சனி 14 2017

தீபாவளி என்றால் என்ன? என்ன...?


 (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உருவம்) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து  சுருட்டிய பாயை விரித்தார்.

3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்..

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

1. பூமி தட்டையா? உருண்டையா?

2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து செல்ல முடியுமா?

5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

8. பூமி மனித உருவா? மிருக உருவமா?

9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

(பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து)

4 கருத்துகள்:

  1. அடச் சீ.தீபாவளிக்கு இப்படியும் ஒரு புராணமா :)

    பதிலளிநீக்கு
  2. ஐயோ இப்படி கதை கேட்டுக், கேட்டு காதுல குருதி வடியுது நண்பரே

    அமிதாப் சிவாஜி மாதிரி இருக்காருன்னு சொல்றதாவது தேவலை போலயே...

    பதிலளிநீக்கு
  3. வியாபாரிகள் பலனடைகிறார்கள்
    வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள்
    அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  4. ஜாதி வெறுப்புக்களும், மூட நம்பிக்கைகளும் ஒழிந்து நவீன சமுதாயம் உருவாக தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...