பக்கங்கள்

புதன் 31 2014

பழையன புகுதலும் ....புதியன கழிதலும்...

படம்-radiopetti.com

2014ம் ஆண்டு முடிந்து 2015ம் ஆண்டு துவங்கிறது. உலகத்திலுள்ள  அய்ந்தடி ஆறடி உயரமுள்ள ரெண்டு கால் பிராணிகள் எல்லாம் பழைய ஆண்டுக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டை வரவேற்று வாழ்த்துவார்கள்.

இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் சடங்கும் தவறாமல் நடக்கும். பத்திரிக்கைகளும் ,தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு பழைய ஆண்டில் நடந்த வற்றை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு விலாவரியாக எழுதியும் காட்டியும் மனப்பாடமாக ஒப்பிப்பார்கள்.


 இந்தப் புதிய ஆண்டுக்கு ரெண்டுகால் பிராணிகளின் தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் “எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க!”  என்று ஒப்புக்கு வாழ்த்துவார்கள் .


படம்-www.tamilmurasu.org
உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த ஆங்கில புத்தாண்டில் தங்கள் நண்பர்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.. இந்த வாழ்த்துக்களின் படி பெரும்பாலான் மக்களும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்வு அமைந்து விடுவதில்லை. அமையப்போவதுமில்லை.

இது  வாழ்த்து சொல்பவர்களுக்கும், வாழ்த்துப் பெறுபவர்களுக்கும் உள்ளங்கனி செல்லிக்கனி போல தெரிந்த உண்மை. இருந்தாலும் வாழ்த்துச் சொல்லாமல் இருப்பதுமில்லை.

 இந்தப் புத்தாண்டின் போது “ பழையன கழிதலும், புதியன புகதலும்” என்று சொல்லும் ஒரு வாசகம் ஒன்று உள்ளது. ஆனால்

நடப்பு நிகழ்வுகளைப் பார்த்தால் “ பழையன புகுதலும், புதியன கழிதலும்” மாகத்தான் நடை பெற்று வருகின்றன.  கீதா உபதேசமான இன்று உன்னுடையது அது நாளை மற்றொருவருடையதாகிறது என்று நான்கு வர்ணங்களை படைத்த பரமத்மா சொன்னது மாதிரி...

காங்கிரசின் சொத்தாக இருந்த இந்தியா, இனி பாரதீய ஜனதாகட்சியின் சொத்தாக மாறிவிட்டது. அந்த பரமத்வாவின் உபதேசப்படி அடுத்து அது  வேறு ஒரு வருக்கு சொத்தாக மாறவிடக்கூடாது என்பதற்க்காக.............

காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில்  என்னென்ன செய்யாமல் விட்டதோ.என்னென்ன செய்யத் தயங்கியதோ, அதையெல்லாம் தயங்காமல்  வீரமுடன் தீரமுடன் செயல்படுத்துகிறது பாரதீய ஜனதாகட்சி... இனி இந்தியா 25 ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கு மேலாகவேர் .இந்தீயா   பாரதீய ஜனதாவின்  தலைமையான் ஆர் எஸ்எஸ்-ன் சொத்தாகவே  நீடிக்க வகை செய்யுமளவுக்கு.....

 அதற்க்கான அடித்தளங்கள் மு்ம்மரமாக போடப்பட்டு வருகின்றன. அதற்க்கான அடையாளம்தான்  நீதித்துறை, நிதித்துறை,. நிர்வாகத்துறை , தகவல் துறை, என்று அணைத்து துறைகளிலும் உள்ள அதி உயர் பதவிகளில் ஆர் எஸ்எஸ்-யை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்படுவது இதோடு சமஸ்கிருத்ம்,இந்தி திணிப்பு, குருஉத்சவ், தாய்மதமாற்றம், கோட்சேவுக்கு சிலை, மாவியாவுக்கு விருது, இன்ன பிறவைகள்,

இவைகள் கண ஜோராக மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும். இதில்  ஒன்று. தமிழ்நாட்டில் தமிழ் சாமுதாயத்தை சீரழித்த சதிகாரியும் கொள்ளையடித்த குற்றத்திற்க்காக தண்டனை பெற்று பினையில் இருக்கும் கொள்ளைக்காரியும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதும் நடக்கும்.


எவையெல்லாம் பழையவை என்று ஒழிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதோ அவையெல்லாம் மீண்டும் அரங்கேற்றப்பட்டு நிலை நிறுத்தப்படும்.

இந்த புத்தாண்டில் புதிய பயணமாக தமிழ்நாட்டில் .. தேவலோகத்தின் தேவபானமான மதுவை காப்போம், மக்களை ஒழிப்போம். இப்படியும் புத்தாண்டு  சங்கல்பமும் இருக்காலாம்.


படம்-aambalmalar.blogspot.com








செவ்வாய் 30 2014

கோட்சேவுக்கு சிலை..பிறகு கோயில்..!!!






சுடப்பட்டு செத்தவர்க்கு சிலை வைக்கும்போது..சுட்டவர்க்கு சிலை வைக்கக்கூடாதா..? என்று ஒரு கேள்வி....

சுடப்பட்டுச் செத்தவரும் வ்ர்ணாசிரமத்தை ஆதரித்தார்..சுட்டவரும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார். முன்னவர் வர்ணாசிரம கொள்கையில் மிதவாதியாய் இருந்தார். பின்னவர் தீவிரவாதியாய் இருந்தார்


முன்னவருக்கு பல இடங்ககளில் சிலை வைத்து சுதந்திரத்துக்காக பாடுபட்டவர் என  ஏட்டில் எழுதியும் சினிமா படம் பிடித்து  காட்டிக் கொண்டு ,அவருக்கு ஒளி வட்டம் கொடுத்து  வந்தது அவரது சார்பான கூட்டம்.
Image result for கோட்சே சிலை

பின்னவரின் கூட்டத்தாருக்கு  வராது வந்த மாமணியான ஆட்சியதிகாரம் கிடைத்தவுடன். சுட்டவருக்கு புகழ்மாலை சூட்டி சிலை வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதிவெறி குலதெய்வத்துக்கு  சிலை வைத்து அந்த சிலைக்கு அரசே சாதிவெறிக்கு பத்தி கொளுத்தி வருடந்தோறும் தங்க காப்பு அணிவித்து  சாதிவெறியை மூட்டி    தாழ்த்தப்பட்டவர்களை பலி கொடுப்பது போல்.....




