பக்கங்கள்

ஞாயிறு 08 2026

ஒரு திருமண விழாவில்..........

 





சார், வணக்கம்.. 

தங்களின் இல்ல 

விழாவில் கலந்து

கொண்டேன்.

 

விருந்து சிறப்பாக

இருந்தது விருந்து

 உண்ட பின்தான் 

தங்களுக்கு கால் 

பன்னுகிறேன்......


ஒரு சின்ன

கேள்வி தாங்கள்

பொண்ணு வீடா?

மாப்பிளை வீடா?

தெரியவில்லை. மொய்

செய்வதற்கு  கேட்டேன்

கோபித்துக் கொள்ள 

வேண்டாம்.  ஒகே

சார்  நன்றி!


ஞாயிறு 01 2026

*பலவித பெயர்களில் இயங்கும் rss -பாஜக கம்பெனி






பலவித பெயர்களில் rss - பாஜக கம்பெனி 

காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் இந்துமகாசபா..!

 குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோது... பாபர் மசூதியை இடித்த போது, அவர்கள் பெயர் விஸ்வ ஹிந்து பரிஷத்..! 

ஒரிசாவில் கிரகாம் ஸ்டெய்ன் என்ற பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும், எரித்து படுகொலை செய்த போது அவர்கள் பெயர் பஜ்ரங்தள்..!

கௌரி லங்கேஷை படுகொலை செய்த போது அவர்கள் பெயர் ஹனுமான் சேனா..! 

அக்லக்கை படுகொலை செய்த போது, அவர்கள் பெயர் கோரக்ஷக் சேனா..! 

பெரியார் சிலை மீது பெயின்ட் ஊத்தும் போது அவர்கள் பெயர் பாரத் சேனா..! செருப்புமாலை போடும் போது இந்து முன்னணி..!

 கிருஸ்துமஸ் நேரத்தில் பள்ளிகளை அடித்து உடைத்து வன்முறை தாண்டவமாடும் போது வனவாசி கல்யான்...!

 மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என தலித்களை கொன்ற போது இவர்கள் பெயர் இந்து ஜாக்ரன் மன்ச்..!

 கேரளாவில் இவர்கள் பெயர் ராஷ்ட்ரீய பஜ்ரங்தள்..!


 சங்பரிவார் மொழியே இவர்கள் மொழி RSS இவர்களின் தாய்.! இவர்களின் வாழ்வியல் கோட்பாடு இந்திய சனநாயகத்தின் அழிவு..!! பாஜக All reactions: 3.7K Praveen Maria பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்... 

அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்: 

1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)

 2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்) 

3)கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)

 4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர். 

5) இடையர் (கோனார்). 6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர். 

7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர். 😎

8) சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.

 9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர். 

10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர். 

11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.

 12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர். 

13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர். 

14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 

15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர். 

16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.

 17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர். 

18) பரவர் (முத்தரையர்) சாதியினர். 

மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது, எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ? அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலைதான், இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது. மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனால்தான், "சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமாக குரல் ஒலிக்கிறது.

வெள்ளி 30 2026

என்னாது காந்தி செத்திட்டாரா...????

1.சுடப்பட்டு செத்தவர்.2. தூக்கில் கொல்லப்பட்டவன்.




“ அண்ணே! அண்ணே!! காந்தி செத்திட்டாருண்ணே...”


“ எந்த காந்தி..டா..”


“இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு..ல்ல  , அவருன்ணே...”


“ எப்படிடா செத்தாரு... சுட்டுடாங்கண்ணே..”


“ என்னாது சுட்டுடாங்களா.... யாருடா.... போலீசா...??”


“ போலீசும்  இல்லண்ணே.!” இராணுவமும் இல்லேண்ணே..”


“ அப்ப..யாருடா..சுட்டது..”


“நாத்துராம்கோட்சே என்ற செத்தவரு சாதிகாருணே”


“அந்தாளுக்கும் இந்தாளுக்கும்  வாய்க்கா வரப்பு சண்டையாடா..?”


