பக்கங்கள்

சனி 05 2014

போலீசின் காதை கடித்து தப்பி ஓடிய மூன்று வீர சோழன்கள்.

படம்www.monstershoot.com














திருச்சுழி அருகே வீர சோழன் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருபவர்  ஏட்டு கண்ணன்.

வீரசோழன்- அபிராமம் சாலை பகுதியில் திருட்டு தனமாக மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. இதன் பேரில் ஏட்டு கண்ணன் தனது டூவீலரில்

வீர சோழன் கிழக்கு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை கடக்க முயன்றார்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் அரசாங்க டாஸ்மாக் போதையுடன் சாலையில் செல்லும் டாஸ்மாக் போதையில்லாத நபர்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதைப் பார்த்த ஏட்டு கண்ணன் அந்த டாஸ்மாக் வீரர்களை தட்டிக் கேட்டார். டாஸ்மாக் போதையில் இருந்தவர்களை உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். ( உங்கள் வீட்டிற்கு போய் வீரத்தை காட்டுங்கள் என்று சொன்னதாக  வீரர்கள் தப்பாக புரிந்து கொண்டார்களோ என்னவோ)

உடனே டாஸ்மாக் போதை விரர்களுக்கு கோபம் வந்துவிட்டது.  இதனால்  ஏட்டுவுக்கும் அவர்களுக்கும் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த மூன்று பேரும், ஏட்டு கண்ணனை சரமரியாக தாக்கினார்கள்.

 மேலும் தங்கள் டாஸ்மாக் வீரத்தை காட்ட எண்ணிய வீரர்கள். ஏட்டு கண்ணனின் காதை கடித்துவிட்டு, அருகில் நின்றிருந்த ஆட்டோவில்
ஏறி தப்பி ஓடி விட்டனர்.

 காயமடைந்த ஏட்டு கண்ணன் கொடுத்த புகாரில், “ஏட்டுவின் காதை கடித்து தப்பியோடிய மூன்று டாஸ்மாக வீர சோழன்களை” வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெள்ளி 04 2014

கொடுமை கொடுமைன்னு கோயி லுக்கு போனா.....

படம்musivagurunathan.blogspot.com















தனியார் மயம்.தாராளமயம்,உலகமயத்தின் புண்ணியத்தால் வேல வெட்டி இல்லாத பக்தர்களும் அந்த மயங்களால் திடீர் பணக்காரான பக்தர்களும் சுற்றுலா பக்தர்களும் இப்படியான பல பக்தர்களும் மற்ற நாட்களைவிட சனி,ஞாயிறு கிழமைகளில் கூட்டம்கூட்டமாக கோயில்களில் அலை
மோதுகின்றனர்.

அப்படி கூட்டம்கூட்டமாக மோதும்  கோயில்களில் ,மதுரை அழகர் கோயில்  ஒன்று.

அந்தக் கோயிலில் பக்தர்களின் நிகழ்ச்சிகளில் ஒன்று கிடாவெட்டி விருந்து வைக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பகதர்களும் முதிய பக்தர்களும்   தனித்தனியாக,தங்களின் சகாக்களுடன் சேர்ந்து.திறந்த வெளியை பார் ஆக்கி, அரசின் டாஸ்மாக்கை ஒரு பிடி பிடித்துவிட்டு அதாவது ஊத்திகிட்டு. போதையுடன் சென்று அழகர் கோயில் கள்ளழகரை தரிசிக்கின்றனர்.

இவர்கள் டாஸ்மாக் குடித்த பக்தி போதையுடன்  கள்ளழகரை தரிசனம் செய்வதோடு .டாஸ்மாக் போதை இல்லாத பெண் பக்தர்களையும் தரிசனம் செய்கிறார்கள்.

 இத்தோடு,டாஸ்மாக் பக்தர்கள் தங்களின் தரிசனத்தை நிறுத்திக் கொள்ளாமல்,ரோட்டு பகுதிக்கு வந்து  .ஒவ்வொருக்குள் தங்கள் பக்த மொழியில் பேசி, அடிதடியிலும் இறங்கி தங்கள் பக்தியை அனைவரும் காண வழி செய்கின்றனர்.

