சனி 22 2013

மாநகராட்சி பாதையை தனது பாதையென பக்கத்து வீட்டுக்காரன் மீது வழக்கு தொடுத்த ஒரு தெருநில மன்னன்



ஆள்பலமும் பணபலமும் இல்லாதவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தன்கூத்தியாளுக்கும் தான் வாடகைக்கு விட்டுள்ள வீட்டிற்க்கான வழி நடை பாதையாக்கி பயன்படுத்தி வருவதோடு, இடத்துக்காரன் எதிர்க்காதவாறு பல இம்சைகளை கொடுப்பதோடு,புதிய இம்சையாக, அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால் மாநகராட்சி பாதையை உனக்கு விட்டுக் கொடுப்பேன் என்று மிரட்டியும், இடத்தை பறி கொடுத்தவன் பணியாததால் வீம்புக்கு மாநகராட்சி பாதையை தனது பாதையென்றும்,இதில் குழாய் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாதென்று வழக்கு போட்டு,அந்த வழக்கிலும் ஆஜராகமல் இழுத்து அடித்து கைதேர்நத கிரிமினல் புத்தியுடன தாழ்த்தப்பட்ட சமூகத்திற்க்குள் உள்ள ஒரு அயோக்கியனை பற்றிய உண்மைக் கதைகளின் ஒரு சிறு துளி இது.


அந்தப் பறைய தெருவுக்கு அவன்தான் தலைவன்,நாட்டாமை,தெரு சந்திப்பில் கட்டியுள்ள காளி கோயிலுக்கும் பூசாரி,காளிகோயிலின் முதல் சாமியாடி.இத்தனை பதவிகளுடன் அந்தத்தெருவுக்கு அவன்தான் மன்னன்.


அந்த தெரு நில மன்னனக்கு நாலு இளவரசர்களும்,இரண்டு இளவரசிகளும்  நான்கு இளவரசர்களின் மனைவிமார்கள் மற்றும்பிள்ளைகளை சேர்த்தாலே ,தெரு நிலமன்ன்னின் குடும்ப உறுப்பினர்களே எண்ணிக்கையில் இருபது பேர்களுக்கு மேலாக இருப்பார்கள்..இதோடு அந்தத் தெருவின் சமூகத்தில் நாட்டாமையாகவும் கோயில் பூசாரியாகவும் சாமியாடியாகவும் இருப்பதால் சமூக அஸ்தஸதுக்கு தக்கப்படி,சின்னவீடுகளும் ,அதுகளுக்கு பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் இளவரசிகளின் வழி உறுப்பினர்களின்  எண்ணிக்கையை  மொத்தமாக கூட்டினால்  ஐம்பதை தாண்டும்..


அந்தத் தெருவிலே முதன்முதலாக அரசாங்க உத்தியோகமான மின்சார வாரியத்தில் வேலை பார்த்து பென்சன் வாஙகுபவன் என்ற பெருமையும் முதல் ஆளாக  அந்தத் தெருவில் கழிப்பறை கட்டியவன் என்ற சிறப்பும்  இவனுக்கு உண்டு..


பெருமை வாய்ந்த அந்த தெரு நில மன்னனை அதே தெருவில்வசிக்கும் ஒருவன் எதிர்த்துவிட்டான். ஏற்கனவே. அந்தத் தெருநில மன்னரால் பல தடவை இவனுக்கு ஆப்பு வைக்கப்பட்ட்டு மூலையில ஒக்கார வைக்கப்பட்டாலும் பயந்து கொண்டு பின் வாங்கி விடாமல் எதிர்த்து வந்தவன் அவன்


