வியாழன் 01 2021

நேற்றைய தினம்தான் சற்று பலமும்...சில நினைவும் வந்தது....

 




பிழைத்துக் கொண்ட என்னை பார்ப்பதற்காக நண்பரும் தோழருமான அவர் என்னை பார்க்க வந்திருந்தார். வந்த நண்பர் என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

அநியாயத்துக்கு   குச்சியுடன் போட்டியிட்டு வென்றுவிட்டேன்.

கரோனோ முதல் அலையில் வேகமாக ஓடியதால் கரோனோவிலிருந்து நான் தப்பித்தேன். இந்த முறை வேகமாக என்னால் ஓட முடியததால் கரோனோ -2 அலையில் தப்பிக்கமுடியவில்லை. தப்பிக்க அவகாசமும் கிடைக்கவில்லை.
அரசு மருத்துவ மனையில் அதிக கூட்டமும்... செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையும் முதலிடத்தில் இருப்பது எனது அனுபவத்தில் இருப்பதால்...

அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் உத்தரவின் பேரில் கரண்ட் அக்கவுண்ட் டெப்பாசீட், மற்றும் சேவிங் பேங்க்-ன் சிறிது இருப்பு மற்றும் டெப்பாசீட் முதலியவற்றை வழித்தெடுத்து பத்தாததுக்கு சிறிது கடன் வாங்கி.. எல்லா பரிசோதனையும் எடுத்துப் பார்த்த்தில்  கரோனோ தொற்று உறுதியானது. தனியார் மருத்துவர்  தொற்றை விரட்ட மூன்று லட்சம் பினையத் தொகை கேட்டதால்....

கடன் கேட்க யாருமில்லாததாலும், கடன் கொடுக்க ஒருவரும் கிடைக்காததாலும் பினையத் தொகை கட்ட வழியின்றி... ழுழுமூச்சாக அரசு மருத்துவமனைக்கு காலையில்  சென்ற வேளையில்  நல்ல வேளையாக அங்கிருந்த தோழரின் உதவியால். ...சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டு. அன்று இரவே. போக இருந்த என் உயிர்   நிறுத்தி வைக்கபட்டு நேற்றை தினத்துக்கு முன்தினம்தான் என் வீட்டுக்கு திருப்பிவிடப்பட்டது.

நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன். மூன்றாவது அலை அழைக்கு முன் சில அத்தியாவசிய வேலைகள் செய்து முடிப்பதற்காக. என் உயிர். திருப்பிவிட......என்று நினைத்து கொள்கிறேன்.

காலையில் வந்த நண்பர் மதியத்துக்குமேல்தான் சென்றார். போகும்போது 5000யிரத்தை கையில் கொடுத்து...உடம்பை தேத்திக் கொண்டு பிறகு கொடு என்றார்.  நடப்பு நிலைமையை அறிந்து வேண்டாம் என்று சொல்லாமல் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தேன். எப்போதோ.... நான் செய்த..உதவி.... அது தற்போது.....................


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...