செவ்வாய் 09 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...23

Jai Bhim




ஒரு சில நண்பர்கள் "Jai Bhim" என்று சொல்கிறோம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்கிறார்கள்.
1881 ஜனவரி 1 அன்று பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் மராத்தியப் பேரரசின் பேஷ்வாவின் படைகளுக்கு இடையில் கோரேகான் பீமா என்ற இடத்தில் நடந்த போரைக் குறிப்பது ஆகும். இந்தப் போரில் பிரித்தானியப் படையின் சார்பில் போரிட்ட வீரர்களில் மராத்திய தலித்துகளான மஹர் இனத்தவர் பெரும்பான்மையாக இருந்தனர்.
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையில் 28 ஆயிரம் மராட்டியர்களைக் கொண்ட படையைக் கொண்டு புனேயை தாக்க முற்பட்டார். கேப்டன் பிரான்சிஸ் ஸ்டாண்டனின் தலைமையின் கீழ், கிழக்கு இந்திய கம்பனியின் இந்த குழு கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேஷ்வாவின் படைகளை எதிர்கொண்டது. ஒரு பெரிய பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் வெற்றி எளிதாக இருக்காது என்று அஞ்சிய பேஷ்வாவின் படை பின்வாங்கிச் சென்றது.
அந்தப் போர் வெற்றியின் நினைவாக ஆங்கிலேயர்களால் கோரேகாவ் பீமாவில் வெற்றித் தூண் நிறுவப்பட்டது. வெற்றித் தூணில் போரில் கொல்லப்பட்ட 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டன. இதில் 22 பேர் மஹர் தலித் வீரர்களின் பெயரும் அடங்கும்.
இந்தப் போர் வெற்றியை உயர் ஜாதி பேஷ்வாக்களின் மீதான தங்களின் வெற்றியின் ஒரு அடையாளமாகவும் தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி, அந்த நினைவிடத்துக்குச் சென்று, மஹார் இன மக்கள் கொண்டாடுகின்றனர்.
கோரேகான் பீமா (Koregaon Bhima) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள சிரூர் தாலுகாவின் பீமா ஆற்றாங்கரையில் அமைந்த சிற்றூர் ஆகும்.
"Jai" என்றால் வெற்றி அல்லது முழக்கம்... "Bhim" என்றால் அந்த போர் நடைபெற்ற நினைவு இடத்தை குறிப்பது.பின்னாளில் இது ஒடுக்கப்பட்டர்களுக்கான குரலாகவும், முழக்கமாகவும் மாறி போனது.
Jai Bhim
💙
1 நபர், நினைவிடம் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்




3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்