சனி 03 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -13

இதன் முன்கதையை படித்தால் விவரம் புரியும்.. படிப்பதும் படிக்காமல் இருப்பது தங்களின் விருப்பம்..

தொடர்ச்சி.....

இரவு ஏழு மணிக்கு காவல் நிலையம் சென்ற போது இரண்டு பேரும் எஸ்எஸ்அய்யிடம் அதாவது சிறப்பு எஸ்அய்யிடம் தங்கள் தரப்பு ஞாயத்தை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தனர். நான் விசாரித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்அய்யிடம் வந்து நின்றேன். அவர் அந்தப் பெண்களுக்கு ஆதரவாக என்னை சத்தம் போட்டார்.


ஆடு,மாடு, நாய், பூனை வளர்க்கிறவனலெல்லாம் கட்டிபோட்டு வளக்கனும்டா....அடுத்த வீட்டுக்கு போகவிடலாமா?? என்னை பார்த்து சொன்னார்.நான் பேச வாயெடுத்த போதெல்லாம் நீ..எதுவும் சொல்ல வேனாம்..நான் சொல்றத நீ கேளு....

“ அந்தப் பூனையை நீ வளத்தியோ...வளக்கலையோ  அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்று இரவு அந்தப் பூனையை பிடித்து எங்கிட்டாவது விட்டுறனும்.. அப்படி விடலைன்னா..நீ தண்டம்கட்டனும் ஆமா சொல்லிப்புட்டேன்... பூனையை பிடித்து விட்டுபுட்டு  நாளைக்கு வந்து சொல்லனும். ரைட்டர கூப்பிட்டு இவனிடம் எழுதி கையெழுத்து வாங்கு என்றார்.

 ரைட்டரிடம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது.. அந்த இரண்டு பேருக்கு ஆதரவாக   தெருவில் உள்ள சிலர் வந்திருந்தனர். புகார் கொடுத்த மற்றும் உதவிக்கு வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவர்களின் பேச்சிலும் நடையிலும் செய்கையிலும் தெரிந்தது... அன்றியிரவே.. கூலிக்கு  பேசி இரண்டு பேரைக் கொண்டு கறி திண்டதாக சொல்லப்பட்ட பூனையை பிடித்து மாடக்குளம் கன்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் விடப்பட்டது..

அப்படி விடப்பட்ட பூனை மறுநாள் காலையில் தீ கொளுத்தி மகளின் வீட்டில் உலாவிக்கொண்டு இருந்தது. என்னடா செய்வது என்ற யோசனையில் இன்று இரவு காவல் நிலையத்தில்  நடந்தவற்றை சொல்வது என்று முடிவெடுத்து  ஏழு மணிக்கு முன்னமே காவல் நிலையம் சென்று ரைட்டரிடம் விபரத்தை சொன்னோன்.

அந்த ரைட்டரோ சிரித்துக் கொண்டே... சரியான லூசுய்யா... ரெண்டு சிரிக்கிக..உம்மேல புகார் கொடுக்குதுன்னா என்னா அர்த்த்முன்னு தெரியாத ஆளா இருக்கியே.... அந்த ரெண்டு சிரிக்கிக ..உன்ன படுக்க கூப்பிடுறாளாக....நீ என்னமோ..உத்தம ராஜாவாட்டம் நியாயம் பேசிக்கிட்டு இருக்க.....  அவரு வந்த பிறகு சொல்லு...போ....


என்னடா..இது அவளுகளைவிட..இந்தாளு இப்படி குண்ட தூக்கி போடுறாரு... அவளுக நோக்கமே.. எதிலாவது என்னை மாட்ட வைத்து செலவ இழுத்துவிடுறதுதான்...இதுல இவளுக படுக்க கூப்பிடுகிறாள்களாம்..நல்ல இம்சையாகத்தான் இருக்கு........ இனி எஸ்எஸ்அய் நாம சொல்றத கேட்கவில்லையென்றால் இன்ஸ்பெக்டரை பார்த்து  முறையிட்டுட வேண்டியதுதான் என முடிவெடித்து  எஸ்.எஸ்.அய்..வருகைக்காக காத்திருந்தேன்.


புகார் கொடுத்த அவள்கள் தங்கள் பரிவாரத்துடன் ஆட்டோவில் வந்து இறங்கினாள்கள்.. இப்போது அவள்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு சிங்கார சீமாட்டிகளாக வந்தாள்கள்.

எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.. வாழைப்பழம் தின்னாத குரங்கு ஒன்று உண்டா? என்று கேட்ட கேள்வியைப்போல் சிங்காரிகளின் அழகுக்கு மயங்காத காவலர் உண்டா?? என்ற கேள்வியே... என் மனதில் ஓடியது... என்னநடந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் முறையிடுவது என்ற முடிவோடு இருந்தேன்.

நெடுநேர காத்திருப்புக்கு பின் விசாரித்த எஸ்எஸ்அய் வந்தார்.. காவல்நிலைய வாசலில் நுழையும்போதே..“ என்னய்யா..பூனையை புடுச்சு விட்டாச்சா.... என்று கேட்டுக் கொண்டே அவர் இருக்கையில் அமர்ந்தார். நானும் தன்னியல்பாக... புடுச்சு விட்டுட்டேன் சார், என்றேன்.

