செவ்வாய், ஜூன் 07, 2011

சமச்சீர் கல்வி பேராசையை ஒழிக்கும்..சமத்துவத்தை படைக்கும்.
ஆசை இல்லாமல் இருக்க முடியாதுதான்.
அதுக்காக,சாமானியர்கள் பேராசைப்பட்டால்
என்னவாகும் கஷ்டமும் கவலையும் ஏற்படும்..

பேராசையால் விளையும் கஷ்டமும் கவலையும்
பெரும் தொழிலதிபர்கள்ளுக்கும்,பெரும் பணம்
படைத்தவாகளுக்கும்,பெரிய்ய்ய....அதிகாரிகளுக்கும்
குறிப்பாக சொல்வதென்றால் டாடா,அம்பானி,
பிர்லா,மித்தல் இவர்களை துன்பமும் கவலையும்
 ஒருதுளி கூட வாட்டாது. அண்டவும் அண்டாது.

பிறகு, யார் யாருகிட்ட பேராசையால் விளையும்
கஷ்டமும் கவலையும் கொஞ்சி குலாவும் என்று கேட்டால் நடுத்தர மக்களையும் ஏழை பாழை மக்களிடம்தான்.

தமிழ்நாட்டில் கோவை,திருப்புர்,மதுரை,தேனி விருதுநகர்
சென்னை போன்ற நகரங்களில் தனியார்மயம்-தாராளமயம்
காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள் புதுசு புதுசா
முளைத்தன
.
செல்போன்கள் கம்பெனிகள் விளம்பரம்
செய்யுரமாதிரி இந்த தனியார் நிறுவனங்களும் தினிசு
தினிசா விளம்பரங்கள் செய்தன

.எப்படி.?...இப்படி?

குறைந்த காலத்தில் அதிகவட்டி ஆள் பிடிக்காமல்
கஷ்டப்படாமல் வருமானம். இரட்டிப்பு வட்டி

முன்னோரு வருடங்களில், லாட்டரி சீட்டு
விளம்பரம்மாதிரி ,நீங்கள் நடந்து போகலாமா?
பஸ்ஸில் இடிபாடுகளில் பயணம் செய்யலாமா?
கூரை வீட்டில் இருக்கலாமா? லாட்டரி சீட்டு
வாங்குங்கங்கள்.அப்புறம் நீங்கள்தான் லட்சாதிபதி.

ஒரே அடியில் ஆசையுள்ள மூளையை பேராசையுள்ள
மூளையாக மாற்றிவிடுவார்கள்..சாதாரன மக்களும் நடுத்தர
மக்களும் சபலப்பட்டு ஏமாந்து போயி நிற்கிற
வரைக்கும் ஒரே லட்சாதிபதி சிந்தனைதான்.
கூட்டல் பெருக்கல்கணக்குதான்.

 இந்த அய்டெக் நிதிநிறுவனங்களும்
லாட்டரிசீட்டு மாதிரி விளம்பரம் செய்து சபலத்தையும்.
நப்பாசையையும் பேராசயையும் ஏற்ப்படுத்தி பல கோடி
 பணத்தை சுருட்டி விட்டு கம்பி நீட்டிவிட்டன
.இதில் ஒருசிலர் பிடிபட்டு சகல வசதியுடன் கம்பிக்கு
பின்னால் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள.

பேராசையில் சிக்குண்ட மக்கள் சேமித்த பணத்தையும்
 காது,கழுத்துகளில் அணிந்திருந்த நகைகளையும்
விற்றும். அரசுடமை வங்கியில் டெபாசிட் பணத்தையும்
இடையில் முறித்தும் தனியார் வங்கிகளில் முதலீடு
செய்து காத்து இருந்தனர்.லாட்சாதிபதி கணவுடன்.

ஒவ்வொரு நிறுவணமும் தங்கள் படித்த படிப்பின்
திறமைப்படி பணத்தை ஏப்பம் விட்டன.

