவை படிக்கும் தாங்கள் சொல்லுங்கள் . யாருக்கு “ஞானப்பழம் கிடைக்கும்....
அம்மாவுக்காக விடுதலை வேண்டியும் அந்த அம்மா அரியனையில் அமர வேண்டியும் கோயில் கோயிலாக காவடிஎடுத்து வேல் பாதயாத்திரை நடத்தியவர்க்கா..?அல்லது விடுதலையான அந்த அம்மா மீண்டும் அரியனையில் அமர்வதற்க்காக தனது பதவியை ராஜீனாமா செய்தவர்க்கா..???
பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் உங்கள் தலை வெடிக்காது என்பது நிச்சயம்.
| படம்-mathimaran.wordpress.com |
திங்கள் 18 2015
பக்தியில் முக்தியவர்கள்..........
மூன்று பெண் தெய்வங்கள் சந்தித்து ஊர்கதைகள் பேசிய பொழுது தமிழ்நாட்டு கதையயும் இப்படி பேசிக்கொண்டது.
அதில் ஒரு தெய்வம். “அடியே நம்ம பக்தர்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு அம்மாவின் பக்தர்கள் பக்தியில் முக்திவிட்டார்களடீ ”என்றது
நான் அதைத்தான் சொல்ல வந்தேன் நீ சொல்லி விட்டாயடி... என்றது ஒரு தெய்வம்.
இவர்களின் பக்தியின் கூத்தைத்தான் பாருங்களடி என்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்தது.ஒரு தெய்வம்
“காவடியில் என்னென்ன காவடிகள் இருக்கிறதோ அத்தனை காவடியையும் எடுத்து அம்மாவை ஊழல் வழக்கில் இருந்து விடுதலையாக்கிய கையோடு மீண்டும் அரியனை பீடத்தில் அமர வைப்பதற்க்காக.. காசு கொடுத்து வேல்குத்தி காவடியில் புதுமுறையை அறிமகப்படுத்திய மதுரையைச் சேர்ந்த அந்த பக்தர் மீண்டும் ஆறுபடையின் முதல் படைக்கு வேல் அளிக்கும் நாடகத்தை நடத்தி தன் பக்தியை காட்டி அசத்தி விட்டுருக்கார் ..டி.
| படம்-www.vikatan.com
இன்னொருத்தரோ.. எந்தவித ஆர்பாட்டம் இல்லாமல் தன்னுடைய பக்தியை
வெளிப்படுத்தி அம்மன் அரியனையில் அமர்வதற்க்காக நம்மைப் போன்ற
தெய்வங்களிடம் முதலில் பக்தியை காட்டாமல் நேரடியாகவே அந்த
ஊழல் அம்மனிடம் காட்டிவிட்டாரடி அந்த பக்தர் .
நம்மிடம் வேண்டுதல் செய்யாத அந்த பக்தர் பேரு . சென்னை ஆர்.கே.நகர் எம்எல்ஏவாம்..
இரண்டு பெண் தெய்வங்கள் பேசிக் கொண்டு இருப்பதை மூன்றாவது தெய்வம்
தடுத்து நிறுத்தி அது சரிங்கடி...இந்த பக்தர்களின் பக்திதான் நமக்கு தெரியுமேடி...
இந்த இரண்ட பக்தர்களின் பக்தியின் முக்தியின் காரணமாக அவர்களின்
அம்மன் அரியனை பீடத்தில் அமர்ந்தவுடன் இந்த பக்தர்களின் பக்தியை மெச்சி
யாருக்கு முக்தி அளிப்பார். அரியனையில் அமரும் அந்த அம்மா !!!அதச் சொல்லுங்கடி
முதலில் என்றது சற்று கோபமாக
|
ஞாயிறு 17 2015
புறாவை காக்கையாக காட்டி பாடிய பாடல்
படம் .பராசக்தி......
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
பாடல்: கா கா கா கா கா கா
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952
நன்றி! March 28, 2010 by தமிழ்மணி
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952
நன்றி! March 28, 2010 by தமிழ்மணி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
