பக்கங்கள்

சனி 25 2014

பொணம் இல்லாததால் பெரு மூச்சு விட்ட போலீசார்.......


நேத்து விட்டகதையை இன்னிக்கு தொடருரேனுங்கோ...................
நேத்து சொன்ன கதையை படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு வந்தால் நம்ம கதையின் முடிவு தெரியுமுங்கோ......................

எதோடு விட்டேன் என்று எனக்கும்  தெரியல..  ப்ளீஸ் வெயிட்டீங்....... நானும் முன்னாடி போயி படிச்சுட்டு வந்துடுறேன்.

........................................................................................
...........................................................................................
.......................................................................................
ஆங்.........................

அப்போது.......................... அந்த சாக்கு மூடையில் மணல் மற்றும் செங்கல் துண்டுகள் இருந்தன. இதனால் அந்த சாக்கு மூட்டையில் பொணம் இல்லாததால் போலீசார் ஏமாந்தனர்.

இருந்தாலும் பொலீசார் ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொல்லாம்மால் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இதனால் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
அப்படியின்னு நானு சொல்லலை... தினகரன் பத்திரிகை காரன் செய்தி போட்டு இருந்தானுங்கப்பா................................

இன்னும் என்ன நோண்டிக்கிட்டு கதை அம்புட்டுதானப்.............பூ...

வெள்ளி 24 2014

பொனம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த போலீசார்....???.1

மதுரை திருமங்கலம் அருகே வடகரை பகுதியில் மர்மக் கும்பல் ஒன்று காரில் வந்தது. வந்த கும்பல் தீடிரென்று  காரில் இருந்து ஒரு சாக்கு மூட்டையை (அரசு தோட்டத்து கிணறு இல்லாததால்) தனியார் தோட்டத்துக்கு சொந்தமான கிணற்றில் வீசிச் சென்றனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாக்கு மூட்டையில் பொணம் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகப்பட்டு திருமங்கலம் டவுன் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

சாக்கு போக்கு சொல்லாமல் உடனே வந்த போலீசார், இன்ஸ்பெக்டர் தலைமையில் கிணற்றைப் பார்த்தனர்.

அது தனியார் கிணறு ஆனதால்,கிணற்றில் 40 அடிக்கு மேல் தண்ணீர் கிடந்தது. இதனால்  மின் மோட்டாரைக் கொண்டு மக்கள் உதவியுடன் கிணற்று நீரை வெளியேற்றினர்.

தண்ணீரை வெளியேற்றிய பின்பு போலீசார் அப்பகுதி வாலிபர் சிலர் உதவியுடன் கிணற்றில் இறங்கி சாக்கு மூடையை தேடினர்.

15 நிமிட தேடலுக்குப்பின்னால் சாக்கு மூடை சிக்கியது. அதை மேலே எடுத்து வந்த போலீசார் சர்வ ஜாக்கிரதையுடன். பிரித்துப் பார்த்தனர்.

அப்போது...........................................(.நாளைக்கு பாத்து பாத்துக்கிர்ர்லாம்.)...... .

வியாழன் 23 2014

62 நாற்காலிக்கு 8ஆயிரம் பேர் போட்டி......இது .ரெம்ப கம்மிங்க......



மதுரை காமராஜர் பல்கலை கழக இளநிலை உதவியாளர் பணிக்கான 62 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பித்து, அதில் 6 ஆயிரத்தை வடிகட்டி 8ஆயிரம் பேருக்கு தேர்வு நடத்தி, அந்த 8ஆயிரம் பேரில் 62 பேரை  தேர்வு செய்து  அவர்களுக்குத்தான் நாற்காலி கொடுப்பாங்களாம்.

இவுக தேர்வு முறையினால வேலை இல்லா திண்டாட்டம் வேகமாக குறைஞ்சு தமிழ்நாடு மொதல் மாநிலமா விளங்கிடும்.

ஏற்கனவே,முற்போக்கு சிந்தனையும் நேர்மை திறனும் கொண்ட மு.வ., தெ.பொ.மீ., போன்ற அறிஞர்கள் அமர்ந்திருந்த பதவிகளில் முறை கேடான வழியில் துனை வேந்தரான கல்யாணி அம்மா மீது

ஊழல் புகார் முறைகேடுகளில் விசாரனை நடத்து என்றும் அவரை பதவி நீக்கம் செய் என்றும், கல்யாணி அவர்களால் பழிவாங்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி பணியில் அமர்த்து என்று மனித உரிமை பாதுகாப்பு  மையம்  போன்ற பல அமைப்புகள் கள்த்தில இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ல்ச்சணத்துல 62 சீட்டுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி, பல்கலைகழகம்  ஒலக வரிசையில்  15 வது இருப்பதாக கல்யாணி அம்மா சொல்லிகிட்டு இருக்கு  இனி என்ன, 15யை தாண்டி, சீக்கரமாகவே   முதல்  ரேங்குக்கு வந்திரும் சந்தேகம் கொள்ளல் வேண்டாம்..............

