பக்கங்கள்

சனி 28 2013

அட்ரா சக்கே...பலே... என்பது இதுதானுங்கோ....



திருவிளையாட்டு புரட்டுவிலே கணேசனும்.முருகனும், ஞானப்பழத்திற்கு போட்டியிடுவானுங்கள்ல அந்தக கதை மாதிரி இருக்குதுங்க இவுங்க கூத்து.

முருகன் பாத்திரத்தில்  மோடி,ஞானப்பழம் என்ற பிரதமர் நாற்காலிக்கு, முருகன் ஒலகத்தை சுத்தி வருகிறமாதிரி .மோடி ,இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமா சென்று.அந்தந்த மாநில மொழியில் “வணக்கம்,வந்தனம்,நமஸ்ககா”  ன்னு பேசி இந்தியாவை சுத்தி வர்றாருங்கோ...........

கணேசன் பாத்திரமான ராகுல் இருந்த இடத்திலே,“  கிரிமினல் எம்பி .எம்எல்ஏ ”க்களை பாதுகாக்க கொண்டுவரப்படும் “மசோதாவை கிழித்து குப்பையில் போடுங்கள்” என்று முற்போக்கா பேசி, ஞானப்பழத்த பெருவதற்கு  பேசி வர்றாருங்கோ...............

நாரதரான உச்சி நீதிமனறமோ,“கிரிமினல் பாதுகாப்பு சட்டத்தை நிறை வேற்றும் மத்திய அரசுக்கு எதிராக, ஓட்டு போடும் பெட்டியில்,“வாக்காளரை நிராகரிக்கும் பொத்தானை வை” என்று தேர்தல் ஆணையத்து க்கு அதிரடி உத்தரவு போடுதுங்கோ............

அட்ரா சக்கை.அட்ராசக்கை. பலே.,.பலே என்பது இதுதானுங்கே,..........

இளைஞர்களே!!!! இவர்கள் நாற்காலிகளில் உட்காருவதற்க்காக கொதித்து எழுங்களப்பா..............


செவ்வாய் 24 2013

போலீசை பற்றி தெரியாத அப்பாவி தந்தை........!!

கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !

கடந்த 6ந்தேதி திருப்பூரில் போலீசுக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சினையில் .போலீசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 23 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களில் பலர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் ரஞ்சித்குமார் என்ற மாணவரின் தந்தை சுப்பிரமணியன் தன் மகனை ஜாமினில் எடுக்க மறுத்துவிட்டார்.

அதற்கு சுப்பிரமணியன் கூறும் காரணம், “என் மகன் சட்டம் படித்துக் கொண்டு சட்டத்தை மதிக்கவில்லை. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தந்தையின் கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரியாது.எனவே,

சட்டம் படித்தவர்களே! போலீசை மதிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.அதனால் என் மகன் செய்த தவறுக்கு  தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்றார்.

 சுப்பிரமணியன் சொல்லும் போலீசுக்கு, சட்டத்தை மதிக்கச் சொல்லி உயர்நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் பலமுறை புலம்பி உத்தரவிடுவதும்,

அந்த உத்தரவை, சுப்பிரமணியன் மதிக்கும் போலீசு மலம் துடைக்கும்  பேப்பர் அளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பது அப்பாவியான தந்தை சுப்பிர மணி யனுக்கு  தெரியவில்லை போலும்..

போலீசை மதிக்கச் சொல்லும் அவருக்கு அந்தப்  போலீசு, சாதிவெறி போலீசாகவும், மாமூல் போலீசாகவும், பொய்வழக்கு போடும் போலீசாகவும், கிரிமினல் போலீசாகவும்,என்கவுண்டர் போலீசாகவும்,லாக்அப் கொலை செய்யும் போலீசாகவும் அது தோன்றிய காலந்தொட்டு இருப்பதை   சட்டம் பயிலும் ரஞ்சித்குமார்தான் தன் அனுபவத்தை  அவரின் அப்பாவியான தந்தைக்கு எடுத்துச் சொல்லவேண்டும்



திங்கள் 23 2013

பறைச்சேரி............புதுச்சேரியாகுமா..........???????..




ஆங்கிலேயனை வசைபாடிய
சுப்பையா ஆங்கில படைக்கு
அஞ்சி பறைச்சேரியில் புகாமல்
புதுச்சேரியில் பதுங்கினார்.


பறைச்சேரியைவிட
புதுச்சேரி சாலை
அய்யருக்கு  அழகாக
இருந்திருக்கிறது......

அய்யரும் வீரமாய் நடை
பயின்றிருப்பார்.அதற்கு
அடையாளமாகத்தான்.
அய்யர் பறைச்சேரியை
பாடாமல் புதுச்சேரியை
குயில் பாட்டில்.........
 பாடியிருக்கிறார்...

பறைச்சேரியில்
ஒரு மண்டபம்
இல்லாததை பாடியிருப்பாரா..........???

புதுச்சேரியில்.........
நாட்டிய மங்கையின்
நினைவாக ஆயி மண்டபம்
இருக்கிறது...........!!!!!!!

பறைச்சேரியில்தான் ஒரு
ஆசிரம் நிறுவியிருப்பார்களா!!!

வங்கப்புலி அரவிந்தர் நிறுவிய
ஆ..சிரமம்  ஒன்று புதுச்சேரியில்
பேறு பெற்று இருக்கிறது.?????


பறைச்சேரியில் ஒரு நிணைவு
தூண்தான் உண்டா???????

புதுச்சேரியில் பீச்ரோடில்
ஒரு நிணைவுச் சின்னம்
உண்டு

மனதில் உறுதி வேண்டும்
மென்று பாடிய பார்ரதியே


எத்துனைதான் ஏணி
வச்சாலும் பறைச்சேரி
புதுச்சேரி ஆகுமா??ஃஅட,
ஆகத்தான் விடுவார்களா???

ஞாயிறு 22 2013

பார்ப்பனர்கள் விரும்பும் பார்ப்பனரல்லாத கதாநாயகர்கள்...

அன்று

பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்திய யாதவர் குளத்தில உதித்த கண்னன் என்ற கிருஷ்ணனும்,


பார்ப்பனர்களின் நலனுக்காகவே பாடுபட்ட சத்ரியனாக அவதரித்த ராமனும்.





இன்று.

 டீக்கடை நடத்திய தாமோதா முல்சந்த்தின் மகனான மோடியும்,

மோடி கலவரம்


சிந்திக் குடும்பத்தில் பிறந்த  அத்வானியும்தான். பார்ப்பனர்கள் விரும்பும் பார்ப்பனரல்லாத கதாநாயகர்கள்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...