பக்கங்கள்

சனி 09 2016

அன்னை தெரசாவாக மாறாத..இந்தீய ஒலக அழகியின் இரகசியம்...

“நண்பரே.,.. உங்களுக்கு விசயம் தெரியுமா..”.???

“என்ன விசயம்  நண்பரே..”

“ அகில ஒலக அழகியின் போட்டியில் வெற்றி பெற்ற. அகில இந்தீய ஒலக அழகி...பேட்டியின் போது.. எதிர் காலத்தில் நானும் அன்னை தெரசாவாக வருவேன் என்று கண்ணீர் சிந்தி அகில ஒலகத்துக்கும்  சொன்னாரே.....

“ ஆமா..சொன்னதாக..நிணைவு...

வருசம் இத்தனை ஆகியும் எட்டாவது அதியமாக ஒரு கொழந்த பெற்றெடுத்தும்.... அன்னை தெரசா பரலோக ராஜ்ஜியத்துக்கு சென்ற பின்னும் காலியாக உள்ள இடத்திற்கு இன்னும் அன்னை தெரசாக மாறாத ஒலக அழகியின்  இரகசியம் தெரியுமா...?  நண்பரே.....


“என்ன காரணம் என்று தெரியாமல்..ஒலக அழகியின் ரசிகர்களோடு..நானும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் நண்பரே.....” அந்த ரகசியம் என்னவோ...???

“ ஒலக அலகியின் இரகசியம் ஒலகத்துக்கே தெரிந்திருக்கும்போது...ஒலகஅலகிியின் அதாவது இந்தீய அலகியின் ரகசியம் முன்னால் இரசிகனான ஒங்களுக்கு தெரியாமல் இருப்பது காலத்தின் கோலம்தான்... நண்பரே...”


“வேறு என்ன செய்வது நண்பரே....  “ ஊத்தி கொடுத்த உத்தமி எல்லாம்... தேர்தல் நெருங்கி  வந்தவுடன்...  ஊத்திக் கொடுப்பதை எதிர்த்த ஆறு பேர் மேல் தேசத்துரோக வழக்கை பதிவு செய்த  பின்பு,. இனிமேல் ஊத்திக் கொடுப்பது படிப்படியாக முழுமையாக நிறுத்தப்படும் என்று வாய் வீச்சு விடுவதும் கால்த்தின் கோலம்தான் நண்பரே.”

“ஆமாம் நண்பரே.. அதுவும் அடுத்தவர் மீது குற்றம் சொல்லி தப்புவதும். காலத்தின் கோலம்தான்“....உத்தமியின் ரகசியத்தை அப்புறம் பேசுவோம்... முதலில் ஒலக அலகியின் ரகசியத்துக்கு வருவோம் நண்பரே....

“ ஆமாம்..நண்பரே...  முதலில் ஒலக அழகி ..அன்னை தெரசாவாக மாறாத அந்த இரகசியத்தை சொல்லுங்கள் நண்பரே”...

“  விக்கி லீக்ஸ் போல் இது பனமா லீக்ஸ்  நண்பரே .பிரிட்டீஷ் வீர்ஜின் தீவுக்களில் இருக்கும்“ஆமிக் பார்ட்னர்ஸ்லிமிடெட்“ என்ற உப்புமா கம்பெனிக்கு இயக்குநாராகவும்..பங்கு தாராகவும்   இருக்கும்போது  எப்படி.. அன்னை தெரசாவாக மாற முடியும் நண்பரே”

“ ஆமாமாம....கோடி...கோடி...கோடி...க்குஅதிபதியாகஇருக்கும்போது...”

“ ஆம் நண்பரே, சர்வதேச மோசடியில்  பெரிய பதவி வகிப்பதால்தான்.. அகில ஒலக இந்தீய ஒலக அழகி..“ அன்னை தெரசாவாக மாறிவில்லை...நண்பரே..




வெள்ளி 08 2016

அன்று சொன்ன வார்த்தைகள் ......!!!!

அன்று சொன்ன
வார்த்தைகள் இன்று.
தங்கள் நிணைவுக்கு

 முதலில் நானொரு
பிராமணன் இரண்டாவது
நானொரு இந்து
அதன் பின்தான்
நானொரு கம்யூனிஸ்ட்
என்று சொன்னான்
அய்யா அன்று
போலி கம்யூனிஸ்ட்
அமைச்சர் ஒருவன்

கூடியிருந்த அவையிலே
நான் ஒரு
பாப்பத்திதான் என்று
சாதிப்பெருமையை
பறை சாற்றி
பீத்தியது அய்யா
 பெண் உருவில்
 உள்ள ஆண்டை...



இவன் பட்டு
கட்டும் சாதியாம்
அவன் பொட்டு
கட்டும் சாதியாம்
இப்படியும் ஒருவன்
சாதித் திமிறில்
சொன்னான் அய்யா..
அன்று........


இன்னும் ஒருத்தன்
திருக்குவளை என்பது
தகரப்பெட்டி சவரக்கத்தி
என்று சாதி
கொழுப்பு எடுத்து
சொன்னான் அய்யா
அன்று........