 வர்ணாசிரமத்தை காத்த தியாகி கோட்சேவுக்கும்  இந்துஸ்தானில்  ஆட்சியை பிடித்தவர்கள் இந்துஸ்தானில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள்...

சிலை வைத்து  சில நா்ட்கள் கோட்சேவின் பிறந்த நாளில் முன்னோட்டம் பார்த்துவுிட்டு ,கோவிலே கட்டி அந்தக் கோவிலுக்கு சூலாயுதம் கொண்டு  நாத்திகர்களையும், முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் பலி கொடுப்பார்கள்.


திங்கள் 29 2014

அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம்.


படம்-- 

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக்கூட வக்கில்லாத வர்க்கம் எதுவென்றால் முதலாளி வர்க்கதம்தான் என்றார் தோழர் மார்க்ஸ்.

இதோடு  தனது அடிமைகளின் சோற்றுப் பானையில் கையைவிட்டு வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளிவர்க்கம்தான்.

தமிழ்நாட்டில் இந்த முதலாளிகளின் கௌவரத்தை காக்கும் பொருட்டுதான் திருடியதில் இலவசமாகவும் ? மலிவு விலையில் உணவுமாக  அந்த அடிமை வர்க்கத்துக்கு வழங்குகிறது.


ஞாயிறு 28 2014

புதைக்கப்பட்ட மொழியை..தோண்டி எடுத்து உயிர் கொடுத்த அறிஞர்.


 ராபர்ட கால்டுவெல்    http://ta.wikipedia.org/s/7s7

சூத்திரர்கள் மொழி தமிழ்.  இதை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் ஆரியர்கள் என்றார் அறிஞர் கால்டுவெல்

இன்றைய நூற்றாண்டைப் போலவே, 18ம் நூற்றாண்டிலும் ஆங்கிலம் படித்தால்தான் பிழைக்க முடியும், சமஸ்கிருதம் படித்தால்தான் தெய்வத்தின் அருள் கிட்டும்  என்ற நிலை இருந்தது.

இன்றைக்கு மத்திய-மாநில அரசுகள் மாதிரிதான்  தமிழகத்தை ஆண்டவர்கள் மன்னர்களான ராஜராஜன் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் சமஸ்கிருதம் படிப்பதற்கு மானியம் கொடுத்தனர்

அதனால் அன்றைய காலத்தில் தமிழை படிக்கவோ, வளர்க்கவோ ஆளே இல்லாத நிலைமை இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் 18ம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் அறிஞர் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார். கால்டுவெல் மட்டுமல்ல அவரின் நண்பர்களான வெள்ளைக்காரர்கள் அனைவரும் தமிழ் அறிஞர்கள்.

பவர் என்ற பிரஞ்சுக்காரர்தான் சீவக சிந்தாமணியை கொண்டுவந்தார். இவர் மூலம்தான் உ.வே.சா. பல நூல்களைத் தேடிச்சென்றார். முர்டோக் என்ற அறிஞர்தான் தமிழ் நூல்களின் அட்டவனையைத் தொகுத்தவர். முதன் முதலில் தமிழ் கல்வெட்டை படித்துச் சொன்னவர் ஏ.ஜி. பர்னல் என்பவராவார். இவரைப் போன்றவர்களிடம் தமிழ் பயின்று வந்தவர்கள்தான் ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள்.

தமிழ் மொழியும் கலாச்சாரமும் உன்னமானவை. என்னுடைய ஆய்வு தமிழ் மொழியின் மதியப் பொழுதிலிருந்துதான் தொடங்குகிறது என்றார் கால்டுவெல்.

ஆரியர்-பார்ப்பனர்களின் வேதப் புராணங்களின் புளுகு புரட்டையும் இந்தியாவின் மூல மொழி சமஸ்கிருதமே என்ற வரலாற்று அயோக்கியதனங்களை தகர்த்தது கால்டுவெல்லின் தமிழ் ஆராய்ச்சிதான்.

தமிழை விற்று வயிறு வளர்த்த மன்னர்களும்  (கவி)பேரரசர்களும், தமிழை இளித்தும் பழித்தும் பேசிய நாற வாய்  ஒன்று.  தமிழை வாழ்த்தியது என்று சிலிர்த்து எழுந்து விழா எடுத்தார்கள்.

புதைக்கப்பட்ட தமிழ் மொழியைத் தோண்டி எடுத்து உயிர் கொடுத்து உலா விட்டவர்கள்  கால்டுவெல்லும் அவருடைய சம காலத்து மனிதர்களும்தான்.

அவர்கள்தான்  தமிழ் மரபு குறித்த அடையாளத்தையும் பெருமிதத்தையும் வழங்கியவர்கள்.

தமிழ் மொழியை எனது தாய்மொழி என்றும் , என்னை வாழ வைத்த மொழி என்று சொல்லிக் கொள்பவர்கள் கால்வெல்லை மறப்பது நன்றிக் கெட்டத்தனமாகும்.



நன்றி!!--புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014
தலைப்பைச் சேருங்கள்



சனி 27 2014

அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்..........


படம்--பாரத்ரத்னா.. 

காங்கிரசின் ஊழல் தயவால்  ஆட்சிக்கு வந்தது பாரதீய் ஜனதா கட்சி. அந்தக் கட்சி மற்ற கட்சிகளை மாதிரி ,அந்தக்கட்சிகளைவிட தொழில்நுட்ப உதவியுடன்..  தேர்தலில்  பொய்யான வாக்குறுதி அள்ளி வீசி வாக்காளர்களை  மோசடி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் . அந்தக் கட்சியை வழி நடத்தி வந்தவர்கள் சொன்னார்கள்.

