புதன் 01 2013

இறையச்சம் கொண்ட மக்கள்........



 
ஒரு ஊருக்கு ஒரு சாமியார் அவரது சீடர்களுடன் வந்தார். அந்த ஊருக்க வெளியே உள்ள தென்னந்தோப்பில் டேரா போட்டார். காலையில் தியாணமும் உடற்பயிற்சியும் மாலையில் அவ்வூர் மக்களுக்கு ஞான உபதேசமும்  ஆசீர்வாதமும் செய்து வந்தார்.

மாலையில்  நடந்த உபதேசத்தில், கோபத்தைப்போலவே அச்சத்துக்கும் நாம் பயப்படவேண்டும் என்று ஊர் மக்களுக்கு அருள் பாவித்தார்.

நம்மைப் படைத்து பரிபாலித்து காக்கும் கடவுளுக்கு மட்டும் பயந்தால் போதுமானது என்றார். கடவுளுக்கு பயப்படாமல் போனதால்தான் நாட்டில் வன்முறையும் சீர்குலைவும் தலைவிரித்தாடுகிறது என்றார்.

 சாமியாரின் கூட்டத்தில் அமர்திருந்த அவ்வூர் மக்களில் பலர்

“சாமி, நீங்கள் சொன்னபடியேதான் நாங்களும் எங்கள் முன்னோர்களும்  இறைவனுக்கும் ஊரில் உள்ள பெரிய  மேன்மக்களான பணக்காரர்களுக்கும் பயந்து இறை அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். அப்படியிருந்தும் இறைவன்   எங்களை  ஏறேடுத்தும் பார்ப்பதில்லை எங்களுக்கு எந்த ஆசியும் வழங்குவதில்லை. பணக்காரர்களை மட்டும்தான் அவர் பார்த்துக் கொள்கிறார்.  நீங்கள்தான், கடவுளிடம் சொல்லி, எங்களையும்  பணக்காரர்கள் ஆக்க ஒரு வழி காட்ட வேண்டும் என்றனர்.

பணக்காரர்களுக்கு இறையச்சம் இல்லாமல் போனதினால்தான் இவ்வளவு விளைவு என்றுவிட்டு  இருந்தாலும் பணக்காரர்கள் செய்யும் தான தருமங்களில் கடவுள் மயங்கி விடுகிறார். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும்  இறையச்சத்துடன் இருந்தால் கடவுள் உங்களுடனே துணையிருந்து உங்களுக்கும் அருள் காப்பார் அதற்கு நான் கேரண்டி என்றார்.

அந்த ஊர் மக்களும்,  சாமியார் சொன்னதை அருள்வாக்காக நிணைத்து கொண்டு,அச்சம் என்பதை அறிவுடமையாக்கி,  தனக்கு மேல் இருப்பவர்களுக்கு பணிவு காட்டி மனதில் அச்சம் கொண்டு  தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கோபம் கொண்டு  மிரட்டி அடக்கி ஒடுக்கி வந்தனர். 

இப்படி ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை மிரட்டியும் அடக்கியும் அதிகாரம்  செலுத்தி ஆண்டான் அடிமை  என்ற அச்சத்தை விதைத்து    இறைவனிடம் இறையச்சம் கொண்டவர்களாக  வாழையடி வழையாக வாழ்ந்து வந்தனர்.



5 கருத்துகள்:

  1. 1.7 லட்சம் கோடி கொள்ளையடித்த குடும்ப அரசியல் நடத்துபவர் எந்த கடவுளை நம்பினாரோ?

    பதிலளிநீக்கு
  2. /* 1.7 லட்சம் கோடி கொள்ளையடித்த குடும்ப அரசியல் நடத்துபவர் எந்த கடவுளை நம்பினாரோ? */

    porombokku saibabavathan

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2 மே, 2013 அன்று AM 7:11

    கடவுள் நம்பினாலும், நம்பா விட்டாலும் அதிகாரம் வந்தால் சுயநலமும், தீமையும் வந்துவிடும்... ! என்ன கடவுள் என்பது மதம் என்றக் கட்டமைப்பை உருவாக்கி, கணிசமான மக்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். அதாவது மதங்கள் உருவாவதே அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு திட்டமே. பாருங்கள் கடந்த 5000 ஆண்டுகளாக அதிகாரங்களைப் பெறவும், தக்க வைக்கவுமே கடவுளும், மதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இளைத்தவர்களை கொன்றும், கொடுமைப் படுத்தியும், கற்பழித்தும், உழைப்பைச் சுரண்டியும் அப்பப்பா !

    இங்கு கடவுள் இல்லாத ஒரு கட்டமைப்பை சிற்சில சமயங்களில் ஏற்படுத்தி அதிகாரத்தை தக்க வைத்தார்கள், அது நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. அவ்வாறான நிலையில் கொள்கைவாதங்கள் மக்களை கட்டுப்படுத்தும், ஆனால் அது வெற்றி தருவதில்லை. குறிப்பாக கம்யூனிசம்.. !

    கடவுள், மதங்களுக்கு மக்கள் எளிதாக மயங்குவார்கள். கொள்கைவாதங்கள் ரொம்ப நாளைக்கு நிற்காது.. அவ்வளவே !!! மதங்களை ஒழிக்க வேண்டும், அல்லது அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது சமத்துவத்தை ஓரளவுக்கு கொண்டு வரலாம்.. ! இங்கு பொருளாதார சமனீடும் தேவை... !

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைத்த அணைவருக்கும் நன்றிகள்!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...