வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ஒரு சாமானியனின் கையெழுத்து பிச்சை!!!

அது பெயர் பெற்ற வங்கி. எப்பொழுதும் ஒரே கூட்டம்தான்.அந்த வங்கியில் நுழைந்தால் சட்டுபுட்டுன்னு வேலையை முடிச்சுட்டு வரமுடியாது.

பண எடுப்பு வாங்குவதற்கு ஒர வரிசை,எடுப்பு சீட்டில் எழுதியதை சரி பார்க்க ஒரு வரிசை,பணம் பெருவதற்கு ஒரு வரிசை, கடைசியாக கணக்கு புத்தகத்தில் பதிவு செய்வதற்கு ஒரு வரிசை.இப்படி ஒவ்வொரு வரிசையாக நின்று வேலை முடித்து வருவதற்கு போதும் போதும் என்றாகிவிடும்.

புதிதாக இந்த வங்கி அந்த ஏரியாவில் தொடங்கும்போது,ஒவ்வொரு இடமாகச் சென்று புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தினார்கள் அப்போது வங்கி ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் இந்த புனையும் பால் குடிக்குமா? என்ற அர்த்தத்தில் இருக்கும்.அப்போது அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு இருப்பிடச்சான்றாக ரேஷன் கார்டு, மின்சாரபில், போன்பில், இப்படி ஏதாவது ஒரு சான்றை சமர்ப்பித்தால்அந்த வங்கியில்  வாடிக்கையாளராக சேர்த்துக்கொள்வார்கள். அப்போது கைநாட்டு பேர்வழிக்கு எந்தவித சிக்கலும் இருந்த்தில்லை.சேமிப்புபுத்தகத்தில் ஒட்டப்  பட்டுருக்கும் புகைப்படத்தைக் கொண்டு அவர்கள் முன் கைரேகை பதிவு செய்து பணத்தை பெற்று வந்தார்கள்.

இப்போது அதே வங்கி அதிக வாடிக்கையாளரைக் கொண்ட அதிக வருவாயுடன்   இருப்பதால், புதிதாக ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க முனையும்போது வங்கி அதிகாரிகள் கொழுத்த மப்புடனும் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்வதோடு விதிமுறைகளையும் மாற்றி விட்டுருப்பார்கள்

வசதிவாய்ப்பு,செல்வாக்கு உள்ள வர்களுக்கு வங்கியின் விதிமுறைகள்
வளைந்து கொடுக்கும் அல்லது விதிமுறையே இல்லாமல் இருக்கும்

ஆங்கில அறிவு அறவே இல்லாத அரைகுறை தமிழ் படிப்பு உள்ள ஒரு சாமனியனை வங்கி அதிகாரிகள் எப்படியெல்லாம் அலைக் கழித்தார்கள். என்று பார்க்கும்போது,கைநாட்டு பேர்வழிகளைஅவர்கள் எந்தளவுக்கு அலைகழிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். ஆத்திரமும் வேதனையும் ஏற்ப்பட்டபோது.ஆத்திரம் பிரச்சினைக்குஅறிகுறி! வேதனை நோய்க்கு அறிகுறியாக தெரிந்தது.

ஒரு கைநாட்டுப்பேர்வழி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத் திருந்தால்,. தற்போது  நடைமுறைகளும், விதிமுறைகளும் மாற்றி விட்டதால், தன் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்குஅஅதே வங்கியில் கணக்கு வைத்துள்ளஒருவர் பண எடுப்பு சீட்டில் கையெழுத்தையும் கணக்கு என்னையும் பதிய வேண்டும்

பண எடுப்பு சீட்டில் எழுதியதை சரி பார்க்கும் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.அதிகாரி வங்கி கணக்கு புத்தகத்திலுள்ள போட்டோவை சரி பார்ப்பதோடு அத்தாட்சி கையெழுத்து போட்ட நபரின் கையெழுத்தையும் கணக்கு எண்ணையும்  சரிபார்த்து முத்திரையிடுவார்அதை வாங்கி காசாளரிடம் கெர்டுத்தால் அவரும் கணனியில் சரிபார்த்த பின ஒவ்வொருத்தராக அழைத்து பணத்தை பட்டுவாடா செய்வார்.