புதன் 22 2014

இந்தாளுகளே இப்படித்தாங்க..........................



பரபரப்பான சினிமா ட்ரெயலர் வந்திருக்காம். அந்தப் படத்தின் பேரு என்னான்னு தெரியுங்களா!!! கொம்புத் தேவன் இயக்குறாராம்.

என்னைக்காட்டிலும் ஒங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச சொல்றேனுங்கோ...................

அந்தப்படத்து பேரு....................... என்னைய திட்டாதிங்கோ..........அந்தப் படத்துப்பேரு “ ஒரு கன்னியும் மூனு களவானிகளும்”  யப்பா...........

எப்படியிருக்கு படத்தின் பேரு, சூப்பரா இருக்குதுல.........................

ஏற்கனவே, கணக்கே தெரியாத ஒரு நூற்றாண்டுல தோன்றி இன்னிக்கு வரைக்கும் சக்கையா போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு படம் “ ஒரு கண்ணியும் ஐந்து களவானிகளும்”   அதன் தொடர்ச்சியான்னு கேட்காதீங்க

 அஞ்சு பேருல ,ரெண்டு பேரு என்னாச்சுன்னு தெரியல................ படம  வந்து பாத்தான் விவரம் தெரியும்.

ஒரு கண்ணியும் அஞ்சு களவாணில, கதநாயகி பாஞ்சாலி, அஞ்சு கதாநாயகர்கள்தான் ஒங்களுக்கு தெரியுமே,

அஞ்சுல ரெண்டு என்னாச்சுன்னு  என்னக் கேட்டா. எனக்கு எப்படியுங்க தெரியும்

படம் எடுக்குற இந்தாளுங்களே இப்படித்தாங்க.......... அஞ்சுல ரெண்டக் குறைப்பாங்க...............அதுக்கு ஒரு காரணத்தையும் சொல்லுவாங்க

கதை கதையாம் ஒரு காரணமாம் என்பது மாதிரி.....

படம் பெரிய திரையிலோ அல்லது குட்டித் திரையிலோ வரும்போது பாத்துக்லாமுங்க................

அறிவு இருக்கா!...இல்லையா...?

யோவ்    யாருய்யா...   அது
அறிவு     இருக்கா        இல்லையா

இப்படி     ஒடுற      பஸ்சுல
இருந்து    எச்சில   துப்புறது.

..............................................

யோவ்     யாருய்யா    அது
அறிவு      இருக்கா        இல்லையா

இன்னு      கேக்கிறது    உமக்கு
அறிவு        இருக்கா       இல்லையா

இப்படித்தான்  பஸ்சுல இருந்து
எச்சிலை          துப்பும்    போது

குறுக்கால      வேகமா    வர்ரதா!
போய்ய்யா!      போ          போய்ய்யா!

செவ்வாய் 21 2014

மகனே,அருமை மகனே..............


அருமை மகனே,
உன்னிடம் நான் கேட்கவிரும்புவதெல்லாம், ஒன்றே ஒன்று தான்.
என்னை மன்னிப்பாயா மகனே?

வெறிச்சோடிக்கிடக்கும் இந்த இரவில், ஓ ஓ ஓ வென அலறியபடி ஓடவேண்டும் போல் இருக்கிறது எனக்கு. தனியன் ஆகிவிட்டது போல் உணர்கிறேன்.

இருந்தாலும், இறுதிவரை நான் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தேன் என்பதை நீ நம்புவாயா மகனே. இறுதிவரை நான் உன்னை கை விட்டுவிடவில்லை என்பதை நீ நம்புவாயா?

எத்தனை பேர், எத்தனை பிரபலங்கள், எத்தனை நடிகர்கள், எத்தனை நிறுவணங்கள், எத்தனை அறக்கட்டளைகள், எத்தனை டிரஸ்டுகள், எத்தனை மருத்துவமனைகள், எத்தனை பயணங்கள், எத்தனை படிகள்.... உனக்காக நான் யார் யாரிடம் கையேந்தினேன் என்பதை என்னால் முழுமையாக நினைவில் வைக்க இயலவில்லை மகனே.

