பக்கங்கள்

சனி 05 2016

போதைக்கு சமமானது சமூக வலைத் தளங்கள்...???


Image result for கரீனாகபூர்
படம்-www.tamilmurasu.org


போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் என்று சொல்கிறார்.. நடிகர் சாயிஃப் அலிகானின் மனைவியும் திருமணமாகியும் கதாநாயகியாக நடித்து முத்திரை பதித்துவரும் நடிகையான கரீனா கபூர்.

போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் குறிப்பாக டுவிட்டரில் உங்களை நூறு பேர் பின் தொடர ஆரம்பித்ததும்.... அது  ஆயிரமாக மாற வேண்டும் என்று நிணைப்பீர்கள். பிறகு பத்தாயிரம் இப்படியாக லட்சம் பத்து லட்சம் என்று உங்கள் ஆசை விரிந்து கொண்டே  செல்லும்

ஒரு கட்டத்தில் உங்களின் சுயம் அழிந்துவிடும்... பின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பீர்கள் என்று சொல்கிறார் கரீனாகபூர்.

அனுபவ பட்டவர்கள் ..சொல்லுங்கள்.. அந்த .நடிகை சொல்வது உண்மைதானா...??? என்று...

வெள்ளி 04 2016

காந்தீயின் ஆணாதிக்கத் திமிர்.....!!!!


படிக்க---சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

 வருகிற உலக மகளிர் தினத்தையொட்டி  காந்தியின் ஆணாதிக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலயப் பிரவேச மசோதாவை ஒட்டி அம்பேத்கர்- காந்தி இடையேயான ஒரு உரையாடல்  நடந்தது. அதில்

அம்பேத்கர் .காந்தியிடம் , நான் இந்த மசோதாவை ஆதரித்த பின், நான்கு வர்ணத்தையும் சாதியமைப்பையும் ஒழிக்கப் போராடினால் நீங்கள் எந்தப்பக்கம்  இருப்பீர்கள்? அப்படியே , நான் நான்கு வர்ணத்தை ஏற்றுக் கொள்வதனால் அதற்கு தங்கள் விளக்கம் என்னவாக இருக்கும்?? பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன். அதை தலைகீழாக மாற்றி சூத்திரனை முதலில் வைப்பீர்களா...??? என்று கேட்டார்

அதற்கு காந்தி- -நான் ஓர் இந்து என்பது அந்தக் குலத்தில் பிறந்த ஒரு காரணத்தால் மட்டுமல்ல, கொள்கையாலும் விருப்பத்தாலும் கூட நான் இந்துதான். தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பாகுபாடே நான் அறிந்த இந்து மதத்தில் இல்லை. ஆனால் வர்ணாசிரம தர்மத்தை நீங்கள் எதிர்க்க விரும்பினால் நான் உங்கள் பக்கம் இல்லை. காரணம் வர்ணாசிரமம் இந்து மதத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். ஒரு தர்மம். என்றார்


இப்படி ஏற்றத் தாழ்வையே அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தை விரும்பி கொள்கைப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட காந்தி, அனைவரும் சமம் என்று சொல்வது     காந்தீயின் அறியாமையா..? அயோக்கியத்தனமா...??

காந்தி ,   தன் வீட்டில் தங்கிய தாழ்த்தப்பட்டவரின்“ கழிவுச் சட்டியை சுத்தம் செய்ய மறுத்த“ தனது மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்கிறார். காந்தீயின் பக்தரும்  தமிழ் இந்துவின் உதவி ஆசிரியருமான சமஸ்.

காந்தி விரும்பிய வருணாசிரமமானது  சாதிக்கொரு வேலையை- நீதியை போதிக்கம்போது... காந்தி தனது மனைவிடம் இதைத்தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்..?

சாதி இழிவுக்கு அடிப்படை  காரணமான வர்ணாசிரமத்தை ஒழிக்காமல், தன்னுடைய மனைவிடம் “கறாராக நடந்து கொண்டது . காந்தியின் ஆணாதிக்கத் திமிரே அன்றி வெறேதுவுமில்லை..


வியாழன் 03 2016

தமிழ் சமூகத்தை சீரழித்த புன்னியவதியை போற்றிப் பாடாத பாடல்.


“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்!   

ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவியும்  தமிழ் சமூகத்தை தமிழகத்தையே  குடியால் கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், 




புதன் 02 2016

ஒரு தற்கொலை கடிதத்தின் லட்சியமும் வேண்டுகோளும்....

படிக்க----ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !



ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து  ........

ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது  எனது லட்சியம்  . ஆனால். என்னால் எழுத முடிந்தது என்னவோ, இந்த தற்கொலை கடித்த்தை மட்டுமே.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.., ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்ககளை திரும்பி பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும் சுமுகமாகவும் நடை பெறட்டும். நான் தோன்றினேன் மறைந்தேன் அவ்வளவே... அதை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிழவுலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.


செவ்வாய் 01 2016

அப்துல்கலாமின் கனவை .நனவாக்கும் கலாமின் உதவியாளர்

ponraj
படம்-சமூகத்தின் பட்டகம்


அப்துல்கலாமின் கனவு தமிழகத்தை உருவாக்க அரசியலில் இறங்கியிருப்பதாக அப்துல் கலாமின் உதவியாளர்  பொன்ராஜ் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்


இவரது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்


நீதிக்கு இது போராட்டம்


இதை நிச்சயம் உலகம் பாராட்டும் .


இதோ. 


அப்தூல்கலாம் “ இந்தீய நாட்டை வல்லரசாக்குவதையும். சந்திரனுக்கு மனிதனை அனுப்பவதைப் பற்றியும் பேசுகிறார்”



படம்- வினவு


வாழ்க தமிழகம்!. 

வளர்க தமிழ் இனம்.!! 

வாழ்க டாக்டர் அப்துல் கலாம் புகழ்!!!! 

வெல்க பொன்ராஜ்!!!!



அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்




திங்கள் 29 2016

இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே..


Puthiya kalacharam feb 16
படம்--வினவு
தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத நாளோ மாதமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச் செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் முடிவில்லை.
மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சியோடு கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.
23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பதால் ஆந்திராவின் சுண்டூர் கிராம மக்கள், “எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால் எங்களது இளைஞர்கள் அவர்களே வெட்டிக் கொண்டு, உடல்களை சாக்குப் பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் தாமாகவே வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர்.
பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது.
பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்கு முறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
Puka Feb  16 Wrap Back
வினவு
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி 
044-2371 8706,
99411 75876, 97100 82506
மின்னஞ்சல் 
vinavu@gmail.com

ஞாயிறு 28 2016

சாதிசாயம் பூசப்படும் விடுதலை போராட்ட வீரர்கள்.

விடுதலை போராட்ட வீரர்களை சாதித் தலைவர்களாக மாற்றும்  சாதி வெறியர்களின் கொடூரம்..




தேர்தல் வருது  முன்னே
சாதி  வருது  பின்னே
தெளியாவிட்டால்...........மண்ணே-

கவுண்டர்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர்.தீரன்சின்னமலை


படம்-தீரன் சின்னமலை, ...

சேர்வை என்று சொல்லப்படும் அகமுடையார் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர்கள்..மருது சகோதரர்கள்

படம்-மருது சகோதரர்கள்

படம்-விருப்பாச்சி கோபால்


நாயக்கர் சாதித்தலைவராக ஆக்கப்பட்டவர் விருப்பாச்சி கோபால்





படம்- வீரபாண்டியகட்டபொம்மன்
இவரும் நாயக்கர் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர். வீரபாண்டிய கட்ட பொம்மன்

படம்-வீரன் அழகுமுத்துக்கோன்.
 கோனார் என்று அழைக்கப்படும் யாதவ சாதியதலைவராக ஆக்கப்பட்டவர் அழுகு முத்து கோன்

படம்- புலித்தேவன்

பிரமலைக் கள்ளர்சாதியத் தலைவராக ஆக்கப்பட்டவர். புலித்தேவன்




படம்-வ.உ.சிதம்பரம்

அனைத்து பிள்ளைமார்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர் வ.உ. சிதம்பரம்.


கடிகாரமுள் நேரத்தை காட்டுகிறது
காலண்டர் தேதியை காட்டுகிறது
தேர்தல் சாதியை காட்டுகிறது.-கண்ணதாசன்

நன்றி!  புதிய தொழிலாளி

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...