“ அப்படி தெரியலண்ணே.... இனிமே தான் தெரியும்ணே”


“ சரி விடு,  செத்தாளு பிரிட்டிஸ் அரசுக்கு நெருக்கமானவாரு, சுட்டவனும் பின்னாளில் சாவான்...  சுட்டாளும்சரி, செத்தாளும் சரி..ரெண்டுஆளும் நமக்கு நல்லவங்க  இல்ல.. பாடு படும் மக்களுக்கு  எந்த பலனுமில்ல....ரெண்டு ஆட்களை சேர்ந்தவங்க மாறி மாறி ஆட்சி செய்து நம்மள கொல்லுவானுங்க..”


“ என்னண்ணே இப்படி சொல்றிங்க....”

“ உண்மையைத்தாண்டா சொல்றேன். அம்பேத்தார் எழுதிய புத்தகத்தை படி செத்தளோட வன்மம் புரியும்.. சுட்டவனும் செத்தாளவிட பயங்காரமானவன். அவனப்பற்றி தெரியுனும்னா கம்யுனிஸ் காரங்க புத்தகத்தைப்படி விவரமா புரியும்.டா.”.


“ கண்டிப்பாண்ணே ரெண்டு பேரு வரலாற தெரிந்து கொள்கிறேன்.”


“ அவுக ரெண்டு பேரும் பங்காளிகள்.. வெளிப்பார்வைக்கு பகையாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள்..இவர்களை நம்பிட சாவது நம்ம மக்கள்தான்






வெள்ளி 23 2026

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்..