கடந்த அய்ந்து தலைமுறையாக ஆட்சியை கைப்பற்றுவதற்குத் போராடினோம் என்று...., அப்படி போராடியவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்வார்களோ? அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முதல் வேலையாக எல்லா அதிகார உயர் பதவிகளில் தங்கள் இனமான உயர் பார்ப்பனர்களை நியமித்தார்கள். நீதி வழங்கும் நீதிபதிகளின் தேர்வு முறையை மாற்றியமைத்தார்கள். இதுபோல பலப்பல....

 மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்று ஏட்டளவிலும் வாயளவிலும் இருப்பதை கூடிய விவைில் சனாதனம் நிரம்பிய இந்து (பார்ப்பனர்கள்) தேசம் என மாற்றியமைப்பார்கள்.

படிப்படியாக மாற்றியமைக்கும் வேலைகளில் ஒன்றதான். பார்ப்பனர்களிடையே உயர்ந்தவரும், அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சுதந்திரத்தை காட்டிக் கொடுத்த தீரரும். போலிகள் உள்பட பல கட்சி ஆதரவில் நல்லாட்சி செய்ததாக வாஜ்பாய்க்கும் சனாதன தர்மத்தை ஊரெங்கும் பரப்புதவதற்க்காகவும் அந்த சனாதனத்தை பாதுகாப்பதற்கு சனாதன மகா சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கும். “பாரத்ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவதென்ன ,அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

மோசமான கட்சியில் இருக்கும் சரியான நபர்க்கு கொடுத்த விருதைப் பாராட்டியும், மோசமான சனாதன தர்மத்தை விதைத்த மோசமானவர்க்கு வழங்கிய விருதை எதிர்த்தும், ஜனநாயகம், மனிதநேயம்.,கத்திரிக்கா, புடலங்கா, மதச்சார்பற்ற நாடு, பெரியார் பிறந்த  பூமி, அரசியல்  சட்டத்தை வகுத்தவர் அம்பேத்கர் என்று பலப்பல போதையிலே வீழ்ந்து கிடந்ததோடு.  நாண்கு வர்ணங்களை  நிலைநாட்டும் சனாதனம் ஆட்சியில்அமர எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டுட்டு கடைசி கட்டமாக தங்களுடைய கையாலகத்தனத்தால் புலம்பி தவிக்கிறார்கள்.....

 மாளவியாவுக்கு பரதரத்னாக்கு விருது கொடுத்துவிட்டு.... அடுத்ததாக. வில்லாளன்  ராமனுக்கு பாரத்ரத்னாவிருது  அவர்கள் கொடுப்பார்கள். அப்போது  எந்த  புலம்பலும் இருக்காது.


வெள்ளி 26 2014

அந்தக் காலத்து அரசியலாளர்கள்.. சொன்னது..

படம்-
சமூக வளர்நிலைப்படி
தோன்றியது முதலாளி 
வர்க்கம் அந்த முதலாளி
வர்க்கத்தை நிலை
நிறுத்துவதற்க்காக
வந்தவர்கள் அரசியலாளர்கள்.

அன்று அந்த முதலாளித்துவ
அரசியலாளர்கள் சொன்னார்கள்
பெரு முதலாளிகளுக்கு வரி
விதித்து அந்த வருவாயில்
மக்களுக்கான சமூக நலத்
திடடங்களை அமுல் படுத்துவதே
மக்கள் நல அரசு என்று.......

இன்று..........
சுரண்டலைத் தொடர்வதற்கும்
சுரண்டலை பாதுகாப்பதற்கும்
இயங்கும் அரசைமைப்பிற்க்கே 
மக்கள் நல அரசாகிப்போனது .

புதன் 24 2014

அந்த கிருஷ்ணனுக்கும் இந்த கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு


கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்
சாதீ... படம் பார்க்க---http://www.vinavu.com/2010/12/28/casteism-in-india-sketches/

“நால் வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்றான். கூடவே., கடமையைச் செய் பலனை (கூலியை) எதிர்பாராதே!! என்றான். கீதையின் நாயகன் கிருஷ்ணன்.

படைத்த நாலு வர்ணத்தின் கடைசியாக  காலில் பிறப்பதற்கு இடமில்லாததால் தரையிலே பிறந்த சாதி,  தாழ்த்தப்பட்ட சாதி,உழைத்த உழைப்புக்கு கூரிய கூலி கேட்டதால் வெண்மணியில் கூலிகளை தீயிட்டு கொளுத்தினான்( இரிஞ்சூர்) கோபால கிருஷ்ணன்.

அந்தக் கீதையின் கிருஷ்ணனின் சிலையை  காப்பாற்றிய  திப்பு சுல்தானைப்போல  இந்த கோபாலகிருஷ்ணனை காப்பாற்றியவன் பன்னையார்களின் தலைவனும் த.மா.கா.கட்சியின் நிறுவனனுமான கருப்பையா ..




செவ்வாய் 23 2014

வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க...மலைக்கள்ளன் & கோ . கம்பெனிக்கு அனுமதி


படம்- மனு செய்யுமிடம்.
ஒரு ஏரியாவில் திருடியவர்கள் கொள்ளையடித்தவர்கள் மாட்டிக் கொள்வோம், பிடிபட்டுவிடுவோம் என்ற கணக்கு வழக்கில்  திருடும் ஏரியாவை மா்ற்றிக் கொள்வார்கள். இதற்க்காக இவர்களுக்கு எந்த நீதி மன்றமும் சரி, கட்டப் பஞ்சாயத்து போலீசும் சரி எந்த லைசென்சும் வெளிப்படையாக வழங்கியது கிடையாது.

