சனி 03 2011

வள்ளலுக்கு பிச்சையிட்ட மடா அதிபதிகள்!!!

மதுரையில் தமிழ் சங்கம் நிறுவி
தன் வாழ்நாளை தமிழ் வளர்ச்சிக்கு
அர்ப்பனித்த வள்ளலை-மறக்கா
திருக்க நினைவு மணி மண்டபமும்
அவரின் பெருமைக்கு தபால் தலையும்
நுாறு வயதுக்கு அரங்கமும் வேண்டி
ஆத்தாவிடம் வரம் கேட்டு நிற்க............

வள்ளலுக்கே இந்தக் கதியென்றால்
மதுரையும் திருவாடுதுறையும்
தனித்தனியாக ஒரு லட்சமும்
திருவாடுதுறை அட்வான்சாக
பத்து ஆயிரமும் வழங்கி......“தமிழ்
வளர்ந்தால் தமிழன் வளருவான்”
எனமடஅதிபதிகள் செப்புரைத்த
செப்புக்கு என்ன கதியோ?????

தமிழ் வளர்ந்தால் எந்தத் தமிழன்
வளருவான் என்றன் வினாவில்
வினவியபோது உரைத்தார் ஒருவர்

கஞ்சிக்கில்லா தமிழனை வளர்த்து
செய்த பாவ கருமங்கள் தொலைய
தான தருமங்கள் பல செய்து அதனால்
வள்ளலு பெயர் சூட்டப்பட்டதென்றார்.

காலை மாலை இரவு மூன்று வேளை
ஓதி இடைவெளியில்லாமல் உண்டு
கொழுத்த உடலை குறைக்க யோக
ஆசனம் செய்து ஞானம்பெற்று அதனால்
விழாவில் கலந்து செப்புகிறார்கள்
மடஅதிபதிகள்............................................

ஏழைத்தமிழனை சாதி வெறியில்
தள்ளிகூறுபோட்டு ஆதிக்கத்தை
 நிலை நாட்டும் சாதி வெறித்தமிழன்.

சாதிவெறி குலதெய்வத்தை தேசிய
குலதெய்வாக உயர்த்த அரும்பாடு
படும் அருந்தமிழன்............................

இச்சகம்பேசி அகம்வளர்க்கும் தமிழன்
தானுண்டு தன் குடும்பமுண்டு உயர்ந்து
வாழும் அண்டாத தமிழன்..........................

தமிழ் வளர்ந்தால்.இந்தமிழன்தான்
வளர்வான்....என்றாரே அவர்!!!!...................

2 கருத்துகள்:

  1. தமிழன் வாழும் வரை தமிழ் சாகப் போவதில்லை, ஆனால் தமிழை வாழ வைக்கப் போகிறோம் என்று தமிழனை சிறுக சிறுக கொள்வது முரணாகவே உள்ளது..

    பதிலளிநீக்கு