பக்கங்கள்

வியாழன் 30 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...42



#BESTSONGSTAMIL #SUPERHITVIDEOSONGS சாதி ஆணவ வெறியாட்டங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன. ஆதிக்க சாதிச் சங்கங்கள், கட்சிகள் தங்களின் ஓட்டரசியலில் வாக்குப் பொறுக்குவதற்காக சாதிய வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான் பாமக சாதி வெறியர்களும் இந்து முன்னணி பொறுக்கிகளும் இணைந்து நடத்திய சமீபத்திய பொன்பரப்பி வன்முறை ! 1997-ம் ஆண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகம் கலைக்குழுவின் சார்பில் ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா என்ற பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டது. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கச் சாதித் திமிரை நார்நாராய் கிழித்தெறிகின்றன. நீங்களும் பாருங்கள் ! பகிருங்கள் ! பாடல் வரிகள் : வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா) வெட்டியாரப் பயலுன்னு பட்டம் கெடச்சது எங்களுக்கு கொட்டடிக்க மாடுதூக்க கொடுப்பின வேறாருக்கு….? செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… (வெட்டியான் நான் உனக்கு) சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு … வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே… வெந்துமடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா) குப்ப மலத்தை வாரி…. கொட்டும் வேலை எங்களுக்கு கூடை பிஞ்சு மொகத்தில் வழிய சுமந்திடறோம் உங்களுக்கு ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு (தோட்டிப் பட்டம் எங்களுக்கு) - மல சாக்கடையில் நீ எறங்கு – உன் சாதி என்ன சொல் எனக்கு… வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே (வெட்டுப்பட்டுச் செத்தோமடா) அழுகின பொணத்தக் கூட மடியில் வச்சி வழிக்கிறோம்… ஆனாலும் கூலி இல்ல… எரந்து கஞ்சி குடிக்கிறோம்… உன்ன ஊர் மதிக்க செஞ்சதுக்கோ…. அம்பட்டன்னு பேர் எடுத்தோம் (அம்பட்டன்னு பேர் எடுத்தோம்) சாதி ஆணவத்த வெட்டிடுறோம் – பேரு என்ன வைப்ப… பாத்திடுறோம்… வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே … (வெட்டுப்பட்டுச் செத்தோமடா) உன்னோட அழுக்குத் துணி வெள்ளாவியிலே வேகுது … எங்களோட முதுகுத்தோலு வெய்யிலிலே தீயுது…. உன் துணிய தொவைக்கும்போது வண்ணாரப் பய நான் உனக்கு அடிச்சி உன் திமிர வெளுப்போம் அப்போ என்ன பேரு எங்களுக்கு ? …

செவ்வாய் 28 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...41

 


பாரதிய ஜனதா கட்சியின் கரங்களை வலுப்படுத்த நன்கொடை வழங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் _ மோடி "எங்களுக்கு தரவேண்டிய 15 லட்சத்தில் 1000 ரூபாய் எடுத்துகிட்டு.. மீதி பணத்தை அனுப்புங்கஒரு கண் மூடி நாக்கை நீட்டிய முகம்

வியாழன் 23 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...39

 

நாட்டுபுறத்தான் சாபம் பலிக்கட்டும்...

இந்த மாதத்துல இருந்து கரன்ட் பில்லுக்கும் GST போட்ருக்கானுங்க... வயிறு எரிஞ்சி சொல்றோம், புழுத்துதாம்யா சாவீங்க... உருளும் கண்களுடைய முகம்உருளும் கண்களுடைய முகம்உருளும் கண்களுடைய முகம்

சனி 18 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...38

 


" நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் கருணையில் நான் வாழவில்லை; உங்கள் கருணையில் வாழ விரும்பவும் இல்லை.
நான் இந்த நாட்டின் குடிமகன். என் சக மனிதர்கள் அனுபவிக்கும் உரிமை, என் சமூக மக்களுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்திப் பெறும் உரிமை எனக்கு முழுமையாக உள்ளது. நீங்கள் காட்டும் கருணை எங்களை அடிமையாக்க மட்டுமே பயன்படும்."
மக்களவையில் பேசியது.
'டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு - 10, பக்கம் : 354.
நன்றி - Dalit Murasu


சனி 11 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...36

 


