அவன் இந்தாண்டு பத்தாவது தேர்வு எழுதப் போகிறவன். யார் கற்று தந்த பாடமோ...,,அல்லது கண்ணால் கண்ட கற்றுணர்ந்ததோ..தெரியவில்லை.
அவனின் நண்பர்கள் குழு ஒன்று போதையேற்றுவதை முன்னிட்டு, சரக்கு வாங்க இவனை அனுப்பி வைத்தார்கள் ...
சரக்கு கடையான அரசின் டாஸ்மாக்குக்கு வந்த அவனோ.. சர்வ சாதரணமாக ஒரு பிராண்டின் பெயரைச் சொல்லிக் கேட்டான்.
சரக்கு விற்பனையாளன். சட்டென்று அவன் சொன்ன பிராண்ட்-டை எடுத்தவன் திடிரென்று அவன் போதை தெளிந்தவன் போல்..
“ டேய் சின்னப்பயலுக்கு, பள்ளிக்கூடம் போற பயலுக்கு எல்லாம் சரக்கு கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு..போடா” என்று சத்தம் போட்டு விரட்ட.
அவனோ.... அண்ணே... எனக்கு இல்லேண்ணே...அதோ..அங்க நிக்கிறாரு பாருங்க..அவருக்குண்ணே... அவருக்கு தெரிஞ்சவுங்க அங்கிட்டு நிக்கிறதால என்னய வாங்கி வரச் சொன்னாருண்ணே....என்று அளந்து விட்டான்.
இவனின் கதையை நம்பிய சரக்கு விற்பனையாளன். தெளிந்த போதை மீண்டும் ஏறியவனாக...“எங்க அவர. என்னய பாத்து சொல்லச் சொல்லுடா என்று சொல்ல.....
கடையை விட்டு விரைவாக வந்த மாணவன். சரக்கு விற்பனையாளரிடம் சுட்டி காட்டியவரிம் வந்து..“அண்ணே..ஐநூறு ரூபாயக்கு சில்லரை கேட்டேண்ணே...இல்லேண்ணுட்டார்ண்ணே.. நீங்கச் சொன்னா தருவாறுண்ணே....ஒரு கையை மட்டும் ஆட்டிசொல்லுங்கண்ணே என்று சொன்னான்.
மாணவனின் கதை தெரியாத அந்த அண்ணனோ.... தெரிந்த பையன்தான் கொடுங்க என்று கை அசைத்தான்.....
சரக்கு விற்பனையாளரோ..... தமக்குள் முனங்கியவாரே.... இந்தாடா.... வாங்கிட்டு ..போ.....இனி உன்னய வாங்கச் வரச் சொன்னா... இனிமேல் எனக்கு தரமாட்டங்கன்னு சொல்லிவிடு என்றபடியே..அவன் கேட்ட சரக்கை எடுத்துக்
கொடுத்தான்
சரக்கை பெற்ற மாணவனோ.... சிட்டாய் ஓடி மறைந்தான்.
மறுநாள் போதையேறி மாணவன் செய்த அளப்பறையில்..மாணவர்களின் பெற்றொர்கள் புலம்பிய புலம்பலில் தெரிந்தது.. மாணவன் போதையேற்ற தன் அறிவை பயன்படுத்திய விதம் தெரிந்தது.