இனிமேல் இவர்களுக்கும் கொள்ளையடித்த வழக்கில் இவர்களின் குருப்பின் மேல் வழக்கு இருந்தால். இவர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ஒரு முன்னோட்டமாக மதுரை உயர்நீதிமன்றத்தில்   கிரானைட் கொள்ளைக்கார மலைக்கள்ளன் அன்ட கோ கம்பெனிக்கு வெளிமாவட்டத்தில் கொள்ளையடிக்க லைசென்ஸ் வழங்கியுள்ளார் ஒரு நீதிபதி..

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மலையையே  இல்லாமல் கொள்ளையடித்த மலைக்கள்ளன் கம்பெனியின் பங்குதாரர் ஒருவர் கிரானைட் கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களால் கொள்ளைத் தொழிலை நடத்த முடியவில்லை. அதனால் கொள்ளை அடித்த மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்தில் மலைக்கள்ளன் அன்ட.கோ கம்பெனிக்கு கொள்ளை அடிப்பதற்க்காக அனுமதி வழங்க வேண்டும் என்று மனு செய்தார்.

 இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி  “ வழக்கு நிலுவையில் இல்லாத  வெளிமாவட்டத்தில்” மலைக்கள்ளன் அன்ட. கோ கம்பெனி வங்கிக் கணக்கு தொடங்கவும், கிரானைட் கற்களை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்யவும்  உத்தரவு அளித்தார்.

மலைக்கள்ளன் அன்டகோ கம்பெனியின் மனுவுக்கு அரசு பதில் அளிக்கவும் உத்தரவு இட்டார்.

இந்த வழக்கில் “மனித உரிமை பாதுகாப்ப மையத்தின் இணை செயலாளரும், வழக்குரைஞமான வாஞ்சி நாதனை ஒரு மனுதாராக ஏற்க மறுத்துவிட்டார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு போக ஒரு வழியா இருக்கிறது என்பது மாதிரி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிரானைட் கொள்ளை குறித்து  விசாரனை செய்து அதன் அறிக்கையை தாக்கல  செய்ய தனி அலுவலராக முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியாளரான் திரு.சகாயத்தை தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிற வேளையில்..

பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிட்ட கதையாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர். அதையும் எதையும் தெரியாதவர்போல் கிரானைட் கொள்ளை மலைக்கள்ளன் அண்ட கோ கம்பெனிக்கு வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க அனுமதி வழங்கியுள்ளார்.



இனி லைசென்ஸ் இல்லாத திருடர்களும் கொள்ளைக்காரர்களும் லைசென்ஸ் பெ்ற்று கொள்ளை அடிப்பதற்கு மனு செய்து கொள்ளலாம்.
கிரானைட்-ஊழல்

திங்கள் 22 2014

அம்மா உணவகம் வந்தக்கதை தெரியுமா..உங்களுக்கு???

படம்-


விண்ணை முட்டும்  கட்டிடங்களும், மால்களும், நவீன கார்களும் செல்பேசிகளுமாக மின்னும் சென்னை நகரத்தில்.

எப்போதும் இல்லாத அளவுக்கு  ரோட்டோர கையேந்தி பவன்களும், கூழ் விற்கும் பெண்களும்  புற்றிசல்களாக முளைத்து வருவதைக் கண்டு..

பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுப்பசி திண்டாட்த்தை,  கொள்ளைக்கார அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்யும் நோக்கத்தில்

கையேந்தி பவன்களை ஒழித்துக்கட்டும் மத்தியரசின் புட் ஸ்டாண்ட்ர்ஸ் அன்ட் சேப்டி ஆக்ட் -ன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்க்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் அம்மா உணவகம் ..

இத்தகைய கையேந்தி பவன்களில் காரை நிறுத்தி, சூப்பர் ஸ்டார்கள் திண்டதை சிலாகித்து  சிலீர்த்து எழுதிய பத்திரிக்கை முண்டங்கள்

சுரண்டப்பட்ட மக்களின் வறுமையை, துர்பாக்கிய நிலையாக  சித்தரித்து கருணை  அடிப்படையில் வழங்கும் ஒரு ரூபா இட்லிக்காக...மக்களை  போதைக்கு அடிமையாக்கி அவர்களிடமிருந்து, புடுங்கிய அம்மா சாராய வருமானத்திலிருந்தும், மின்சார கட்டண உயர்வு, வாட்வரி போன்ற எண்ணற்ற மறைமுகமாகவும், நேர்முகாவும் புடுங்கப்படும் வரி  பணத்தில் தான். அம்மா உணவகம் செயல்படுகின்றன என்பதை மறைத்து கொள்ளைக்காரியை அம்மாவாக . அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்னலட்சுமியாக காட்டி ஓலமிடுகின்றன்.


ஞாயிறு 21 2014

உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!

படம்-nellaionline.net

110 கோடி மக்கள்
தொகை கொண்ட
இந்திய நாட்டில்
உழைப்பால் உயர்ந்த
கொள்ளையர்கள் யாரென்று
 உங்களுக்கு  தெரியுமா???

பெரும்பாலானவர்களுக்கு
உழைப்பால் உயர்ந்த
அந்த கொள்ளையர்களை
தெரிந்திருக்காது..........
தெரிந்திருக்கவும் வாய்ப்பு
இருந்திருக்காது..............

படியரிசியில் முனியரிசி
சோமாறும்  உள்ளுர்
ரேஷன்கடை பலசரக்கு கடை
திருடர்களைத்தான் அவர்களுக்கு
தெரிந்திருக்கும்...............

படியரிசியில் முனியரிசியென்ன
படியையே கொள்ளையிட்ட
கொள்ளையிட்ட கொள்ளையர்களை
அவர்களுக்கு..... தெரியாததுதான்.

அவர்கள்தான் தலைமுறை
தலைமுறையாக வறுமையின்
நிழலிலே வாசம் செய்பவர்
களாயிற்றெ.... அவர்களுக்கு
எப்படித் தெரியும்... உழைப்பால்
உயர்ந்த கொள்ளையர்களை..