*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*
கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப­டுத்­தும் செயல்­களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்து வரு­கி­றது.
கீழ­டி­யில் அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் அக­ழாய்­வு­கள் நடை­பெற்­றது. இந்த அக­ழாய்வு அறிக்­கையை அக்­டோ­பர் 2023 ஆம் ஆண்டு இந்­திய தொல்­லி­யல் துறை­யி­டம் அளித்­தார். இந்த அறிக்­கை­யில் இரண்டுநிபு­ணர்­க­ளி­டம் சரி பார்த்­துத் தரும்படி சொன்­னார்­கள். ஒரு­வர் அயோத்­தியைஅக­ழாய்வு செய்­த­வர். அயோத்­தியை அக­ழாய்வு செய்­த­வர் கீழ­டியை எப்­படி ஏற்­பார்?
அமர்­நாத் ராம­கி­ருஷ்ணா குறிப்­பிட்ட கால­கட்­டத்­தை­யும் தமி­ழின் தொன்மை பற்­றிய விப­ரங்­க­ளை­யும் கேள்வி எழுப்பி திருத்தி தரு­மாறு திருப்பி அனுப்­பி­னர். திருத்தி தர இய­லாது என்று அமர்­நாத் ராம­கி­ருஷ்ணா கூறி­விட்­டார். ‘எழுத்­துப் பிழை­களை வேண்­டு­மா­னால் திருத்­து­கி­றேன். உண்­மை­களை திருத்த இய­லாது’ என்று கூறி­விட்­டார்.
அதற்கு அடுத்து கீழடி அறிக்கை பற்­றிய மதிப்­பீடு மற்­றும் பரிந்­து­ரை­கள் என்று கூறி ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து பரிந்­து­ரை­களை அனுப்பி இருக்­கி­றது ஒன்­றிய அரசு. அந்­தக் குழு­வில் இருக்­கின்ற நான்கு பேர் இது­வரை எந்­த­வித அக­ழாய்­வு­க­ளி­லும் ஈடு­ப­டா­த­வர்­கள். அதில் இருக்­கின்ற மற்­றொரு அதி­காரி அக­ழாய்வு செய்து இருந்­தா­லும் அறிக்­கையை வெளி­யி­ட­வில்லை.
அமர்­நாத்தை விட பணி­யில் கீழே அடுத்­துள்ள நிலை­யில் இருப்­ப­வர்­களை வைத்து பரிந்­து­ரை­கள் செய்து மாற்­றித் தரு­மாறு அனுப்பி உள்­ள­னர். 114 பக்­கம் கொண்ட இந்த அறிக்கை முழு­வ­து­மாக மாற்­றித் தரு­மாறு பல்­வேறு பரிந்­து­ரை­களை கூறி­யி­ருக்­கி­றது
‘‘ஒரே இந்­தியா, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்­சா­ரம், ஒரே வர­லாறு என்ற அடிப்­ப­டை­யில் கீழ­டி­யி­னு­டைய அறிக்­கையை தயா­ரித்து அனுப்ப வேண்­டும். மாநி­லத் தன்மை கொண்­ட­தாக மாநில வர­லாற்றை ஊக்­கு­விப்­ப­தாக கீழடி வர­லாறு இருக்­கி­றது. இத்­த­கைய தனித்­து­வம் மிக்க வர­லாற்றை கொண்டு இருப்­ப­தாக இருக்­கக் கூடாது” என்று பரிந்­து­ரைத்து இருக்­கி­றார்­கள்.
சங்க இலக்­கி­யங்­கள் வர­லாற்­றுத் தன்­மை­யற்­ற­வை­யாக இருப்­ப­தாக கூறி அவற்றை மேற்­கோள்­கள் காட்­டக் கூடாது என்­றும் சொல்லி இருக்­கி­றார்­கள். அதற்கு பதி­லாக வட இந்­திய இலக்­கி­யங்­களை மேற்­கோ­ளாக காட்ட வேண்­டும், அத­னை­யும் கீழ­டி­யு­டன் தொடர்­பு­ப­டுத்த வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைத்திருக்­கி­றார்­கள். ஆர்ட்­டிஃ­பி­ஷி­யல் இன்­டெ­லி­ஜென்ஸ் வைத்­துக் கொண்டு அதி­லி­ருந்து ஒவ்­வொரு பகு­தி­யை­யும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளாக்கி இருக்­கி­றார்­கள்.
‘‘தமி­ழர்­க­ளுக்கு தனித்­து­வ­மான வர­லாறு கிடை­யாது. கலாச்­சா­ரம், பண்­பாடுகிடை­யாது. சங்க இலக்­கி­யங்­களை மேற்­கோளே காட்­டக்­கூ­டாது’’ என்று கூறு­வ­தன் மூலம் சங்க இலக்­கி­யங்­களை படிக்­கக்­கூ­டாது, பார்க்க கூடாது, தீண்­டக் கூடாது என்ற நிலையை நேர­டி­யாக ஒன்­றிய அர­சாங்­கம் கூறி தமிழ்­நாட்டை அவ­மா­னப்­ப­டுத்தி நிரா­க­ரித்து இருக்­கி­றது.
கீழடி பெருமை நிலை­நாட்­டப்­பட்­டால் தமி­ழர் பெருமை நிலை­நாட்­டப்­ப­டும் என்று நினைத்து தொடர்ந்து தொல்லை தந்து வரு­கி­றது ஒன்­றிய அரசு.