யாரும் மறுக்கவில்லை. யாருமே மறுக்கவில்லை. தங்களால் இயன்றதை தந்து உதவியவர்கள் சிலர். உதவுவதாக வாக்கு தந்தவர்கள் ‍‍_ வாக்கு மட்டுமே தந்தவர்கள் _ பலர். யாருமே மறுக்கவில்லை மகனே, யாருமே மறுக்கவில்லை.

நீ பிறந்தபோது என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவர்களை விட, உனக்காக உதவி கேட்டு நான் சென்ற போது உடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் மகனே.

இருந்தாலும்....... என்ன செய்வது? உன் அப்பன் ஒரு பட்டறை தொழிலாளி தானே. தினம் ரூ 150/‍ கூலிவாங்கும் கூலித்தொழிலாளிதானே. ஒரு கூலிக்காரனுக்கு இரண்டு லட்சத்தி எழுபத்தி இரண்டாயிரம் என்பது மிகப்பெரும் தொகை மகனே. மிகப்பெரும் தொகை.

நீ வளர்த்து பெரியவன் ஆனதும் என்னவாக ஆகியிருப்பாய்?
டாக்டராக? இஞ்ஜினீயராக? கலெக்டராக? போலீசாக?...
அப்படித்தான் மகனே நானும் என் சிறு வயதில் பதில் கூறினேன். ஆனால் பட்டறை தொழில்தான் எனக்கு வாய்த்தது. உனக்கும் அப்படித்தான் வாய்த்திருக்கும். நடுவில் இந்த மிகப்பெரும் தொகை மட்டும் குறுக்கிடாதிருந்தால், உனக்கும் என்னைப் போலத்தான் வாய்த்திருக்கும். இங்கே எல்லோருக்கும் அப்படித்தான் வாய்க்கிறது.

நீ இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாய். சளி தொந்தரவாக இருக்கும், ஜான் டாக்டரிடம் ஒரு ஊசியும், சுரேஷ் மெடிகல்ஸில் மருந்தும் வாங்கிக் கொடுத்தால் சரியாகிவிடும் என நினைத்தேன். என் போன்றவர்களுக்கு அதுதானே இயல்பாய் தோன்றும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஜான் டாக்டருக்கு உன் சளி மசியவில்லை. பின் யார் யாரையோ பார்த்து, எங்கெல்லாமொ அலைந்து, என்னென்ன பரிசோதனைகள் எல்லாமோ செய்த பிறகுதான் சொன்னார்கள், உன் இருதயத்தில் ஏதோ ஒரு வால்வு இல்லை என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும். ஏற்கனவே தாமதமாகி விட்டது என்றும் என் மீது குறைபட்டுக்கொண்டார்கள். எனக்கெப்படி தெரியும் மகனே.
என்றாலும், அப்போழுது கூட நான் யோசிக்க வில்லை, "உடனே செய்ய வேண்டும் என்றால், செய்து விடுங்கள்" என்றுதான் கூறினேன். மறுத்துவிட்டார்கள். உனக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதி அரசு ஆஸ்பத்திரியில் இல்லையாம். சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மட்டும் தான் உள்ளதாம்.

அங்கும் போனோம் தானே மகனே. உனக்குத் தெரியுமே. "2,72,000/‍ ரூபாய் கட்டுங்கள், மறுநாளே இருதய ஆப்பரேஷன் செய்துவிடலாம்" என இருதயமே இல்லாதவர்கள் போல் பேசினார்களே. நீயும் தானே உடன் இருந்தாய்.

உனக்கு வைத்தியம் பார்க்கும் வசதி அரசு மருத்துவமனைக்கு இல்லை. அந்த வசதியோ, வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய்கள் சலுகை தரும் அரசுக்கு, ஒரு ஆப்பரேஷன் செய்ய வசதி இல்லையாம். வசதி இல்லாத அரசு, அய்ம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வசதியாக ஒதுங்கிக் கொண்டது. மீதம் பணத்திற்கு எங்கே போவது?

ஆனாலும் கூட நான் முயற்சித்தேன் மகனே. காசு கொண்டுவருவதாக உறுதி கூறினேன். உன் 3ஆம் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தார்கள். அம்மாவின் நகைகளை விற்றேன். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அண்டை அசலார் உதவினார்கள். நாள் நெருங்கியது. தேவையான பணம் சேரவில்லை. ஆப்பரேஷன் நடக்கவில்லை. 4ஆம் மாதம் தேதியை மாற்றினார்கள். சிலர் சில நடிகர்கள் தருவதாக கூறினர். அவர்களிடம் ஓடினேன். சிலர் சில நிறுவணங்களை காட்டினர். அங்கே ஓடினேன். என்னென்னவோ அறக்கட்டளைகள், டிரஸ்டுகள், கழகங்கள். அனைவரிடமும் ஓடினேன்.

