ஞாயிறு 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-9

உழுதவன் கணக்கு பார்த்தால் உமி கூட மிஞ்சவில்லை என்பது போலத்தான் என் கணக்கும் ஆகி போச்சு   ....  அழைப்பிதழ் விற்பனை கடைக்கு பாக்கி  கடன்தான் மிஞ்சியது.


எப்படி கடன் வந்தது என்று கணக்கிட்டு பார்த்தபோது கணக்கு சரியாகத்தான் வந்தது.. பனிரெண்டு பத்திரிக்கை அழைப்பிதழ்  வேலை கொடுத்தவர்கள் எல்லாம் மறக்காமல் அழைப்பிதழை  கொடுத்துவிட்டு கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார்கள்.... கிடைத்த கூலியில் வீட்டு தேவையை சுறுக்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் மருமகன்களை கலந்து கொள்ள செய்து மொய் செய்தாகி விட்டதிலும் முதல் மருமகனின் மாமனாரின் தந்தை இறந்துவிட்டதில் ஏற்பட்ட செலவுகளில்   மாங்மாங்கென்று செய்த வேலையின் வரவுகள் அனைத்தும் செலவாகி அழைப்பிதழ் விற்ற கடைக்கு பாக்கி கடனாக நிற்பது தெரிந்து விட்டது... அடுத்த வேலையின் போது கடனை அடைத்துவிடலாம் என்று தஞ்சாவூர் விவசாயியைப்போல் திட்டம் போடத்தான் முடிந்தது..


என் அனுபவத்தில் எனது திட்டம் நன்றாக இருந்தாலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட இம்சைகள் வந்து தடுக்கும்... சுற்றி இருக்கும் தெருக்காரர்களிடமிருந்தும் வெளியிலிருந்தும் என் வீட்டிலிருந்தும்  அதிகமாக இம்சைகள் வந்து சேரும்.. அந்த இம்சைகளை சமாளித்துக் கொண்டுதான் ஓடிக் கொண்டு இருக்கிறேன்.

நண்பர்களின் சிலர்  உனக்கென்னப்பா..பிள்ளையா ? குட்டியா? மனைவி பிடுங்கலா... தாய் தந்தை புலம்பலா என்று கேட்கும்போது..... கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு...... இப்ப என் வீட்டில இருக்கிறவுங்கலாம் யாரு? அவுங்களுக்கு வாயி வயிறு எதுவுமே கிடையாதா? என்று கேட்டால்..... உன் திமிரு? உன் கொழுப்பு... அம்மா சொல்லிச்சு....பாவம் புன்னியம் இப்படித்தான் என்று ஒரு பக்கம் அப்படியும் இன்னொரு பக்கம் இப்படியும் பேசி வாய் வார்த்தைகளில் இம்சை கொடுப்பார்கள்......

இயற்கையும் சரி... இயற்கை படைத்த மனிதர்களும் சரி..எனக்கு கொடுக்கும், கொடுத்த இம்சைகளின்  பதிவை ஒவ்வொன்றாக வெளியிட்டு என்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடருகிறேன்

ஒரு வழியாக தமிழ் மணமும் பதிவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை குறைத்து இருக்கிறது..அதனால் பதிவர்  மற்றும் வாசகர்களின் இம்சைகளும் குறைந்துள்ளது என்றே நிணைக்கிறேன்... அந்த இம்சைகள் என்னவென்று அடுத்த பதிவில் தொடருகிறேன்.

5 கருத்துகள்:

  1. இயற்க்கை எல்லா மனிதர்களுக்குமே... சுமை வைத்து இருக்கின்றது நண்பரே...

    அந்த இம்சைகள் மனிதனே மனிதனுக்கு கொடுப்பதே...

    பதிலளிநீக்கு
  2. ஒரு வழியாக தமிழ் மணமும் பதிவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை குறைத்து இருக்கிறது..அதனால் பதிவர் மற்றும் வாசகர்களின் இம்சைகளும் குறைந்துள்ளது என்றே நிணைக்கிறேன்...

    காத்திருக்கிறேன் நண்பரே
    அறிந்து கொள்ள

    பதிலளிநீக்கு
  3. எம்மை நாடி வரும் இம்சைகளை விலகிப் பயணிக்க முயல்வோம்.
    தங்கள் பதிவுகள் வழிகாட்டுமே!

    பதிலளிநீக்கு
  4. தனி ஒருவர் என்றாலும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் தானே! தமிழ்மணம் பற்றி இப்போது எல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை ஜீ!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தோழரே, நலமா ?

    இடைவெளி காரணமாக இந்த பதிவின் முந்தைய பாகங்களை படிக்கவில்லை...

    " தஞ்சாவூர் விவசாயியைப்போல் திட்டம் போடத்தான் முடிந்தது.. "

    சொந்த சிரமங்களை விவரிக்கும்போது போது கூட சமூக சிந்தனையுடன் வந்து விழும் வரிகள் !

    தொடரும் இம்சைகள தங்களிடமிருந்து துரிதமாய் விலகி ஓடும் நண்பரே.

    சாமானியன்.

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...