தலைமுறை தலைமுறையாக
உழைத்து வீனாய் போனவர்கள்
அல்ல கொள்ளையர்கள்.......

கடும் உழைப்பால் உயர்ந்த
 கொள்ளையர்கள் அவர்கள்.
சாதரண கொள்ளயைர்கள்
அல்ல..

கோடிக்கணக்கான விவசாயிகளின்
தொழிலாளிகளின் உழைப்பையும்
அவர்களின் வாழ்வாதாரங்களை
கொள்ளையடித்த தனியார்
மயத்தின் தாராள மயத்தின்
நவீன  கோடீஸ்வர கொள்ளையர்கள்

அவர்கள்தான் இந்தியாவின்
முகேஷ் அம்பானி,லட்சுமி மிட்டல்
திலிப்சாங்வி, அஸ்ம் பிரேம்ஜி
பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி..





மனிதத்தை மீட்க அப்பீல் செய்யும் ம.க.இ.க செயலாளர்.!!!

தோழர் மருதையன்
படம்-தோழர் மருதையன்

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும்போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்து போராடியபோது அமெரிக்க சிப்பாய்களை அண்டி பிழைத்தவர்கள், “ அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை “விலைமாதர்களின் பிள்ளைகள் ”என்றார்கள் அந்நாட்டு போராளிகள்.








சனி 20 2014

வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச..மாதிரி..

படம்-www.noolulagam.com
அந்தப் படத்தின் பெயர்  என்ன என்று தெரியவில்லை.... அந்தப் படத்தில் எம்ஆர் வாசு மனோரமாவிடம். வந்து..

“என்ன..ராக்கம்மா..மாமானுக்கு கஞ்சி தண்ணி ஊத்துறது” என்று கேட்பார்.

அதைக் கேட்டு, “கஞ்சி தண்ணி என்ன, கோழி அடிச்சு கறிச்சோறே போடுறேன்”ன்னு மனோரமா சொல்வார்.

அட, மச்சான் மேலே இம்புட்டு ஆசய வச்சுகிட்டா..,அன்னிக்கு அந்தப்பயல(பக்கொடாகாதர்) அந்த அடி அடிச்ச என்று  வாசு சொன்னபோது
அதுக்கு மனோரமா சொல்வார். “ வெள்ளையம்மாளுக்கு தெரிஞ்சா  ஊருக்கே தெரிஞ்ச மாதிரி. அதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்பார்.

“ நா... ஒரு மடப்பய இதக்கூட தெரியாம இருந்திட்டேன் என்பார் வாசு

 இந்தப் படத்துல வந்த நகைச்சுவை மாதிரி  ” வெள்ளைமாளிகை அதிபரான ஓ...பாமாவுக்கு பகவத்கீதை பொத்தகத்தை கொடுத்தது இந்த ஒலகத்துக்கே கொடுத்த மாதிரி....

 அந்த பொத்தகத்தை வெள்ளை மாளிகை அதிபர்..ஓ..பாமா ஏற்றுக் கொண்டது இந்தக ஒலகமே பகவத்கீதையை ஏற்றுக் கொண்ட மாதிரி...

அதனால்தான்  “பகவத்கீதை”உலகமே ஏற்றுக் கொண்ட பொத்தகம் என்று கிராம பூ..பூசாரி சங்க அல்லக்கையிலிருந்து. ஆர்எஸ.எஸ் வரையிலான பரிவாரங்கள் எல்லாம் “பகவத்கீதை” பொஸ்தகத்தை தேசிய  புஸ்ஸ்தகமாக விற்கச் சொல்லி கடை விரித்துள்ளன....

வெள்ளி 19 2014

மார்கழி மாத பஜனை அல்ல.....

மார்கமி மாதம் வந்துவிட்டால் அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாதத்துக்கு யோக்கியர் வேடம் தரித்துவிடுவார்கள்.

மார்கழி மாதம் முழுவதும், விரதமும் பஜனையும் துர்ள் கிளப்பும்,அதிகாலையில் கோயில்களில் ஒலி பரப்பும் ஒலிக்கும் 

அந்த மார்கழி மாத பஜனை அல்ல பட்டுக் கோட்டையாரின் இந்தப் பாடல்..


புதன் 17 2014

உலகில் தைரியசாலிகள் நிறைந்த இரண்டாவது நாடு

படம்--ennaachi.tumblr.com


சாதிவெறி,மதவெறி, மூடநம்பிக்கை போன்ற  பழக்கவழக்கங்கள் கொண்ட காட்டுமிராண்டிகள் நிறைந்த நாடான இந்தியா

உலகத்திலே சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில்  இரண்டாவது வரிசையில் இருக்கிறது.

தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா எப்படி இரண்டாவதாக வந்தது என்று யோசித்த போது

அதற்க்கான காரணம் இதுதான். என்று தெரிந்தது.

உலகிலேயே அதிகமான செல்பேசி பயன்படுத்தும் நாடு இந்தியா.இந்தியாவில் 2013-ன் புள்ளி விபரப்படி 86.16 கோடி பேர் செல்போன் பயனாளிகள், இந்த செல்போன் பயனாளிகளுக்காக அமைக்கப்படும் செல்பேசி கோபுரங்களும் எண்ணிக்கையடங்காமல் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றபடாமல் அமைக்கப்பட்டுள்ளன். அமைக்கப்படுகின்றன.

செல்பேசிகளினாலும் செல்பேசி கோபுரங்களாலும், லாப வெறி பிடித்த முதலாளிகளிலாலும் ..அறிவியல் கண்டுபிடிப்பின் பயன்கள் சிறிதளவாக இருந்து அதனால் வரும், ஏற்ப்படும் பின் விளைவுகள் நிறைந்த ஆபத்துக்களை பற்றி நல்ல சமூகத்தை  விறும்பும் நல்லவர்கள் பல தடவை பட்டியலிட்டு சுட்டிக் காட்டினாலும்.

