பக்கங்கள்

சனி 06 2021

கிளியோபட்ராக்களின் சாவு சர்ச்சைகள் ......

 





கி.மு-ல் வாழந்த

கிளியோபட்ரா-சாவில்

 சர்ச்சை- அவள்

எப்படி இறந்தாள்.............என்று


கி.பி-ல் வாழ்ந்த

கிளியோபட்ரா-  சாவிலும்

சர்ச்சை - இவள்

எப்படி இறந்தாள்..............என்று


கி்.மு.வில் அந்த

கிளியோபட்ராவின் நினைவு

கல்லறை அழிந்தது..

அதேபோல் கி.பி.வில்

இந்த கிளயோபட்ராவின்

நினைவு கல்லறையும்

கடல் சீற்றத்தால்

அழியும் அதற்கு பிறவு

இருக்கும் தொல்லு

பொருளு ஆய்வார்கள்..

கல்லையும் மண்ணையும்

 தோண்டி பின் சொல்வார்கள்

அந்த ஆடம்பர அழகிகள்

எப்படி இறந்தாள்கள்.......என்று


அதுவரை................


கிளியோபட்ராக்களின் சாவு

சர்ச்சைகள் தொடரும்....

 

வியாழன் 04 2021

படித்த..படிக்காத மூடர் கூட்டமே...!!!

 







படித்த படிக்காத மூடர் கூட்டமே!!

 வருகிற தேர்தல்ல  நீங்கள்

செய்யப்போற  சம்பவம்தான்..

தமிழ்நாடு  தமிழ்நாடா இருக்கனுமா.....

இல்ல உத்தர பிரதேசம்மா மாறனுமா.ன்னு.

தெரியப்போகுது ......நாங்க

அதுக்கு மேல.... ன்னா இதுதான்

சண்டையிட்டு சாகப்போறீங்களா....???

மண்டியிட்டு வாழப்போறீங்களா...???

உங்க சாயம் வெளுக்க போகுதடி.....


.

செவ்வாய் 02 2021

எல்லாம் உங்களால்தான்....வந்தது...

 




 அன்று..

மசூதி இடித்தவனுக்கே

சொந்தம் என்று

தீர்ப்பு எழுதியபோது

 வாயடைத்து போய்

 நீங்கள் நின்றதால்தான்...


இடையில் 

சாத்தன்குளம் இரட்டை

 படுகொலையையும்

நிணைத்து பாருங்கள்



இன்று


வன் புணர்ந்தவனையே

திருமணம் செய்யலாமே

என்று கேட்குமளவுக்கு

திமிரு வந்திருக்கிறது..

நன்றி! குறள் நெறி

 

மஹாராஷ்ட்ராவில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, தூரத்து உறவினன் மோஹித் சுபாஷ் பின்தொடர்ந்திருக்கிறான். வீட்டில் யாருமில்லாமல், அந்த சிறுமி மட்டும் தனியாக இருக்கும் பொழுதில், பின்வாசல் வழியாக வந்து சிறுமியின் வாயை பொத்தி, கைகால்களை கட்டி, பாலியல் வன்புணர்வினை செய்திருக்கிறான். இதை வெளியில் சொன்னால், சிறுமியின் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவேன்; சிறுமியின் வீட்டிலிருப்பவர்களை துன்புறுத்துவேன் எனவும் மிரட்டியுள்ளான். இதை காரணம் காட்டியே கருத்தடையை பயன்படுத்தி, பல தடவை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். 


மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சிறுமியை காப்பாற்றிய அவளுடைய தாய், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்தின் அம்மா சொன்ன வார்த்தைகளை நம்பி, பத்திரத்தில் உடன்படிக்கை செய்துள்ளார். ஆனால், எழுத படிக்க தெரியாத அந்த தாய், அப்பா இல்லாத சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டதால், இந்த சமூகம் குற்றவாளியாக்கும் என கருதி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்திற்கு தனது மகளை திருமணம் செய்து வைக்கும் உடன்படிக்கை என நம்பி ஒப்புக்கொண்ட பத்திரத்தில் இருந்ததோ வேறு. அதாவது, சிறுமியும், குற்றம் சாட்டப்பட்ட மோஹித்தும் சம்மதத்துடன் பழகி, பாலியல் உறவில் ஈடுபட்டதாக அப்பத்திரத்தில் இருந்திருக்கிறது. 


இதற்கிடையில், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித்திற்கு திருமணம் நிகழ்ந்துவிடவே, பாதிக்கப்பட்ட சிறுமியால் மோஹித் மீது பாலியல் வல்லுறவிற்காக FIR பதியப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மொஹித் முன்ஜாமின் பெற்றுவிட, அந்த ஜாமினை நிராகரிக்கச் சொல்லி சிறுமியால் தொடரப்பட்ட வழக்கில், மோஹித்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் நிராகரிக்கப்பட்டு, அவரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக மும்பை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. 


