பக்கங்கள்

சனி 07 2012

நடிகனையே மிஞ்சிய மகாத்துமா.............




தமிழகத்தில் சுற்று பயணம் மேற்க்கொண்ட காந்தி.மதுரையிலுள்ள
சேட்டு பங்களாவில் தங்கியிருந்த போது .பங்களாவின் மாடியில்
உலாவிக் கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வீதியின் வழியாக
எந்தவித சுமையும் இல்லாமல் இடுப்பில் சிறு துணியை மட்டும்
கட்டிக்கொண்டு சிலர் செல்வதைப் பார்த்தாராம்.தாம் மட்டும் உடை
என்கிற போர்வையில் இப்படி சுமக்க வேண்டியது இருக்கிறதே
என்று வருத்தப்பட்டாராம்.

உடனே,ஒரு யோசனையுடன் பத்து முழவேஷ்டி,மேல்அங்கி,உள்
சட்டை.குல்லா ஆகிய எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு,நாலு
முழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டாராம்

தலையில் உள்ள உச்சி குடுமி சுமையாக இல்லாததால் அதை மாற்றா
வில்லையாம். இந்த மாற்றத்துக்கு உண்மை காரணத்தை மறைத்து
தமிழ்நாட்டு உழவர்கள் சிறு துணியை மட்டும் கட்டிக்கொண்டு உழவு
பணி செய்ததைக் கண்டு  வருத்தப்பட்டு அவர்களின் கவலையைப்
போக்க தானும் சிறு துணியை மட்டுமே அணிவேன் என்று சபதம்
எடுத்து தலையில் உச்சிகுடுமி.இடுப்பில் துண்டு வேஷ்டி என்று
ஒரு ஆண்டியாகவே காட்சி அளித்ததை,தன் பரிவாரங்கள் மூலம் 
தேர்ந்தெடுத்த ஒரு புதிய கதையை பரப்பி விடச்செயதாராம்.


அடேங்கப்பா,  அந்தக் காலத்திலயே,இன்றைய சினிமா
 நடிகனையே. மிஞ்சி விட்டாருப்பா,மகாஅத்துமா காந்தி...

வெள்ளி 06 2012

தனியார் மயத்தை ஒழித்தவர் மாவீரர் திப்புசுல்தான்


கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட போது மைசூரை
ஆட்சி புரிந்த திப்பு  வர்த்தகத்தில் பிரிட்டிசாரின் ஏகபோகத்தை
வளராது தடுக்கவும்.மக்களின் நலனுக்காவும் பல திட்டங்களை
தீட்டினார் அத்திட்டங்களில் ஒன்று, தனியார் மயத்தை ஒழிப்பது

மிளகு,சீரகம்.ஏலம் போன்றவற்றை நேரிடையாக உற்பத்தி
யாளர்களிடமிருந்து பரங்கிய வெள்ளை முதலாளிகள் வாங்குவதை
தடுத்து.அரசே, அவற்றை வாங்கி அரோபியாவிற்கு விற்பனை
செய்து. அரேபியாவிடமிருந்து வெள்ளை பிரிட்டீஸ் தொழிலதிபர்களை
வாங்கச் செய்தார்.

இதனால்.அரசே,பெரும் வர்த்தகராக்கி,தனியார் சுரன்டலையும்
 தரகு ஏஜென்டகளின் இடைத்தரகு தனத்தை ஒழித்தார்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றிய முதல்
மன்னன் என்ற பெருமை பெற்றார்.இலவசங்களை வெறுத்தவர்.
தன் மகன் இலவசமாக காய்கறிகளை வாங்கியதற்க்காக தன்
மகனையே தண்டித்த நேர்மையாளர் திப்பு.

நிலவுகின்ற தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் இன்றைய
கைக்கூலி ஆட்சியாளர்களின் முன்னோர்கள் கொண்டுவந்தபோது
தனியார்மயத்தை அன்றே ஒழித்தவர் பெருமைமிக்க  மாவீரர்
திப்புசுல்தான்தான்.

செவ்வாய் 03 2012

சிரிக்கவும்,சிந்திக்கவும் தெரிந்தவர்கள் மனிதர்கள் ! !! !!!


உலகத்தில் இருக்கிற உயிரினங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும்
தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் என்ற உயிரினம் மட்டும்தான்
இந்த சிரிக்க தெரிந்த மனித உயிரினத்தில் மூன்று வகை உண்டு

ஒன்னு. புரிந்து கொண்டு சிரிப்பது. இரண்டு-சிரிப்பதைப் பாரத்து
சிரிப்பது.மூன்று-ஒப்புக்கு சிரிப்பது.மற்றதுகளான ஆணவச்சிரிப்பு
கொக்கரித்து சிரிப்பு,இம்சை செயய்து சிரிப்பு வேறுவகைப்பட்டது.

இந்த மூன்று வகைச் சிரிப்புகளில் புரிந்து அல்லது செய்கைகளை
கண்டு மனம்விட்டு சிரிக்கும் உயிரினத்துக்குத்தான் சிந்திக்கும்
திறன் அதிகரிக்கும்.

மனித மூளையானது.அதுவும் வலப்பக்கமானது மனம்விட்டு
சிரிப்பதினால் நன்றாக செயல்படுகிறது.“வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகும்” என்ற பழமொழியேமனம்விட்டு சிரிப்பதி
னால் ஏற்ப்பட்டது.