 மண்டை மயிறுக்குள் எதுவுமில்லை என்ற கதையாக... அதையெல்லாம் கேட்டும் உணர்ந்தும் இருந்தாலும், டாஸ்மாக் குடிமகன்களைப் போலவே இந்திய செல்பேசி பயனாளிகள் குறைவதாக இல்லாமல் அதிகமாகத்தான் இருக்கின்றன.

அதனால்தான் சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவதாக உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளேன்.


செவ்வாய் 16 2014

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ........

படம்--www.onlytamil.in

“நொறுங்கத் தின்றால் நோவு கிடையாது” என்பதானது ஒரு சான் வயிற்று டேங்கின் கொள்ளவை மீறி நிரப்புவது  நொறுங்கத் தின்னுவதாக அர்த்தம் கிடையாது.

ஆற அமற.எந்தவித பரபரப்பு இல்லாமல் நிதானமாக வாயில் ஊறும் உமிழ்நீரோடு கலந்து சாப்பிடும் பழக்கமே நொறுங்கத் தின்னுவது. இப்படி சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு உடல் எடையும் கூடாது. அசீரனப்பிரச்சினையும் ஏற்ப்படாது. இதோடு சம்மணமிட்டு சாப்பிடும் பழக்கப் பட்டவர்களுக்கு தொப்பையோ, உடல் எடையோ கூடுவதில்லை.

ஆனால்,தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது,செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுவது, புத்தகத்தை படித்துக் கொண்டே சாப்பிடுவது,நடந்துகொண்டு நின்று கொண்டு சாப்பிடுவது, மற்றும் துரிதஉணவு, நொறுக்கத்திணி சாப்பிடுவது போன்றவற்றால். எந்த பாகுபாடு இல்லாமல் எடையும் தொப்பையும் வயது வித்தியாசமின்றி வரலாம், கூடலாம்.

இவைகளை தவிர்த்தால்... இளைத்தவர்கள் எள்ளும், கொழுத்தவர்கள் கொள்ளும் சாப்பிட வேண்டிய அவசியம் இராது..

திங்கள் 15 2014

ஒரே ஷாட்டில் ஒரு நிமிட குறும்படம்.

காட் இஸ் டெட்- ராணுவத்தின் சித்ரவதைக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பத்தின் துயரை ஐ-போன்மூலம் ஒரே ஷாட்டில் ஒரு நிமிடத்தில்  சதா பிரவணன் என்பவரால் எடுக்கப்பட்ட குறும்படம்.

இந்தப் படம் பிரான்ஸில் நடந்த  மொபைல் குறும்படவிழாவில் சிறந்த படமாக 3000யூரோவும், கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த மொபைல் பட குறும் பட பிரிவில் 3000யூரோவும் பரிசாக பெற்றது. இந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு......



எபோலா வைரஸ் கொலையும் ஆதிக்க சாதிவெறி படு கொலையும்.




எபோலா வைரஸால் தாக்குண்டு,கடும் காய்ச்சல் காரணமாக லைபீரியாவிலள்ள மன்ரோவிய நகரச்சாலையில் மயங்கி விழுந்து கிடக்கும் சிறுமி எஸ்தர் (படம்)

சாவோடு போராடிக் கொண்டிருக்கும் அச் சிறுமியைத் தூக்குவதற்கு மனது துடித்தாலும், அருகில் சென்று தூக்கினால், தம்மையும் எபோலா வைரஸ் தொற்றிக் கொண்டுவிடும் என்ற பயத்தின் காரணமாக, 100அடி தூரம் ஒதுங்கி நிற்கும் அந்நகர மக்கள்.

இப்படி பயந்து ஒதுங்கி நின்றவர்களில் எஸ்தரின் அப்பாவும் ஒருவர். இது லைபீரியா நாட்டில்..

  ஆதிக்கச்சாதிவெறிகாட்டுமிராண்டிகளின்  தேசத்திலோ, பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்துவிட்ட பெண்களை சாதிமாறி காதலித்தற்க்காக சாதி வெறி கொண்டு தந்தையாலும் தாயாராலும்  படுகொலை செய்யப்பட்டு.சுவடே இல்லாமல்  சுட்டு சாம்பலாக்கி விடுகிறார்கள்.

முன்னதுக்கும் பின்னதும், பின்னதுக்கு முன்னதும் ரெம்பவும்  கொடியதாகத்தான் இருக்கின்றன.
எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.

ஆதிக்க சாதிவெறி பிடித்த பெற்றோர்களால் எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி. 



ஞாயிறு 14 2014

கதை விட்ட கதாசிரியர்......


முதல் நாள்சூட்டிங்கில் 1000 ஜூனியர் ஆர்டடிஸ்ட்கள் நடிக்கிற சீன், நாலு வருடத்துக்கு அப்புறம் ரஜினி முதல் முறையாக கேமராமுன்னாடி நிற்கிறார்.

வெயில் கொளுத்துது,கனமான கோட், அதுக்குள்ள ஒரு சட்டை, அந்த உடையில் ஒரு சீன் எடுத்துவிட்டோம். அடுத்த சீனுக்கு டிரஸ் மாத்தனும், கேரவன் கொஞ்சம் தள்ளி இருக்கு.

கேரவனுக்கு போகலாம் சார் ”ன்னு சொன்னா, ஒரு லுங்கி தாங்கன்னு கேட்டார்

பரவாயில்லை சார்., கேரவன்ல மாத்திக்கலாம்னு சொல்றோம்.

“நான் கேரவன்ல போயி டிரஸ் மாத்திட்டு வர்ரவரை, இந்த 1000பேரும் வெயில்ல நிற்பாங்க..னு சொல்லிட்டு அங்கயே டிரஸ்.மாத்திக்கிட்டார்.--என்று.. மைசூர்படப்பிடிப்பின்போது நடந்ததாக கதை விட்டார். லிங்கா படத்தின் கதாசிரியர் பொன்குமரன்

சனி 13 2014

"தோழர்" என்பதின் அர்த்தம் தெரியாதவர்களுக்கு....

