பக்கங்கள்

சனி 29 2014

சைக்கிள் ஓட்டிய மகா ஆத்மா...........





குஜராத் வித்யா பீடத்தின் கூட்டத்திற்கு செல்வதற்க்காக வரவேண்டிய வண்டி வரவில்லை. நேரமோ கடந்து கொண்டு இருந்தது. இந்தக்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வசதி அன்று இல்லாததால்.........

பிடிவாத குணமுள்ள மகா ஆத்மானவர். தன் ஆசிரமித்திலிருந்து வித்யாபிடத்தின் கூட்டம் நடக்கும் இடம் வெகு தூரமாக  இருப்பதையு்ம் பொருட்படுத்தாமல் வேறு வண்டி கிடைப்பதற்கும் வாய்ப்பு இல்லாததால் கால்நடையாக புறப்பட ஆரம்பித்தார்.

அப்படி கால் நடையாக சென்று கொண்டு இருக்கும்பொழுது கதராடை தரித்த ஒருவர் சைக்கிளில் போய் கொண்டு இருந்தவரை மறித்து, அவர் சைக்கிளை கேட்டார்.அவரும் மறு பேச்சு இல்லாமல் சைக்கிளை கொடுத்தார்.

சைக்கிள் ஓட்டிக் கொண்டு வித்யாபீடத்திற்க குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து ஆஜரானார்.  சிறிய ஆடை மட்டும் அணிந்து கொண்டு  திறந்த உடம்புடன் மகா ஆத்மா சைக்கிள் ஒட்டி வந்த காட்சி

இன்றைக்கு தமிழக அகில இந்திய அதிமுக அடிமைகள் ஹெலிகாப்டரில் அவர்கள் கட்சி தலவி வருவதைக் கண்டு பயபக்தியுடன் வணங்கும் காட்சியைப் போல் அன்றைக்கு காந்தீய வாதிகளுக்கு  ஆத்மா சைக்கிள் ஓட்டி வந்தது அபூர்வ காட்சியாக   இருந்தது . 

வெள்ளி 28 2014

சொன்னா நீ கேக்கமாட்டியே.............



புகைப்படம்: "கெஜ்ரிவால் ஒரு பரிசுத்த ஆவின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தியே? நேத்து பாத்தியா? வாரணாசி நதியில ஒரு முழுக்குப் போட்டு தன்னை யாருன்னு நிரூபிச்சிட்டாரு?! அதாவது, அவரு ஒரு இந்துத்துவ வாதின்னு நீ நெனைச்சிக்கக் கூடாது. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. காஷ்மீர்ல அவர் நின்னா, ஒரு மசூதிக்குப் போய்ட்டு வருவாரு. வேளாங்கண்ணில நின்னா, மாதாவுக்கு மொட்டை போடுவாரு. ஆதிவாசித் தொகுதியில நின்னா, மாவோயிஸ்ட் வேஷம் போடுவாரு. அவர் ஒரு பத்தோடு பதினொண்ணுன்னு சொன்னா நீ கேக்கமாட்டியே!"











"கெஜ்ரிவால் ஒரு பரிசுத்த ஆவின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தியே? நேத்து பாத்தியா? வாரணாசி நதியில ஒரு முழுக்குப் போட்டு தன்னை யாருன்னு நிரூபிச்சிட்டாரு?! அதாவது, அவரு ஒரு இந்துத்துவ வாதின்னு நீ நெனைச்சிக்கக் கூடாது. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. காஷ்மீர்ல அவர் நின்னா, ஒரு மசூதிக்குப் போய்ட்டு வருவாரு. வேளாங்கண்ணில நின்னா, மாதாவுக்கு மொட்டை போடுவாரு. ஆதிவாசித் தொகுதியில நின்னா, மாவோயிஸ்ட் வேஷம் போடுவாரு. அவர் ஒரு பத்தோடு பதினொண்ணுன்னு சொன்னா நீ கேக்கமாட்டியே!

வியாழன் 27 2014

பொய் கூறார் யார்...???







மத்திய    தேர்தலாகட்டும்
மாநில     தேர்தலாகட்டும்
இடைத்    தேர்தலாகட்டும்

எந்தத்..  .......தேர்தலாகட்டும்
தேர்தலில்  நிற்பவர்கள்
தாங்கள்      தேர்தலில்
ஜெயிக்க     வேண்டி
பொய்         கூறார்....
யார்???............

புதன் 26 2014

சேவைத் தொழில்ல இருந்தவுக..... சேவை செய்ய வாராக.......

வணக்கம்..............ஓவர்.

நல்லது.வணக்கம்.........ஓவர்.