கீழ­டி­யில் 1, 2, 3-ஆம் கட்ட அக­ழாய்வு பணி­களை ஒன்­றிய அர­சின் தொல்­லி­யல்­துறை மேற்­கொண்­டது. 4 முதல் 9 கட்ட அக­ழாய்­வு­களை தமிழ்­நாடு அர­சின் தொல்­லி­யல்­துறை நடத்­தி­யது. தமிழ்­நாடு அரசு நடத்­திய அக­ழாய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டு­விட்ட நிலை­யில், முதல் மற்­றும் 2-ஆம் கட்ட முடி­வு­களை ஒன்­றிய அரசு வெளி­யி­ட­வில்லை. முதல் மற்­றும் 2-ஆம் கட்ட அக­ழாய்வு அறிக்­கையை வெளி­யி­டக் கோரி உயர்­நீ­தி­மன்ற மது­ரைக்­கி­ளை­யி­லும் வழக்கு தொட­ரப் பட்­டது. உயர்­நீ­தி­மன்­றத்­தில் கடந்த 2024 பிப்­ர­வ­ரி­யில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, 9 மாதத்­தில் அறிக்கை வெளி­யி­டப்­ப­டும் என ஒன்­றிய அரசு கூறி­யி­ருந்­தது.
கீழ­டி­யில் நடந்த தொல்­லி­யல் அக­ழாய்வு குறித்த அறிக்­கையை மாற்­றித்தரு­மாறு அமர்­நாத்தை கட்­டா­யப்­ப­டுத்­தி­னார்­கள். ஒன்­றிய கலாச்­சா­ரத்­துறை அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத், ‘‘கீழடி குறித்த அறிக்கை அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லும், தொழில் நுட்ப அடிப்­ப­டை­யி­லும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இன்­னும் கூடு­தல் தக­வல்­க­ளு­டன், ஆய்வு முடி­வு­க­ளு­டன் வரட்­டும். எல்லா விதங்­க­ளி­லும் ஆய்­வு­கள் முடி­யட்­டும்” என்று வெளிப்­ப­டை­யா­கவே கீழடி முடி­வு­க­ளுக்கு எதி­ரா­கக் கருத்­துச் சொன்­னார்.
கீழடி அக­ழாய்வு தளத்­தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கரிம கரி (Charcoal) மாதி­ரி ­க­ளின் கார்­பன் டேட்­டிங் (Carbon dating) மூலம், அந்­தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்­டைச் சேர்ந்த ஒரு குடி­யி­ருப்­புப் பகு­தி­யாக இருந்­தி­ருக்­க­லாம் என்று உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. பண்­டைத் தமிழ்ச் சமூ­கம் கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் எழுத்­த­றிவு பெற்­றும், நகர நாக­ரி­கத்­து­ட­னும் மேம்­பட்ட தமிழ்ச்­ச­மூ­க­மா­க­வும் விளங்­கி­யதை கீழ­டி­ அ­க­ழாய்வு முடி­வு­கள் வாயி­லாக அறி­வி­யல் பூர்­வ­மாக தொல்­லி­யல் துறை நிலை நிறுத்­தி­யுள்­ளது. இந்த அறிக்­கையை ஏற்­றுக் கொள்­வ­தற்கு ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு மன­மில்லை. அது­தான் உண்­மை­யா­கும்.
கீழடி குறித்து அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் கொடுத்­தது 982 பக்க அறிக்கை ஆகும். இதில் அனைத்து ஆதா­ரங்­க­ளை­யும் அவர் கொடுத்­தி­ருக்­கி­றார். இறுதி அறிக்­கை­யைக் கொடுத்து இரண்­டரை ஆண்­டு­கள் ஆன பிறகு கேள்வி கேட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள்.
அதி­லும் குறிப்­பாக கீழ­டியை இந்­தி­யத் தன்மை உள்­ள­தாக மாற்­றித் தரச் சொல்­வ­தும், சங்க இலக்­கி­யங்­கள் வர­லா­று­கள் அல்ல என்­ப­தும் எந்த வகை­யி­லான அறிவு நாண­யம்?
சங்க இலக்­கி­யங்­கள், கி.மு. 3-ஆம் நூற்­றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்­றாண்டுவரை­யி­லான காலப்­ப­கு­தி­யில் (சங்க காலம்) தமிழ்­நாட்­டின் வர­லாற்றை எழு­த­வும், புரிந்­து­கொள்­ள­வும் உத­வும் மிகத் தொன்­மை­யான, நம்­ப­க­மான இலக்­கிய ஆதா­ரங்­க­ளாக விளங்­கு­கின்­றன. அவை தமி­ழர்­க­ளின் தொன்­மை­யை­யும், நாக­ரி­கத்­தை­யும், பண்­பாட்­டுச் சிறப்­பை­யும் உல­கிற்கு எடுத்­து­ரைக்­கின்­றன.
இலக்­கி­யங்­கள் மூல­மாக வர­லாறு அறி­தல் அடிப்­ப­டை­யா­னது ஆகும். இன்று வர­லாறு எழு­து­வது போல அன்று வர­லா­று­கள் எழு­தப்­பட்­டது இல்லை. இலக்­கி­யங்­கள் மூல­மா­கத் தான் சொல்­லப்­பட்­டன. அதையே கேள்வி கேட்­பது, தமி­ழுக்­குச் செய்­யப்­ப­டும் இழுக்கு அல்­லவா? காசி தமிழ்ச் சங்­க­மம் நடத்­திக் கொண்டே தமி­ழின் கழுத்தை அறுக்க வேண்­டுமா?
இரண்டு திருக்­கு­றள் சொல்­வ­தும் காசி தமிழ்ச் சங்­க­மம் நடத்­து­வ­தும் தாங்­கள் செய்­யும் தமிழ் விரோ­தச் செயல்­களை மறைக்­கவே!
-முரசொலி
(31-12-2025)
(தலையங்கம்)