இனி என்ன?

யாணை வாய்க்குள் போனது திரும்பவா போகுது?
திருட்டு போன நகைகளை மீட்டு உரியவர்களிடம்
ஒப்படைக்கும் காட்சியெல்லாம் இதில்வராது.

இந்த நிதி நிறுவணங்கள் சுருட்டிய பணத்தை போர்க்
கால நடவடிக்கை எடுத்தாலும் வராது.

இந்நேரம் டாட்டா, அம்பாணி,மித்தல் பணம்
என்றால்.மொத்தத்துறையும் இறக்கிவிடப்பட்டு
இருக்கும். இவர்களின் தொழிலுக்கு எந்த தீங்கும்
வரக்கூடாதுன்னுதான் இலங்கையில் தமிழர்களையும்
விடுதலை போராட்ட வீரர்களையும் முள்ளிவாய்க்காலில்
கொன்று குவித்தார்கள்.

 என்ன செய்வது போன உசுருதிரும்பவா போகுது.
 சுருட்டிய பணம் திரும்ப கிடைக்கவா போகுது.
 நம்புங்கள் சுருட்டிய பணம் திரும்ப கிடைக்கும் என்று.  
ஏன்னா, நம்பிக்கைதான் வாழ்க்கையின்னு சொல்றாங்க.

.அம்பானி பிஎஸ்என்எல்க்கு நாமம் போட்ட்து
மோசடியா? சே!சே! மோசடி  இல்லீங்க. திறமைங்க!!

அது மாதிரி நிதிநிறுவணங்கள்  மோசடி பண்ணலீங்க!
தொழில் திறமையை காட்டி இருக்காங்க..
தனியார்  கல்வி நிறுவணங்களும்  இந்தத் 
திறமைக்குத்தாங்க பில்ல அதிகமா?  போடுறாங்க.
அதனாலத்தான் சமச்சீர் கல்வி வேண்டாம் .அந்தக் கல்வியால
திறமைய வளர்க்க முடியாதுன்னு கும்மாளம் போடுறாங்க..

தமிழ்நாட்டுல ஆள் மாற்றம் மூலமா ஆட்சிக்கு வந்திருக்கும் செல்வியம்மாவும் கும்மாளத்தோட கும்மாளமா?

ஆமா! சமச்சீர் கல்விமூலமா தொழில் திறமையை
வளர்க்க முடியாதுன்னு சமச்சீர்கல்விக்கு தடை போட்டுருச்சு.

சமச்சீர்கல்வி வந்தா ஆசை வரும்.ஆனால் பேராசை வராது
.பேராசை வராமல் இருந்தா ஏமாறாமல் இருப்போம்.
ஏமாறாமல் இருந்தா நாம உழைத்த,சேமித்த பணம் பறிகொடுக்க மாட்டோம்..கவலையும்,கஷ்டமும் வீடு தேடி வராது.

சமச்சீர் கல்வியால் கல்வியில் உள்ள ஏற்றத்தாழவு ஒழியும்.

ஒரு பழமொழிசொல்வார்கள் இருக்கிறவன் ஒழுங்கா இருநதா
செரைக்கிறவன் ஒழுங்காசெரைப்பானாம்..
முதலில் நாம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டுமானால்
கல்வி அவசியம். அந்தக் கல்விக்கு
சமச்சீர் கல்வி அவசியம். வருங்கால சந்ததியர்க்கு
வழிவகை செய்யும். அந்த சமச்சீர் கல்வி திமுக
உருவாக்கியது அல்ல. நேர்மையான, நிபுனத்துவம்
வாய்ந்த பேராசையற்ற கல்வியாளர்களால்
பாடுபட்டு கொண்டு வந்தது. பாடுபட்டு வந்த
சமச்சீர் கல்வி வாழ வளர ஆதரவு தருக!!!
ஆதரவு தருக.!!!. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக