பக்கங்கள்

சனி 03 2017

பீத்த சிறுக்கிகள்.......!!!!

அடியே..இவ்ளே
உன் கண்ணுக்கு
கொசு பறக்கிறது
தெரியுமாடீ எனக்கு
தெரியும்..டீ
யாரும் என்
கண்ணலிருந்து தப்ப
முடியாது...டீ

அப்படியா டீ

ஆமாடீ....


அடியே அவ்ளே
உன் காதுக்கு
ஊசி கீழே
விழுற சத்தம்
கேட்குமாடீ எனக்கு
கேட்கும்...டீ
என்ன ரகசியம்
பேசினாலும் என்
காதுக்கு கேட்காமல்
இருக்காது..டீ

அப்டியா...டீ இவ்ளெ

ஆமாடீ அவளே..

போங்கடீ பீத்த
சிறுக்கிகளா என்ற
சத்தத்துடன் ஒரு
கல் அவர்கள்
முன் வந்து
விழுந்தபோது

கொசு பறப்பது
தெரிந்த கண்ணுக்கு
கல் எங்கிருந்து
வந்ததென்று தெரியவில்லை

ஊசி விழும்
சத்தம் கேட்கும்
காதுக்கு சத்தம்
வந்தது கேட்கவில்லை.

இது எப்படி இருக்கு...
சொன்னா கற்பனைக்கு
அளவே இல்லையா
என்பாங்க......


(என் தெருவில்
பார்த்தது கேட்டது)

வியாழன் 01 2017

மாட்டுக் கறி தடையிலும் ரெம்பவே ஓரவஞ்சனை......

என்னப்பா மீனாச்சி
சுந்தரம்  உங்க
மூனு வருட
புனித ஆட்சியில
மாட்ட புனிதமுன்னு
சொல்லி தட
போட்டு விட்டீங்க

சரி......
போட்டதுதான் போட்டீங்க
அந்தத் தடையிலும“
உங்களுக்கு ரெம்பவே
ஓரவஞ்சனை யப்பா

என்னப்பா  முழிக்கிற
அதை சொல்றேன்
கேளுப்பா.. கேளு

.உங்க...
முழு முதற்
கடவுள்   ஆன
விசுணு எடுத்த
முதல்அவதாரமே
மீனுதான் அடுத்து
ஆம..பன்னி
அப்புறம் சிங்கம்.
இதுக்கெல்லாம் சேத்து
தடை போடாம
மாட்டுக்கு மட்டும்
தடை  போட்டு
இருக்கீங்களே அதைத்தானப்பா
ஓரவஞ்சனைன்னு.. சொல்றேன்

இப்ப புரிஞ்சு
இருக்குமே..............



புதன் 31 2017

ஒரு நாட்டில் ஒரு கொலைகாரன்.........

சார் .ஒரு
நாட்டில் ஒரு
நடிகன்அரசியலுக்கு
வந்து அந்த
நாட்டின் முதல்
முதலமைச்சராக ஆகக்
கூடாதா..சார்.......

ஓ....தாராளமாக
ஆகலாம  சார்
ஒரு நாட்டில்
ஒரு கொலைகாரன்
பிரதம மந்திரியா
ஆகி இருக்கும்
போது..அந்த
நாட்டில் நடிகன்
முதலமைச்சராக ஆகலாம்
சார். ஏற்கனவே
அந்த நாட்டில்
ஒரு நடிகன்
ஒரு நடிகை
முதல் அமைச்சராக
இருந்து ஆண்ட
பெருமை உடையது
சார்............

அப்படி என்றால்
அந்த நாட்டில்

கொலைகாரன் திருடி
ஏன்? ஒரு
நடிகனின் விட்டை
கூட அந்த
நாட்டில் ஒரு
முதல்அமைச்சராக
வந்து ஆளலாம்
சார்.............