இதனால் டாஸ்மாக் போதை பக்தியில்லாத ஆண்,பெண் பக்தர்கள் எதற்க்கு வீண்வம்பு என்று பய பக்தியுடன் ஒதுங்கி சென்று விடுகின்றனர்.

அழகரின் போதை பக்தரிகளின் பக்தியைக் கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் காவலன் என்று பீத்தி திரிகிற காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தால்

இது எங்கள் காவல்நிலைய எல்லைக்கு வராது என்று விரட்டிஅடிக்கின்றனர்..அடுத்த காவல் நிலையத்துக்கு சென்றால்,அவர்களும் இது எங்கள் எல்லைக்குள் வராது என்று திருப்பிவிட்டு போதை பக்தர்களை பக்தி பரவசத்தோடு காவல் காக்கின்றனர்.

இந்த ஆண்டு  டாஸ்மாக் இலக்காக 28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆக. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனாலும். அங்கேயும் டாஸ்மாக் கொடுமை பக்தி பரவசத்துடன் ஆடிக்கிட்டு வரும்.

எங்கே போனாலும்.மக்களை பிடித்த பீடையும் சிந்திக்காமல் ஓட்டுபோட்டதால் ஏற்ப்பட்ட கொடுமையும் தீராது தீராது.

வியாழன் 03 2014

வாய்தா கொடுத்த முதல் அமைச்சரும் வாய்தா கேட்ட முன்னால் முதல் அமைச்சரும்.

பக்தவச்சலம்





பத்தவச்சலம் என்பவர்  களவானி காங்கிரசில் காமராஜர்க்கு பின் முதல் அமைச்சராக இருந்தபோது

 சட்டசபை தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில்  பிழைப்பு வாத்த்தின் பிதாமகன்  வெற்றி பெற்றார்.

அப்போது  பிதாமகனிடம் பதவி இழந்த பத்தவச்சசலம் வாய்தா கேட்டார். எதற்கு வாய்தா கேட்டார் என்றால்..

 முன் னோரு காலத்தில்  இந்தியாவின் அரசர்கள்   எல்லாம்  தலை முடி வளர்த்து கொண்டை யிட்டு முக்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள் .

 அதையெல்லாம்  கும்பினிக்காரர்கள் மாற்றி மேஜை, நாற்காலி,சோபா என்று பலவற்றை மாற்றினார்கள்

கும்பினிக்காரகள் கொண்டு வந்து பழக்கப்படுத்திய   நாற்காலியில் அமர்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்தனர்.இந்திய அமைச்சர்கள்.

இதனால் அந்தக் காலத்தில்  தமிழ்நாட்டை ஆளும்  முதல்அமைச்சர்  அடுத்த தேர்தலில் தோற்று பதவியிழந்தால் அவர் வீட்டிலிருக்கும் சோபா நாற்காலிகளை எடுத்துக்கொண்டு , வெற்றி பெற்று புதிதாக பதவி ஏற்கும் முதல் அமைச்சரின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது அந்தக்கால நடைமுறை.

அந்த நடைமுறையின்படி  பத்தவச்சலம் வீட்டிலிருந்த சோபா மேஜை,நாற்காலி எடுத்துச் செல்வதற்க்காக அதிகாரிகள்  சென்றனர்.

அப்போது பிழைப்பு வாதத்தின் பிதாமகனிடம் களவானி காங்கிரசின் பத்தவச்சலத்தின் மகள் தொலைபேசியில் பேசினார்.

எங்கள் வீட்டீலுள்ள சோபா,நாற்காலிகளை அதிகாரிகள் எடுக்கிறார்கள். அதை எடுத்து சென்றுவிட்டால். உட்காருவதற்கு சோபா,நாற்காலி எதுவுமில்லை, நீங்கள் அதிகாரியிடம் சொல்லி, ஒரு வாரம் வாய்தா கொடுத்தால் அதற்குள் வேறு நாற்காலி,சோபாக்களை ஏற்பாடு செய்து விடுவோம். இதை அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றார்.

இதைக்கேட்ட புதிய முதல்அமைச்சரான பிதாமகன், அதிகாரிகளை கூப்பிட்டு பத்தவச்சலம் வீட்டிலிருந்து நான் சொல்லும்வரை நாற்காலி,மேஜைகளை எடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்.