அந்தத் திமிரில்
 தான் அய்யா
இன்று வாய்
கொழுப்பில் சாதித்
திமிரில்.....வந்து
விழுகிறது.. ஆதித் தொழில்
நாதசுரம் என்று
கருப்பு அங்கி
அணிந்த ஆண்டையிடம்
இருந்து................





வியாழன் 07 2016

”ஹலோ...நான் போலீஸ் பேசுகிறேன்”

அடுத்தவர் மனைவியின்
கழுத்தில் கிடந்த
சங்கிலியை அறுத்த
சங்கிலி அத்தானுக்கு
போன் வந்தது...

”ஹலோ...நான்
போலீஸ் பேசுகிறேன்”

எதுக்காக இருக்கும்
நீங்களே...சொல்லுங்க....

புதன் 06 2016

தேசபக்தி தனியார் மயம்


படம்-www.4tamilmedia.com

இந்துத்துவா கும்பலுக்கும்
இந்தீய இராணுவ்திற்கும்
 மட்டுமே மொத்தமாய்
இருந்து         வந்த
இந்தீய   தேசபக்தி
தனியார் மயமாகிறது


நாட்டை ஆளும்
தேசபக்தி அரசால்
தேசபக்தி இராணுவத்தில்
தனியார் முதலீடுகளுக்கு
கதவு  திறக்கப்பட்டு
விட்ட படியால்..


பெரு நிறுவணங்கள்
தங்கள் பாதுகாப்புக்கு
இராணுவ  படையை
தொடங்கி விட்டது

முதல் கட்டமாக
இந்தீயாவின் பெரும்
பணக்காரர் முகேஷ்
அம்பானி பதினாறு
ஆயிரம் முன்னாள்
இராணுவ வீரர்களை
கொண்டு ஒரு
படையை உருவாக்கிவிட்டார்.


இனி, பெரும்
நிறுவணங்கள் தங்கள்
சொத்துக்களை காக்க
பெருக்க தேசபக்தி
இராணுவத்தோடு இணைந்தோ
தனித்தோ சத்தீஸ்கார்
மக்களையும் மட்டுமல்லாமல்
பிறமாநில மக்களையும்
கேட்க நாதியற்ற
காக்கை குருவிகள்
போல்  சுட்டு
வீழ்த்தப்  பட்டு
தீவிர வாதிகளிடமிருந்தும்
பயங்கர வாதிகளிடமிருந்தும்
நாட்டை காப்பாற்றும்
தனியார் மயம்.......


இனி மேல்
எதுக்கு தேர்தல்ல
ஓட்டு போட்டுகிட்டு
அதையும் தனியார்
மய மாக்கிவிட்டால்

தேசபக்தி  இந்தீயாவில்
தேச பக்தி மாதிரி
தேர்தலும் தனியார்
மயமாகி வீறு
 நடைபோடட்டும

செவ்வாய் 05 2016

உச்ச கட்ட பாதுகாப்பு என்றால் என்ன....???

“அய்யா........”

“.......................”

“ அய்யா........”

“என்னய்யா.....”

“ ஒரு சந்தேகம்......”

“என்ன   சந்தேகம்மா.....”

“ ஆமங்கய்யா.......”

“ என்மேலேயா...... இல்ல உம் பொண்டாட்டி மேலேயா்....!!!!”

“ரெண்டு பேரு மேலேயும் இல்லங்கய்யா.....”

“ இல்லீயா...... அப்ப என்ன சந்தேகம்...”

“ அது..... வந்துங்கய்யா.......”

“ அதான் வந்திட்டிங்கள....... சொல்லுங்கய்யா...”

“ அது வேற ஒன்னுமில்லங்கய்யா..... உச்ச கட்ட பாதுகாப்பன்னு  பேப்பர்ல போட்டு இருக்காங்காய்யா..... அப்படின்னா என்னங்கய்யா....????“

“ ஓ.........ஓ.... அதுவாங்களய்யா......”

“ ஆமங்கய்யா..........”

“ அது வந்துங்கய்யா.........ம்...ம்....ம்....... அதாவதுங்கய்யா.......நம்ம தெரு இல்ல... நம்ம தெரு வேணாம்...... ”     ” அய்யா..... இந்த மெயின் ரோட்ட உதாரணமாக எடுத்துக்குங்க.......”

“ சரிங்கய்யா....”

“இந்த மெயின் ரோட்டுல இருக்கிற சாராயக் கடைக்கு பாதுகாப்பாக.... ரெண்டு போலீசோ..மூணு போலீசொ நிப்பாட்டி இருக்கிறத பாத்து இருக்கீங்களா...அய்யா....”

“ஆங்.....ஆமாங்கய்யா......“ மக்கள் அதிகாரம்“ அய்யாவுக.... இந்த சாராயக்கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்தினப்போ....ஒரு பெரிய போலீசு பட்டாளத்தையே நிப்பாட்டி வச்சத பாத்து இருக்கேன்ய்யா...”

“ ஆகா...நீங்க....பாத்தது வசதியாப் போச்சுங்கய்யா....”

“............................................”