தெரு நில மன்னன் கண்சாடை காட்டினால் அவனின் பக்தர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ளவர்களும் பத்தடி பாதையை பாதாள சாக்கடை போடுவதற்க்காக அய்ந்து அடி ஆக்கிய மாநகராட்சி மாதிரி,அய்ந்து அடி பாதையையும் பயன்படுத்த முடியாதவாறு, பழைய சைக்கிள்களையும் பழைய டப்பா தட்டுமுட்டு சாமான்களையும் போட்டும் ,போதா குறைக்கு பாதையை மறைத்து உட்கார்ந்து கொண்டு வீட்டுப்பாத்திரம் கழுவுகிற, துணிகள்  துவைக்கிற சாக்கில் பாதையை மறைத்து விடுவார்கள். அதோடு தெருவை விட்டும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். யாரவது எதிர்த்தவனை  வந்து கேட்டால் அப்படிபட்டவன் இங்கே இல்லை என்று சாதித்துவிடுவார்கள். பொதுக்குழாயில்  குடிதண்ணியும் எடுக்க முடியாதவாறு பக்காவா பிளான் போட்டு தடுப்பார்கள் தொடர்ச்சியாக சண்டையிடச்செய்து,போலீஸ் ஸ்டேசன்,அபதாரம் என்று செலவையும் மன உளச்சலையும்  ஏற்ப்படுத்துவான். தெருநில மன்னனை எதிர்த்தவன் நோயால் வந்து  படுத்துவிட்டால் சண்டை ஓய்ந்து  அமைதியாக இருக்கும்


சண்டை ஓய்ந்து  அமைதியாக இருக்கும் நாளில்.,அதாவதுஉள்ளுர் காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் மாறிய பின், புதிய ஆய்வாளர் வந்தபின் ஏற்கனவே. மூத்த இளவரசனின் தொடர்புள்ள உதவி ஆய்வாளர் உதவியுடன் தெருநிலமன்னன்,தன்னை எதிர்த்தவன் மீது ஒரு பொய்ப் புகார் செய்வான்


புதிய ஆய்வாளரே, தெரு நில மன்னனுக்கு விட்டு கொடுக்கச் சொன்னார், அவனோ,தெரு நில மன்னன் தன் வீட்டில வாடகைக்கு இருப்பவர்களுக்கு நடப்பு விலைக்கு விட்டுக்கொடுத்தால் தங்கள் உத்தரவுப்படி நான் விட்டுக்கொடுக்கத்தயார் என்பான். ஆய்வாளர் மிரட்டி பார்ப்பார். மிரட்டிலின் ஒரு பகுதியாக  காவல்நிலையத்தில் பிடித்து வந்தவர்களை இவன் கண் எதிரில் நாயடி பேயடியாக அடித்து மிரட்டிப்பார்ப்பார். இவன் மிரளமாட்டான்.



பகுதி காவல் நிலையத்தில் அடி வாங்க வைத்தல், அபதாரம் கட்டவைத்தல் ,இப்படி பல வகையான மிரட்டல்களுக்கும் பயந்தும் சோர்வுற்றும் இடத்தின் சொந்தக்காரன் பின் வாங்காமல் தெரு நில மன்னனை எதிர்த்து நின்றான்


தெரு நில மன்னனாக இருக்கும்  மப்பில் ,இவனை எதிர்த்தவனுக்கு பாத்தியமான இடத்தை வளைத்து போட்டுவழி நடைபாதையாக்கி,பயன்படுத்தியதோடு, அந்த ஏரியாவின் சர்வேயருக்கு.ஒரு தொகையை செட்டில் செய்து நகரப்புலப்படத்தில் பொதுப்பாதையாவும் மாற்றிவிட்டான். இதை தக்க வைப்பதற்க்காக


மாநகராட்சிப் பாதையை தனது பாதையென்றும், அந்தப்பாதை தனக்கும் தன் உறவுக்காரர்க்கும் பாத்தியப்பட்டது என்றும், அந்தப்பாதையில்  தெருநிலமன்னனை எதிர்த்தவன். நடக்கவோ, பாதாள சாக்கடை குழாய் பதிக்கவோ,இணைப்பு கொடுக்கவோ,கூடாது என்று நிரந்தர உறுத்து கட்டளை வேண்டி மாவட்ட  கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தான்.


வழக்கும் நம்பராகி நிரந்தர உறுத்து கட்டளை எதுவும் வழங்கப்படாமல் வழக்கும் வாய்தாவாகி நகர்ந்து கொண்டு இருந்து இரண்டரை ஆண்டு கழித்து வழக்கு தொடுத்த தெரு நில மன்னன் முதல் விசாரணைக்கு ஆஜராகும நாள்.