இருப்பதை வைத்து ஆப்பரேஷன் செய்யக்கோரி ஆஸ்பத்திரி போனேன். கொடுத்ததற்கு ரசீது போட்டுவிட்டு, "வெகுதாமதமாகி விட்டது, பொருப்பில்லாமல் இருக்கிறீர்களே, மீதப் பணத்தையும் கொண்டுவாருங்கள்" என புன்னகை மாறாமல் விரட்டினான் வரவேற்பறையில் இருந்த இளைஞன். அந்த பளிங்குத் தரையில் எழுந்த என் செருப்பின் சத்தம் கூட என்னை விரட்டியது மகனே.

6ஆம் மாதம் தேதி குறித்தார்கள். நான் ஓடிக்கொண்டே இருந்தேன். நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களும், அவர்களின் நண்பர்களும் கூட உதவினார்கள். தேதி நெறுங்குகிறது. பணம் சேரவில்லை. நீயும் காத்திருக்கவில்லை. மிகமிக அமைதியாக, நேற்று காலைப் பொழுதில் நீ மரித்துப் போனாய். மூக்கிலும், காதிலும், வாயிலும் இரத்தம் கசிய, கண்கள் விட்டத்தில் எதையோ தேட, பிராண வாயுவை உள்ளிழுக்க முடியாமல் உன் இருதயம் மெள்ள மெள்ள தனது துடிப்பை நிறுத்திக் கொண்டதாக அப்போது உன் அருகில் இருந்த உன் அத்தை கூறினாள்.

நீ ஏன் மகனே ஜான் டாக்டரின் ஊசிக்கு அடங்காத நோயுடன் பிறந்தாய் ?

சுடுகாட்டுக்கு வந்த நண்பன் ஒருவன், " அநியாயமா குழந்தைய கொன்னுட்டியேடா" என்று என்னை திட்டினான்.

நானா மகனே...
நானா...

நான் மட்டுமா?

ஆம்.
நானும் தான் மகனே.. என்னை மன்னிப்பாயா?

அன்புடன்
உன் அப்பன்.



_____ பால்ராஜ் .

நம்புங்கப்பா..................நம்புங்க........



போட்டி.பொறாமை,கசப்புனர்வு இல்லாமல் உழைப்போரை அரவணைத்து பண்போடு வளர்த்து வரும் இயக்கம்.

 ஈழத்தமிழர் பிரச்சினை,தமிழர்களின் வாழ்வாதாரப்பிரச்சினைக்காகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் தொடர்ந்து போராடும் இயக்கம் (மோடிக்கு பாராட்டு பத்தரம் கொடுத்ததை மறந்துவிடனும்)

இந்த இயக்கம் மதிமுகதான் என்று அந்தக் கட்சியின் பொபொதுச்செயலாளர் புர்ச்சி புயரு வை.கோ( பால்).............சாமி கூறியிருக்கிறார்

காதுள்ளவர் கேட்கக்கடவுவது
பார்வையுள்ளவர்கள் பார்க்கக்கடவுவது.
ஓட்டு உள்ளவர்கள் போடாமல் இருக்கக்கடவுவது..
வருகிற மக்களவை தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிவார்கள்: வைகோ பேச்சு

திங்கள் 20 2014

முட்டை உருண்டையா? ஒலகம் உருண்டையா??


உலகம் உருண்டைன்னு
சொல்லக் கேள்வி
சத்தியாமா அந்த உருண்டய
நேர்ல பாத்ததில்ல........

முட்டை உருண்டைன்னு
ஒலகத்துக்கே தெரியும்
போது எனக்கு தெரியாம
இருக்குமா............

முட்டை குஞ்சாவதற்கு
சூடு வேணும். சூடு
இல்லாட்டி முட்டை
குளு முட்டையா
ஆகிடும்.

ஒலகத்துக்கும் சூடு
தேவை. அந்த சூடு
இல்லாததால்  ஒலகத்தில்
வாழும் குஞ்சுகளுக்கு
சூடும் சொரனையும்
வெட்கமும் மானமும்
ஓடியே போச்சு..........

இப்போ சொல்லுங்க
முடடை உருண்டையா?
ஒலகம் உருண்டையா??


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...