உயர்நீதிமன்ற உத்திரவை எதிர்த்து, ஜாமீன் வேண்டி உச்சநீதிமன்றம் சென்றார் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித். ஜாமீன் வழங்கலாமா வேண்டமா எனத் தீர்மானிப்பதற்கு பதில், அங்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 18 வயது கூட நிரம்பப் பெறாத சிறுமிக்கு, பாலியல் குற்றவாளியை திருமணம் செய்துகொள்ள தயாரா எனக் கேட்டுள்ளார். சிறுமியின் வழக்கறிஞர், இதை சிறுமியிடம் கேட்டு சொல்வதாக சொல்லிய பின்னரும், நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை; தெரிந்துகொள்ளவே விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் தலைமை நீதிபதி S.B.போப்டே. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், முறைப்படி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு பெற்றுக்கொள்ளவும், அதுவரை  4 வாரங்களுக்கு கைது செய்ய வேண்டாமென  இடைக்கால தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். 


அரசு வேலையில் இருக்கும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் மீது உச்சநீதிமன்றத்திற்கு இருக்கும் பரிவு, சாதாரண சிறுமியிடம் இல்லை. எழுதப் படிக்க தெரியாத, வாழ்க்கைத் துணைவரில்லாத, ஒரு பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தனது மகளுக்கு, சமூகத்தின் வசைகள் இருக்க கூடாதென, பாலியல் வன்புணர்வு செய்தவனுடனே திருமணம் செய்து வைக்க எண்ணுவது அறியாமை. அதையே உச்சநீதிமன்றமும் விரும்புவது என்ன வகையில் வரும்?  சொம்பும் ஆலமரமும் மட்டும் தான் உச்சநீதிமன்றத்திடம் இல்லை; மற்றபடி  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் உச்சநீதிமன்றம் தான் முதலிடத்தில் இருக்கிறது.


#resignBobde

#CrimeAgainstWoman


- நிலவுமொழி செந்தாமரை


ஞாயிறு 28 2021

அதிகாரமும் செல்வாக்கும் ........

 பாலியல் தொல்லை கொடுத்தது ஒரு காவல்துறை உயரதிகாரி.

தொல்லைக்கு ஆளானவரும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிதான்.
புகார் சொல்ல வந்த அந்த அதிகாரியை அராஜகமாக வழிமறித்து தடுக்க முயன்றவர் இன்னொரு காவல்துறை அதிகாரி.
அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழகம்.
இதைத்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றும் வண்டி பஞ்சர் ஆனா ஜாக்கிரதையா போலீஸே வீட்டுக்கு கொண்டாந்து விடும் மாநிலம் என்றும் விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓரளவு அறிவும் சொரணையும் உள்ள சாதாரண பெண்கள்கூட வீட்டுக்காரன் ஊர்மேய்ந்தால் விளக்குமாற்றால் அடிப்பார்கள்...
பெரிய இடங்களில் இதனை எப்படி கையாளுவார்கள் என்று தெரியவில்லை.




பீலாம்மா வீட்டுக்காரர் விவகாரத்தில் எனக்கு அதிர்ச்சி அளிப்பது வேறொரு விஷயம்..
வேலை நிமிர்த்தம் வந்த பெண் உயரதிகாரியை காருக்குள் அழைத்து அத்துமீறியிருக்கிறார் ராஜேஷ்தாஸ். காமக்கொடூரன்கள்கூட ஆளை தேர்வு செய்யும்போது அதில் ஒரு திட்டமும் முன்தயாரிப்பும் இருக்கும். அவர்கள் ரிஸ்க்கை கணக்கிட்டே அந்த வேலையை செய்வார்கள்.
ஆனால் இந்த ஆளோ அய்யர் வீடுகளில் நினைத்த நேரமெல்லாம் காபி குடிப்பதைப்போல கேஷுவலாக பாலியல் வன்முறை செய்ய முயன்றிருக்கிறார். இது வெறும் அதிகார மற்றும் பணத்திமிரின் விளைவு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பாலியல் வன்முறையை பல முறை செய்து மாட்டாமல் தப்பியவனால் மட்டுமே இத்தனை இலகுவாக (ஆள் யாரென்று தெரியாமலே) அத்துமீற முடியும்.
அப்படியானால் பாதிப்பு பட்டியல் எத்தனை நீளமாக இருக்கும்??

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பற்றி பல செய்திகள் நானும் ஒரு செய்தி சொல்கிறேன். இவர்கள் குடும்பம் செல்வாக்கான காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் குடும்பம்.இவர்களது பண்ணை வீட்டில் உள்ள ஒரு முருங்கை மரத்தில் அந்த பகுதியில் உள்ள சில ஏழை சிறுவர்கள் முருங்கைக்காய் திருடி விடுகிறார்கள். அவர்களை பிடிக்க 7 உயரதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைத்து முருங்கைக்காய் திருடர்களை உள்ளே தள்ளிய பெருமை இவருக்கு உண்டு. எடப்பாடி பழனிசாமியின் செல்லபிள்ளை இவர்.. அப்போ சின்னப்பசங்களை அதுவும் முருங்கைக்காய் திருடினதுக்கு இப்படி கைது பண்றிங்களே என அந்த ஏழைகள் கேட்டார்கள் அதற்கு ராணி வெங்கடேசன் சொன்ன பதில் “தங்கம் திருடினாலும் முருங்கைக்காய் திருடினாலும் ஒன்றுதான்” என்பதுதான். எப்பேற்பட்ட கோடீஸ்வர குடும்பம் பாருங்க...
பணமிருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை..குணமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை!





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...