ஞாயிறு 15 2012

ஏமாற்றுபவர்களுக்கும் வேறு வேலை இல்லை! ஏமாறாமல் இருப்பதற்கும் வழியில்லை!

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!
ஏமாறாதே! ஏமாறாதே!-ஒரு பாடல்
அடிமைப்பெண் என்ற படத்தில் எம்ஜியார்
வாயசைக்க டி.எம் சௌந்தராஜன் பாடிய
பாட்டு. அந்தப் படத்துல வாயசைச்சவரும்
அந்தப்பாட்டுக்கு ஆடட்டம் போட்ட
 ஆத்தாளும்தமிழக மக்களை கரும்புள்ளி,
 செம்புள்ளிகுத்தி ஏமாற்றியதையே
 இப்பவரைக்கும்தெரியாமல் தகிடுதத்தம்
போட்டுகிட்டுஇருக்ககையில.கூடவே பழகி
ஏமாத்துகிறவர்களைக் கண்டு ஏமாறாமல்தான்
இருக்கமுடியுமா? பெரிய்ய.....பெரிய்ய.....
ஆட்களெல்லாம்முழிக்கவச்சு ஏமாத்துறப்போ?.
சாதாரனமக்களும் அவர்களுக்கு தெரிந்த வழியில்
ஏமாற்றுவதிலிருந்து தப்பி எப்படி ஏமாறாமல்
இருக்க முடியும்...

பத்தக்கு ஒன்பது தடவை நானும் ஏமாந்து
இருக்கிறேன்.அந்த ஒரு தடவை நான்
சுதாகரிக்கஇரக்கமுள்ள ஏமாற்றுகாரர்
களால் தப்பிக்கப்பட்டுள்ளேன்.இப்படி...

செய்தித்தாளில் வந்த ஏமாற்றிய
பெண்னும் ஏமாறிய மூதாட்டியைப்
பற்றிய விடயம் ஒன்று

அரசு மருத்துமனையில் மூதாட்டி
ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்தார்.

அந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த
வார்டுக்குவந்த பெண் ஒருவர். மூதாட்டி
யிடம் பாசமாய் பேசினார்.

திரையில் கண்டதையே கண்டு மயங்கி
திரியும்நம்ம மக்கள், நேரில் பேசியதைக்
கண்டு மயங்காமல் இருக்க முடியுமா?

அப்படித்தான்.அந்த மூதாட்டியும்
அந்தப்பெண்ணின்பேச்சிலும் செய்த
பணிவிடைகளிலும் மயங்கிப்போனார்

மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டு
பவுன் சங்கிலியைப்பார்த்து அய்ந்து
பவுன் சங்கிலி மாதிரியில இருக்குன்னு
சொன்னதுல, நகையின் மதிப்பின்
பெருமையில் மூதாட்டிமயங்கிவிட,
பார்பதற்க்காக செயினை கழற்றி
பெண்ணிடம் கொடுக்க...........

ஆச்சரியத்தால்.மிதப்பதுபோல் பார்த்து
 தன் கழுத்தில் போட்டுகண்ணாடியில்
ரெண்டு பவுன் செயின் எப்படி அய்ந்து
பவுனாகதெரிகிறது என்று பார்ப்பதற்க்
காக கண்ணாடியைத் தேடி அந்தப்
பெண் புறப்பட்டுவிட்டார்.

பழைய நகைக்கு பாலீஸ் போட்டு புதுசா
மாத்தி தருவதாக ஏமாற்றும் வழிகளில்
வாய்ப்பிளந்து ஏமாறுவது போல்,அந்த
மூதாட்டியும் சொக்கி போய்விட்டார்.

கண்ணாடியைத்தேடிப்போன பெண்ணும்
வரவில்லை.மூதாட்டியும் நகையும்
கிடைக்கவில்லை.

இருந்த நகை போன சொகத்தில் மூதாட்டி
 மருத்துவமனைகாவல் நிலையத்தில்
புகார் செய்ய, நகையுடன் கண்ணாடியைச்
தேடிச்சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.

பின் குறிப்பு. - கண்ணாடியைதேடிச்
சென்றப் பெண் இப்படியும்சொல்லக்
கூடும்.நாடே கொள்ள போகுது.அத
தடுக்கவும்,பிடிக்கவும் துப்புஇல்ல
.இந்த ரெண்டு பவுனுக்கு என்னைய
வலைவீசி தேடுகிறார்களாக்கும்.


2 கருத்துகள்:

  1. ஏமாற்றப்படும் முன்னே 'நாம் ஏமாற்றப் படுகிறோம்' என்பதற்கு அறிகுறியாக மனதில் ஒரு சிறு அவஸ்தை கிளம்பும்..
    அப்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.. நல்ல பதிவு... பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...