செவ்வாய் 22 2012

பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..

தமிழகத்தை மாவோயிஸ்ட் களமாக்க திருமண நிகழ்ச்சிக்கு
வந்த மாவோயிஸ்ட்ன் தமிழக தலைவர்கைது. தமிழகத்தலைவர்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கொடைக்கானல்
சிறுமலை,முருகமலை பகுதிகளில் நக்சலைட்கள் பதுங்கி
உள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டை.

மதுரைச்சிறையில் தமிழக தலைவரும்,நக்சல் இயக்கத்தின்
இன்னொரு தலைவரும் ஆக இரண்டு நக்சல் தலைவர்கள்
அடைக்கப்பட்டதால் சிறையைச்சுற்றி போலீசு ரோந்தும்
இரவுப்பணிக்கு கூடுதல் பொலீசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் செல்லும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
விதிப்பு,தமிழகத்தலைவரை சந்திக்க வழக்குரைகளுக்கு தடை

மாவோயிஸ்ட்தமிழக தலைவர்.மற்ற கைதிகளை பார்க்கவோ,
பேசவோ,அறையைவிட்டு வெளியே வரவோ அனுமதியில்லை
தமிழக பிரிவு தலைவரின் உறவினர்கள்.மற்றும் நண்பர்களிடம்
தீவிர விசாரனை.

மேற்கண்ட விவரங்கள் அணைத்தும் தமிழக அரச பயங்கரவாதிகள்
பீதியடைந்து பீதியூட்ட வெளிப்படுத்தும் நடவடிக்கைகள். ஜன
நாயகத்தின் நாலாவது தூண் அலறி வாந்தியெடுத்தவைகள்.

வில்லாதி வில்லன்,வீராதி வீரன் போலீசின் செய்திகளை படிக்கும்
போது ஒரு கதைதான் நிணைவக்கு வருகிறது.

அஞ்சா நெஞ்சன்( கருனாநிதியின் மகன் அல்ல) மாவீரன் என்று
சொல்லப்படுகின்ற நெப்பு என்ற நெப்போலியன், பூனையை கண்டு
நடுங்கும் பயந்தாங்கொல்லி.

இப்பேர்பட்ட பயந்தாங்கொல்லியை. மெல்லக்கொல்லும் விஷத்தை
கொடுத்துதான் கொன்றார்களாம்.

அதுமாதிரி.படைபலமும் அதிகார பலமும் பண பலமும்உள்ள போலீசு ,
 படைபலமும் பணபலமும் ஆள்பலமும் இல்லாத கம்யூனிச
 தலைவர்களின் சிந்தனை ஒன்றை வைத்துதுக்கொண்டு செயல்பட்டு
வருபவர்களை தீவிரவாதிகளாக,கொலைகாரர்களாக தமிழ்நாட்டு
இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அதன் மூலம்
இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாடு கம்யூனிசநாடாக
மாறிவிடுவது மாதிரி பெரிய பூச்சாண்டி காட்டி அதை தடுப்பதாக
வேஷம் கட்டி தங்கள் பவரைகாட்டி வருகிறார்கள்.

ஊழலும்,அதிகார முறைகேடுகளும் விலைவாசி உயர்வும் வேலை
இல்லா கொடுமையும் பெருகி கிடககும் நாட்டில் இதுக்கெல்லாம்
காரணமானவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் அவர்களின் நிழலை
கூட தொடமுடியாத மத்திய உளவுப்படையும் மாநிலப்படையும் கீறல்
விழுந்த பழைய ரிக்கார்களையே திரும்பத் திரும்ப ஒலி-ஒளி பரப்பி
வருகிறார்கள் என்பது அ..ஆவன்னா படித்தவர்களும்,படிக்காத
பாமரர்களும் அறிந்தும் புரிந்தும் வந்துள்ளார்கள். பரபரப்பாக செய்தி
வெளியிட்டாலும். இவர்களுக்கு வேறு வேலையில்லை என்றே
புறந்தள்ளுகிறார்கள்.

குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டவேண்டுமென்றால் கக்கியதை
நக்கி கக்குவதை தவிர வேறு வழியில்லை..அதனால்தான் இப்படி பீதி
ஊட்டுவதும், பத்திரிக்கைகள் வாந்தி எடுப்பதும், பொது மக்கள் கண்டு
கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக நீள்கிறது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...