சனி 14 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-18

சித்திரை அல்ல தமிழ் புத்தாண்டு க்கான பட முடிவு

 எழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா....  போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண்டு இருந்தவர்கள்... அண்ணே..... வாழ்த்துக்கள்! என்றார்கள்....

சிறிது குழப்பத்துடன் எதுக்கு தலவரே வாழ்த்துக்கள்! என்றேன்... தமிழ் புத்தாண்டுக்கு  என்றார்கள். சற்று கோபம் வந்தது. இதுவும் தொடர்ந்து வரும் இம்சைதான். கோபத்தை அடக்கிக் கொண்டு

“லூசு.. நா... சொல்றத கேளு... இன்னிக்கு யாரு பிறந்த நாளு...

அம்பேத்கர் பிறந்த......நாளு.....

நிஜமாகவா.?....நல்லாத் தெரியுமா?...பொய் சொல்லலேயே...??

“ நிஜமாண்ணே...சத்தியமா  அம்பேத்கர் பிறந்த நாளுதாண்ணே....!!

“அப்படியா...!!! அப்படியென்றால் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறாமால்... கண்ட நாதாரிகள் ஆட்சியில தங்களுக்கு சாதகமாக தமிழ் புத்தாண்டு பிறந்த தினத்தை  மாற்றியதை ஆதாரமாகக் கொண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறுவது எனக்கு கேவலமாக இருக்கிறது என்பதை உங்களுக்கு சென்ற ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளிலே தெரிவித்திருந்தேனே..! மறந்துவிட்டீர்களே!  போகிற போக்கை பார்த்தால்... அம்பேத்கர் பிறந்த நாளை மறந்துவிட்டு... சித்திரை பொளந்த நாளுதான் நிணைவில் இருக்கும்போலயே...

..............................

...................................



“அண்ணே... இப்ப எங்கணே போயிகிட்டு இருந்திங்க.....”

“ பல்லு விளக்க ..பல்பொடி வாங்க போயிகிட்டு இருந்தப்பதான்...நீ சித்திரை பொளந்த நாளுன்னு வாழ்த்து சொன்ன......

“மறதியால் சொல்லி விட்டேன்....இந்த மறதியனை மன்னித்து விடுங்கள் அண்ணா.... ...“டேய்...கார்த்தி...அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துடா  ” போதுமாண்ணே.....”

“ டேய்..தலைவா.. வெறும் வாயில வாழ்த்தா....??? அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு சுவிட் எங்கடா...”    

“ இந்தா..லட்டு... எடுத்துக்கோடா...”... அண்ணே..நீங்களும் எடுத்துகண்ணே....

“இது சித்திரை பொளந்த நாள்  சுவிட் இல்ல.. அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சுவிட்டு”  சரியா...?.

“ சரிதாண்ணே......!!!!

இந்த பதிவை படிக்கும் நண்பர்களும் பதிவர்களும் தமிழர்களும் தமிழ் தெரிந்தவர்களும் சிந்திக்க....

தமிழர்களே..! 
சிந்தியுங்கள்..!

"தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு"
தை பிறந்தால் வழி பிறக்கும்..!

சித்திரைதான் புத்தாண்டு என்று நித்திரையில் இருக்கும் தமிழா, விழித்துப்பார் .....
1.பிரபவ
2.விபவ 
3.சுக்கில 
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ 
7. ஸ்ரீமுக 
8.பவ 
9.யுவ
10.தாது 
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம 
15.விஷு 
16.சித்ரபானு
17.சுபானு 
18.தாரண 
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி 
24.விக்ருதி 
25.கர 
26.நந்தன
27.விஜய 
28.ஜய 
29.மன்மத
30.துர்முகி 
31.ஹேவிளம்பி
32.விளம்பி 
33.விகாரி 
34.சார்வரி
35.ப்லவ 
36.சுபகிருது 
37.சோபகிருது 
38.குரோதி 
39.விசுவாவசு
40.பராபவ 
41.ப்லவங்க 
42.கீலக 
43.சௌமிய
44.சாதாரண 
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

.இதுதான் தமிழ் ஆண்டுகளா..? இந்த அறுபது சொற்களில் தமிழ் சொல் எங்கே இருக்கிறது.?. இவற்றை எப்படி தமிழ் ஆண்டுகளாக ஏற்பது.. சொல்லுங்கள்... ஆண்டுகளுக்கு பெயர் வைக்கும் அளவுக்குகூட தகுதி இல்லாததா நமது தமிழ்மொழி??

அறிவுக்கு ஒவ்வாத தமிழ் எழுத்துக்கள் இல்லாத 60 ஆண்டுகள் என்பது வந்தேறி ஆரியனின சூத்திரங்களை கொண்டது... தமிழர் உங்களை வீழ்த்த வந்தது. மதிகெட்டு கொளுத்தும் சித்திரையை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்....இளவேனிற் காலமான தை யே தமிழனின் புத்தாண்டு...






7 கருத்துகள்:

  1. சரிதான் இந்த குழப்பங்கள் தீராது போலயே...

    பதிலளிநீக்கு
  2. வலிப்போக்கரே,
    இதுவும் ஒரு தமிழ் பதிவாளரின் பதிவு
    http://paradesiatnewyork.blogspot.com/2018/02/blog-post_22.html
    அவருக்கு நான் தெரிவித்த கருத்தே உங்களுக்கும்.
    தமது புத்தாண்டில் கூட தெளிவில்லாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். நற்றமிழ் மலரவும் மாற்றங்கள் நிகழவும் தொடங்கும்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கருத்து சற்றே சிந்திக்கத்தூண்டுகிறது..

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரட்டிகளில் இணைக்கும் வழிகள் எளிமையாக இல்லை.....

      நீக்கு
  6. திரட்டிகளில் இணைக்கும் வழிகள் எளிமையாக இல்லை.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...