வியாழன் 15 2026

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். 

இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கில் ஆஜராவதற்கு சிவப்பு சால்வையை தோளில் அணிந்து கொண்டு சென்றிருந்தேன் முதலில் நமது வழக்கறிஞர் தோழர் என் உடன் வந்த மாவட்ட தோழர்களிடம் நீதிபதியிடம் வரும்போது தோழரை துண்டை எடுத்து விட சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் அவரிடத்தில் நாங்கள் சொல்ல முடியாது என்று கூறியதாக என்னிடத்தில் தெரிவித்தார்கள் . பிறகு நீதிபதியின் அறைக்குள் சென்று நின்ற போது நீதிமன்ற பணியாளர் எனக்கு பின்னால் இருந்த தோழர்களிடம் சொல்லி தோளில் உள்ள துண்டை எடுக்குமாறு கூறினார் .நான் எடுக்கவில்லை 

.ஆனால் மாஜிஸ்திரேட் என்னை பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. இடுப்பிலே கட்டி இருந்த துண்டை தோளில் போடுவதற்காக எங்களுடைய மூதாதையர்கள் நடத்திய போராட்டம், எதிர்கொண்ட பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, எல்லாவற்றிக்கும் மேலாக உயிர் தியாகம் இவற்றின் காரணமாகத்தான் தோளிலே தூண்டு ஏறியது என்கிற வரலாற்று காவியத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை

 நீதிமன்றத்தில் தோளில் துண்டு அணியக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? விதிகள் ஏதாவது இருக்கிறதா? எதற்காக இப்படி துண்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. 

நீதிபதியே சொல்லி இருந்தாலும் நான் தோளிலிருந்து துண்டை அகற்றி இருக்க மாட்டேன் . ஏனென்றால் அது நாங்கள் போராடிப் பெற்ற உரிமை .அதை ஒரு போதும் இழக்க முடியாது. 
 
சிபிஐஎம் மாநிலக் குழு செயலாளர் தோழர் Shanmugam Perumal

🔥 - பதிவர் தோழர் பீமா
தோழர் Shanmugam Perumal



சனி 10 2026

சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !

பராசக்தி 2026 திரைப்படம்




 பராசக்தி !

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து ..


வெளி வந்திருக்கும் படம் 'பராசக்தி'  

தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். 

குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு,


அதை ஜாலியன் வாலாபாக் உடன் ஒப்பிடலாம் 


இந்த போராட்டத்தின் மிக மோசமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. 


பொள்ளாச்சியில் அப்போது என்ன நடந்தது?


தமிழ்நாட்டில் 1930களின் பிற்பகுதியில் இருந்தே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. 


1937-இல் இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் நடைபெற்றது. 


சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது. 


முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில், 


மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் எனப் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் 


முதலமைச்சருக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினாலும் அரசு பின்வாங்கவில்லை.


1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மாணவர்கள் 


கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. 


அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. 


முதற்கட்டமாக 125 பள்ளிக்கூடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.


இதனை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதே, 


இரண்டாம் உலகப் போர் வெடித்தது. 


அந்தத் தருணத்தில் நாடு முழுவதும் இருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.


இதையடுத்து, 1939ஆம் ஆண்டு அக்டோபரில் ராஜாஜியும் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


பிப்ரவரி 21, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின், 


இந்தி கற்பதை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.


அடுத்ததாக, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ஆம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது 


பள்ளிக்கூடங்களில் மீண்டும் இந்தியைக் கற்பிக்கும் முயற்சிகள் துவங்கின. 


1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


ஆனால், இந்த முறை சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளில் 


இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழ் பேசும் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் அறிவிக்கப்பட்டது. 


இந்த முறையும் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டங்கள் துவங்கின. 


இந்நிலையில், 1949ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 


இதற்குப் பிறகு கட்டாய இந்தி திட்டம் திரும்பப் பெறப்பட்டது.


இதற்குப் பிறகு, 1965ஆம் ஆண்டு நெருங்கியபோது ..


இந்தி தொடர்பான அச்சம் தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பெற்றது. 


இதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவின் அலுவல் மொழி தொடர்பான விவகாரம். 


இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே 


இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 


அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. 


அதன்படி, ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும்.


1965ஆம் ஆண்டு நெருங்க நெருங்க இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 


இதையடுத்து, ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு 1963ஆம் ஆண்டு


 'அலுவல் மொழிகள் சட்டம்' ஒன்றைக் கொண்டுவந்தது. 


அந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில், 15 ஆண்டுகள் கெடு முடிந்தபின்னும் 


(1965ஆம் ஆண்டுக்குப் பிறகும்) இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாகத் 'தொடரலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


அதாவது, "Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, 


the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi" 


என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


ஆனால், அதை "the English language shall" என்று மாற்ற வேண்டும் என 


அப்போது தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.