புதன் 02 2014

ஒரு பூசாரியும் இரு கற்களும்





ஒரு கிராமம் இருந்தது .அந்த கிராமத்துக்கு பொதுவான ஒரு கோயில் இருந்தது.

அந்தக் கோயிலுள்ள சாமிக்கு பவர் ஏஜென்டாக ஒரு பூசாரி இருந்தார்.

அந்தக்கோயிலுக்கு மேல்சாதியை சேர்ந்த மேலத்தெருக்காரர்களும் பக்தர்களாக  இருந்தார்கள்.

அதே மாதிரி கீழ்சாதியின்னு அழைக்கப்பட்ட கீழத்தெருக்காரர்களும் பக்தர்களாக இருந்தனர்.

ஒரு நாள் இரு தெருக்காரர்களும்  கோயிலுள்ள சாமியிடம் முதலில் யார் வேண்டுவது என்ற பிரச்சினை எழுந்தது.

கடவுளின் ஏஜென்டான பூசாரிடம் சென்றனர். மேலத் தெரு பிரநிதியிடம் ஒரு கல்லை கொடுத்தார். இதே மாதிரி கீழத் தெரு பிரநிதியிட ம் ஒரு கல்லை கொடுத்தார்.

சில நாட்கள் கழித்து மேலத்தெருக்காரர் வந்து பூஜாரியிடம் வந்து கல்லால் ஒன்னும் பயன் இல்லையே என்றார்.

அப்போது பூஜாரி சொன்னார், கீழத்தெருவில் அந்தக் கல்லை எறிந்தால் பலன் கிட்டும் என்றார்.

இதே கீழத் தெருக்காரர்கள் கல்லைக் குறித்து கெட்டபோது, மேலத்தெருவில் எறிந்தால் பலன் கிட்டும் என்றார்.

அன்று இரவே பூஜாரி சொன்னதுபோல் இரு தெருக்காரர்களும் செயல்பட  தீயாய் பலன் தெரிந்தது.


செவ்வாய் 01 2014

சாப்பிடுவதற்கு முன் என்ன செய்வீர்கள் அப்பா...



படம்.

தமிழ் வழியில் ஒன்னாம்
வகுப்பு படிக்கும் சிறுவர்
ஒருவர் தன் தந்தையிடம்
கேட்டார்............

தாங்கள் சாப்பிடுவதற்கு
முன் என்ன செய்வீர்
அப்பா என்று...............

சிறுவரின் தந்தையோ
தன் மண்டைக்குள்.
பூசனம் படிந்திருந்த
புத்தியில் சொன்னார்.

சாப்பிடுவதற்கு முன்
இறைவனை துதிப்பேன்
 மகனே என்று.................

தந்தை சொன்ன பதிலை
கேட்ட சிறுவரோ உதட்டை
பிதுக்கிவிட்டு............

திரும்பவும் அவரிடம்
கேட்டார்.................

சாப்பிட்ட பின்பு
என்ன செய்வீர்கள்
 அப்பா என்று..............

திரும்பவும் சொன்னார்
சாப்பிட்டவுடன் எழுந்து
விடுவேன் மகனே  என்று.......

உங்களுக்கு எதுவுமே
தெரியவில்லை அப்பா
என்றார் சிறுவர்.....

 பிறகு தந்தையிடம்
சிறுவர் சொன்னார்.

சாப்பிடுவதற்கு முன்
கைகைளை நன்றாக
கழுவ வேண்டும்
அப்பா..............

சாப்பிட்டப்பின்
வாயையும் பற்களையும்
சுத்தம் செய்ய வேண்டும்
 அப்பா என்று......................

தனயனின் தந்தை
என்னைப் பார்த்தார்

தாங்கள் மறந்து
விட்டதை தனயன்
நினைவு படுத்துகிறார்
என்றேன்.நான்.

திங்கள் 30 2014

கொலைகாரர்கள் உள்ளே உலாவுகிறார்கள் பாதுகாப்பாக........