“வேற..ஒன்னுமில்லங்கய்யா.....நீங்க பாத்திங்களே  ....போலீசு பட்டாளம்  அந்த பட்டாளத்தோடு... இன்னும் கூடுதலாக நூறு போலீச சேத்து பத்தடிக்கு ஒருத்தர நிக்க வச்சு... அவர்கள் கையில் உருட்டு கட்டையும் துப்பாக்கியையும் கொடுத்து ரெண்டு புகைக்குண்டு லாரி வண்டிகளை நிப்பாட்டி   ஒரு.. ஈ... காக்கா கூட இந்த பக்கம்  ..வராம.. தப்பியும் .பறக்க விடாம.....இந்த மெயின் ரோட்ட பாதுகாப்பதான் அய்யா.... உச்ச கட்ட பாதுகாப்பன்னு சொல்றது....”


“ ..... அப்போ  ஈ..காக்கா.... வந்தா.....”????

“ வந்தா...என்ன...... குண்டடிபட்டு சாக வேண்டியதுதான்....”

“ஆ..............ஆ.....ஆ.... இதுதான் உச்ச கட்ட பாதுகாப்பு என்கிறதுங்களய்யா...”

ஆமாங்கய்யா...., இப்போ...உங்க   ..சந்தேகம் தெளிஞ்சுடுங்களாய்யா....”


“ நல்லா...தெளிஞ்சுடுங்கய்யா........”



..

திங்கள் 04 2016

டூமில்...சுட்டச் செலவு ஆறு கோடி....!!!

பெறுநர்; -            மத்திய உள்துறை அமைச்சகம்..

அனுப்பநர்;-    . துணை முதல்வர் ,பஞ்சாப்

பொருள்; -         டூமில்....சுட்டச் செலவு ஆறு கோடி கேட்டது சம்பந்மாக....


அய்யா,


கடந்த மாதம் 2ந்தேதி பஞ்சாப் மாநிலம்பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில், தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் டூமில் சம்பவத்தில் துணை இராணுவ்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜனவரி 2ந்தேதி முதல் 27ந் தேதி வரை பாதுகாப்பு மற்றும் கண்கானிப்பு பணியில் மத்திய துணை இராணுவப்படை ஈடுபட்டதற்க்கான செலவான ரூ6.35 கோடியை பஞ்சாப் அரசு  வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிற்க;-

துணை இராணுவப் படையானது. மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக அழைத்து வரப்படவில்லை. இந்தீய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடூறுவலை தடுப்பதற்க்காக  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி  உள்துறை கட்டுப்பாட்டில்தான் வருகிறது்.

எனவே, டூமில்.. சுட்ட பணம்  ரூ..ஆறு கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும். பஞ்சாப் அரசு வழங்கப் பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.

                                                                                                                                      ஒப்பம்
                                                                                                                             துணை முதல்வர்
                                                                                                                                            பஞ்சாப்.


ஞாயிறு 03 2016

சூப்பர் ஸ்டார்...என்ன கொக்கா....சூ..என்றவுடன் பறந்து போக...

மனித கடவுளின்...   மனி்த பக்தனிடம்.......

அரசர்களுக்கெல்லாம் அரசர்களான நீதியரசரிடம் இருந்து  மனிதக் கடவுளுக்கு ஒரு ஓலை வந்திருக்காமே.....?  என்ன விசயம் என்று மனிதக் கடவுளின் ரசிகரிடம் .. கேட்டபோது  ..

பக்தர் சொன்னது...

பெங்களுருச் சேர்ந்த பொதுநல வாதி ஒருவன். மனிதக் கடவுளின்  “வீர அவதாரங்கள்” திரைக்கு வரும் வேளைகளில் பக்தர்கள், ரசிகமாமனிகள் மனிதக் கடவுளின் கட்அவுட்டுக்கு..


கோமாதாவின் பாலைக் கொண்டு பாலாபிசேகம் செய்வதை கண்டு பொறாமையால் பொறுக்க மாட்டாமல்... மனிதக் கடவுளின் மீது பொது நல வழக்கு என்ற பெயரிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தான்

அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதியரசர் . மனிதக் கடவுள் பதில் அளிக்க ஓலை அனுப்பி உள்ளார்.

மனிதக் கடவுளான சூப்பர் ஸ்டார் என்ன கொக்கா...? சூ...என்றதும் பறந்து போக..  ஓலை அவர் கைக்க்கு கிடைத்ததும் படப்பிடிப்பின் இடைவேளையின் போது தக்க பதிலை கொடுப்பார்.

“கோயில் கற்சிலைகளில் மேல் பால் ஊற்றும்போதுமட்டும் அந்தக் கோமாதாவின் பால் வீணாகுவது தெரியவில்லையா  ? என்று மனிதக் கடவுள் பதில் சொல்வார்”என்று  நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது...

எதுக்கு.!. எங்க.?...எப்படி?பதில் தரனும்முன்னு மனிதக் கடவுளுக்கு தெரியும் என்றார்

மனிதக் கடவுளின் மனித பக்தரிடம் மேற்கொண்டு எதுவும் என்னால் பேச முடியவில்லை...


www.tamilcinetalk.com




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...