இந்த கைநாட்டுப்பேர்வழிக்கு அத்தாட்சி கையெழுத்து போட வில்லை யென்றால். என்ன அவசரத்துக்கும் தேவைக்கும் இழுத்துக் கெடந்தாலும் படுத்துக்கெடந்தாலும் அவரவரின் சேமிப்பு பணத்தை வாங்கமுடியாது.

கைநாட்டு நபர் ,வங்கிக்கு வருபவர்களிடம் .தெரிந்தவர்கள் என்றால் உரிமையுடனும் தெரியாதவர் என்றால் கெஞ்சியும் கையெழுத்து பிச்சை கேட்கும் நிலையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படிபட்ட கையெழுத்து  பிச்சை எல்லா வங்கிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த கையெழுத்து பிச்சை ஒவ்வொரு வங்கி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தெரிந்து இருந்தும். இந்த பிச்சையைப.பற்றி அவர்கள்  அலட்டிக் கொள்வதில்லை.


இப்படித்தான்.அவரின் தாயார் கைநாட்டுடன் அந்த  வங்கியில் சேமிப்பு  கணக்கு வைத்திருந்தார்.ஆரம்பத்தில் அந்தத்தாயாருடன் மகள் வயிற்றுப் பேரன் சென்று. அந்தத்தாயாரின் பென்சன் பணத்தைப் பெற்று வந்தார்.அடிக்கடி வங்கிக்கு சென்று வந்ததாலும் பேரனின் வங்கி அதிகாரியின் பழக்கவழக்க நட்பினாலும் பிரச்சினையில்லாமல் பெற்று வந்தார்.

ஒருநாள் தெரிந்த வங்கி அதிகாரி மாறினார்.பேரனும் டூவீலர் விபத்தில் கால் அடிபட்டு மருத்துவ மனையில் கிடக்க

அந்தத் தாயாரின் மகன் வங்கிக்கு சென்ற போது முதல் நாளே கையெழுத்து பிச்சை தொடங்கியது. அவருக்கு தெரிந்தவர் யாருமில்லை.நாலைந்து பேர்களிடம் கேட்டு கையெழுத்துஅபிச்சை கிடைக்கவில்லை.. அவருடைய தாயாரோ வங்கிக்கு வரும் நபர்களை ஒவ்வொருத்தராக பார்த்து அவரிடம் கேள்,இவரிடம் கேள் என்று சொல்லி,அவருக்காக கேட்டும் மழுப்பலாகவும், நழுவுதலுமாக பதில் இருந்தது. இப்படி மூன்றுமாதமாக கையெழுத்து பிச்சை கிடைக்காததால் பணம் எடுக்கமுடியவில்லை..

ஒருவழியாக இவரும் முயற்சி செய்தும் பலன் கிடைக்காததால் வங்கி மேலாளாரை போய் பார்த்தார்.

“வணக்கம் சார்,இவுங்க என்னுடைய அம்மா, இவுருடைய வங்கி பென்சன் பணத்தை எடுக்க முடியவில்லை.வங்கி கணக்கு புத்தகத்திலுள்ள போட்டோவையும்  இவரையும் ஒப்பிட்டு பார்த்து, உங்கள் முன் கைரேகை பதிவு செய்து பணம் கிடைக்க உத்திரவிடுங்கள் சார்.”

அப்படி,நான் உத்திரவு இடமுடியாது.வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர் அத்தாட்சி கையெழுத்து  வாங்கி சமர்பித்தால்தான் பணம் வழங்கமுடியும்.” என்றார்

“யாரும் கையெழுத்து போட  மறுக்கிறார்களே? சார்”.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்.” என்றார் மேலாளார்

“நீங்கள் பார்த்து  எதுவும் செய்யலாம் சார். தயவு செய்து மாற்று வழி எதாவது சொல்லுங்க சார்,”

மதிய உணவு இடைவேளை  வந்ததால் ,சாப்பாட்டு நேரமாச்சு போயிட்டு  நாளைக்கு வாங்க.” என்றார் மேலாளார்.

தெரிந்தவர்களிடம் வங்கி கையெழுத்து பிச்சையைப் பற்றி பகிர்ந்த பொழுது. ஒருவர் சொன்னார்.

“தலகீழா நின்றாலும் ஒருத்தர்க்கிட்டகூட கையெழுத்து வாங்க முடியாது. பேசாம,உங்க பேர்ல ஒரு கணக்க தொடங்குறதுதான் நல்லது.நீங்க அத்தாட்சி கையெழுத்துக்கு மாதம்மாதம் பிச்சை எடுக்கறதைவிட. ஒரே தடவை  அறிமுக கையெழுத்து பிச்சை வாங்கிட்டா, அப்புறம் கையெழுத்து பிச்சைக்கு வழியே இருக்காது எதற்கும் அந்த வங்கி மேலாளாரை கேட்டுக்குங்க”

மறுநாள்,வங்கி  மேலாளரிடம் சென்று. சேமிப்பு பாரம் ஒன்னு கேட்டு வாங்கினார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள பாரத்தை ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவியால் பூர்த்தி செய்தார். இருப்பிடச் சான்றாக தேர்தல் அடையாள அடடையைடிநகல் எடுத்துக் கொண்டு தெரிந்த நபர்கள் யாராவது வருகிறார்களா? என்று பார்ப்பதற்க்காக? முன்கூட்டியே வங்கிக்கு சென்று காத்திருந்தார்

நெடுநேரம் கழித்து ஒருவர் வநதார். அவரிடம் விபரத்தைச் சொல்லி கையெழுத்து  பெற்றார். கையெழுத்திட்ட முத்து குமாருக்கு நன்றி சொல்லி விட்டு, வங்கி மேலாளரிடம் பாரத்தை நீட்டினார்.

அவர் மனுவை வாங்கி சரிபார்த்துவிட்டு  போட்டோவையும் அவரையும் ஒப்பிட்டு பாரத்து, போட்டோவில் இருப்பது நீங்கதானே? என்று கேட்டபடியே. பாரத்தில்  இரண்டு இடங்களில் கையெழுத்திட்டார்.

“ஆமா சார்,என்றபோது,பாரத்தை இவரிடமே தந்து “பண எடுப்பு சீட்டு” கொடுக்கும்  மேடத்திடம் கொடுக்குமாறு பணித்தார்.

மேடம், பாரத்தை வாங்கி பார்த்துவிட்டு, போட்டோ பழசா இருக்கு, புதுசா கலரில் எடுத்து ஒட்டி நாளைக்கு வாங்க என்றார்

இல்லீங்க,மேடம், மூனு நாளுக்கு முன்னதான் போட்டோ எடுத்தது.கருப்புல எடுத்ததுல, அப்படி பழசா தெரியுது .

மேடம், தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். பாரத்தை  மறுபடியும் பார்வையிட்டார்.

“ஆமா,ஜாயின்ட் கையெழுத்து போட்டது யாரு? எனறார்.

“எங்க வீட்டுக்கு பக்கதில் இருக்கிறவர். என்றபோது.

“அவர கூப்பிடுங்க”,

“வீட்டுக்கு போயிட்டாருங்க மேடம்!”.

அப்போ, நாளைக்கு அவர கூட்டிகிட்டு வாங்க, வரும்போது கலர் போட்டோ ஒட்டிவாங்க.”


