சனி 19 2011

அதிகாரம் அவர்கள் கையில்!!!

கார்த்திகை மாதம்
பனியும் துவங்கிவிட்டது
அய்யயோ அப்பனுக்கு
விரதமிருக்கும் காலமும்
துவங்கிவிட்டது.

பனிக்கும் விரதத்திற்கும்
கதகதப்பாக தமிழகத்து
ஆத்தா ரங்கநாயகியின்
அருளும் துவங்கி விட்டது

ஆடு மாடு,பேன்,மிக்ஸி
கிரைண்டர் இலவச அரிசி
அருளாக பெற்றவர்கள்
பால்,பஸ் விலை உயர்வை
அருளாக பெற்றனர்.

பெரும்போது இருக்கும் இனபம்
கொடுக்கும்போது இருப்பதில்லை
இது தமிழகத்து மக்களின்
நீங்கா நிலை.

இப்போது குமுறினாலும்
மறித்தாலும் ஒன்னும்
ஆகிவிடப்போவதில்லை
 குமுரலையும் மறியலையும்
விரட்டியடிப்பதற்குதான்
எப்போதும் ஒரு பட்டாளம்
தயராக இருக்கிறது.

ஒவ்வொரு திருவிழாவின்
போது மதி மயங்கித்தான்
போய்விடுகிறீர்கள்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
என்றுலில்லாமல்
மீண்டும் பழையனவற்றையே
புகுத்தி விடுகிறீர்கள்

அய்ந்து வருடத்திற்கோர்முறை
வரும் திருவிழாவில்-அவர்களின்
புாசாரித்தனமும் வேண்டாம்
அவர்கள் கொடுக்கும் பொங்கச்
சோறும் வேண்டாம்- மறுத்திடுங்கள்
என்று புரிந்தவர்கள்.அறிந்தவர்கள்
நல்லவர்கள் சொன்னபோது

ஒருநாள் பொங்கின பொங்கச்
சோற்றுக்காக வரிசையில் நின்று
அங்கீகாரம் கொடுத்தீர்கள்
பெருவெள்ளமாய் இல்லாமல்
சிறுதுளியாய் இருந்தவர்கள்
சொன்னார்களே! அங்கீகாரம்
வழங்குவதை புறக்கணியுங்கள்
என்று ! சொன்னதைபுறக்கணித்ததால்
இத்தனைக் கொடுமைகள்

இன்னும் கொடுமைகள் தொடரும்
அரங்கேரும் அங்கீகாரம் கொடுப்பது
நிறுத்தாதவரை...... இதை புரிந்து
திடமனதுடன் செயலில் இறங்கும்
வரை... அதிகாரம் அவர்கள் கையில்
.............................


5 கருத்துகள்:

  1. இலவச பொருட்களை விட மான்ய சேவைகளையே மக்களுக்கு வழங்க வேண்டும்! - போக்குவரத்து, கல்வி, மருத்துவம் இது போதும்! வீடு கூட அவரவர் கட்டிக் கொள்வர்!

    பதிலளிநீக்கு
  2. இதற்க்கு எல்லோரும் ஒரு மாற்று வழி ஆராய்ந்து அதை ஆரோக்கியமாய் விவாதித்து ஒரு முன்முயற்சி எடுத்தால் ஒழிய... விடியாது

    பதிலளிநீக்கு
  3. // ஆடு மாடு,பேன்,மிக்ஸி
    கிரைண்டர் இலவச அரிசி
    அருளாக பெற்றவர்கள்
    பால்,பஸ் விலை உயர்வை
    அருளாக பெற்றனர்.//


    அருமை சகோ!
    ஒவ் வொரு வரியும் ஆணி
    அடித்தாற் போல!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...