முதலில் என்னை விசாரித்தார்... விபரத்தை கூறினேன்.“ நீங்க  சொன்ன உத்தரவுப்படி  அன்றிரவே பூனையை புடுச்சு... மாடக்குளம் கன்மாய்க்கு அருகில் விட்டுட்டு வந்திட்டேன்... ஆனா..பூனை மாறுநாள் காலையில  வந்துவிட்டது. இவுக வீட்டுக்குள்ள இருந்து,அந்தப்பூனை வெளியே வந்ததைப்பார்த்தேன். நான் பூனையை வளர்க்கவில்லை.. எனக்கும் அந்தப்பூனைக்கும் எந்த சம்பந்தமில்லை.. தெருவில் திரிந்த பூனை பொய்யாக என் மேல் புகார் கொடுத்திருக்கங்க.... உங்க உத்தரவுக்கு கீழ்படிந்து கூலி ஆட்கள் மூலம் பூனையை பிடித்து வெகுதூரத்தில் விட்டு வந்தும்..அந்தப் பூனை திரும்பவந்துவிட்டது.. இனிநான் என்ன செய்யட்டும்.. நீங்கதான் சொல்லனும்.. நான் அந்தப் பூனையை பிடித்தது. ஆட்டோவில் கொண்டு சென்றது... எல்லாமே புகார் கொடுத்த இரண்டு பெண்களுக்குமே தெரியும் சார் என்றுவிட்டு  ஓரமாக நின்றேன்.


புகார் கொடுத்த இரண்டு பெண்களிடம் என்னம்மா பூனையை பிடித்தது உங்களுக்கு தெரியுமா..என்றார். தெரியும்சார்.. பூனையைின் கண்ணை பொத்திக் கொண்டு போகம...போனதால் அந்தப்பூனை திரும்பவும் அந்தாளு வீட்டுக்கே வந்திருச்சு சார்...

“ஏய்யய்யா...பூனை கண்ணபொத்தாம போயிட்ட.. சாக்குல கட்டி போய் விட்டுருந்தா...திரும்ப வந்திருக்குமாய்யா...??”

“ சார்..அரிசி சாக்குலதான்..ஒரு பூனைக்கு இரண்டு பூனையை புடுச்சு ஆட்டோவுல போயி விட்டுட்டு வந்தேன் சார்.. என்றேன்.

திரும்பி வந்த பூனை ..திரும்ப அவுங்க வீட்டு கறிய திங்காம்ம இருக்குமாய்யா...???

“சார்..என் பூனை இல்லையே சார்.? ”

எஸ்எஸ்.அய் என்னை வெளியே..நிற்கச் சொன்னார்... வந்து நின்றேன்

பத்தரைக்கு மணிக்கு மேல் என்னை அழைத்தார். உன் மெல் புகார் கொடுத்த பெண்களை சமாதனம் செய்து அனுப்பிவிட்டேன்.. இனிமே பூனை. நாய் எதுவும் வளக்காதே!.. அப்படியே வளத்தால் கட்டிப்போட்டு வளக்கனும் புரியுதா” என்றார்.

“சார், நான் வளக்கவே இல்லை..சார்.”

“ சொன்னா கேளுய்ய... ம்ம்ம்... நீ..எதுவுமே வளக்காமலா...அதுக..உன் பேர்ல புகார் கொடுக்குதுக..”..

“ என் இடத்த..பாதையாக பயன்படுத்திட்டு வராக...அதை எதிர்த்ததால்..இப்படி பொய்யா...புகார் செய்கிறார்கள்...”

“ உன் இடம் என்றால் வேலி போட்டுக்க...”

“ அந்த இடத்து உரிமை சம்பந்தமாக வழக்கு நடந்து வருது சார்”


“ சரிசரி....புலம்பாதே!....  செலவுக்கு கொடுத்துட்டு போய்யா”

“சார். பூனையை பிடிக்கிறதுக்கும், ஆட்டோவுக்கு இருந்த காசை செலவழித்துவிட்டேன். இப்போதைக்கு காசில்லை ...நாளபின்னக்கு இந்தப் பக்கம் வந்தால் தருகிறேன்.

“ஆமா.  இப்படித்தான் எல்லா பயல்களும்.. சொல்றான்... நாளைக்கு கண்டிப்பா வந்து தருவியா...???”

“ இல்ல..சார்..கண்டிப்பா வந்து தர்ரேன்... எவ்வளவு சார் வேணும்....”

“ ஒன்னு ரெண்டு வந்து கொடு..”.......

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபின் நான் புலம்பினேன்.. ஆயிரம் ரெண்டாயிரம்மா... வேணும்” முதல்ல உனக்கு கொடுத்துட்டுதான் மறு வேல பார்க்கனும்...”

“ நான் வீட்டுக்கு வந்தபிறகு ..ரெண்டு சிறுக்கிகளும் கைதட்டி. கும்மாளமிட்டு சிரித்துக் கொண்டு இருந்தனர்.  நல்லாயிருங்கடி என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டு...இரண்டு வாரத்துக்குமேல் அவள்கள் கண்ணில் எனது இடத்தில் எத்தகைய ஆக்கிரமிப்பும் செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவந்தேன்.

பூனை கதை முடிந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...