ஆமா,சேவை தொழில்ல இரந்தவுக....மக்களுக்கு சேவை செய்ய வாராவுகளா...!!! அவுக யாருன்னு சொல்லாம இருந்தா...எப்படி???......ஓவர்.

அவுக நம்ம நெணக்கிற மாதிரி சின்னவுக இல்ல........ஓவர்.

பொறவு.................ஓவர்.

பெரும் அதிபதிகள்!!!............ஓவர்.

ஆஆ பெரும் அதிபதிகளா???.....ஓவர்.

ஒருவர்,இன்போசிஸ் சேவை நிறுவனத்தின் முன்னால் நிருவாக உறுப்பினர் பால கிருஷ்ணன். இன்னொருத்தர்ரு  இந்த பாலகிருஷ்ணனின் முன்னால் தோலும   இன்போசிஸ் நிருவனத்தின் இணை நிருவனருமான நந்தன் நீல்கேனியும்............ஓவர்.

இந்த நந்தன் நீல்கேனி ஆதார் அட்டை புகழ் நீ..........ல் கே...னிதானே.....ஓவர்.

ஆமாமா, அந்த ஆளுதான், விடாதே ,பிடிச்சுகோ...................ஓவர்.

மக்களுக்கு சேவை செய்ய வார...அய்யாவுக..சொத்து பத்தெல்லாம் எப்படி?ஃ.....ஓவர்.

பாலகிருஷ்ணன் சொத்து மதிப்பு ரூ 190 கோடி, ஆதார் புகழ் நீல்கேனி சொத்து மதிப்பு ரூ 7.700 கோடி...............ஓவர்.

அடேங்கப்பா,190 கோடியும்  7.700கோடியும் சேர்ந்து மக்களுக்கு சேவை ஆற்ற வாராவுகன்னா.........மக்கள் ரெம்ப கொடுத்து வச்சுருக்குனும்-----------ஓவர்

ஆமாமா, அம்புட்டு சொத்து வச்சுருக்குரவங்க..சுகபோகமாக ஒக்காந்து திண்ண மாட்டாம....மக்களுக்கு சேவை அற்ற “தேர்தல்ல” நிக்கிறாங்கன்னா, மக்கள் கொடுத்து வச்சவங்கதான்..-----------ஓவர்.

ஆமா,ரெண்டு அதிபதிகளும் எந்தெந்த கட்சி சார்பா......களத்துல நிக்காக..----ஓவர்.

ரூ190 கோடி அதிபதி பாலகிருஷ்ணன் எளிய மக்கள் கட்சியான ஆம்ஆத்மி சார்பில் பெங்களுர் மத்திய மக்களவை தொகுதியிலும்,ரூ7,700கோடிக்கு அதிபதியான ஆதார்புகழ் நீல்கேனி பணக்கார கட்சியான காங்கிரஸ் சார்பில் பெங்களுர் தெற்கு தொகுதியிலும் நிக்கிறாக----------ஓவர்.


காங்., பிரதமர் வேட்பாளர் நந்தன் நிலேகனி?


கொர்.....கொ...............ர்...கொ..............ர்......................கிர்.........கிர்....டப்ப்ப
டுப்ப்ப......................ப்ப்..................ர்ர்ர்ர்............................ர்ர்.


ஹெலிகாப்டரில் தமிழக முதல்வர் இறங்கி விட்டார்-----------------ஓவர்“.

டுபு டுபு....டுபு்டுபு டுபு..............டுபு..............................டூர்ர்ர்...................................


மற்றொரு ஹெலிகாப்“டரில்  முதல்வர் பறந்து விட்டார்-------------------ஓவர்.

 அடுத்த மக்களவை தேர்தல்களில் .இந்தியாவின் முதல் அதிபதிகளான அம்பானி.மிட்டல் டாடா, போன்றவர்களும் மக்கள் சேவை ஆற்ற  களத்தில் குதிக்கலாம்--------ஓவர்.


செவ்வாய் 25 2014

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

”வினவு” வில் வந்த  வாக்களிப்பது கடமையா மடமையா-என்ற பதிவை படித்தபோது தோன்றியது. 

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

“ நாம எல்லாம் இண்டியன்ஸ் தேர்தல் வரும்போது ஓட்டுப்போடனுமில்ல”

 கடவுளுக்கும் அந்த கடவுளின் ஏஜென்டுகளான பார்ப்பனர்களுக்கே ஓட்டு போடுவது எதுக்குன்னே தெரியல.... இதுல  பக்தர்களுக்கு ஓட்டு போடுவது எதுக்குன்னு தெரியவா போகுது. ( ஓட்டு போடங்கன்னு சொல்றவங்களும் ஏதோ தெரியுற மாதிரி பீத்திக்கிறாங்க....)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...