அதிகாலையில் கையெழுத்திட்ட முத்துக்குமாரை தேடி போன போது,அவர் குடியிருந்த வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்ததில்.வீடு மாறியிருந்த விபரம் தெரிந்தது. புது முகவரியும்  கிடைக்கவில்லை. பாரத்தில் புது போட்டோஒட்டி ,இனி யாரிடம் கையெழுத்து பிச்சை வாங்கலாம் என்று
சிந்தித்தபடி  மெதுவாக  நடந்து வந்தார். அப்போதுஇவருக்கு வேலை கொடுத்து வேலையும் கற்று தந்த முன்னால் ஓனர் இவரின் பாஷையில் முன்னால் பாஸ் மாதிரி ஒருவரைக் கண்டதும், அவரின் பாஸ் நினைவுக்கு வந்ததும். அப்பொழுதே அவரைத்தேடிச் சென்றார்.

அவரின் பாஸை சந்தித்து விபரத்தை சொன்னார். பாஸ் இவரையும் தாயாரையும் உடல்நலம் விசாரித்து பாரத்தில் கையெழுத்திட்டு முத்திரை போட்டு அனுப்பி வைத்தார்.

மறுநாள் புதுத்தெம்பாக முகக் களையுடன் மேடத்திடம் பாரத்தை கொடுத்தார். கொடுக்கும் போது.

“மேடம், முத்துக்குமார்,ஊரு்க்கு சென்றுவிட்டார்.அதனால் வேறு கையெழுத்து  வாங்கியுள்ளேன். மேடம்,.”

பாரத்தை வாங்கிய மேடம், சிறிது நேரம்  காத்திருக்குமாறு பணித்தார் . எழுந்து சென்ற ஒருவரின் இருக்கையில் நிம்மதியுடன் அமர்ந்தார். சிறிது நேரத்தில் சைகையால் அழைத்த மேடம்.

“இவர் கையெழுத்து போடக்கூடாது. வேறு நபரிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள் -என்றார்

இவருக்கு கோபம் வந்துவிட்டது.“என்னம்மா....என்ன? .........ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொன்னா ....சொல்லிகிட்டு இருக்கீங்க....சத்தம் போட்டார்.

சத்தத்தைக் கேட்டதும் வங்கி செக்யுரிட்டி ஓடிவந்தார்.

“சத்தம் போடாதிங்க,”மேலாளரை பாருங்க என்றார்.

மேலாளர் பாரத்தை வாங்கிப்பார்த்தவிட்டு.தன்க்கு அருகிலுள்ள அதிகாரியிடம் நீட்டினார். கணனியில் பார்த்துவிட்டு மேடம் சொன்ன பதிலையே சொன்னார்.

“இவர் போடக்கூடாதுங்க, வேறு கையெழுத்து வாங்கி வாங்க,

சத்தமா சொல்லுங்க, ஒன்னும் கேடகல சார்,“

“நல்லா சாப்பிட்டு வரவேண்டியதுதானே?”

“நீங்க சாப்பிட்டுதானே வந்தீருப்பீங்க, கொஞ்சம் சத்தமா?
சொல்லுங்க,“

சிரித்தபடியே,பாரத்தை இவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள் இதனை கவனித்த  வங்கி செக்யுரிட்டி வேறு ஒரு நபரிடம் இவரின் பிரசனையை  சொல்லி அறிமுகப்படுத்தினார்.அவர் இவரிடம்.

“இந்த வங்கியின் மெயின் ஆபிஸ் உள்ளது.அங்க போயி உங்க பிச்சினையை  சொல்லுங்க உடனே பைசலாகும்.”என்றார்.

இவர் வங்கியை விட்டு  வெளியே வந்து..கையெழுத்திட்ட அவரின் பாஸ்க்கு  போன்செய்து விபரத்தை சொன்னார்

அவரின் பாஸ்-ம் ஏன்? எதற்கு என்று கேட்டார்.

தெரியவில்லை சார்? சொன்னா என்க்கு புரியாதுன்னு சொல்லிட்டாங்க  சார்.”

“எங்கேயிருந்து பேசுறிங்க?”

“ வங்கிக்கு அருகில் இருந்துதான் சார்.”

அஙகயே இருங்க ,எங்கயேயும் போயிறாதிங்க,சீக்கிரத்தில் அங்க நா....ன் வந்திடுறேன்.”