கட்டிட இடிபாடுகள்

படம். http://www.vinavu.com/2014/06/30/mouliwakkam-building-collapse-photos/


உலகமயமாக்கத்தின் ஆசியுடன்
பெருக்கப்பட்ட நகரமயமாக்கலால்
கட்டப்பட்டு வந்த பதினோரு மாடி
கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இடித்த இடிக்கும் பெய்த
மழைக்கும் தாக்கு பிடிக்காமல்
இடிந்து விட்டதாக சொன்னான்.
பொறியாளன் ஒருவன்.

சொன்னவனும் கட்டிடத்திற்கு
முதல் போட்டவனும் அச்சாரம்
கொடுத்தவனும் கட்டிய கட்டிடத்
தோடு புதைந்திருந்தால்.............

கட்டிடம் இடி இடித்ததாலா..
பெய்த மழையிலாலா  இடிந்தது
என்ற உண்மை வெளிவந்திருக்கும்.

எந்த பரிதவிப்பும் இல்லாமல்
கொலைகாரர்கள்  உள்ளே
உலாவுகிறார்கள் பாதுகாப்பாக.....

பஞ்சம் பிழைக்க வந்த
பஞ்சைகளோ!  வெளியே
பரிதவிக்கிறார்கள் பாதுகாப்பு
இல்லாமல்........

பஞ்சையர்களின் துக்கம் பதினாறு
நாட்களில் முடிந்து விடும்...

இந்த சுயநல  பிண்டங்களுக்கோ
குறைவொன்றுமில்லை  எப்போதும்
கொண்டாட்டத்துடனே இருப்பார்கள்

அடுத்து வளர்ச்சி என்ற பெயரில்
உயிர்பலி வாங்குவதற்கு.!!!




ஞாயிறு 29 2014

போதையில் பறிகொடுத்த போதை ஆசாமி!!!


படம்.தினகரன்.










ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு” வழக்கின் வாய்தாவிற்க்காக“உள்ளேன் அய்யா” என்று வருகை பதிவேட்டிற்கு ஆஜர் ஆகிவிட்டு என் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தேன்.

என் வீட்டிற்கு அருகில் இறங்குவதற்ககு ஒரே பஸ் இல்லாததால்இரண்டு பஸ் மாறி வரவேண்டும். அதோடு டிஜிடல் பஸஸில் (சொகுசு பஸ்) ஏறினால் பயணசீட்டு தொகை இரண்டு மடங்காகும் என்பதால். சாதாரண பஸ்ஸில்தான்  பயணம் செய்வது.

அப்படியான, கொள்கையின்படி நெடுநேரம் காத்திருந்து சாதாரண பஸ்ஸில் வந்து கொண்டு இருந்தேன்.என் கொள்கைப்படி எல்லோரும் சாதாரண பஸ்ஸில் பயணம் செய்ததால் அந்தப் பஸ்ஸில் கூட்டம் அதிகமிருந்தது.

பஸ்ஸில் கூட்டம்  இருந்தது மாதிரி சாலையிலும் வாகனங்களும் அதிகமிருந்தது.. வாகனங்கள் அதிகமிருந்ததால், எல்லா வாகனங்களும் போக்கவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு,ஒவ்வொரு வாகனமும் ஆமையைவிட மெதுவாக ஊர்ந்து கொண்டு இருந்தன.


அந்த போக்கவரத்து சிக்கலில் ஒரு அவசர ஊர்தியும் விரைவாக போவதற்கு வழி கிடைக்காமல் சைரன் ஒலி எழுப்பியவாறு  ஊர்ந்தது.

பஸ்ஸில்  இருந்த கூட்டம் வெயிலின் கொடுமையால் பஸ்ஸில் ஏற்பட்ட வெக்கையால் புழுங்கிக் கொண்டு இருந்தார்கள்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் முனங்கியபடி எழுந்து பஸ்ஸிலிருந்து இறங்கினார். நான் அந்த சீட்டீல் அமர்ந்தவடன். எதார்த்தமாக முன் சீட்டில் இருப்பவரையும் அவருக்கு முட்டுக் கொடுத்து அருகில் நின்று கொண்டு இருப்பவரையும் கவனித்தேன்.