"may" மற்றும் "shall" ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால் 


சட்ட வரைவில் திருத்தம் தேவையில்லை என்று வாதிட்டார் பிரதமர் நேரு. 


முடிவில், திருத்தம் எதுவும் இல்லாமலேயே சட்டம் நிறைவேறியது.


இந்த நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை 


இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தை நிஜமாக்குவதைப் போல இருந்தது.


 "From January 26, Hindi will become in term of the Constitution the official Language of the Union. 


Although Provision has been made in the Official Languages Act, 1963,


 for the continued use of English in addition to Hindi, it is expected that Hindi will be used for all official purposes of the Union after January 26, 1965" 


என்று அந்த சுற்றறிக்கை குறிப்பிட்டது

அதாவது, 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக 


இந்தியே பயன்படுத்தப்படும் என்பதுதான் இந்த சுற்றறிக்கையின் சாராம்சம். 


இருந்தாலும் முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் 


என்றார் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா.


1965ஆம் ஆண்டு குடியரசு நாள் நெருங்க நெருங்க .


இந்தியை அலுவல் மொழியாக்குவதை எதிர்த்து போராட்டங்கள் தமிழ்நாட்டில் தீவிரமாகின.


 ஜனவரி 26ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார் தி.மு.கவின் பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை. 


ஆனால், இந்தியாவின் குடியரசு தினத்தை துக்க நாளாக அனுசரிப்பதை அனுமதிக்க முடியாது என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம்.


இருந்தபோதும் ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஜனவரி 25ஆம் தேதியே ..


மாணவர்கள் துக்க நாள் அனுசரிக்க வேண்டும் என இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்கள் குழுவின் சார்பில் அறிக்கை வெளியானது. 


இதற்கிடையில், ஜனவரி 22ஆம் தேதியே சி.என். அண்ணாதுரை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இருந்தபோதும் ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து அரசியல் சட்டம் எதிர்ப்பு, ஊர்வலங்கள் என 


போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. 


சென்னையிலும் மதுரையிலும் இந்தப் போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.


ஆனால், பிப்ரவரி 12ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, 


இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது.


"திருப்பூரில் பிப்ரவரி பத்தாம் தேதி மாணவர்கள் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, 


அதனைத் தடியடி நடத்தி காவல்துறை கலைத்தது. 


அந்த நேரத்தில் ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். 


இதையடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் தபால் நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் சூறையாடியது. 


தந்திக் கம்பங்கள் பிய்த்தெறியப்பட்டன. 


காவல் நிலையம் கொளுத்தப்பட்டது.


ஓரிடத்தில் இரண்டு காவல்துறை துணை ஆய்வாளர்கள் நிற்பதைப் பார்த்த ஒரு கும்பல், 


அவர்களைத் துரத்தியது. 


முடிவில் அவர்கள் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்" 


இதற்குப் பிறகு ராணுவம் வரவழைக்கப்பட்டது. 


திருப்பூர் நகரம் வெறிச்சோடிப் போனது. 


ஆனால், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் போராட்டங்கள் மிகத் தீவிரமாக தொடர்ந்தன.


"பிப்ரவரி பத்தாம் தேதி மட்டும் காவல்துறை ஏழு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. 


இதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 


50 பேருக்கு மேல் காயமடைந்தனர். 


உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்" 


 மொழிப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில், 


மத்திய உணவுத் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியமும் பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைக்கான மத்திய இணையமைச்சர் ஓ.வி. அளகேசனும் 


தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 


இந்நிலையில், இந்தி எதிர்ப்புக்கான தமிழக மாணவர் போராட்ட கவுன்சில், 


பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. 


இந்த முழு அடைப்புக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.


ஆனால், பொள்ளாச்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நிகழக் காத்திருந்தது. 


"முழு அடைப்பு தினத்தன்று காலை பத்து மணி அளவில் பாலக்காட்டு சாலையில் உள்ள 


தபால் நிலையம் முன்பாக சில மாணவர்கள் திரண்டிருந்தனர். 


பொதுமக்கள் பலரும் திரண்டிருந்தனர். 


காவல்துறையும் குவிக்கப்பட்டிருந்தது. 


அந்த நேரத்தில் ஒரு மாணவர் தபால் நிலையத்தின் பெயர் பலகை மீதிருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயன்று கொண்டிருந்தார். 