 
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் தாய் ஒருத்தி, தனக்கு பிறந்த குழந்தையை கொன்றிருக்கிறார். இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கிறது.
பெற்ற குழந்தையை கொன்றுவிட்டாளே? இவள் ஒரு தாயா? கொலைகாரி!
இந்த செய்தியை தினத்தந்தியில் வாசிப்பவர்கள், ஒரு நிமிடம் வசைபாடி, அடுத்த பக்கத்துக்கு சென்று விடுகிறார்கள் .
நம் சமூகத்தில் தாய்மை குறித்து நிறைய மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன . அம்மாவை புனிதமானவளாக மதம், குடும்பம், கல்வி ஆகிய பண்பாட்டு நிறுவனங்கள் கற்பிக்கின்றன .
அம்மா குறித்த மதிப்பீடுகள் பெண்ணை மிகவும் சிக்கலானவளாக மாற்றுகின்றன.
இந்தப் பெண் திருப்பூரில் வேலை செய்பவள். தகாத உறவில் கர்ப்பமானவள். இதனால் கடும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். தஞ்சை மருத்துவமனையில் வயிற்றுவலி என்று சேர்ந்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் வயிற்றுவலி என கழிப்பறை சென்றவளுக்கு அங்கேயே குழந்தை பிறந்துவிடுகிறது.
தகாத உறவில் பிறந்த குழந்தையை என்ன செய்வது? சமூகம் தூற்றுமே! பெற்ற குழந்தையை ஃப்ளஷ் டேங்க்கில் போட்டுவிடுகிறாள். மருத்துவமனையிலிருந்து ரகசியமாக வெளியேறுகிறாள்.
இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில், கண்காணிப்பு காமிரா வழி புலனாகியிருக்கிறது.
எனக்கு அந்தப் பெண் மீது வெறுப்போ , கோபமோ இல்லை. சாதி வேற்றுமை, மத வேறுபாடு, பொருளாதார சமத்துவம் இல்லாத நிலையில் பல காதல்கள் இப்படி தகாத உறவுகளாக மாறுகின்றன .
இத்தகைய சமூக அழுத்தங்களோடு பிள்ளைப்பேறு உளவியலும் சேர்ந்து, குழந்தைகளைக் கொல்ல காரணமாக அமைகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இத்தகைய உளவியல் சிக்கல்கள் அதிகம் காணப்படுகின்றன .
குழந்தை பிறந்ததும் தாய்க்கு , கருத்தரித்தல், மாதவிடாய், தூக்கமின்மை, போன்றவற்றால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தாயிடம் குழந்தையை கொல்லும் எண்ணம் ஒரு நோய்க்கூறாக வளர்கிறது.
இத்தகைய கொலைகளை வளர்ந்த நாடுகள் neonaticide என அழைக்கின்றன. சட்டத்தால் இவர்கள் பரிவோடு அணுகப்படுகிறார்கள். கிரேக்க புராணங்கள், பெற்றவளே குழந்தையைக் கொல்வதை filicide என்கிறது.
வறுமையின் காரணமாக குழந்தையை கிணற்றில் எறிந்து கொன்ற நல்லதங்காளை சிறுதெய்வமாக வழிபடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அர்ச்சுனாபுரத்தில் நல்லத்தங்களாக்கு கோவில் உள்ளது.
திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற மாநகரங்களுக்கு பெற்றோர்கள்,
குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே தங்கள் மகள்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
தொடர்ச்சியான சலிப்பூட்டும் வேலைக்கிடையே இத்தகு அபலை சிறுமிகளுக்கு கிடைக்கும் சிறு இன்பம், இத்தகைய விருப்பமில்லாத கருவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்த அறிவியல் பார்வையைத் தராத சமூகம், ஒழுக்கம், தாய்மை குறித்த மதிப்பீட்டை மட்டும் சிலுவையைப்போல் பெண்ணை சுமக்க வைக்கிறது.
பரிணாமவியல் குறித்து பல நாடோடி சமூகங்களை டார்வின் ஆய்வு செய்தார். அதில் ஒரு நாடோடிக் குழுவினர் பஞ்ச காலத்தில் தங்கள் குழுவில் உள்ள கிழவிகளைக் கொன்று தின்றார்கள். எஞ்சிய மாமிசத்தை தங்கள் வேட்டை நாய்களுக்கு போட்டார்கள். டார்வின், மனித உடலை நாய்க்கு போடலாமா? கேட்டார்.
நாய்கள் வேட்டையாடும். கிழவிகளால் என்ன பயன்? என்றார்கள். ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகள் தோன்றாத காலத்தின் நீதியது.
ஆனால், நம் சமூகமோ குழந்தைகளை உயிராகவும் பெண்களை மாமிசமாகவும் கருதுகிறது. தேவையான போது மாமிசத்தை புசிக்கிறது. செரிக்காதபோது நீதியை சோடா போல் குடித்து, பெரிதாய் ஏப்பம் விட்டு , ரிலாக்ஸ் செய்து கொள்கிறது!
கரிகாலன்
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...