அன்று தெரு நில மன்னன் தொடுத்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்குபின் விசாரனைக்கு வந்தது. தெருநில மன்னன்தான் முதலில் விசாரிக்கப்படவேண்டியவன், அவனுக்கு தன்வழக்கு நிற்காது என்று தெரியும் இருந்தாலும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் நாட்களை கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தெருவில் தன் அருமை பெருமையை நிலை நாட்டும் பொருட்டும் , வழக்கு விசாரணைக்கு


புறப்படும் நேரத்தில், (கெளலி) பல்லி ஒன்னு  ஆகாத மூலையில் இருந்து கத்தியது.என்றும் காளி அம்மனின் பூசாரியும்,முதல் சாமியாடியும் பல்லி சத்தம் கேட்டு சற்று தயங்கி நின்றேன என்றும்,.ஆகாத திசையில் பல்லி ஒன்று கத்தியதாலும்,குறுக்காக பூனை ஒன்று ஓடியதாலும், சகுனம் சரியில்லை என்று தெருநிலமன்னன்,தெருவில் உள்ளவர்களுக்கு கதை பரப்பி விட்டு வழக்கில் ஆஜராவதிலிருந்து தவிர்த்துவிட்டான்

.
தெருநில மன்னனை எதிர்த்து நின்றவனோ, நீதி மன்றத்தில் காத்து கிடந்தான். குருசாமி,குருசாமி,குருசாமி என்று மூன்று தடவை  நீதி மன்றத்தில் கூப்பிட்டபோது எந்த ஆசாமியும் ஆஜராகவில்லை, தெரு நில மன்னனின் நாற்பது வருட  சட்டஅனுபவரான வழக்குரைஞரோ, தன்வாதியைப்பற்றி பதில் எதுவும் சொல்லாமல் திட்டமிட்டபடி மௌனமாக  நடந்து கொண்டார்.


தெருநில மன்னன் தொடுத்த வழக்கில்.வாதி விசாரனைக்கு ஆஜராகததாலும், வாதியின் வழக்குரைஞர் எந்தப்பதிலும் சொல்லாததாலும் வழக்கு (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.


தெருநில மன்ன்னும் விடாமல்  பழைய புதிய வழிமுறைகளை கையாண்டு கொண்டே வந்தான். அதில்  ஒரு யுக்தியை கையாண்டான்,


கைதேர்நத கிரிமினல்களின் வழிகாட்டல்படிதெரு நில மன்னன்தள்ளுபடியான வழக்கை திரும்பவும் நடத்தும்படி மனு போட்டான்


தான் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாகி மருத்துவ மனையில் கிடந்த்தாகவும், தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால்,காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை. அதனால் முதல் விசாரனைக்கு ஆஜராக முடியாமல் போய்விட்டதென்றும், இந்த வழக்கை  நடத்தாவிட்டால் தனக்கு பாரிய இழப்பு ஏற்ப்படும் என்று  முறையீடு செய்தான்.

நீதி மனறமும் தெரு நில மன்னனின் முறையீட்டை ஏற்றது.


தெருநில மன்னனை எதிர்த்தவனோ, பத்து தடவை தனக்கு ஆப்பு வைத்தபேதும் ஒரு தடவையாவது ஆப்பு வைக்கலாமா போய்விடுவேன் என்று அடுத்த  சட்டத்தின் ரவுண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறான்.


தெருநிலமன்னனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மீண்டும் ஆப்பு வைப்பதற்க்காக   கழுத்தில் செயினும் கையில் மைனர் செயினுடனும் இளைஞானட்டம்  அவனும் அடுத்த ரவுண்டை கடத்துவதற்க்காக காளிக்கு விழா எடுக்குறான்.

2 கருத்துகள்:

  1. தெருவுக்கு ஓராள் இங்ஙன இருப்பது தான் பரிணமித்து ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் எனப் பெருகி உலகம் பூராவும் காவாலிப் பயல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. நாசம் சர்வ நாசம்.

    பதிலளிநீக்கு
  2. காவாலிப் பயல்கள் நிறைந்த நாடு என்று சொல்லாமா? நண்பர் நிரஞ்சன்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...