வெள்ளி 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-28


Image result for மழை



 இரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. தேங்கி கிடக்கும் தண்ணீரை .. காலியான எனது இடத்தில்   இரைத்துவிட்டால் எனது சித்தப்பனும் அவனுடைய மனைவியும் கூடவே..மகன்களும் சேர்ந்து ரெக்கை கட்டி சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பது பலமுறை சண்டையிட்ட அனுபவம் இருப்பதால்..அதனை தவிர்த்து.விட்டு, தேங்கிய தண்ணீரில் மண்ணை அள்ளி கொட்டலாம் என்று தீர்மாணித்து. மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டியிருக்கும்போது.. தெருக்கோவிலின் பூசாரியும் எனது பரம்பரை எதிரியுமான தெரு தாதா. குருசாமி... தன் மருமகள், பேரன்கள் அடங்கிய படையுடன் என்னை முற்றுகையிட்டான். யாரைக்கேட்டு மண்ணை கொட்டினாய் என்றாள் பூசாரியின் மருமகளான சண்முகவள்ளி.. என் வீட்டு வாசலில் மண் கொட்டுவதற்கு யாரை கேட்க வேணும் என்று சொன்னதுதான் தாமதம் தாதா குருசாமி படாரென்று கைகளை ஓங்கி அடிக்க பாய்ந்தான்.

சுதாரித்த நான் அவன் அடியிலிருந்து தப்பித்தேன்...திருப்பி அடிக்க முயற்சித்தபோது....தாதாவின் பேரன்களை கவனித்தவுடன்..எனது செயலை  நிறுத்திக் கொண்டேன்....தடுமாடுகள் மாதிரி இருந்த தாதாவின் பேரன்களிடம் அடிவாங்க மனமில்லை....அதோடு தெருவே கூடிநின்று வேடிக்கை பார்த்தது.

பூசாரியான.தாதாவின் அராஜகம் தொடர்ந்தது. .. நான் குடியிறுக்கும் வீடு அவனுடையது என்றான்... வழக்கு போட்டு  நான்வெற்றி பெற்ற மாநகராட்சி 
பாதையை அவனுடையது என்றான்.. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தான்.. அவனின் மருமகளோ.... வீட்டுக்குள் இருந்த ரேக்கை கீழே தள்ளிவிட்டால்.. என் மருமகள், மருமகன்கள்  பதிலுக்கு சத்தம் போட்டார்கள்....

100க்கு போன் செய்தேன்  பலதடவை  எவனும் எடுக்கவில்லை, பகுதி நிலைய காவல் நிலையத்துக்கும் போன் செய்தேன்.. அங்கேயும் எவனும்  எடுக்கவில்லை எல்லா போலீசும் தூத்துக்குடி மக்கள சுடப் போயிருப்பது பின்னார்தான் என் மண்டைக்குள் உரைத்தது.

என் மருமகள் மருமகனை  பதிலுக்கு சத்தம் போடுவதை நிறுத்தி அமைதி படுத்தினேன்.பிறகு நானாக போனில் பேசினேன்... ஆமா..குருசாமியும் அவரோட மருமகள் சண்முகவள்ளி, மற்றும் பேரன்கள்தான் சார்... வீட்டுக்குள் புகுந்து அராஜகம் செய்கிறார்கள்... நான் பேசுவதை கவனித்த பூசாரியும் அவனின் மருமகளு.ம்...  என்னை பெருந்தன்மையாக விட்டுவிடுவது போல் பேசினார்கள்....