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (camarade : தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

தமிழில் புதிதாக தோழர் என்ற சொல்லைப் பயன்படுத்த தொடங்கி இருப்பவர்கள் எல்லோரும் சமத்துவமான சமுதாயத்தில் நம்பிக்கை கொண்டவர்களா? நிலப்பிரபுத்துவ பிற்போக்குத் தனங்களை நிராகரிப்பவர்களா? ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை விரும்புகிறவர்களா ? இனிமேல் யாரையும் ஐயா, அம்மா, தலைவர், தளபதி என்று அழைக்க மாட்டார்களா???

வெள்ளி 12 2014

முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்துகிறது...

படம்-kalakakkural.blogspot.com
பகவான் என்று ஒரு சாரால் சொல்லப்படும்  பக்கியால் அருளப்பட்ட புராணபுரட்டான பகவத்......கீ........தை புத்தகத்தை. உலகையே ஆளும் ஓ..பா..மாவுக்கு. பரிசாக வழங்கியதால். பகவத்கீதை புனிதம் பெற்றது.


 ஓபாமாவால்  புனிதம் பெற்ற பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என இந்தியாவின் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்தவுடனே....


 “திருக்குறளில் இருக்கும் முற்போக்குகூட பிற்போக்குக்கான பகவத்கீதையில் கிடையாது.அதனால் பிற்போக்கு பகவத்கீதையை தேசியநூலாக ஆக்கக் கூடாது” என்று  சாதிவெறி கூட்டணி தலைவர்  கலவர நாயகனான ராமதாசு  எதிர்த்தது. இது எப்படி இருக்கிறது என்றால் முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்தியதாக. இருக்கிறது. இன்னும்

பகவான் ..பெண்களுடன் ஆடிய   அவதார விளையாட்டுகளை , தேசிய விளையாட்டுகளாக அறிவிக்கும்போது.. இந்த பிற்போக்கு , முற்போக்கு விளையாட்டைப் பற்றி பேத்துவதை அப்போது தெரிந்து கொள்ளலாம்.




வியாழன் 11 2014

துாய்மை இந்தியாவின் சூரப்புளிகள் சுத்தம் செய்ய வருவார்களா..??ஃ

தூய்மை இந்தியா
படம்-கார்ட்டூன் – நன்றி http://ajanrnair.blogspot.in/

துாய்மை இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடிக்கு மேல்.அந்த 100கோடிக்கு மேலான மக்களுக்கு  தேவையாகும் உணவு தானியங்கள் 60 கோடி டன்.

இந்த துாய்மை இந்தியாவில்  மூன்று நேரம் சாப்பிடும் வசதியுள்ள மக்களுடன் வசதியற்ற மக்களும் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு 600கிலோ உணவு உட் கொள்கின்றனர். இதில் சீரனமானது போக..மீதி 550 கிலோ சீரமாகாதவைகள் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேறுகின்றன.

இப்படி வெளியேறும் 550 கிலோ கழிவுகள். 30% சதம் சீமான்களின் வீட்டு கழிப்பறையிலும் கட்டணகழிப்பறை உள்ளிட்டவைகளிலும் 70% சதம் திறந்த வெளியிலும் கழிக்கப்படுகிறது.

இதில்  70% சதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படுவதால் ..இந்தியாவின் துாய்மை கெடுகிறது. செவ்வாயக்கு மங்காள்யான் அனுப்பி மார்தட்டிக் பெருமைபட்டு கொள்வதற்கு இது தடையாக இருக்கிறது.  மோ(ச)டியின் தூய்மை இந்தியாவிற்கு  இழுக்காகாகிறது..


இந்த தடையையும்  இழுக்கையும்  போக்க..தூய்மை இந்தியாவின் சூரப்புளிகள் இந்த திறந்த வெளிகளை சுத்தம் செய்ய கேமராவுடன் வருவார்களா...????

புதன் 10 2014

பாபர் மசூதிக்கு அடுத்து தாஜ்மகால்...

பாபர் மசூதி இடிப்பு
படம்-வினவு.

முன்னோரு காலத்தில் ராமர் பாபர் மசூதியில்தான் ஒன்னுக்கு அடித்தார் என்று இல்லாததை....இருப்பதாக  காட்டி..தொல்லு பொருளு ஆய்வுடன் ஒரு கதையை ஆரம்பித்து கூத்தாடி..கொண்டாடி..சூப்பர் ஹிட்டாக ஆக்கிவிட்டு..அந்த பாபர் மசூதியை ஊத்தி மூடிவிட்டார்கள்.

தற்போது பழைய படத்தின் இரண்டாம் பாகமாக.... பெரும்பாண்மை பலத்துடன் அடுத்த கதைக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டார்கள்.

“பழமையான ஹிந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மகால்” என்று உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமி காந்த பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

தாஜ்மகால் இருக்கும் இடத்தில்தான் தேநோமகாலய கோயில் இருந்தது. அந்தக் கோயில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகலாய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்க்கான ஆவணங்கள் உள்ளன என்றார்.

இந்தக் கதையை தொடர்ந்து ..ராமனோ.. ராமனின் பரிவாரங்களோ.. தாஜ்மகாலன் ஒரு  குறிப்பிட்ட இடத்தில் கழிப்பறையாக பயன்படுத்தி வெளிக்கு இருந்ததாக..தொல்லு பொருளு..ஆய்விலிருந்து ஆவணங்கள் உற்பத்தியாகலாம்........

 இதிலிருந்து  தெரிவது உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாக தாஜ்மகால் எப்படி இருக்கலாம்..

இந்து கோவிலின் ஒரு பகுதி தான் தாஜ்மகால்: உ.பி. பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
படம்--http://www.dinamani.com/

செவ்வாய் 09 2014

இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வுளவு பாதுகாப்பு...