சிறிது நேரம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள், 


அவரை இறங்கும்படி சொன்னார்கள். 


ஆனால், அவர் இறங்கவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக இறங்கிவில்லையென்றால் 


துப்பாக்கியால் சுடப்படுவார் என காவல்துறையினர் சொன்னார்கள். 


அப்போதும் அவர் இறங்கவில்லை. இதையடுத்து ஒரு காவலர் அவரைச் சுட்டார். அந்த மாணவர் கீழே விழுந்தார்.


இதையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கூட்டம் காவலர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 


இதையடுத்து காவல்துறை அவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தது. 


அங்கு கலைந்த கூட்டம் தாலுகா அலுவலகம் முன்பாக கூடி, 


அதன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 


இதற்குப் பிறகு சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து ..


மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். 


இதையடுத்து, கோயம்புத்தூரிலிருந்து ராணுவத்தின் உதவி கோரப்பட்டது." 


நண்பகலில் ஆறு லாரிகளில் ராணுவத்தினர் பொள்ளாச்சியில் வந்திறங்கினர். 


அந்த நேரத்தில் கோயம்புத்தூர் சாலையில் இருந்த ஒரு தபால் அலுவலகத்தை ஒரு கூட்டம் தாக்க ஆரம்பித்திருந்தது. 


அதைப் பார்த்த ராணுவத்தினர், அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் சுடப்படுவார்கள் என எச்சரித்தது. 


அவர்கள் கலைந்து செல்லவில்லை. 


இதையடுத்து ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடடில் பலர் கொல்லப்பட்டனர்.


கூட்டம் அங்குமிங்குமாக ஓடியது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு நான்கு வயது குழந்தையும் கொல்லப்பட்டது.


 கூட்டம் கலைந்ததும், ராணுவத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் வீரர், 


துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்த நான்கு வயதுக் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கண் கலங்கினார் ..


"இதற்குப் பிறகு பல இடங்களில் திரண்ட கூட்டம் எல்லா அரசு அலுவலகங்களையும் தாக்க ஆரம்பித்தது. 


சாலைகளில் கற்கள் உருட்டிவிடப்பட்டன. 


ராணுவம் செல்வதைத் தடுக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டன. 


தாலுகா அலுவலகம், பள்ளிக்கூடங்கள், தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டன. 


இதற்கிடையில் மேலும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.கச்சேரிச் சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்பவர் படுகாயமடைந்தார். 


அதே நேரத்தில் மற்றொரு இளைஞர் 'என்னைச் சுடுங்கள்' என்று கூறிக்கொண்டே முன்னே வந்தார். 


அங்கு வந்த வீரர் ஒருவர் அவரைக் காலில் சுட்டார். 


அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 


அங்கு காலில் கட்டுப்போடப்பட்ட பிறகு மீண்டும் சாலைக்கு வந்த அந்த இளைஞர் போராட்டத்தில் இறங்கினார். 


அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.


மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு நடுத்தர வயது மனிதரின் ..


வயிற்றில் குண்டு பாய்ந்து பின்னால் வெளியேறியது. 


அந்தத் தோட்டா அவருக்குப் பின்னால் ஒளிந்திருந்த பத்து வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது. இருவருமே கொல்லப்பட்டனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. 


ராணுவம் இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்தார். 


1965 மார்ச் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சரும் இதே கருத்தைத் தெரிவித்தார்" 


பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை தொடர்பாக துல்லியமான தகவல்கள் இல்லை.


"பொள்ளச்சி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என சரியாகச் சொல்ல முடியாது. 


ஆய்வு செய்து பார்க்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 80 முதல் 100ஆக இருக்கலாம். 


அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாகவே குறிப்பிட்டது. 


இதற்கு சரியான விடை ஒருபோதும் கிடைக்காமல் போகலாம். " 


ஆலடி அருணா எழுதிய 'இந்தி ஏகாதிபத்தியம்' என்ற நூலும் இந்தச் சம்பவத்தை சுருக்கமாக விவரிக்கிறது என்றாலும் .


அதிலும் பொள்ளாச்சி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை இல்லை.


இதற்கு அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், 


இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான விரிவான தகவல்களைத் தருகிறது. 


"Military Acts to quell the Riots" என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியான செய்தியில் '


ராணுவம் மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 வயது குழந்தை உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டனர்' என்று குறிப்பிட்டது.


