பக்கங்கள்

வெள்ளி 23 2018

நினைவலைகள்.24.

பிறன் மனை உறவு குற்றமில்லை...என்ற தீர்ப்பு .......


என்னடா இவிங்க இப்படி தீர்ப்பு சொல்றாங்கே என்று கடுப்பாகினா் செய்தி தாளை படித்தவர்கள்... அவர்களின் நோக்கம் என்ன வென்று எனக்கு தெரியாது ஆனால் நான் குடியிறுக்கும் தெருவின் நாட்டாமையின் மன்மதலீலைகளை சொல்லி மாளாது  எந்தவொரு உறவுமுறையின்றி உறவு கொண்டு தீர்த்தான்.

அவனின் லீலைகளை கண்டு அவனின் மனைவி தற்கொலை செய்து கொண்டது.  அந்த சுதந்திர புருசனுக்கு ரெம்பவும் வசதியாகப் பட்டது. மின்சார வாரியத்தில் வேலை செய்த திமிரும் தெருவின் நாட்டாமை. மற்றும் தெருக்கோயிலின் பூசாரி என்ற கெட்டப்பிலும். தன் லீலைகளை தொடர்ந்து வந்தான். தன் லீலைகளில் பங்கெடுத்த பெண்களை அவன் ஏமாற்றவில்லை காசு பணத்தோடு..நல்ல பல துணிமணிகளை எடுத்துக் கொடுத்து தன் வயப்படுத்தியிருந்தான்....  அதனால் அந்தப் பெண்கள் தன் கணவனைவிட அவன் மேல் நன்கு விசுமாசமாகவும் அவன் இட்ட வேலையையும் செய்யவும் சித்தமாகியிருந்தார்கள்..

அந்த நாட்டாமைக்கும் எனக்கும் இடப் பிரச்சினைபோது....  அவனுக்காக என்னுடன் சண்டைக்கும்  என் மீது பொய்ப்புகார் கொடுக்கவும் செய்தார்கள் இது நான் கண்ட அனுபவம். அந்தப் பெண்களின் புருசமார்களும் தங்கள் மனைவியின் செயல் தவறாக தெரிந்திருந்தாலும் அவர்களுக்காக எனக்கு எதிராக வந்து நின்றார்கள்.

தங்கள் மனைவிமார் அடுத்தவருடன் கள்ளஉறவு கொள்வதையோ.,. தங்கள் புருசமார்கள் அடுத்தவன் மனைவிமார்களுடன் கள்ள ஒறவு கொள்வதையோ..கண்டு கொள்வதுமில்லை.. அது குற்றம் என்று கருதியதுமில்லை....... இது விபச்சாரத்தைவிட பாதுகாப்பாக  ஒளிவு மறைவு இன்றி பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது...

சில படித்த. சொத்துள்ள சில புல்லுருவி புருசமார்கள்தான் தங்களுக்கு மட்டும்தான் கள்ளஉறவு பாத்தியமானது...  தங்களின் மனைவிமார்களுக்கோ...தாங்கள் வைத்துள்ள வைப்பாட்டி மார்களுக்கோ அடுத்தவருடன் கள்ள உறவில் ஈடு பட  அனுமதியில்லை. என்றும் அவர்களால் தங்கள் குடும்பம் சீரழிந்து விடும் என்று கதைவிடுகிறார்கள்.

இந்த நிலையில் நிலவும் சமூகத்தில் கற்பு, கத்திரிக்கா...புடலங்கா எல்லாம் உச்சா மன்ற அறிவித்த  தீா்ப்பினால் கள்ள உறவு குற்றமில்லை என்பது  கள்ள உறவு கொள்வோர்க்கு சிறந்த தீர்ப்பாகவும்... மற்றவர்களுக்கு  மோசமானதாக சமூகத்தை சீரழிப்பதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்... என்னவோ சமூகம் நல்ல நிலையில் இருப்பதாக இவர்கள் பீத்திக் கொள்கிறார்கள்.

என் வழக்கின் தீர்ப்பே தமிழில் வழங்காமல் ஆங்கிலத்தில் வழங்கியதால் அந்த தீர்ப்பால்  எனக்கு தலையும் தெரியவில்லை .வாலும் புரியவில்லை. இந்த நிலையில்  “ பிறர் மனை கள்ள உறவு குற்றமில்லை” என்ற தீர்ப்பு மற்றும் எனக்கு புரிந்து விடுமா..என்ன? அந்த தீர்ப்பின் சாரம் பற்றி? அந்த தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிய... மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வருகிற ஞாயிற்றுக் கிழமை ஒரு அரங்கக் கூட்டம் நடத்துகிறது. எனக்கும் கள்ள உறவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற போதிலும்.... என் தெரு நாட்டாமையின் மன்மதலீலைகளை தெரிந்து கொள்வதற்காகவாது நான் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்வேன்.