இலங்கை அதிபர் ராஜபக்சே ..திருப்பதி கோயிலில் வரும் பத்தாம்“ தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார். 

இதையொட்டி இலங்கை அதிபர் வந்து செல்லும் ரேணி குண்டாவிமானநிலையம்,திருப்பதி மலைபாதைகள், ஓய்வெடுக்கும் பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகை,திருப்பதிகோயில், வராகசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாதுகாப்பு பணிகளை திருப்பதி ஏஎஸ்பி சுவாமி ஆய்வுசெய்தார்--இவ்வாறு ஒருவர்  பத்த வச்ச பீடியில் புகை இழுக்க மறந்து செய்தி பத்திரிக்கையை வாசித்து முடித்தார்.

அருகில் ஓசி தீப்பெட்டி கேட்பதற்க்காக இவர் வாசிப்பதை பொருமையுடன் கேட்டு கொண்டு இருந்தவர் இப்படிக் கேட்டார்.

“ இந்தாளுக்கு எதுக்குண்ணே..இவ்வளவு பாதுகாப்பு“ என்று கேட்டார்.

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவர். அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு “ ஓசி தீப்பெட்டி கேட்கிற ஒனக்கெல்லாம், சந்தேகம் வந்திருச்சா” என்று நிணைத்தபடி கவுண்டமணி பாணியில்  விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு கொலய செஞ்சவன. கோர்ட்டுக்கு போகயில் போலீஸ்காரன் எப்படி  அவன சூட்டிட்டு போவாங்கே..என்று தெரியுமா..? என்று கேட்டார்.

“கையில விலங்கு மாட்டிட்டு, முன்னாடியும் பின்னாடியும் ரெண்டு போலீஸ்காரங்க துப்பாக்கியுடன் போவாங்கே..” என்றார்.

“ஒரு கொல செஞ்சவனக்கே ரெண்டு  போலீஸ் பாதுகாப்புனா..... ஒரு இனத்தையே அழிச்சவனுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடுவாங்கே” யோசிச்சு பாரு....???

கேள்வி கேட்டவர் பேசாமல் இருந்தார்.

மீண்டும் அவரே .பேசினார். வர்றவனக்கும்..இங்கிருக்கிறவனுக்கும் வாயும் வயிறும்தான்  வேற வேற.... ஆனா “ கொல்லும் சிந்தனை மட்டும் ஒன்னு”ப்பா என்று விட்டு.  அணைந்துபோன பீடியை திரும்ப பத்த வச்சு ..புகையை வெளியே விட்டார்.

ஓசி தீப்பெட்டி கேட்டவர். புகையை விட்டபடியே சொன்னார்.  நீங்க..சொல்றதும் உண்மைதான் “கொலகாரனையும் கொள்ளக்காரனையும் பாதுகாக்கத்தான் போலீசு இருக்குது”



தெரிந்ததும்,தெரியாததும்


முன்னோரு காலத்தில்,“ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம்,ஆகையால் ஆசையை விட்டொழியுங்கள்என்றார்.
புத்தர்.
     
அவர் சொன்னதோடு நிற்காமல் ,அரச மகுடத்தையும்,  அதன் சுக போகங்களையும் துறந்த மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொண்டார் .புத்தர் அரசமகுடத்தை துறக்காமல் எண்ணற்றமாற்றங்களை செய்து மக்களைதிருத்தி வழிநடத்தியிருக்கலாம்.
     
சரி,இது நடக்குற காரியமா? முடியுமா? என்றால்,முடியும் என்றால் முடியும்.முடிந்தவரை முயற்சிப்பது.முடியும்வரை முயற்சிப்பது........என்று சொல்லும் அறிவாளிகளைத்தான் கேட்க வேண்டும். அரசவை மகுடத்தை சுமந்துகொண்டு மக்களோடு மக்களாக இருக்கமுடியுமா?.

முடியாது என்றுதான் அரசமகுடத்தை துர்க்கியெறிந்து துறவறம் ஏற்று மக்களுக்கு போதித்தார். அன்று போதித்தவை இன்று நடைமுறையில் எப்படி உள்ளது.
     
பணக்காரன் ஆசைபட்டால் இன்பம். ஏழைஆசைபட்டால் துன்பம்.ரெண்டா கெட்டான்ஆசைபட்டால் இன்பமும் துன்பமும் மாறி மாறி.   அந்தக் காலத்திலயே பேராசையும், பொறாமையும் ,இருந்த்து என்றால், விஞ்ஞானமும் நாகரிகமும் வளர்ந்து சந்திரனுக்கு தப்பு செவ்வாய்க்கு போயிருக்கிறதென்று சொல்லுகிற இந்தக் காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்து இருக்கும்.தியாகமும் அர்ப்பணிப்பும் அறிவியல்சிந்தனையும் எவ்வளவு குறைந்து இருக்கும். நல்ல பழக்கங்கள் கடு களவும், கெட்டதுகள் மலையளவுமாக உள்ளன.அரசனாக இருந்துகொண்டே மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடமுடியாது என்று தெரிந்துதான் ஊர்ஊராக. சென்று தன்கொள்கைகளை பரப்பினார்.
     
இன்றைய காலகட்டத்தில் நல்லவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் நல்லதுக்காக குரல் கொடுப்பவர்கள் சீர்குலைவுகாராகள் என்றும், கெட்டவர்கள் பிழைக்க தெரிந்தவர், வல்லவர், படித்தவர்கள் என்றும் மாற்றப்பட்டுள்ளனர். நல்லவர்கள் கடுகளவும் கெட்டவர்கள் மலையளவுமாக உள்ளனர்.
     
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.” -----இன்றைக்கு இவை  பொருந்துமா? உங்களுக்கு  தெரிந்த்தை சொல்லுங்கள.. நானும் தெரிஞ்க்கிறேன். “தெரிந்ததுகையளவு, தெரியாததுமலையளவு



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...