வியாழன் 22 2021

மாமனிதர் லெனினின் வைர வரிகள்...............




நல்லோர் எண்ணத்திலும், எழுத்திலும் கற்பனையாய்,  கருத்தாய், கனவாய் இருந்த, உண்மையான மனிதநேய சமூக அறிவியல் சார்ந்த சோசலிச இலட்சியத்தை, நடைமுறை படுத்திக் காட்டிய மனிதகுல நட்சத்திர நாயகன் தோழர் லெனின்.


தோழர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற மாமனிதர்கள், மாமேதைகள், மாவீரர்கள், பொருளில் இருந்து உயர் பரிணாம வளர்ச்சி பெற்று, தற்செயலாக தோன்றி மாமனிதராக வளர, வெல்லவில்லை என்றால், உலகில் பெரும்பாலோர், உலகம் இன்று, இந்த நிலையில் இருக்க முடியாது.


மாமனிதர், பாட்டாளி வர்க்கப் புரட்சி தலைவர் தோழர் லெனினின் வைர வார்த்தை வரிகளில் சில...


1. அனைவரையும் நேசி.. சிலரை மட்டும் நம்பு.. ஒருவரைப் பின்பற்று ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்து கற்றுக்கொள்..!


2. மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்..!


3. அன்பை இழப்பது என்பது கொடிய நோய்..!


4. எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது..!


5. அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மை ஆகி விடும்..!


6. காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்..!


7. பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ.. அந்தக் குணத்தை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே..!


8. போராட்டம் இல்லையேல் வாழ்க்கை இல்லை..!


9. அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது..!


10. நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.. நீ விரும்புவதை உலகமே எதிர்த்து நின்றாலும் செய்து முடி..!


11. தவறுகளை ஒத்துக் கொள்ளும்தைரியமும்.. அவற்றை விரைவில் திருத்திகொள்வதற்கான வலிமையையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்..!


12. நீ ஏழையாக பிறக்க நீ காரணமில்லை.. நீ ஏழையாக இருக்க வேண்டும்என்கின்ற அவசியமும் இல்லை..!


13. சுதந்திரம் விலை மதிப்பற்றது..ஆனால் அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்..!


14. நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட.. இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும்..!


15. உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்..!


16. நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட்டால் தான், நமது போராட்டத்தில் நம்மால் வெல்ல முடியும்..!


17. மக்கள் புரட்சி எப்போது உருவாகும்..? மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது புரட்சி வெடிக்கும்..!


18. புரட்சிக்கான சூழல் அமையாமல் புரட்சி சாத்தியமில்லை.. மேலும் எல்லா புரட்சிகர சூழலும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை..!


19. புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் சாத்தியமல்ல..!


20. புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே..!



21. கற்றறிதல்.. ஒழுங்கமைத்தல்..ஒன்றுபடச் செய்தல்..போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தம்மையும் பயிற்றுவித்துக் கொண்டு.. இளைஞர் சமூகத்திற்கும் பயிற்றுவிக்க வேண்டும்..!


22. முடிந்து போனவை என்றுஉதாசீனம் செய்யாதீர்கள்..நினைத்து பார்க்கவோ நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான் எல்லாம் இருக்கிறது..!


23. உழைத்து உழைத்துஉருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்..!


24. மார்க்சீயத்தின் அரிச்சுவடியே நாத்திகம் தான்.


25. உயர் பரிணாம வளர்ச்சி அடைந்த பொருளே மனிதன். (Highly Evoluated Matter is Man)


26. நச்சரிக்கும் வீட்டு வேலைகளில் இருந்து பெண்கள் விடுதலைபெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை..!


27. வாழ்க்கை என்பது ஒருவருக்கு ஒரே ஒருமுறை கிடைக்கும் ஒப்பற்ற வாய்ப்பு. 


ஒருவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்துக் கொண்டு, தன்வாழ்வை திரும்பிப் பார்க்கும் போது, தன் வாழ்க்கையை அற்பத்தனமான விசயங்களுக்கு செலவிட்டோம் என்ற வருத்தம் வராத வகையில் வாழ வேண்டும்.


Thozhar Chengo M



6 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...