படம்

புதன் 21 2018

நினைவலைகள்-23.

வில் வென்ற வீரத்தை  ஒரு புல் பறிமுதல் செய்த  கதை,..





அது என்ன வில்லை வென்ற புல்லுவின் கதை என்று  தலைப்பை படித்ததுமே எனக்கு சற்று சந்தேகம் எழுந்தது. இது  செத்துப் போன நடிகர் சுருளி ராசன் சொன்ன வில்லை எடுத்தவன் வில்லன் என்று  ராமனை சொன்ன கதையாக இருக்குமோ என்று?.பிறகு முழுவதையும் படித்த போதுதான் புரிந்தது.  அந்த வில்லன் அல்ல.. இது

வில்லால் அம்பு எய்வதில்  வீரனான சேர  தமிழ் மன்னன் என்பவன். . கனக விசயன் என்ற ஒரு அரசனை வென்று.. அவன் தலையில் கல்லெடுத்து வந்த மாவீரன் சேரன் செங்குட்வன் என்பவனை பற்றிய சோகக்கதை என்று ..அது என்ன  சோகக் கதை..


 இமயத்தையே வென்ற வீரம் ஒரு வேதியனின் காலடியில் வீழ்ந்து விட்டது.
வேதியன் யார் என்றுதான்  உங்களுக்கு தெரியுமே..... கடவுளுக்கும் கடவுள்

இதைத்தான் “வில் வென்ற வீரத்தை  ஒரு புல் பறிமுதல் செய்த கதையானது






திங்கள் 19 2018

நினைவலைகள்-22.

உலகம்... உருண்டை............


உலகம் உருண்டை க்கான பட முடிவு


உலகம் உருண்டை என்று பள்ளியில் படிக்கும்போது அறிவியல் வாத்தியார் . ஒரு படத்தை காட்டி சொன்னபோது..உலகம் இப்படித்தான் இருக்கும் என்று அப்போது தெரிந்து கொண்டது... பின்  அந்த அவ்ளோ உலக உருண்டையானது. இணையத்தால்   ஒரு கிராமமாக ஆனது என்று சொன்னார்கள்..வல்லுநார்கள்

அப்பேர்ப்பட்ட உலகம்  கிராமமாக  மாறின ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்களை காலை எட்டு மணிமுதல்  மாலை ஆறு மணிவரை நைட்டி என்ற உடை உடுத்தக் கூடாது என்று தடை  விதிக்கப்பட்டது. அந்தத் தடையை அமுல் படுத்தும் விதமாக  மாலை ஆறு மணி முதல் காலை எட்டு மணி வரை பெண்கள் நைட்டி அணிந்து கொள்ளலாம் என்று விதி முறை சற்று தளர்த்தப்பட்டது. ஆனால் தளர்த்தப்பட்ட விதியிலும் ஒரு விதி அமுல்படுத்தப்பட்டது.

அதாவது மாலை ஆறுமணி முதல் காலை எட்டு மணிவரை நைட்டி  அணிந்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி மீறி வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும்..சட்டத்தை மதிக்கமால் தடை செய்யப்பட்ட நேரத்திலும் நைட்டி அணிந்தாலும் ரூபாய் இரண்டாயிரம் அபதாரம் விதிக்கப்படும்.

விதிமீறி நைட்டியுடன் வெளியே வரும் பெண்களைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும். 

இப்படிபட்ட சட்ட விதிமுறைகளை விதித்தது யாரென்று  பார்த்தால்  உலக உருண்டைக்குள் உள்ள அந்தக் கிராமத்தின் மகளிர் சுய உதவிக் குழு என்று தெரிந்தது.

 இதே உலக உருண்டைக்குள் இருக்கும்  அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற ஒரு தீர்ப்பை மதித்து செல்லும் பெண்களை..அங்குள்ள காட்டுமிராண்டிகள் வழிவிட மறித்து  நிற்கிறார்கள்...

எப்படி எப்படியெல்லாம்  ஒரு கூட்டம் அடக்குது ஒடுக்குது..

குழந்தைகளின் உற்பத்தி பீடமான பெண்கள் காட்சிப் பொருளாகவும், கட்டிலறைப் போகப் பொருளாகவும்.. சமையல்காரிகளாகவும் இருக்குவரை இப்படியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்  உலக உருண்டைக்குள் வந்து கொண்டே இருக்கும்.....


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...