சனி 12 2014

காதல் கனவனின் நினைவில் தவித்த காதல் மனைவி!!

மவுலிவாக்கத்தில் 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி| படம்.ம.பிரபு.
படம்.tamil.thehindu.com


சென்னைக்கு அருகில்
மவுலிவாக்கத்தில்
பதினோறு மாடி
ஒன்று சினிமாவில்
அடுக்கி வைத்த
மாதிரி நிசத்தில்
சரிந்து விழுந்தது.

அதில் அறுபத்தி ஒரு
பேர் பலி ஆனார்கள்
இடுபாடுகளில் சிக்கி
இறந்தவர்களின் உடலை
ஒவ்வொன்றாக மீட்டு
வந்தபோது................

புதிதாக மணமுடித்த
காதல் மணைவி
தன் காதல் கனவரை
பற்றிய நிணைவில்
தவித்தாள்.......
.

அவராக இருப்பாரோ
இல்லை இல்லை அவராக
இருக்க மாட்டார்.....
கண்டிப்பாக அவராக
இருக்க மாட்டார்.........

போகும்போது என்னிடம்
போய்விட்டு வருகிறேன்
என்றுதானே! பிரியமுடன்
சொல்லிச் சென்றார்.

அதனால்................
அது..அவராக இருக்க
மாட்டார்.நிச்சயமாக
அவராக இருக்க மாட்டார்.

எந்தப் பாவமும் செய்ததில்லை
எந்தத் துன்பமும் கொடுத்ததில்லை.
ஆகையினால் அது அவராக
இருக்க மாட்டார்............

இன்று சம்பள நாள்
வாங்கி வந்தவுடன்
கயிறாகதொங்கும்
மஞ்சள்  கயிற்றில்
நாலு கிராம் திரு
மாங்கல்யத்தை
சேர்த்தால் ஆயுள்
கெட்டி  என்றாரே.................

ஆகவே... அது..
அவராக  இருக்க மாட்டார்.

என்னைத்தான் உலகம்
என்று நம்பியிருந்தாரே!
அவரின் உலகமான
என்னை விட்டு சென்று
இருக்க மாட்டார்............

அதனால் அது...
அவராக இருக்க மாட்டார்.

வயிற்றிலே சுமந்திருக்கிற
அவரின் வாரிசையும்...அந்த
வாரிசை பெற்றெடுக்கும்
என்னையும்  அவரால்
பிரிந்து செல்ல முடியாது.

ஆகையினால் அது (பிணம்)
அவராக இருக்க மாட்டார்.


6 கருத்துகள்:

  1. நெஞ்சை விட்டு அகலாத துயரம்

    பதிலளிநீக்கு

  2. ஒருக்கால் இது கற்பனையாயினும் உண்மையில் நடக்கவும் சாத்தியமே நானும் இறைவனை வேண்டுகிறேன் அது அவராக இருக்ககூடாது.

    பதிலளிநீக்கு
  3. அவராகவே இல்லாமல் பிழைக்கட்டும்,அந்த இளம் கணவன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  5. செய்தி பத்திரிகையில் வந்தததைத்தான் சொல்லியிருக்கிறேன் கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு
  6. இந்திய அரசிலமைப்பில் இயற்கையை வெல்லவும் முடியாது சதி- விதியிலிருந்தும் அந்த இளம் கனவன் தப்பிக்கவும் வழியில்லை ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...