வங்கியிக்குள் நுழைந்த போது.செக்யுரிட்டி கேட்டார். விபரத்தை சொன்னவுடன்  இருக்கை கொடுத்து உட்காரச் சொன்னார்.

பாஸ் வந்தார்.வங்கி மேலாளாரைப் பார்த்தார். அவர் சொன்னதை கேட்டுவிட்டு,  பாரத்தில் வேறு ஒரு கணக்கு எண்னை எழுதி கையெழுத்  திட்டார். பாரத்தை திரும்பவும் மேடத்திடம் கொடுக்கும்போது. பாஸ்  உடனிருந்ததால்.தாயாரின் பென்சன் பணத்திற்காக கையெழுத்து பிச்சைக்காக அலைந்ததையும் முத்துகுமார் கையெழுத்து பற்றியும் ,சத்தம்போட்டதையும் விலாவாரியாக ஒப்புவித்தார்.


பிறகு பாஸ., .இவரின் முதுகை தட்டிக்கொடுத்து, இனி ஒன்னும் பிரச்சினை யில்லை  முடித்து விட்டு வாருங்கள் என்று கூறிச்சென்றுவிட்டார்.


அதன்பின் அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மேடத்திலிருந்து மேலாளாருக்கும். மேலாளாரிடமிருந்து வேறு ஒரு மேடத்திற்கும் அந்த மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்,திரும்பவும் மேலாளாரிடமிருந்து மாடியில் உள்ள ஒரு மேடத்திற்கும் மாடியிலுள்ள மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்.மேலாளாடமிருந்து பழைய மேடத்திற்கும் அவரின் பாரம் சென்றது.

இறுதியாக.கவுண்டரில் பணம் கட்டப்பட்டு அவருக்கு வங்கி பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது.

இப்படியாக, விடாப்பிடியாக,போராடியதன் விளைவாக அவருடைய வங்கியின் னையெயழுத்துப் பிச்சை  முடிவுக்கு வந்தது்.

..

8 கருத்துகள்:

 1. //அதன்பின் அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மேடத்திலிருந்து
  மேலாளாருக்கும். மேலாளாரிடமிருந்து வேறு ஒரு மேடத்திற்கும்
  அந்த மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்,திரும்பவும்
  மேலாளாரிடமிருந்து மாடியில் உள்ள ஒரு மேடத்திற்கும்
  மாடியிலுள்ள மேடத்திடமிருந்து மேலாளாருக்கும்.மேலாளா
  டமிருந்து பழைய மேடத்திற்கும் அவரின் பாரம் சென்றது.//

  ஹா ஹா..., வலிபோக்கன் சார், ஏன் இந்த கொலைவெறி? கதையாக இருந்தால், சிரித்துப் படித்தேன். ஒருவேளை உண்மையாக இருந்தால், பாவம் :(

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் சார், உண்மையைத்தான் கதையாக சொல்லியுள்ளேன் சார்

  பதிலளிநீக்கு
 3. கொடும,கொடும,இரக்கமின்றி நிறைய இடங்களிள் மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்பது கண் கண்கண்ட உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 4. அதுவும் படித்த மனிதர்கள் அதிகம் சார்.

  பதிலளிநீக்கு
 5. தனியார் நிறுவனமா அல்லது அரசு நிறுவனமா? அநேகமாக ஸ்டேட் பாங்காக இருக்கும் என்பது என் கணிப்பு.. கரெக்டா?

  பதிலளிநீக்கு
 6. தனியார் வங்கியில பென்சன் பணமெல்லாம் வாங்க
  முடியாது. அரசு நிறுவனம்தான்.ஸ்டேட்பாங்கில்
  கைநாட்டா கிட்டத்திலயே வரக்கூடாதுன்னுட்டாங்க.
  கனரா பேங்க்குங்க.!

  பதிலளிநீக்கு
 7. ஃஃஃஃ“இவர் போடக்கூடாதுங்க, வேறு கையெழுத்து வாங்கி வாங்க,ஃஃஃஃ

  அங்கேயும் இதே கதை தானா ?


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

  பதிலளிநீக்கு