ரெம்ப ஒவரா போகாதடா...இத்தோடு கொட்டிய மண்ண நிறுத்து என்றான் பூசாரி, அவனுடைய மருமகளோ.. ரெம்ப மரியாதையுடன்.. கொட்டிய மண்ணை அள்ளுடா..என்றாள் . போலீஸ் வருவாங்க...அவுங்க வந்து சொல்லட்டும் அப்ப அள்ளுறேன்.....பாரு..மாமா..இவனுக்கு இன்னும் கொழுப்பு அடங்கல...என்றாள்.... சற்று கோபத்துடன் அவள் அருகில் சென்றேன்... ஏ... கிட்டத்திலே வராதடா...? தள்ளி நில்லுடா..என்றாள்.. மண் அள்ளிய தட்டு என் அருகில்தான் கிடந்தது. எடுத்து ஒரே போடாக அவ தலையில போட..ஆவேசம் வந்தது. சிறிது நேரத்தில் மனம் அந்த எண்ணத்தை கைவிட்டது...

என் தரப்பு அமைதியாகி  விட்டதால் அவர்கள் வெற்றி களிப்பில் எச்சரிக்கை விட்டபடியே நகர்ந்தார்கள்...வேடிக்கை பார்த்த கூட்டமும் படிபடிப்யாக நகர்ந்தது.. என் தந்தையின் தம்பி பொண்டாட்டி மட்டும் என்னை கோபத்தோடு வெறித்து பார்த்தபடி நெடுநேரம் நின்று கொண்டிருந்தால்... நான் மீண்டும் மண்ணை கொட்டுவேன்..அதை  அவர்களிடம் சொல்லி..அவர்கள் மூலம் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள நின்றாளோ? என்று நிணைத்து வீட்டுக்குள் சென்று அமைதியாக இருந்துவிட்டேன்.

நான் அவர்களை எதிர்த்து பேசாமல் இருந்த காரணத்தை என் வீட்டாள்களிடம் கூறினேன்..வருகிற செவ்வாய் கிழமை சாமி கும்பிட போகிறார்கள்.. அவர்களிடம் நிறைய காசு பணம் இருக்கிறது.. அவர்கள் வீனாய் நம்மோடு சண்டை செய்து..அவர்கள் சாமி கும்பிடுவதை தடுப்பதாக பொய்யாய் பொய்க் குற்றம் சாட்டுவார்கள்.. தெருவே நமக்கு எதிராக திரளும்..இப்போதுதான் இடத்து வழக்கு 25வருடம் கழித்து  டிஸ்மிஸ் ஆகியிருக்கிறது... ஒவ்வொரு ஆதாரமாக சேகரித்துப்பின்னால் பிறகு பார்த்துக் கொள்வோம்...நமக்கு ஆட்பேரு...இல்லை... எனக்குப் பின் இந்த வீடு இடம் தொழில் எல்லாம் உங்களுக்தான் அதனால் பொறாமையில் இப்படி வம்பிழுப்பார்கள் தூண்டிவிடுவார்கள்....அதனால் நான் எப்படி இருக்கிறனொ... அப்படி பொறுமையாக இருங்கள் என்று  விட்டு..அவர்கள் முகத்தை   பார்த்தபோது

எனக்கு இப்படி தோன்றியது”..நம்மகிட்ட கோபமா பேசுற மாமா...மற்றவர்களிடம்...வாய்மூடி அமைதியாக இருக்கிறாரே..என்று..அவர்களுக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை. வருகிற வருமானத்தில்  பத்து டிக்கெட் சாப்பிடனும் அத்தியாவசிய செலவுகளை சுறுக்கி வங்கி கடன் வெளிக் கடனுக்கெல்லாம் வட்டி கட்டனும் இவனுங்களோட சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசன் சென்று அலையமுடியாது.. செலவும் செய்யமுடிாயது என்பது....

2 கருத்துகள்:

  1. நடைமுறை வாழ்க்கைதான் வாயை கட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ///அவர்கள் சாமி கும்பிடுவதை தடுப்பதாக பொய்யாய் பொய்க் குற்றம் சாட்டுவார்கள்.. தெருவே நமக்கு எதிராக திரளும்..இப்போதுதான் இடத்து வழக்கு 25வருடம் கழித்து டிஸ்மிஸ் ஆகியிருக்கிறது//
    இவற்றை அனுமதிப்பதை தானே இந்தியாவில் மத நல்லிணக்கம் என்கிறார்கள்!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...