என்ன சார்
அந்த நாட்டின்

அந்த நாட்டின்
மக்கள் மானம்
 ஈனம் எல்லாம்
ஒருங்கே பெற்ற
அறிவில் சிறந்தவர்கள்
அவர்கள்தான் சார்....

ஆக..யாரும்
வரலாம் அப்படித்தானே
சார்.........



ஆமாம் சார்,....
கொலைகாரன் திருடன்
திருடி மொள்ளமாரி
முடிச்சு அவிக்கி
இப்படி யாரு
வேணாலும் வரலாம்
சார் 

செவ்வாய் 30 2017

நடப்பு உண்மை முகத்தை எழுதிய இதழ்............

அது மாதம்
ஒரு முறை
வரும் இதழ்
அதன் தலை
அங்கம்  நடப்பை
இப்படி சொல்லியது

போலீசின் உண்மை
முகத்தை புரிய
வைக்கும் ஆற்றல்
கிரிமினல்களுக்கு தான்
உண்டு என்றது

தாங்கள் அரும்பாடு
பட்டு திருடிக்
கொண்டு வந்த
நகையை  போலீசு
தங்களிடம் இருந்து
திருடி விடாமல்
இருப்பதற்க்காக திருடர்கள்
படும்பாடு  இருக்கே
அது கொஞ்சம்
நஞ்சமல்ல திருடி
வந்த நகை
நூறு பவுன்
என்றால் அதில்
50 பவுனை  போலீசு
புடுங்கி கொள்ளும்
25 பவுனை திருடிய
திருடர்களுக்கு ஊதியமாக
கொடுத்துவிட்டு மீதி
25 பவுனை மேஜை
மீது பரப்பி
வைத்து புகைப்படம்
எடுத்து மக்களிடம்
நற்பெயர் ஈட்டும்
என்றது அந்த
இதழ்....................








திங்கள் 29 2017

ஏன் ? .இப்படி.! எதனால்..........

சில நாட்களுக்கு முன்
சோனாலி என்ற மாணவி
சக மாணவன் ஒருவனால்
உருட்டு கட்டையால் அடித்து
கொல்லப்பட்டாள்...........

பள்ளி மாணவி நவீனா
காதலிக்க மறுத்தாள் என
செந்தில் என்பவனால் எறியும்
பெட்ரோல் தீயால் கட்டி
பிடிக்கப்பட்டு கருகி கரிக்
கட்டையாய் எரிந்து போனாள்

இன்னும் ஒரு வாரத்தில்
திருமணம் தேவாலயத்தில் பிராத்தினை
செய்த பிரான்சினாவை வெட்டி
சாய்க்கிறான் ரீகன் ஜோஸ்

 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில
வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில்
காட்சியாய்  கிடந்தாள் சுவாதி

இவர்களோடு நாடே அறிந்த
வினோதினி வினுப்பிரியா தொடரும்
பெண்கள் படு கொலைகள்

ஏன்? இப்படி! எதனால்........

பாலியல் பலாத்காரம் செய்து
இரும்பு ராடை சொருகுவது
மார்பகங்களை  அறுத்து எரிவது
பிறப்பு உறுப்பில“பூச்சிகளை
விடுவது இரும்பால் அடித்து
கொல்வது ஏன் இப்படி
வெறி பிடித்த மிருகங்களாய்..

ஏன்? இப்படி..!.எதனால்..............

உயர்ந்தவன் தாழ்ந்தவன்  மேலானவன்
கீழானவன் என்ற ஏற்றத்
தாழ்வுகளையே அடிப்படையாகக் கொண்ட
ஆணாதிக்கக்கத்தையும் பெண்ணடிமை
தனத்தையும் போற்றி பாதுகாக்கப்படும்
பாரப்பனிய இந்து மதத்தலா...

90க்கு பிறகான  தனியார்மய
தாராளமய- உலகமய கொள்கைளாலா

ஏன் ? இப்படி..! எதனால்......



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...