1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிக மோசமான உயிரிழப்பு ஏற்பட்டது பொள்ளாச்சியில்தான் .


#தரவுகளின்_ஆதாரம் ..


#பிபிசி_கலெக்டிவ் .


- Velu Subramaniam)

(பகிர்வுப் பதிவு)

புதன் 07 2026

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    

இல்லை ..படம் வெளிவருவதற்கு முன்பே பாடலை எழுதிய பட்டுக் கோட்டையாரின் மறைவா??   


அடுத்து எதுவந்து மண்டையை உருட்ட போகுதோ....????????





{துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் } x 2 -------------------- {துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்} x2 அன்பு குரலில் அமுதம் கலந்தே அருந்த தருவதும் கீதம் எங்கும் சிதரும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம் ---------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் ============================== {சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்} x2 சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அனைத்தே படர்ந்திடும் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும் உறவு கொண்டாள் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --------------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும்
33

வெள்ளி 02 2026

மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்.

 




மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்..


"மூளை இறக்குமா?..."

- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்

(MD., (Chin.Med), A.T.C.M(CHINA)

Zhejiang University, Hangzhou,(China)

(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்.

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்? இன்றோ

மூச்சு(சுவாசம்) இருக்கிறது,

இரத்த ஓட்டம் இருக்கிறது,

நாடி துடிப்பு இருக்கிறது,

இதயத்துடிப்பும் இருக்கிறது,

இருந்தும்..

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது. உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்.. மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்.


மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்..

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே, நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்

பதில் சொல்லுங்கள்.


இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே..

ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது.

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது இயங்கி கொண்டுதானிருக்கும்.


சிந்தியுங்கள் மக்களே..!!    இது ஒரு மாபெரும் கொலை.

பெரிய மோசடி.. இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான் மிகக்கொடுமை. உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல.. இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை.. உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை.. நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும் போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை தான்..

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை.. பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை..

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை. இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன. இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது..

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது.. காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள். இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை மற்றவர்களுக்கு பொருத்தும் ஆபரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?

செய்ய மாட்டார்கள்.

மக்களே..  எச்சரிக்கையாக இருங்கள்..!!!

இவர்களின் நோக்கம் பணம் தான்..மக்கள் நலமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை..

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்... இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும். உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்.. அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்.

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின் கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கியது தான்ஹோமியோ மருத்துவம். இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்..

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை நாம் அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை..

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை..


மக்களே                         சிந்தியுங்கள்..

நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து கொள்ளுங்கள்.

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம். இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு  198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்..

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும். நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

அதாவது, "கழிவின் தேக்கம் வியாதி.." 

"கழிவின் வெளியேற்றம் குணம்..."

"Accumulation of waste / toxins in our body is disease..

Elimination of waste / toxins is cure"

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.


அதாவது,

"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது. அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

ஷெட்யூல்- 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்

பின்வருமாறு:


1. எய்ட்ஸ் (AIDS)

2. நெஞ்சுவலி (Angina)

3. குடல் வால் நோய் (Appendicitis)

4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)

5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)

6. தலை வழுக்கை (Baldness)

7. ஆஸ்துமா (Asthma)

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்

வரை (Cancer)

9. கண்புரை (Cataract)

10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair).


11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறு

13. காது கேளாமை (Deafness)

14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)

15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.

16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண் (Gagerence).


21. மரபணு நோய்கள் (Genetic Diseases)

22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)

23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)

24. ஹெர்னியா (Hernia)

25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)

26. விரைவீக்கம் (Orchitis)

27. பைத்தியம் (Mental Disorder)

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி

செய்ய (To improve Memory Power)

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.


31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்த

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)

34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)

35. வெண்குஷ்டம் (Leocoderma)

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு நோய் (Heart Attack)

39. குண்டான உடம்பு மெலிய (Obesity)

40. பக்கவாதம் (Paralysis).


41. உடல் நடுக்கம் (Parkinson)

42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)

46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)

48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்

அனைத்து வலிகளும் (Spondylosis)

49. திக்குவாய் (Stammering)

50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).


மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே..

இனி மேலாவது விழிப்படையுங்கள்

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்

காப்பாற்றிக் கொள்ளுங்கள்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...