இந்த சிரிப்பினால்.இரத்தத்திலே அதிகப்படியான ஆகஸிஜன்
ஏற்ப்படுகிறது.இதய தசைகள் வரிவடைகிறது. இரத்த அழத்தம்
சீராகி நுரையீரல்கள் நன்றாக இயங்கும். இரத்த ஒட்டம் அதிக
மடைந்து டென்சனும் குறைகிறது. ஒரு உடற்பயிற்சி செய்து
கிடைக்கும் பலனைவிட மனம்விட்டு சிரிப்பதினால் கிடைக்கிறது

ஒருவர்.நீண்ட நாட்களாக வயிற்றுப்புண்களால் அவதிப்பட்டு
 இருந்தவரென்றால் மனம்விட்டு சிரிக்காததினாலும் மன
இறுக்கத்தால் இருப்பதும் ஒரு காரணமாகும்.. இந்த மனம் விட்டு
சிரித்தால் வயிற்றுப்புண் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

மன இறுக்கத்தாலும்.கவலையாலும்,ஓய்வு இல்லா உழைப்பாலும்
உழைப்பே இல்லையென்றாலும் வரும் நோய்நொடிகளை தீர்க்க
மருத்துவ கொள்ளைக்காரர்களிடம் மாட்டுவதை தவிர்க்க
மனம்விட்டு சிரிப்பதே சிறந்த முறையாகும்.

சார்லி சாபளினைப் பாருங்கள். அவரைப் பார்த்தாலே சிரிப்பு
வரும் சிரிப்பினாலே சிந்தனையை ஊட்டியவர். கைம்மாறு
கருதாமல் சிரிக்க வைத்தே நோய்நொடிகளை விரட்டியடித்தவர்
 கலைவாணர் என்.எஸ.கே, ஒவ்வொருத்தருடைய சிரிப்பையும்
பலவிதமாக சொன்னவர்.

ஆகவே, நண்பர்களே! தோழர்களே! மனஇறுக்கத்தை தொலைத்து
இம்மை அரசன்-அரசிகளால் வரும் கவலைகளால் வரும் நோய்
நொடிகளை போக்கிட, எதிர்வரும துன்ப துயரங்களை எதிர்க்க
சிந்தனைத்திறனை வளர்த்துக் கொள்ள ...மனம்விட்டு சிரிக்கும்
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வோம். டென்சனை
தவிர்ப்போம்.

ஞாயிறு 01 2012

ஆண்டாள்,மீனாட்சி,,ரங்கநாயகி வீடுகளில் சோதனை.....................

விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரை சேர்ந்த
 ஆண்டாள்என்ற பெண்மணி வழக்கமாக தன்னை
 தேடிவரும் பக்தகேடிகளு க்கு வேண்டும் வரங்களை 
அருள்பாவிக்கும்வேலைகளை முடித்தவிட்டு இரவு 
ஒன்பது மணிக்கெல்லாம் கதவை தாழ்போட்டுவிட்டு 
தூங்க சென்றாள்.

இந்த ஆண்டாள் நன்றாக குறட்டை விட்டு  தூங்கிக்கொண்டு 
இருந்த நேரத்தில்...கதவை திறக்கும் பெரும்ஓசையில் தூக்கம்
 கலைந்து விழித்து “யாரது இன்னநேரத்துல” எனன கேட்டபோது,
ஆண்டாளின் மொய்காப்பாளர் தக்காரும், எஜமான,எஜமானி 
மற்றும் அவுகஅல்லக்கைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் 
காவலர்களும் மெட்டல் டிடெகடர் கருவியுடன். 
ஆண்டாளின்பெட்ரூம்,ஆண்டாளின் பாத்ரூம் போன்ற
 இடங்களிலும்அடுத்த அறையில் தங்கியிருந்த பெத்த 
பெருமாள்,சக்கரத்தாழ்வர்களின் அறைகளிலும் தீவிர 
சோதனை செயதார்கள்.

தூங்குதா,முழிச்சிருக்கா என்று தெரியாத ஆண்டாளிம்
ஓன்னுமில்லேங்கம்மா, உங்க வீட்டுக்கு வெடிகுண்டு
வச்சுயிருக்கிறதாக? சென்னையிலுள்ள காவல் தலைமை
அலுவலகத்துக்கு ஈஈஈஈ-மெயில் வந்துச்சும்மா, அதான்
உங்க பாதுகாப்புக்காக சோதனை செய்தோம்மா, வெடிகுண்டு
இல்லேம்மா, நீங்க தூங்குங்கம்மா என்றனர்.

இதேப்போல,மதுரைமாவட்டத்திலுள்ள மீனாட்சிஅம்மா
வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு
எதுவும் சிக்காததாலும் ஏற்பாடு செய்ய முடியாததாலும்
மீனாட்சிஅம்மாவின் வீட்டுக்கு வருகிறவர்களின் பைகளில்
ஏதாவது கிடைக்கமா? என்று சோதனை செய்தனர்.


தொடர்ந்தார்போல் தமிழகத்து தலைநகராமாம் சென்னை
போயசு தோட்டத்திலும் கொலு விற்றியிருக்கும் ரங்கநாயகி
யின் பங்களாவிலும், கக்கூஸ்,பாத்ரூம்,பெட்ரூம்,என அனை
த்து இடங்களிலும் துருவித் துருவி சோதனை இட்டனர்


ஒரே நேரத்தில் இந்த மூவருக்கும் வெடிகுண்டு மிரட்டல்
வந்ததால் நள்ளிரவிலிருந்து சோதனை மேற்ககொண்டதாக
இண்டர்டர்போல் ரேஞ்சு தமிழக போலீசார் தெரிவித்தனர்.

ஆண்டாளும்,மீனாட்சியும் எதுக்கு வம்புன்னு பதினெட்டு
முழம் சேலையால் உடல் அங்கங்கள் வெளிய தெரியாமல்
இருக்க உடல்முழுக்க போர்ததி ,மூச்சு விடாமல் எதையும்
கண்டு கொள்ளாமல்நேராக வெறித்த வண்ணம் இருந்தனர்.

.  

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...