மு்ன சீட்டில் அமர்ந்திருந்தவரின்  தலை ஒரு நிலையில் இல்லாமல். அங்குமிங்கும் ஆடுவதைக கண்டவுடன் போதை ஆசாமி என்று தெரிந்துவிட்டது.

அந்த போதை ஆசாமியின் தலைக்கு முட்டுக் கொடுத்து நின்ற ஆசாமி திருட்டு ஆசாமி என்று  சில நடவடிக்கையின்போது தெரிந்து கொண்டேன்.

அந்தத் திருட்டு ஆசாமியின் பார்வை சில நேரங்களில் என்னையும், போதை ஆசாமியின் செல்போன் உள்ள கனமான மேல் சட்டை பையையும் கவனித்துக் கொண்டது.

நான் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருப்பதால் திருட்டு ஆசாமிக்கு நான் கவனிப்பது தெரியவில்லை என்று நிணைக்கிறேன். அதனால்தான் திருட்டு ஆசாமி ,நான் கவனிக்கவில்லை என்று நிணைத்து கொண்டார்.

நான் கண் சிமிட்டி பார்ப்பதற்குள். போதை ஆசாமின் மேல் சட்டை பையில் இருந்தததை திருட்டு ஆசாமி  சுட்டுட்டார்.  திருட்டு ஆசாமி ரெம்ப அனுபவசாலி    போல.........

போதை ஆசாமி தன் பையிலிருந்தது சுடப்பட்டுவிட்டது என்று தெரியாமல் போதையின் மயக்கத்தில் இருந்தார்.

எனக்குள் மனப் போராட்டம். திருட்டு ஆசாமியை பிடித்து உதைக்கலாமா? என்று... திருட்டு ஆசாமியோ என்னைவிட பலமாக சற்று குண்டாக இருந்தான். இருந்தாலும் பறிகொடுத்த ஆசாமி வாய் பொளந்து இருக்கும்போது....எப்படி விசயத்தை சக பயணிகளிடம்...........

போதை ஆசாமி...அய்யோ,என் பையிலிருந்தது காணவில்லை என்று குரல் கொடுத்தால் ஓரே குத்து திருட்டு ஆசாமியின் முகத்தில் விட்டு, பறி கொடுத்தவரின் பலத்தையும் சேர்த்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று நிணைத்து போதை ஆசாமியை பார்த்தேன்.

போதை ஆசாமிக்கு தன்னுடைய கனமான பை லேசானது தெரியாமல் போதையின் மப்பில் இருந்தார். ஒரு முடிவுக்கு வர முடியாமல் திருட்டு ஆசாமியை பார்த்தால்.................

திருட்டு ஆசாமி ,கம்பி நீட்டிவிட்டார். எந்த வழியில் இறங்கினார் என்று தெரியவில்லை. பார்வையை வெளியே செலுத்தி பார்த்தால்......திருட்டு ஆசாமி போன திக்கு தெரியவில்லை.

சைரன் ஒலி எழுப்பியபடியே வழி கேட்டு கொண்டு இருந்த அவசர ஊர்திக்கு ஒரவழியாக  பொருட்காட்சி மைதானத்தின் வழியாக பாதை விடப்பட்டு அதில் பாய்ந்து சென்றது. ஊர்ந்து சென்ற வாகனங்களுக்கும் வழி கிடைத்து. அததது  இடைவெளி விடாமல் சென்று கொண்டு இருந்தன.

நான் சென்ற பேருந்தும் நகர்ந்து பாலத்திற்கு வந்து வேகமாக சென்றன..

போதை ஆசாமியின் தலைக்கு முட்டுக் கொடுக்க ஆள் இல்லாததால் தலை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடியபடியே இருந்தது.

என் மனதுக்குள் இப்படி கூறிக் கொண்டேன. காசு.பணம் வைத்திருக்கும் வெண்ணெய்கள் போதையில் வந்தா.... இந்த மாதிரியான திருட்டு ஆசாமிக்கு கொடுத்துதான். ஆகனும் என்ற டாஸ்மாக் விதியை யாரால் வெல்ல முடியும்

பேருந்து  பெரியார் நிலையத்திற்கு வந்து நின்று, நான் இறங்கும் வரை. போதை ஆசாமிக்கு முழிப்பு இல்லை..........





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...